மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

‘மனிதத்தை' போற்றுவோரே கடவுள், மத மறுப்பாளர்கள்

27 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் யுவால் நோவா ஹராரி. இஸ்ரேலில் பிறந்தவர் இப்ரு பல்கலைக்கழக பேராசிரியர். மனித குல வரலாறு, வருங்கால வரலாறு, என்று அவர் எழுதிய...

புண்படுகிறது என்ற கூக்குரலுக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

27 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

மத உணர்வைப் புண்படுத்துகிறார்கள் என்று எதற்கெடுத்தாலும் கூறிக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதும் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதும் சங்கிகளின்...

சமஸ்கிருத படை எடுப்பு

27 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

2014 ஆண்டிலிருந்து 2025 வரை சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி 2,533 கோடி ரூபாய் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 230 கோடி...

‘முருகனை’ அவமதிக்கும் சங் பரிவாரங்கள்

27 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

முருகக் கடவுளை பாஜக தலைவராக மாற்றிவிட்டது மதுரை அரசியல் மாநாடு. இவர்களைவிட முருகனை அவமதிப்பவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. கர்ப்பக்கிரகத்தில் வேத...

சரஸ்வதி நாகரீகத்துக்கு ஆய்வறிக்கை உண்டா?

27 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு பிறகு அந்த அறிக்கையை திருத்தி எழுதித் தருமாறு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு...

ஆங்கிலம் விலங்கல்ல; விலங்கை உடைக்கும் கருவி!

27 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

‘இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அவமானமாக உணர்வார்கள்’ என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து, இந்தியா முழுவதும் விமர்சனம் செய்யப்பட்டதுடன்,...

நில உரிமைக்குப் போராடிய ‘இடையாற்றுமங்கலம்’

27 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை...

ஆங்கிலம் அவமானம், சமஸ்கிருதம் ஆனந்தமா?

27 ஜூன் 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

பொறுப்பான இடத்தில் உள்ளவர்கள் எல்லாம், பொறுப்பற்றுப் பேசும் தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில்...

பாலஸ்தீனத்தில் இனஅழிப்பும் இசுரேலின் வெறித்தனமும்!

27 ஜூன் 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

காசாவில் இன்று ஒரு சிறுவன் பேசுகிறான், “உணவுப் பொட்டலங்களைத் தருவதாகச் சொல்லி, அவர்கள் எங்களுக்கு வில்லைகளைக் கொடுத்தார்கள். நாங்கள் முகாமில் வரிசையில் நின்று...

2026 திமுக கூட்டணி வெல்லும்

27 ஜூன் 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

ஒன்றிய அரசு கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக் கொள்ளா விட்டால் அதிமுக போராடும் என்று அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான உதயகுமார் பேசியிருக்கிறார். அவர்கள் ஏன் போராட...

திராவிட இயக்கத்தின் திசைவிளக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்!

27 ஜூன் 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

திருவாரூர் மாவட்டம் கீரனூருக்கு அருகில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் கிருஷ்ணசாமி - சின்னம்மாள் தம்பதியின் மகளாக, இசை வேளாளர் குடும்பத்தில் 1883-ஆம் ஆண்டு...

பார்ப்பனத் தொல்லை

27 ஜூன் 2025 பெரியார்

தென்னாட்டில், அரசியலிலாகட்டும், சமூக இயலிலாகட்டும், பொருளாதார இயலிலாகட்டும் நமது பார்ப்பனர்களுடைய சூட்சிகள் அளவிட முடியாத அளவு தொல்லை விளைவித்து வருவது...

பெரியார் முழக்கம் ஜூன் 26, 2025 இதழ் மின்னூல் வடிவில்...

27 ஜூன் 2025 பெரியார் முழக்கம் - ஜூன் 2025

    பெரியார் முழக்கம் ஜூன் 26, 2025 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 21, 2025 இதழ் மின்னூல் வடிவில்...

27 ஜூன் 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

    கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 21, 2025 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

உடலாற்றுப்படை

25 ஜூன் 2025 கட்டுரைகள்

ஒரு மாணவர் இடுப்பு வலித்து தொடர்ந்து பத்தாவது நாளாக விடுமுறையானார். அவரை வகுப்பறை நண்பர்கள் 'டேய் உடும்பு' என்பார்கள். உடும்பை போல கச்சிதமாகவும் தசைகளை...

கீற்றில் தேட...

