நாள் :     திருவள்ளுவராண்டு 2044, விடைத் திங்கள் 18 (01-06-2013),

நேரம்     :     காலை 10.00 மணி - காரிக்(சனி)கிழமை

இடம் :     மொழிப்போர் ஈகியர் அரங்கம், (இலயோலா கல்வியியல் கல்லூரி அரங்கு), இலயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை 34.

அன்பார்ந்த தமிழ் மக்களே, வணக்கம்!

கடந்த தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்க முடிவு செய்தார்கள். திமுகவை எதிர்க்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் சென்ற கல்வியாண்டில் மாவட்டங்களுக்கு 10 பள்ளிக்கூடங்கள் என்ற வகையில் 320 பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்கினார்கள். இதனால் 22,000 மாணவர்கள் தமிழ் வழியிலிருந்து ஆங்கில வழிக்கு மாறியுள்ளார்கள். 2013 - 14 கல்வியாண்டில் மாவட்டந் தோறும் 100 பள்ளிகள் வீதம் 3200 பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவைத் தொடங்க அரசு திட்டமிட்டிருக்கிறது. தற்போது சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி என்று அனைத்துப் பள்ளிகளிலும் தேவையான அளவில் ஆங்கில வழி தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். முன்பே மாநகராட்சிகளில் மழலையர் வகுப்புகள் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. இந்த மாற்றத்தால் ஒன்றரை இலட்சம் மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் தமிழ் வழியில் இருந்து ஆங்கில வழிக்கு மாறப்போகிறார்கள்.

ஆங்கில வழியில் சேரவிரும்பும் பெற்றோர் எதனால் அவ்வாறு ஆங்கில வழிக்கு மாற விரும்புகிறார் என்பது ஆய்வுக்குரியதாகும். அரசு பள்ளிகளில் பொதுவாக மாணவர்கள் பெற்றோர் சேர்க்க பல்வேறு காரணங்கள் உள்ளன.

அரசுப்பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. குடிநீர் இல்லை. போதுமான கட்டடங்கள் இல்லை. தேவையான ஆசிரியர்கள் இல்லை. ஆய்வுக்கூடங்கள் இல்லை. சுற்றுச்சூழல் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இவற்றை பற்றிக் கவலைப்படாத கடந்த தி.மு.க. அரசும், தற்போதைய அ.தி.மு.க. அரசும் சூடு போட்டு சொர்க்கத்திற்கு அனுப்பியே தீர்வதென்று ஆங்கிலக் கல்விக்கு ஏன் அவசரப்படுகிறார்கள்.

யாருக்காக இவர்கள் இந்த வேலையைச் செய்கிறார்கள் அமெரிக்காவிற்காகவா? பிரிட்டனுக்காகவா? மேலைநாடுகளுக்காகவா? தமிழ், தமிழர் நலத்தை முன் வைத்து ஆட்சிக்கு வந்த இவர்கள், அதையும் கைவிட்டு இப்பொழுது யாருக்காக அடிமைச்சேவகம் செய்கிறார்கள்?

தமிழைப்பேசி, தமிழால் வளர்ந்து, தமிழை அழிக்கும் வேலையை செய்யும் துணிவு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? ஆங்கில மோகத்தை இந்த திராவிடக் கட்சிகள் தானே வளர்த்தெடுத்தன? பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த கூலிக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் தரகு வேலையை ஏன் இவர்கள் செய்யவேண்டும்?

                தமிழ் வழியில் படித்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலைதர வேண்டும் என்று நாம் கேட்கிறோம். ஆங்கிலம் வழியாகப் படித்தால்தான் தமிழ்நாட்டில் வேலை என்றால் எதற்காக இந்த நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும்? ஆங்கிலநாடு என்று பெயர் மாற்றிவிட வேண்டியது தானே?

                இன்றைக்கும் 85% மாணவர்கள் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள். காலப்போக்கில் இதைக்குறைக்க அரசு நடவடிக்கை எடுப்பது ஏன்? பெரும்பான்மை மக்களை வஞ்சித்துப் பன்னாட்டு நிறுவனங்களின் நலன் காக்க அரசு துடிப்பது ஏன்?

அரசு அமைத்த எல்லாக் கல்விக்குழுக்களும் தாய்மொழி வழியில்தான் கல்வி இருக்க வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளன. பேராசிரியர் ச. முத்துக்குமரன் தலைமையில் அமைக்கப்பட்ட சமச்சீர்க் கல்விக்குழு அளித்த பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி, கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி, சனநாயகக் கல்வி, சமூக மாற்றத்திற்கான கல்வி என்று கல்விக் கோரிக்கைகள் நிறையவே உள்ளன. இவற்றில் எவற்றையும் நிறைவேற்ற முனையாத அரசு ஆங்கில வழி மட்டும் திணிப்பது ஏன்? ஆங்கிலப் பிரிவைத் தொடங்கினால் தமிழை அழிக்க முனைகிறார் முதலமைச்சர் என்பது உறுதியாகும்.

நாடு விடுதலை பெற்றதாகக் கூறி 65 ஆண்டுகளான பின்பும் 8ஆம் வகுப்பு வரை கூட கட்டாய இலவசக் கல்வியை அரசு வழங்கவில்லை. 12ம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வியை அரசே தர வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் அரசோ தனியாரைக் கல்வித்துறையில் கட்டுப்படுத்தாதோடு அவர்களை ஊக்குவிக்கும் வேலைகளையே தொடர்ந்து செய்து வருகிறது.

