(சேலம் மாவட்டத்தில் 9 நாள் எழுச்சிப் பரப்புரை)

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தை முன் வைத்து சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஐந்து நாட்கள் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் மார்ச் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாரமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியக்குமார் தலைமையேற்க, காவை. இளவரசனின் ‘மந்திரமா தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது. பரப்புரைப் பயணத்தை விளக்கி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினார்.

salemm 600

மார்ச்-22 : நங்கவள்ளி அருகே உள்ள மசக் காளியூரில் மாலை 7 மணிக்கு பரப்புரை நடை பெற்றது. இதில் தோழர்கள் நங்கவள்ளி அன்பு, சேலம் பிரபு பயணத்தை விளக்கி உரையாற்றினர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்.

மார்ச்-23 : மேட்டூர் ஆர்.எஸ். பகுதி வைதீஸ்வரா பள்ளி அருகில் மாலை 6 மணிக்கு பரப்புரை நடைபெற்றது. பயணத்தை விளக்கி நங்கவள்ளி அன்பு உரையாற்றினார். இரவு 8 மணிக்கு ஆர்.எஸ். பகுதி என்.எஸ்.கே. நகரில் பரப்புரை நடைபெற்றது.

மார்ச்-24 : மேட்டூர் அணை சிறிய பூங்கா அருகில் மாலை 5 மணிக்கு பரப்புரை நடைபெற்றது. பயணத்தை விளக்கி சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் உரையாற்றினார்.

மேட்டூர் அணை தந்தை பெரியார் பேருந்து நிலையத்தில் இரவு 7 மணிக்கு பரப்புரை நடை பெற்றது. பயணத்தை விளக்கி சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.

மார்ச்-25 : கொளத்தூர் தந்தை பெரியார் பேருந்து நிலையத்தில் மாலை 6 மணிக்கு பரப்பரை நடைபெற்றது. பயணத்தை விளக்கி தோழர்கள் டைகர் பாலன், சூரியக்குமார், காவை சித்துசாமி, பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம் ஆகியோர் உரையாற்றினர்.

பயணம் நடைபெற்ற ஐந்து நாள்களிலும், பறை முழக்கம், வீதி நாடகம், மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் ஜாதி ஒழிப்பு மற்றும் பகுத்தறிவு பாடல்களை பாடினர்.

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற திராவிடர் விடுதலைக்கழகத்தின் முழக்கத்துடன் கருப்பு பனியன் அணிந்து தோழர்கள் கலந்து கொண்டனர்.

பரப்புரைப் பயண நிறைவு கூட்டங்கள்

‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து, திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை, ஈரோடு, சேலம், மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு, பரப்புரைப் பயணங்களை நடத்தியது. சென்றவிடமெல்லாம் மக்கள் ஆதரவை வழங்கி கருத்துகளைக் கேட்டனர். பயணக் குழுவின் நிறைவு நாளில் பொதுக் கூட்டங்கள் நடந்தன. அதன் விவரம்:

salem 600

சத்திய மங்கலம்: பரப்புரைப் பயண நிறைவு நாள் பொதுக்கூட்டம் சத்திய மங்கலம் வடக்குப் பேட்டையில் 27.03.2015 மாலை நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு ஜி.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். முன்னிலை மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, மாவட்ட செயலாளர் அர்சுணன், சத்தி அமைப்பாளர் சதுமுகை பழனிச்சாமி மற்றும்  சுபாசு.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை யாற்றினார். முன்னதாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி, தலைமைக் குழு உறுப்பினர் ஈரோடு ரத்தினசாமி, மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் ப. சிவக்குமார் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ''திராவிடர் கலைக்குழு''வினரின் வீதி நாடகம் நடைபெற்றது. முடிவில் தாசரிபாளையம் முருகேசன் நன்றி கூறினார்.

மயிலாடுதுறை: பரப்புரைப் பயண நிறைவு நாள் பொதுக்கூட்டம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னகடை வீதியில் 26.03.2015 மாலை நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை யாற்றினார். முன்னதாக தலைமைக் கழகப் பேச்சாளர் முனைவர் ஜீவானந்தம், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் துரை.தாமோதரனின் ‘மந்திரமல்ல! தந்திரமே'! அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பொது மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

சித்தோடு: ஈரோடு தெற்கு மாவட்ட பரப்புரைப் பயணத்தின் நிறைவு பொதுக் கூட்டம் 24.03.2015 அன்று மாலை 7 மணிக்கு சித்தோட்டில் மிக எழுச்சியோடு கழக ஆதரவாளர் இரா. முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் காவை இளவரசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார்.

தலைமைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் ஈரோடு இரத்தினசாமி மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக ஆசிரியர் சிவக்குமார் நன்றியுரை கூற நிகழ்ச்சி முடிவுற்றது. இந்நிகழ்வில் செல்வராஜ், கழக வெளியீட்டு புத்தகங்கள் ரூ.1200/-க்கு விற்பனை செய்தார். துண்டேந்தியதில் ரூ. 600/- வசூலானது.

செய்தி: சி.கோவிந்தராஜ்

(பயணத் தொடர்ச்சி அடுத்த இதழில்)

Pin It