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும் கட்டுரையை 9-10-2012 இல் கீற்று இணையதளம் மற்றும் முகநூலில் வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையை ஆதாரமாகக் காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி 15-10-2012 அன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மின்வெட்டைக் குறைப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைக் கொண்ட 10 பேர் குழுவினை 17-10-2012 அன்று தமிழக அரசு அமைத்தது.

mettur_power_plant

மேட்டூர் மின்நிலையம்

600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மேட்டுர் அனல்மின் அலகும், பழுதாகி பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின்நிலையங்களும் தம் உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சென்னையில் ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை இரண்டு மணி நேரமாகக் கூட்டி, உபரி மின்சாரத்தை மாநிலத்தின் பிறபாகங்களுக்கு 18-10-2012 தேதியில் இருந்து பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

இந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் நமக்கு மேட்டூர் புதிய மின்அலகில் இருந்து 600 மெகாவாட்டும், வழுதூர் 1 மற்றும் 2 அலகுகளில் இருந்து 187 மெகாவாட்டும், சென்னையில் இருந்து பிரித்தளிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 250 மெகாவாட்டும், ஆக மொத்தம் சுமார் 1037 மெகாவாட் கிடைக்க வேண்டும். அதாவது மாநிலத்தின் பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் கால்பகுதி இதன்மூலம் சரியாகியிருக்க வேண்டும்.

ஆனால் உண்மை நிலை இதுதானா?

இல்லை என்பதையே நமது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேட்டூர் புதிய அலகானது 608 மெகாவாட் உற்பத்தியை 12-10-2012 அன்று எட்டியது. ஆனால் அதன்பின் அதனால் அந்த அளவு உற்பத்தியை செய்ய இயலவில்லை. அடுத்து வந்த நாட்களில் 300 – 350 மெகாவாட் மின்சாரத்தை சில நாட்களில் உற்பத்தி செய்வதாகவும், பிற நாட்களில் உற்பத்தி அடியோடு நிறுத்தப்படுவதாகவும் நிலையற்ற நிலையிலேயே அது இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை எப்பொழுது சரியாகும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

வழுதூர் எரிவாயு மின்அலகுகளின் பிரச்சினை வேறாக உள்ளது.

2012 ஜூன்மாதம் மோசமாகப் பழுதடைந்த 95 மெகாவாட் திறன் கொண்ட வழுதூர் 1 ஆம் அலகினை சரி செய்வதற்குத் தேவைப்பட்ட புதிய உபரி பாகங்களை தமிழக அரசு வாங்கவில்லை. மாறாக, பிப்ரவரி 2012 இல் இருந்து பழுதடைந்து நிறுத்தபட்டிருந்த 101 மெகாவாட் திறனுடைய குத்தாலம் எரிவாயு மின்நிலையத்தின் ரோட்டர் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றை அது பிரித்தெடுத்தது. இவற்றைக் கொண்டு வழுதூர் 1 இன் பிரச்சினைகளை அது சரி செய்தது.

101 மெகாவாட் திறனுடய குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தினை சரிசெய்வதை விட்டுவிட்டு வழுதூர் 1 ஆம் அலகின் பழுதினை நீக்குவதற்குத் தேவையான உபரிபாகங்களைக் கொடுக்கும் ஒரு இடமாக அதனை தமிழக அரசு மாற்றியது எதற்காக?

இவ்வாறு குத்தாலம் மின் நிலையத்தின் உபரிபாகங்களைக் கொண்டு பழுதுநீக்கப்பட்ட வழுதூர் 1 ஆம் அலகு இன்று உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து 95 மெகாவாட் கிடைக்கக்கூடும்.

வழுதூர் 2 ஆம் அலகின் கதை என்ன?

தமிழக அரசின் எரிவாயு நிலையங்களிலேயே மிக அண்மையில் நிறுவப்பட்ட மின்உற்பத்தி அலகுதான் இது. 17-2-2009 ஆம் தேதியன்று உற்பத்தியைத் தொடங்கிய இந்த 92 மெகாவாட் திறன் கொண்ட மின்அலகானது 9-1-2010 ஆம் தேதியன்று மிக மோசமாகப் பழுதடைந்தது. அதாவது அதன் கியாரண்டி காலமான ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பழுதடைந்து போனது. அதனைப் பழுதுநீக்க 16 மாதகாலம் தேவைப்பட்டது. மீண்டும் 7-5-2011 ஆம் தேதியன்றுதான் அது தன் உற்பத்தியைத் தொடங்கியது. என்றாலும் கூட, அதன் பழுது முற்றாக நீக்கப்படவில்லை. பழுது நீக்கப்பட்ட பிறகும் அதன் ரோட்டர் கருவியானது மிக மோசமான அதிர்வினை வெளிப்படுத்துவதால் 92 மெகாவாட்டுக்குப் பதிலாக 68 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே இந்த மின்அலகால் உற்பத்தி செய்யும் சூழ்நிலை உருவானது. இவ்வாறு குறைந்த திறனில்இயக்கப்பட்டு வந்த இந்த அலகானது அடுத்து வந்த ஓராண்டில் சுமார் 15 முறை பிற பழுதுகளால் (ட்ரிப்பிங்) பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. கடைசியில், ஒரு குறிப்பிட்ட உபரிபாகம் இல்லாத காரணத்தால் ஜூன் 2012 இல் இருந்து 45 நாட்களுக்கு அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்றும் அது 92 மெகாவாட்டுக்குப் பதிலாக68 மெகாவாட்டைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த அவலம்?

