அம்பேத்கரின் பன்முகம்
விலை ரூ.50

“அம்பேத்கரைப் பற்றிப் பேசுவதும் பட்டியலின மக்களைப் பற்றிப் பேசுவது என்பதும் சாதியம் பேசுவது அல்ல. சாதிய மறுப்புக்குள் போவது என்ற பொருளை உணர்த்த வேண்டும். ஆகவே, அம்பேத்கரைப் பற்றி தெளிவாக அறிய வேண்டுமென்றால்-மீண்டும் மீண்டும் அம்பேத்கர் தீண்டாமை பற்றியோ, சாதியம் பற்றியோ, மனுவைப் பற்றியோ என்னவெல்லாம் எழுதினார் என்று மட்டும் பார்ப்பதை விட்டுவிட்டு, இதற்கு அப்பாற்பட்டு அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று பார்த்தால்தான் பூரண வெளிச்சம் கிடைக்கும்.”

தொகுப்பாசியர் : டி. தருமராஜன்
பக்கங்கள் : 144
வெளியீடு : அம்பேத்கர் ஆய்வு மய்யம், தூய சவேரியர் தன்னாட்சிக் கல்லூரி, பாளையங்கோட்டை - 627 002


மண்ணும் சொல்லும் - மூன்றாம் உலகக் கவிதைகள்
விலை ரூ.115

“ஒடுக்குமுறைக்கு எதிரானதோர் அறைகூவல் மட்டுமல்ல சொல்; அது செயலைத் தூண்ட வல்லது. வரலாற்றுடன் தன்னை இணைத்துப் புது யுகத்தை, புதிய வரலாற்றைப் படைக்க வல்லது.

சில்லென்று நெருஞ்சிக் காடே / சிக்காதே: / உன் மீது / கால்கள் அல்ல / களைக் கொத்திகளே இனி நடக்கும்.
எங்களைப் / பிராண்டிச் சிவந்த உன் நகங்களை நீட்டாதே / ஏனெனில் / வெட்டப்படுவது இனிமேல் / நகங்களல்ல- / விரல்கள்

தமிழாக்கம்: வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை,
பக்கங்கள்: 220, வெளியீடு : அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621 310, பேசி : 04332 273444


தோழர் மாவோ
விலை ரூ.40

“மார்க்சியத் தத்துவத்தின் பேராசான்களில் ஒருவரும், மக்கள் சீனப்புரட்சியின் தந்தையுமாகிய மாசேதுங் மறைந்த 1976 ஆம் ஆண்டில் அவரது நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு நூல்கள் பல மொழிகளில் வெளிவந்தன. புரட்சியாளர் மாவோ உட்பட, மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்கள் வரலாற்றில் இன்றும் உயிர்ப்பானவையே. மேலும், வரலாற்றிற்கு உயிர்ப்பைத் தரவல்லவையும் அவையே.”

பக்கங்கள் : 104,வெளியீடு : சூலூர் வெளியீட்டகம்,
8, பாலா இல்லம், நஞ்சப்பா குடியமைப்பு, சூலூர்,
கோயம்புத்தூர் 641 402


ஈரான் - ஒரு குழந்தைப் பருவத்தின் கதை
விலை ரூ.100

“வரலாற்றையும் அரசியலையும் அனுபவங்களையும் வரைபடத்தின் நுட்பத்துடனும், எழுத்தின் தீவிரத்துடனும் சேர்த்து முன்வைக்கும் வரைபட இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக விளங்குகின்ற மர்ஜானே சத்ரபியின் இந்நூல், மொழிபெயர்ப்பின் மூலமாகத் தமிழில் மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி. ஈரானில் ஒரு சோஷலிச சமூக அமைப்பை நிறுவுவதற்கானப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் மரபில் வந்த முற்போக்கான குடும்பத்தில் பிறந்து, இசுலாமியப் புரட்சி நடைபெற்ற காலத்தில் அங்கு தனது குழந்தைப் பருவத்தைக் கழித்த ஒரு பெண் என்ற முறையில் சத்ரபியின் அனுபவங்களைச் சித்தரிக்கின்ற இந்நூல், மத அடிப்படைவாதம், மதவெறி, பயங்கரவாதம் ஆகியவற்றுடன் இணைந்தே முன்வைக்கப்படும் ஈரான் பற்றிய பிம்பங்களை உடைத்தெறிகிறது.”

ஆசிரியர்: மர்ஜானே சத்ரபி, பக்கங்கள் :154
வெளியீடு: விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு), கோயம்புத்தூர் - 641 015, பேசி : 0422 - 2576772


விடுதலையின் வேர்காணல்
விலை ரூ.75

“தலித் இயக்கங்கள், தலித் தலைமை, தலித் கருத்தியல், தலித் அரசியல் ஆகியவற்றின் மீது தொடர் விவாதம், ஆய்வுகளும் தேவை என்பதற்குத் தூண்டுதலாக இந்நூல் வெளியிடப்படுகின்றது. இத்துடன் தலித் இயக்கங்களும், அதன் தலைமைகளும் தாங்கள் கடந்து வந்த பாதையையும், அடியெடுத்துவைக்கின்ற பாதையையும் அலசிப்பார்த்து ஒரு புதிய பயணத்தைத் தொடரவும் அழைப்பு விடுக்கின்றது. மேலும், பல்வேறு தளங்களில் இயங்குகின்ற தலித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் தோழமை கொள்ளவும், அக்கறையை வளர்த்துக் கொள்ளவும், குறைந்தபட்ச செயல்திட்டங்களுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கவும் தூண்டுகின்றது.”

தொகுப்பு: அன்பு செல்வம், பக்கங்கள் : 256
வெளியீடு: தலித் ஆதார மய்யம், 32, பாரதிதாசன் சாலை, அரசரடி, மதுரை - 625 016, பேசி : 95452 - 2302199


‘தமிழர் முழக்கம்' - சிறப்பு மலர்
ஆண்டுக் கட்டணம் : ரூ. 75

“தீண்டாமை ஒழிய வேண்டுமானால் அதன் பிறப்பிடமான இந்து மதம் அழித்தொழிக்கப்பட வேண்டும். இந்து மதம் சமூக நீதியை நிலைநாட்டும் என்று எதிர்பார்ப்பது வீணானது. ஏனெனில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, கொடுமை, நேர்மையின்மை ஆகியவற்றின் உருவமாகவே இந்துமதம் காட்சியளிக்கிறது என்று மாமேதை அம்பேத்கர் குறிப்பிட்டதை நினைவில் கொள்வோம்.''

ஆசிரியர் : வேதகுமார், பக்கங்கள் : 60
வெளியீடு : 487, 15 ஆவது குறுக்கு,
ஸ்டேஜ்-11, இந்திரா நகர், பெங்களூர் 560 038, பேசி : 08025250252
Pin It