தமிழக அரசு ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்குவதனால் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த முடியாது. அவற்றை வளர்க்கவே அரசின் முடிவு துணை செய்யும். தனியார் பள்ளிகள் சிறியதாக இருந்தாலும் அங்கு கழிப்பறை இருக்கிறது. கழிப்பறையில் தண்ணீர் இருக்கிறது. அதைப்பேண ஆயா இருக்கிறார். எந்த அரசு பள்ளியிலாவது இந்தச் சூழல் உள்ளதா? குறிப்பாகப் பெண்களுக்காகவாவது இந்த ஏந்துகள் உள்ளனவா? முதலமைச்சர் பெண்தானே? இதைப்பற்றிக் கவலைப்பட்டிருப்பாரா? உங்களை நம்பி வாக்களிக்கும் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு இரண்டகம் செய்யலாமா?

எனவே, குறைந்தது மழலையர் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்றவர்களைத் தமிழ்வழியில் கற்றவர்களாகக் கருதி வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 80 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கி தமிழகச் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.. இந்த ஆக்கபூர்வ நடவடிக்கைதான் பெற்றோர்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தை நீக்கித் தமிழ்வழியின்பால் நம்பிக்கை உண்டாக்கும்.. போர்க்கால அடிப்படையில் இந்தக் கல்வி ஆண்டிலிருந்தே தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்

கல்வி, மருத்துவம் இரண்டையுமாவது அரசு இலவயமாக அளிக்க வேண்டும். ஆனால், அரசோ இரண்டிலும் தனியாரை ஊக்குவிக்கும் செயல்களையே செய்து வருகிறது. தமிழக அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதியை 3 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் கல்வி வளரும். நாடு முன்னேறும். தமிழ் வாழும்; வளரும்.

தமிழக அரசே!

*             அரசு பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவைத் தொடங்காதே!

*             சமச்சீர்க் கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்து!

*             தமிழ்வழியில் படித்தவருக்கே தமிழ்நாட்டில் வேலை கொடு!

*             தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து!

முதல் அமர்வு

காலை 10 மணி - 1.30 மணி

தலைமை

பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா, நெறியாளர், உலகத் தமிழ்க் கழகம்

வரவேற்புரை

சு. முர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு

முன்னிலை

நாகநாதன், தமிழ்ச் சமூக மாற்றத்திற்கான ஆசிரியர் இயக்கம்

பொ. திருநாவுக்கரசு, தாளாண்மை உழவர் இயக்கம்

ஜெ. ஆனந்தன், தமிழர் குடியரசு முன்னணி

அரிமாதோழன், சுதேசி இயக்கம்

ஜே. சியாம் சுந்தர், ஆசிரியர், சமத்துவக் கல்வி

இசுடாலின், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

கருத்துரை

முனைவர் வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர்

தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

பிரபா கல்விமணி, தாளாளர், தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளி, திண்டிவனம்

முனைவர் எஸ்.எஸ். இராசகோபாலன், மூத்த கல்வியாளர்

பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொ.செ. பொதுக் கல்விக்கான மாநில மேடை

கோ. பாவேந்தன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு

 இரண்டாம் அமர்வு

நண்பகல் 2.00 மணி - 5.00 மணி

தலைமை

பேராசிரியர் யாழினி முனுசாமி, தமிழ்ச் சமூக மாற்றத்திற்கான ஆசிரியர் இயக்கம்

கருத்துரை

ஆர். நல்லக்கண்ணு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி,

வா.அண்ணாமலை பொதுச் செயலாளர் அனைந்திந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு

எழிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழு.

பெருமாள், ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, கோவை

மருதாசல அடிகள், இளைய பட்டம், பேருர் திருமடம்

தினேஷ், ஒருங்கிணைப்பாளர், தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு

பாரி மைந்தன், ஒருங்கிணைப்பாளர், தமிழ் மாணவர் கூட்டமைப்பு

நிறைவு நிகழ்வு

மாலை 5.30 மணி - 8.30 மணி

தலைமை

பழ. நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

முன்னிலை

புலவர் கி.த. பச்சையப்பன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு

அ.சி. சின்னப்பத்தமிழர், தமிழ்மீட்புக் கூட்டியக்கம்

பொன் சந்திரன் (பி.யூ.சி.எல்)

முனைவர் ந. அரணமுறுவல், உலகத் தமிழ்க் கழகம்

மாந்தநேயன், மக்கள் வாழ்வுரிமைப் போராட்ட இயக்கம்

கணியன் பாலன் (பி.யூ.சி.எல்)

வரவேற்புரை

அ. தும்மா பிரான்சிஸ், ஒருங்கிணைப்பாளர், தமிழ்த் தேசியப் பண்பாட்டு இயக்கம்

தொடக்கவுரை

தோழர் கண குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர், மக்கள் நல்வாழ்வு இயக்கம்.

கருத்துரை

பேராசிரியர் ஜவகருல்லா, பொதுச்செயலாளர். மனிதநேய மக்கள் கட்சி

தெகலான் பாகவி, தலைவர் இந்திய சமுக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ.)

பெ. மணியரசன், தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

கு. இராமகிருட்டிணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

வேல்முருகன், பொதுச் செயலாளர், தமிழக வாழ்வுரிமை கட்சி

மல்லை சத்யா, துணைப் பொதுச் செயலாளர், ம.தி.மு.க.

கொளத்துர் மணி, திராவிடர் விடுதலைக்கழகம்

அரங்க குணசேகரன், பொதுச் செயலாளர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

தீர்மானங்கள் நிறைவேற்றல்

சிவ. காளிதாசன், தமிழ்த்தேச குடியரசு இயக்கம்

நன்றியுரை

சு. இராசன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்த் தேசிய மாணவர் இயக்கம்

Pin It