மின்வாரியத்தின் நான்கு எரிவாயு நிலையங்களில் மூன்று நிலையங்கள் – குத்தாலம், கோவில்களப்பால் மற்றும் வழுதூர் 1 – பாரதமிகு மின்நிலையத்தின் (BHEL) எந்திரங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனமே இந்த நிலையங்களை நிறுவும் ஒப்பந்ததாரராகவும் இருந்தது.

ஆனால் வழுதூர் 2 ஆம் நிலையத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பி.ஜி.ஆர் (B.G.Raghupathy) என்ற தனியார் நிறுவனத்திற்கு 2006 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கியது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த நிறுவனத்திற்கு இதற்கு முன் மின்நிலையங்களைக் கட்டிய அனுபவம் ஏதும் இல்லை என்பதுதான். இதுவே அந்த நிறுவனம் மேற்கொண்ட முதல் மின்நிலைய ஒப்பந்தமாகும்.

இந்த மின்நிலையத்தை நிறுவுவதற்காக அது இத்தாலி நாட்டின் ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களைத் தருவித்தது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மற்ற மின் நிலையங்களின் ஒப்பந்தக்கார நிறுவனமான பாரதமிகு மின்நிலையம் போல பி.ஜி.ஆர். நிறுவனமானது எந்திர வடிவமைப்பிலோ, எந்திர உற்பத்தியிலோ ஈடுபட்டதில்லை. வழுதூர் 2 ஆம் மின் அலகினை அமைப்பதன் மூலம் அது மின்நிலையம் ஒன்றை எவ்வாறு நிறுவுவது என்பதற்கான பயிற்சியையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டது என்றுதான் சொல்ல முடியும். ANSOLDO நிறுவனத்தின் எந்திரங்களை அதனால் சரியாக நிறுவத் தெரியவில்லை. இதன் காரணமாகவே ஒப்பந்த காலமான 21 மாத காலத்திற்குள் இந்த நிலையத்தினை அதனால் நிறுவ இயலவில்லை. இதற்காக அது கூடுதலாக 10 மாதங்களை எடுத்துக் கொண்டது. இதற்குப் பிறகும் கூட மின் நிலையத்தின் பணிகளை அதுஅரைகுறையாகவே முடித்துக் கொடுத்தது.

power_grid_270ஒப்பந்தகாலமாகிய ஓராண்டு காலம் வரை நிலையத்தில் ஏற்படும் பழுதுகளுக்கு ஒப்பந்தகார நிறுவனமே – அதாவது பி.ஜி.ஆர் நிறுவனமே -பொறுப்பாகும். ஆனால் 9-1-2010 இல் ஏற்பட்ட பழுதிற்கும், அதன் பிறகு 16 மாத காலம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பிற்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்தைத் தமிழக அரசோ, தமிழ்நாடு மின்வாரியமோ பொறுப்பாக்கியதாகத் தெரியவில்லை.இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 43 கோடி ரூபாயாகும்.

மேலும், மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தியையே இந்த நிலையம் இன்றும் தந்துகொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் யாரைப் பொறுப்பாளியாக்குவது?

இதனைவிட மிகப் பெரிய சோகம் ஒன்றும் இருக்கிறது. வழுதூர் 2 ஆம் மின் நிலையத்தைச் சரியாக அமைத்துக் கொடுக்கத் தெரியாத இதே பி.ஜி.ஆர். நிறுவனத்திற்குத்தான் இன்று நாம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மேட்டூர் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்தத்தை தமிழக அரசு கொடுத்தது என்பதுதான் அந்தச் சோகம்.

மின்வாரியத்தின் அனைத்து மின்நிலையங்களும் பாரதமிகு மின்நிலையத்தின் எந்திரங்களையே உபயோகிக்கின்றன. அதன் புதிய மின்நிலையங்களும் இந்த மரபைத்தான் பின்பற்றி வருகின்றன.

ஆனால், பி.ஜி.ஆர். நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் மேட்டூர் 600 மெகாவாட் மின்நிலையத்தில் சீனநாட்டின் Dong Feng Electricals நிறுவனத்தின் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிலையம் 25-9-2011 இல் உற்பத்தியைத் தொடங்கியிருக்கவேண்டும். ஆனால் இன்றுவரை அதனால் நிலையான உற்பத்தியைத் தொடங்க இயலவில்லை.

