அழகிய பெரியவன் கதைகள்

விலை ரூ.65
"சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என அனைத்து தளங்களிலும் தனக்கேயுரிய தனி அடையாளத்தைப் பதித்திருக்கும் இவரின் சிறுகதைகள் இங்கே நூலாக்கம் பெற்றுள்ளன. தனித்துவமான கவித்துவ நடையையும் மக்களின் பேச்சு மொழியையும் இழைத்து இவர் உருவாக்கியிருக்கும் கதைகள், தலித் அழகியலை அடுத்த நிலைக்கு நகர்த்தியுள்ளன. இத்தொகுப்பிலுள்ள பல கதைகள், கல்லூரிகள் சிலவற்றில் தமிழ் இலக்கியத்துக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.''.

ஆசிரியர் : அழகிய பெரியவன்
பக்கங்கள் : 144
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098 ,
பேசி : 2635 9906

பகத்சிங் - விடுதலை எழுச்சியின் விடிவெள்ளி

விலை ரூ.50
"புரட்சி என்பது தனிநபர்களைக் கொலை செய்யும் ரத்தக் களறி அல்ல. அது வெறும் வெடிகுண்டு துப்பாக்கிப் பூசையுமல்ல. நாங்கள் கொடியவர்களோ, இழிவானவர்களோ, கொலை வெறியர்களோ, கொள்ளைக்காரர்களோ அல்ல. உலக சரித்திரத்தையும், எங்கள் தாய்த்திரு நாட்டையும், மனிதனின் எதிர்பார்ப்புகளையும் நாங்கள் பயின்று கொண்டிருக்கிறோம். இதில் எங்களுக்குப் போலித்தனம் ஒருபோதும் இருந்ததில்லை.''

ஆசிரியர் : எஸ்.ஏ. பெருமாள் .
பக்கங்கள் : 112
வெளியீடு : வாசல், புதிய எண். 202, முதல் தெரு, வசந்த நகர், மதுரை 625 003
பேசி : 98421 – 02133

பொன். ஆனந்தராஜ் வாழ்க்கை வரலாறு

"சமுதாயத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும், மின்வாரியத்திற்கும் மற்றும் பல நிறுவனங்களுக்கும், சிறந்த சேவை செய்தவர் மறைந்த அன்பர் பொன் ஆனந்தராஜ். எந்த நிகழ்ச்சியிலும், எந்தச் சந்தர்ப்பத்திலும், சமுதாயத்திலுள்ள பிரச்சனைகளைப் பற்றியும், செட்யூல்ட் இன மக்களின் நலனைப் பற்றியும் பேசுவார். பொது வாழ்க்கை என்ற போர்வையில் தன் பிள்ளை, தன் மனைவி, தன் குடும்ப முன்னேற்றத்திற்காகவே வாழ்வோர் மத்தியில், அப்பழுக்கற்ற பொது வாழ்க்கையை மேற்கொண்டவர் இவர்.''

தொகுப்பாசிரியர் : தமிழ் மறையான்
பக்கங்கள் : 128
வெளியீடு : சித்தார்த்தர் மழலையர் பள்ளி, 432, பேஸ் ஐஐஐ, த.வீ.வ.வா. குடியிருப்பு, சத்துவாச்சாரி, வேலூர் 9
பேசி : 98493 - 90927

தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

விலை ரூ.350
""இது நமக்குக் கடைசி முயற்சி என்று நினைக்கணும். இப்படியே சாகிறதைவிட ஈனத்தனம் வேறே இல்லை. ஆனதினாலே ஏதோ ஓர் கிளர்ச்சி செய்கிறேன் இப்போது நான். சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று அடுத்த மாதம் கூட்டுகிறேன். ஒன்றும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது அல்ல, பெரிய லாபம் அடைகிறதற்கு அல்ல, நமக்கு இருக்கிற இழிவு போகணும்; அவமானம் போகணும்! இப்போது நாம்தான் ஆள்கிறோம்; என்ன செய்ய முடிந்தது? ''

ஆசிரியர் : கருணானந்தம்
பக்கங்கள் : 800
வெளியீடு : தமிழ்க் குடிஅரசு பதிப்பகம், 14/12, மியான் முதல் தெரு, சென்னை 5
பேசி : 94443 - 21902

வாச்சாத்தி : உண்மையின் போர்க்குரல்

விலை ரூ.8
""ஒரு கிராமமே பாதிக்கப்பட்டு 18 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிகேட்டு உள்ளூர் காவல் நிலையம் முதல் உச்ச நீதிமன்றம் வரை முயன்றும் 16 ஆண்டு காலமாக வழக்கு நடந்து கொண்டேயிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்க, இன்னும் எத்தனை முறைதான் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏற வேண்டியிருக்குமோ?'

ஆசிரியர் : பெ. சண்முகம்
பக்கங்கள் : 32
வெளியீடு : தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம், 46ஏ, வ.உ.சி. தெரு, மேற்கு தாம்பரம், சென்னை- 45

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

விலை ரூ.60
""ஆண்டொன்றுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 31,17,843. 110 கோடி மக்களை உள்ளடக்கிய இந்திய நாட்டில், மேலே குறிப்பிட்டுள்ள 31 லட்சம் பேர்தான் உயர் குடிமக்கள். இந்த மேட்டுக் குடியினர் குறித்த செய்திகளை, இந்திய பத்திரிகைகளும், இணையதளங்களும் பெருமையுடன் வெளியிடுகின்றன. இவர்களின் பணப் பெருக்கம், இந்திய நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் வெளிப்பாடு என்று அரசியல் தலைவர்களும் பெருமை பாராட்டிக் கூப்பாடு போடுகின்றனர்.''

ஆசிரியர் : அ. இருதயராஜ்
பக்கங்கள் : 152
வெளியீடு : கலங்கரை, 91, 6ஆவது தெரு, மறைமலை நகர், காடாம்பாடி, நாகை 611 001

Pin It