பதினொன்றாவது அய்ந்தாண்டுத் திட்டம்
விலை ரூ.10

“11ஆவது 5 ஆண்டுத் திட்டம் 200708 தொடங்கி 2011-12 வரை நீளுகிறது. இத்திட்ட காலத்தில் பட்டியல் இனத்தவர்க்கான ஆளுமைமிக்க திட்டங்களை அளிப்பது தொடர்பாக, மத்திய திட்டக் குழு ஒரு செயற்குழுவை அமைத்தது. அதன் தலைவராகப் பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர் சுகதேவ் தோராட் நியமிக்கப்பட்டார். இந்தக் குழு அருமையான திட்டங்களைப் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரைகள் உரிய அரசுத் துறைகளால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு பட்டியல் இன அமைப்புகள் அழுத்தம் தர வேண்டும். இவ்வறிக்கை இந்நூலில் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.”

பக்கங்கள் : 28, வெளியீடு : அம்பு, 20, 4ஆவது தெரு, பெரியார் நகர், இரும்புலியூர், சென்னை 600 045

ஆரிய ஆட்சி
விலை ரூ.60

“1937இல் ராஜாஜி ஆட்சிக்கு வந்தார். அவருடைய ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாச பிரமாணம் எடுத்தது. இந்தி எதிர்ப்பு வீரர்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியது. எதிர்க்கட்சியினரைப் பேச விடாமல் வாய்ப்பூட்டு போட்டது. எதிர்க் கட்சியினர் சட்டமன்றத்தில் பேசுவதற்கு முற்றாக அனுமதி மறுத்தது. இந்தி எதிர்ப்பு கைதிகளை மிகக் கொடுமையான குற்றவியல் சட்டங்களின் கீழ் சிறைத்தண்டனை விதித்தது உள்ளிட்ட பல்வேறு செய்திகளை இந்நூலில் காணலாம்.”

பதிப்பாசிரியர் : வாலாசா வல்லவன், பக்கங்கள் : 128, வெளியீடு : தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம், 14/12, மியான் முதல் தெரு, சேப்பாக்கம், சென்னை- 600 005

வெய்யிலைத் தின்றவன்
விலை ரூ.40

“இந்தியாவில் உழைக்கும் மக்களின் பெரும்பகுதி, சமூக நீதி மறுக்கப்பட்ட தலித் மக்களாக இருக்கும் பட்சத்தில், சமூகத்திலிருந்து எளிதாக அன்னியப்படுத்தி வைத்திருப்பதில் பெரும் பங்கு உடல் தோற்றம் பற்றிய -இந்திய சமூகம் கட்டமைத்து வைத்துள்ள தவறான, ஒற்றைத்தனமான கோட்பாடுகளேயாகும். தோற்றப்பிழையுடன் இறக்கும் (இறந்து போனதாக கூறும்) குழந்தைகளை கணக்கெடுத்துப் பார்த்தால், பெண் சிசுக் கொலைகளைவிட அதிகமாக, ஒரு குட்டி இந்தியாவையே இழந்திருப்போம்.”

ஆசிரியர் : சோ. அறிவுமணி, பக்கங்கள் : 80, வெளியீடு : பாலை, 2, முதல் தளம், மிதேஸ் வளாகம், திருநகர், மதுரை 625 006,
பேசி : 98422 65884

டாக்டர் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனை வரலாறு
விலை ரூ.70

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு டாக்டர் அம்பேத்கரின் பங்கையும், அதன் தொடர்பான அவரின் பொருளியல் சிந்தனைகளையும் பற்றி வரலாற்று நிலையில் இச்சிறுநூலில் ஆராயப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அம்பேத்கர் அளப்பரிய பங்காற்றியிருக்கிறார் என்று தெரிந்து கொள்ளப்பட்டால், அதுவே இச்சிறு நூலின் பயனாகும்.”

ஆசிரியர் : மு. நீலகண்டன், பக்கங்கள் : 144,வெளியீடு : அலைகள், 25, தெற்கு சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 600 024 சென்னை 7  பேசி : 044 24815474

முரண்தடை
விலை ரூ.50

“சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம் ... என எழுதியவனுக்கு எப்படிக் கவிதைகள் பிடிபட்டது என்பது ஒரு சோக அனுபவந்தான். பல சக்கர வண்டியோட்டிக்கு இரு சக்கர வண்டியோட்டுதல் என்பது முடியாத ஒன்றல்ல; முடியும். அதற்கானத் தகுதியும் முயற்சியும் கலைஞனுக்குத் தேவையாய் இருக்கிறது. கவிதைகள் எல்லா காலத்திலும், எல்லா நேரத்திலும் பிடிபடுவதில்லை. "ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கினைப் போல' ஒரு நல்ல கவிதை அமைய தேர்ந்த மனநிலையும் அது சார்ந்த சூழலும் ஒருங்கே அமைய வேண்டும் என்பதுதான் முக்கியமாகப்படுகிறது.”

ஆசிரியர் : விழி.பா. இதயவேந்தன், பக்கங்கள் : 96, வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர் சென்னை 600 011, பேசி : 044 25582552

பட்டியல் இன துணைத் திட்டம்
விலை ரூ.20


“200708 தமிழ் நாடு பட்ஜெட்டில் பட்டியலின துணைத்திட்டத்தின் கீழ் திட்ட நிதியான ரூ.14,000 கோடியில் 19 சதவிகிதம் தரப்பட வேண்டும். அதாவது, ரூ.2660 கோடி. பட்ஜெட் பனுவலில் இந்த நிதி 789 என்ற கணக்குத் தலைப்பின் கீழ் காட்டப்பட வேண்டும். 200708 ஆம் ஆண்டில் 789இன் கீழ் காட்டப்பட்டுள்ள தொகை ரூ. 1294 கோடியாகும். ஆக, பட்டியலின துணைத் திட்டத்தின் கீழ் இன்னும் தரப்படவேண்டிய தொகை ரூ. 1366 கோடி.”
பக்கங்கள் : 40, வெளியீடு : பாலம், இ/7, பாரத் அடுக்ககம், ஆர்.வி. நகர், அண்ணா நகர் கிழக்கு, சென்னை 102
Pin It