மக்களை சந்திக்கும் பரப்புரைப் பயணங்களை தொடர்ச்சியாகமுன்னெடுத்து வரும் பெருமை திராவிடர் விடுதலைக் கழகத்துக்குஉண்டு. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், ‘எங்கள்தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை நடத்தினர்.
மக்களிடம் ஜாதியஅமைப்பின் கொடூர முகங்களை விளக்கினர். ஆங்காங்கே சில ஜாதிவெறி சக்திகள் உருவாக்கிய ‘சலசலப்புகளை’ முறியடித்துப்பயணம் தொடர்ந்தது. அடுத்து இந்த முழக்கம் மேலும் விரிவாக்கப்பட்டது.
“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” என்ற முழக்கத்தைமக்களிடம் கழக செயல் வீரர்கள் கொண்டு சென்றார்கள்.
இந்தப் பயணம் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்ட இளைஞர்களும் வேலை வாய்ப்பு வாழ்வுரிமைஇழந்து நிற்கும் அவலங்களை பட்டியலிட்டு மக்களிடம் விளக்கியது.பிற்படுத்தப்பட்டோரிடையே ஜாதி வெறியைத் தூண்டி, ஜாதிசங்கம் உருவாக்கி, அரசியலுக்குப் பயன்படுத்தும் சக்திகளின்சுயநலத்தையும் அந்தப் பரப்புரை கேள்விக்குள்ளாக்கியது.
‘ஒடுக்கப்பட்ட இளைஞர்களே, ஜாதி சங்கத் தலைவர்களின் வலையில் விழுந்து விட்டில் பூச்சி ஆகிவிடாதீர்’ என்ற எச்சரிக்கைகளையும் பரப்புரை வழியாக வலியுறுத்தப்பட்டது. பரப்புரைப்பயணங்களைத் தொடர்ந்து, பார்ப்பன மதவாத எதிர்ப்புமாநாடுகளை கடந்த ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் தோழர்கள்நடத்தினார்கள்.
தொடர்ந்து தலித் பொறியாளர் கோகுல்ராஜ் மீது நடத்தப்பட்டஜாதி வெறிப் படுகொலை; ‘அம்பேத்கர்-பெரியார்’ படிப்புவட்டத்துக்கு அய்.அய்.டி.யில் தடை போட்ட மோடி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள்; அய்தராபாத் பல்கலைக் கழக ஆராய்ச்சிமாணவர் ரோகித்வெமுலா, பார்ப்பன நிர்வாகத்தால்பழிவாங்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்; பொதுத் தேர்தல்அறிவிப்புக்குப் பிறகு பல்வேறு பகுதிகளில் கழக சார்பில்பயிலரங்குகள் என்று தொடர்ச்சியாக பெரியாரியல் பணிகளில்கழகத் தோழர்கள் களப்பணியாற்றினார்கள்.
சுய நலன், அதிகாரம், ஆதாயம் தேடும் அரசியல் சூழலில் அதற்குநேர் எதிராக பெரியார் இலட்சியத்தை ஏந்தி ஓடிக் கொண்டேஇருக்கும் இலட்சியத் தாகம் கொண்ட தோழர்களோடு திராவிடர்விடுதலைக் கழகம் பயணித்து வருவது இந்தக் கழகத்துக்கு கிடைத்துள்ள தனிச் சிறப்பேயாகும்.
இயக்கத்தில் 90 சதவீதத்துக்கும்அதிகமானவர்கள், பெரியாரைப் பார்க்காதவர்கள்; ஆனால், பெரியார் விதைத்த சிந்தனைகளின் உணர்வுகளில் ஊன்றிநிற்பவர்கள்.
பெரியார் பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறும்போது, “வாய்மைப் போருக்கு என்றும் இளையார்” என்று ஆழமாகப் படம்பிடித்தார். இளைஞர்கள் சிந்திக்கும் எல்லைகளைக் கடந்துபுரட்சிகரமாக சிந்தித்தவர் பெரியார்.
“வாலிபர்களைச் சுயமாக சிந்திக்குமாறு பழக்கப்படுத்துவதேயில்லை; பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படுவதேயில்லை; அறிவுக்கும் அனுபவத்துக்கும்சம்பந்தப்படுத்துவதேயில்லை; இத்தகைய நிலைமைமாறாதவரை வாலிபர்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்துஆராய்வது தாங்களே ஒரு முடிவுக்கு வருவது ஒரு நாளும்ஆகாது” (‘குடிஅரசு’ 31.12.39) - என்று பெரியார்குறிப்பிடுகிறார்.இளைஞர்களை சமுதாயத்துக்கு பயன்படுத்தாதது-இளைஞர்கள்
மீதான குறையல்ல! அது சமூகத்தின் குறை என்பதைத்தான்பெரியார் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார். அதே நேரத்தில்சமூகத்தின் எதிர்காலம் இளைஞர்களிடம்தான் இருக்கிறது என்பதில்பெரியாருக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது.“எதிர்காலம், அறிவும், அனுபவமும், கட்டுப்பாடும் உள்ளநம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.
இவர்கள்தன்னலம் விட்டு பொது நலப் பணியாற்ற முன்வரவேண்டும்” (‘விடுதலை’ 13.1.60) என்று அறைகூவல்விடுக்கிறார்.பெரியார் இளைஞர்களை பரப்புரைக்கு அழைத்தார்.“இது பிரச்சாரக் காலம்; எக்காரியமும் பிரச்சாரம்மூலம்தான் நடைபெறுவதுசாத்தியமாயிருக்கிறது. எனவேபிரச்சாரம் செய்ய ஏராளமான வாலிபர்கள் முன்வரவேண்டும்.
பிரச்சாரம் செய்ய முற்படுவோர், விசமப்பிரச்சாரம் செய்ய ஆளாகாமல், ஒழுக்கத்தோடும் நிறைந்தகட்டுப்பாட்டோடும் நடந்து கொள்ள வேண்டும். இன்றேல் பிரச்சாரம் கோரிய பயனை அளிக்காது” (விடுதலை, 9.1.61)என்று அறிவுறுத்துகிறார்.
பெரியார் அன்று இளைஞர்களுக்கு விடுத்த இந்த சரியானஅறைகூவலை, சிந்தனைகளில் சுமந்து செயல்களத்துக்குவருகிறார்கள், திராவிடர் விடுதலை கழகத் தோழர்கள்.
அதுவும் எந்த ஒரு ‘முற்போக்கு-தமிழ் தேசிய இயக்கமும்’ செய்திட முன்வராத அறிவியல் பரப்புரையை மக்களிடம் கொண்டு செல்லபுறப்படுகிறார்கள்.அச்சத்திலும்அறியாமையிலும் உழலும் நமது மக்களிடம்அறிவியல் சுடரை ஏந்தி வருகிறார்கள்.
நம்புங்க - அறிவியலை! நம்பாதீங்க - சாமியார்களை! “மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” என்பதே, இந்தப் பரப்புரையின் முழக்கம்! மக்களை சந்திப்போம்! அறிவியலை விதைப்போம்!