திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து ஜாதி இந்துக்களும் அர்ச்சகராகும் பிரச்சனையை கையில் எடுத்து உரிய முறைப்படி அவர்களுக்கு அர்ச்சனை செய்யும் நியமனங்களை வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இதை வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில், இப்போது வெளி மாநிலத்தி லிருந்து ஆட்களைப் பிடித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கின்றனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜெகத்குரு இராமநாத ஆச்சாரியார் சுவாமி என்பவரும் டெல்லி, உத்திர பிரதேசம், பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேரும் தமிழ்நாட்டைச் சாராதவர்கள் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு நியமித்த ஒரு உத்தரவுக்கு எதிராக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழக்குத் தொடர உரிமையில்லை, எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியதை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்க தயாராக இல்லை.

ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். அந்த நீதிபதி ஆகம விதிகளை தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆகம விதிப்படி தமிழ்நாட்டில் எந்தெந்த கோவில்கள் செயல்படு கின்றன என்பதை கண்டறிய வேண்டும், சடங்குகள், பூசைகள், கோவில் நடைமுறைகள் பற்றி தெரிந்தவர்கள் அந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைப் போல ஆகம விதிகளை மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியிருக் கிறது. பிரச்சனை பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றத் தின் தீர்ப்பு எப்படி இருந்த போதிலும் கூட, கோவிலுக்குள், கர்ப்ப கிரகத்தினுள் சென்று வழிபடக்கூடிய உரிமை இந்துக்களிலேயே ஆகம விதிப்படி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கு மட்டும் தான் உண்டு. மற்றவர்களுக்கு இல்லை என்று கூறுகிற நிலையில் தான் இன்றைக்கும் சனாதன தர்மம், இந்து தர்மம் என்பது இருந்து கொண்டு இருக்கிறது. அதனால் தான் நாம் வெகு மக்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்து ஒற்றுமை என்று இவர்கள் பேசுவ தெல்லாம் போலிக் கூப்பாடு. பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தின் கீழ் அடக்கி ஒடுக்குவதற்கான ஓர் சூழ்ச்சி. எனவே அவர்கள் கூறுகிற இந்து வாதத்தில், இந்து சூழ்ச்சி வலையில் சிக்கி விடாதீர்கள் என்று நாம் கூறி வருகிறோம். நாம் கூறுவது எவ்வளவு உண்மை என்பதை இந்த வழக்கு நிரூபித்து இருக்கிறது. இந்துக்களே ஒன்றுபடுங்கள், இந்துக்களாக ஒன்றுபடுங்கள் என்று முழங்கு கிறவர்கள், இந்துக்களே நாம் சமமாக இருப்போம், இந்துக்களே நமக்குள் வேற்றுமை இல்லை, எந்த ஜாதியாக இருந்தாலும், இந்துக்களாகிய நாம் ஆண்டவனுக்கு அருகில் சென்று, மணி அடித்து பூசை செய்கின்ற உரிமை நமக்கு உண்டு என்று கூறுவதற்கு யாரும் தயாராக இல்லை.

வடநாட்டில் பல கோவில்களில் ஆகம விதி என்ற ஒன்றை பின்பற்றுவதே கிடையாது. வட நாட்டுக் கோவிலுக்குள் கோவில் கருவறைக்குள் நேரடியாக பக்தர்கள் சென்று வழிபடக்கூடிய உரிமை பல கோவில்களில் இருக்கிறது. ஆனால் இங்கே தான், ஆகம விதியைப் பிடித்துக் கொண்டு, தீண்டாமையை யும் வேறு வகையில் இங்கே அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே தீண்டாமை, ஆகம விதிகளும் ஒன்றுபோல் ஆகிவிட்ட நிலையில் தீண்டாமை ஒழிப்புக்கு எப்படி ஒரு சட்டம் வந்ததோ அதே போல ஆகம விதிகளையும் ஒழிக்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற இயக்கத்தை நடத்துகிற ஒரு காலம் உருவாகி வருகிறது என்றே நாம் கருதுகிறோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It