அனல்மின் நிலையங்களுக்கான சீன நாட்டின் எந்திரங்கள் தரம் குறைவானவை என்பதால் அவற்றைக் கொள்முதல் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நடுவண்மின் துறை அமைச்சகம் கடந்த காலத்தில் அறிவுறுத்தியிருந்ததை இங்கு நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

மேட்டூர் 600 மெகாவாட் மின் நிலையத்திலும், வழுதூர் 2 ஆம் நிலையத்தைப் போலவே கட்டுப்படுத்த இயலாத அளவு அதிர்வுகள் இருப்பதாகத் தெரிகிறது. வழுதூர் 2 ஆம் நிலையம் போலவே மேட்டூர் புதியமின் நிலையம் எதிர்காலத்தில் நோயுற்ற யானையாக இருந்து விடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வழுதூர் 2 ஆம் நிலையத்தின் பழுதுகளுக்குப் பொறுப்பேற்க வைக்கப்படாத பி.ஜி.ஆர். நிறுவனம் எதிர்காலத்தில் மேட்டூர் புதிய மின்நிலையத்தில் ஏற்படும் இழப்புகளுக்கும் பொறுப்பேற்க வைக்கப்படுமா என்ற அச்சம் எழுகிறது. உற்பத்தியைத் துவங்குவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு இந்நிறுவனம் தோராயமாக 1000 கோடி ரூபாய் அளவிற்குப் பொறுப்பேற்க வேண்டும். எல்லாவற்றையும் விட மின் உற்பத்தி இழப்பானது இன்று கடுமையான மின்வெட்டிற்கு மாநிலத்தைத் தள்ளியுள்ளது. இது வழுதூர் 2 ஐப் போன்று 6 மடங்கு உற்பத்தியைக் கொண்ட மின்நிலையமாதலால், இதில் ஏற்படும் பழுதுகள் மாநிலத்தின் மின்சார வினியோகத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

ஆக, அரசும், செய்தி ஊடகங்களும் சொல்வதைப்போல இன்று நடைமுறையில் உள்ள மின் தட்டுப்பாட்டில் பெரிய மாற்றங்களேதும் உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை.

அவ்வாறு ஏற்பட வேண்டுமென்றால்:

  1. பி.ஜி.ஆர். நிறுவனத்திடம் கொண்டிருக்கும் மென்மையான அணுகுமுறையினை அரசு கைவிட வேண்டும். மக்களின் நலன் கருதி ஒப்பந்தகாரப் பொறுப்புகள் அனைத்தையும் அந்த நிறுவனம் உடனடியாக செயல்படுத்தித் தர நிர்ப்பந்திக்க வேண்டும்.
  2. குத்தாலம் மற்றும் வழுதூர் மின்நிலையங்களில் நிகழும் பழுதுகள் யாவும் நீண்ட காலம் நீக்கப்படாமல் இருப்பது இந்நிலையங்களைச் சுற்றி உள்ள 8 தனியார் எரிவாயு மின்நிலையங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதற்காகத் தானோ என்ற சந்தேகம் உள்ளது . அரசு மின்நிலையங்கள் பழுதடைந்து கிடப்பதால் அவற்றிற்குக் கிடைக்க வேண்டிய அரிதான இயற்கை எரிவாயுவினை இந்தத் தனியார் மின்நிலையங்கள் தங்கு தடையின்றி பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அருகில் தனியார் மின்நிலையங்கள் ஏதும் இல்லாத கோவில்களப்பால் அரசு எரிவாயு மின்நிலையம் இது போன்ற பழுதுகளை 2004 ஆம் ஆண்டிலிருந்தே சந்திக்கவில்லை என்பது இந்த சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.
  3. ஆந்திர மாநிலத்தின் சிம்மத்திரி அனல் மின்நிலைத்தில் இருந்து இன்று வரை நமக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தைக் கேட்காமல் இருக்கும் நிலைப்பாட்டினை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும். உடனடியாக நமக்குக் கிடைக்க வேண்டிய இந்தப் பங்கினை நாம் கேட்டுப் பெறவேண்டும்.
  4. குத்தாலம் எரிவாயு மின்நிலையத்திலிருந்து வழுதூர் 1 அலகிற்குப் பிரித்து எடுத்துச் செல்லப்பட்ட எந்திரங்களுக்குப் பதிலாக பாரதமிகு மின்நிலையத்திலிருந்து உடனடியாகப் புதிய எந்திரங்களை வாங்கிப் பொறுத்தி இயக்க வேண்டும். 

- கோவை. சா.காந்தி,

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

தொடர்புக்கு: 9443003111