இரண்டாம் குடியேற்றம்

பால் சக்கரியா

தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ

வம்சி புக்ஸ்

19, டி.எம்.சாரோன், திருவாண்ணாமலை.

விலை: ரூ.80

திருட்டுப் பூனையின் கேட்காத காலடிச் சத்தம் மாதிரி சக்கரியாவின் கலை, கதைகளோடு கலந்து கதைகளையே தர்சனங்களாக்கிவிடுகின்றன. மனித குரூரங்களை இவரளவு எழுதிய எழுத்தாளர்கள் இந்திய மொழிகளில் மிகக்குறைவு. மனித மனங்களின் பாதாளத்துக்குள், புதைந்து கிடக்கும் சகல ஆபாசங்களையும் சக்கரியா தன் எழுத்தின் மேல் தளத்துக்குள் கொண்டு வருகிறார். சக்கரியாவின் எழுத்துக்கள் நமக்கு விசுவரூப தர்சனங்களை எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தை காட்டுகிறார். சக்கரியாவை, அவர் எழுத்தின் பலத்துக்கு கொஞ்சமும் பழுதுவராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்கு தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ

- பிரபஞ்சன்

 

Pin It