டிசம்பர், சனவரி மாதங்களில் பல்வேறு பண்டிகைகள் வருகின்றன. அப்போது நீங்களே இவைகளை செய்து உங்கள் வீட்டை அழகு படுத்தலாம்.

1.காகிதச் சங்கிலி (Paper Chains)

paperwork
தேவையானவை :

1. வழுவழுப்பான வண்ணக்காகிதங்கள்
2. கத்தரி,
3. பசை

paper_work_
செய்முறை :

1. சதுர வடிவில் இருக்கும் வண்ணக்காகிதத்தை முதலில் முக்கோண வடிவத்தில் இரண்டாக மடிக்கவும். பிறகு மீண்டும் ஒருமுறை அதே மாதிரி மடிக்கவும்
paper_work
2. கத்தரியின் உதவியோடு, படத்தில் உள்ளபடி எதிரும் புதிருமாக வெட்டவும். ஒவ்வொரு வெட்டும் முக்கால் பாகத்திற்கு இருக்க வேண்டும்.
3. வெட்டியப்பின்பு தாளை விரித்து வைத்துவிட்டு, வேறொரு நிறத்தில் உள்ள தாளை எடுத்து மேலே சொன்னது போலவே வெட்டவும்
4. வெட்டிய இரு தாள்களையும் பிரித்து, ஒன்றன் மீது ஒன்று வைத்து, முனைகளை மட்டும் ஒட்டிவிடவும்.
5. இப்போது அந்தத் தாள்களின் நடுப்பக்கத்தில் கை வைத்து மெதுவாக இழுக்கவும், அழகான ஒரு காகிதச் சங்கிலி தயார்! இதைப்போலவே டசன் கணக்கில் வெட்டி, விரும்பிய இடங்களிலெல்லாம் தொங்க விடுங்கள்.


2. வாசல் தோரணம் :

door_dector
தேவையானவை :

1. மாவிலைகள்
2. நூல் கயிறு
3. நூல்
4. ஊசி (அளவில் பெரியது)
5. பூக்கள் (சாமந்திப்பூ அல்லது ரோஜாப்பூ சிறந்தது)

செய்முறை :

door_dector
1. ஊசி நூல் கொண்டு பூக்களை ஒன்றின் மேல் ஒன்றாகக் கோர்த்து மாலையை உருவாக்கவும்.
2. நூல் கயிற்றில் சமஅளவு இடைவெளி விட்டு மாவிலைகளை கட்டவும். பூமாலைத் துண்டுகளை எடுத்து மாவிலைகளின் இடைவெளியில் வைத்து கட்டவும். தோரணம் உருவாகிவிட்டது.
3. வாசற்படியில் இருபக்கங்களிலும் சிறு ஆணிகளை அடித்து அவற்றில் தோரணத்தின் இரு முனைகளையும் தளர்வாக விட்டு கட்டவும்.
4. இந்தத் தோரணத்தை செயற்கையான பொருட்களைக் கொண்டும் கூட உருவாக்கலாம். காகிதப் பந்துகள், மணிகள், துணித் துண்டுகள் போன்றவற்றை விருப்பம் போல இதற்குப் பயன்படுத்தலாம். தோரண வாயில்களோடு விருந்தினர்களை வரவேற்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் இல்லையா!


Pin It