கழக தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா செப்.17 அன்று திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக பெரியார் கூட்டமைப்பின் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகத்தில்இ ருந்து இரயில் நிலையம் பெரியார் சிலை வரை 3 மணி நேரம் கொட்டும் மழையில் நடைபெற்றது
02.10.2017 அன்று காலை 10 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியார் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து கழக கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். உடன் கழக பொருளாளர் துரைசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர் பொறுப்பாளர்களோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, நாமக்கல் மாவட்ட தோழர்களும் இருந்தனர்.
காலையில் இரயில் நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் சிலை அருகில் தோழர்கள் ஒன்று கூடினர். பறை முழக்கம் இசைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இருசக்கர வாகன பேரணியையும், 24 இடங்களில் கழக கொடியேற்றும் விழாவையும் கழகக் கொடியசைத்து தலைவர் கொளத்தூர் மணி வாகன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பறை முழக்கங் களோடு விளம்பர பதாகைகள், கழக கொடியோடு ஈச்சர் வாகனம் முன் செல்ல, அதனைத் தொடர்ந்து ஒலிபெருக்கி வாகனத்தில் பெரியார் பிறந்தநாள் கொள்கை முழக்கங்களை பொள்ளாச்சி மணிமொழி, சங்கீதா ஆகியோர் முழங்கி செல்ல அதனை தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் கழகக் கொடியோடு தோழர்கள் அணி வகுத்து சென்றனர்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த தோழர்கள் பல்வேறு அச்சிட்ட பகுத்தறிவு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். மதக்கலவரத்தை தூண்டக் கூடிய வகையில் இந்து முன்னணி யினர் விநாயகர் ஊர்வலத்திற்கு திருப்பூர் எங்கும் எழுதிய சுவரெழுத்து களுக்கு பதிலடி தரும் வகையில் வாசகங்கள் இருந்தன.
கழகத்தலைவர் இரயில்நிலையம் மட்டுமல்லாமல், இராயபுரம், கல்லம்பாளையம், வள்ளுவர் தெரு, இரங்கநாதபுரம், வள்ளுவர் நகர், கண்ணகி நகர், மாஸ்கோ நகர், பெரியார் காலனி, அனுப்பர் பாளையம், அம்மாபாளையம், 15 வேலம்பாளையம், டிடிபி மில் சாலை ஆகிய இடங்களில் கொடியேற்றினார்.
தோழர்கள் அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி மதிய உணவாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி இல்லத்தில் வழங்கப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பின் ஆத்துப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய இடங்களில் கழகத் தலைவரும், கணக்கம்பாளையம் பகுதியில் மகேந்திரனும் (போயம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு மக்கள் விடுதலைக் கட்சியின் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்து தோழர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினர்), போயம்பாளையம் தமிழ் செல்வியும், புதிய பேருந்து நிறுத்தத்தில் கோமதியும், சந்தை பேட்டை பகுதியில் தனகோபாலும், முத்தையன் கோவில் பகுதியில் மாதவனும், கொளத்துப்பாளையம் பகுதியில் சரசுவதியும், முருகம் பாளையம், இடுவம்பாளையம் பகுதியில் இராமசாமியும், வீரபாண்டி பகுதியில் இராசசிங்கமும் கழகக் கொடியினை ஏற்றினார்கள்.
நகரின் மையப் பகுதியில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. நகரம் முழுவதும் 100 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 1000 துண்டு அறிக்கைகள் மக்களிடம் விநியோகிக் கப்பட்டது. இந்த பேரணிக்கு மாவட்ட தலைவர் முகில்ராசு வழி நடத்தி செல்ல, தோழர்கள் சங்கீதா, அசுவிதா, கனல்மதி, சரண்யா, முத்துலட்சுமி, மாலதி, சரசுவதி, பிரியங்கா, தேன்மொழி, பார்வதி முன்னிலை வகித்தனர்.
கொடியேற்றும் இடங்களில் எல்லாம் 5 நிமிடத்திற்கு குறையாமல், பெரியாரிய கருத்துகளை சிற்றுரையாக வழங்கினர். நிகழ்வில் மாவட்ட செயலாளர் நீதிராசன், மாநகர் தலைவர் தனபால், நகர செயலாளர் மாதவன், மாநகர் அமைப்பாளர் முத்து, தெற்கு மாவட்ட அமைப்பாளர் இராமசாமி, வடக்கு மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி, மாஸ்கோ நகர் கோமதி, பார்வதி, கதிர்முகிலன், தேன்மொழி ஆகியோர் கலந்துகொண்டு பேரணியை எழுச்சி யொடு நடத்தி சென்றனர். சங்கீதா வாழ்த்தொலியோடு, பெரியார் கருத்துகளை ஒலி பெருக்கியில் முன்னெடுத்து வழி யெங்கும் களைப்பில்லாமல் முழங்கியதை கண்ணுற்ற தலைவர், ஆத்துப்பாளை யம் பகுதியில் கழகத்தின் பிரச்சார பீரங்கி என்றழைத்து உரையாற்ற வேண்டுகோள் விடுத்தார். தன கோபால், கிருஷ்ணன் நிகழ்ச்சி முழுவதும் புகைப்படங்களையும் காணொளிகளையும் சிறப்பாக எடுத்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் வீரபாண்டி பகுதியில் கொடியேற்றி பின் 15 நிமிடங்களுக்கும் அதிகமாக பறையிசைத்து தோழர்கள் ஆடி தங்கள் கொண்டாட்டத்தினை வெளிப்படுத்தினர். அதன் பின் தெருமுனைக்கூட்டம் போல மக்கள் கவனிக்க ஆரம்பித்தவுடன்
“இழந்துவரும் உரிமைகளை காப்போம், தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்று பல்வேறு தலைப்புகளில் பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மணிமொழி, இணையதள பொறுப்பாளர் விஜய் குமார், சங்கீதா, மாவட்ட செயலாளர் நீதிராசன், மாவட்ட தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, கழகப் பொருளாளர் துரைசாமி கருத்துரை ஆற்றினர். மாதவன் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்ச்சி சிறப்பிக்க கோவையில் இருந்து நிர்மல்குமார், சூலூர் பன்னீர் செல்வம், பொள்ளாச்சி அரிதாசு, ஆனந், விக்கி, திருச்செங்கோட்டில் இருந்து மனோஜ் ஆகியோர் வந்திருந்தனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி அயராது, தோழர்கள் சோர்வில்லாமல் இரவு 9 மணிவரை நடந்தது. பெரியார் பிறந்தநாள் அன்று கூட்டமைப்பு சார்பில் ஊர்வலம் சென்ற போது தோழர்கள் மழையினை பொருட்படுத்தாமல் வந்தது போல், இன்று இரு சக்கர வாகன பேரணியில் கடும்வெயிலினை பொருட் கொள்ளா மல் எழுச்சியோடு பெரியாரிய கருத்துகளை மக்கள் முன்வைத்தனர்.
செய்தி முகில்ராசு / விஜய்குமார்