தீயில் மனிதன் நடப்பது என்பது‘கடவுள் செயல்’ என்றும், கடவுள் மீது உள்ள பக்தியின் காரணமாகவே நடக்கமுடிகிறது என்றும் மக்கள் நம்பினார்கள். மதவாதிகள் தங்கள் மதத்தைப்பரப்ப இம்முறையைத் தங்கள் மத விழாவாகப் பயன்படுத்தினார்கள்.இம்முறை இந்தியாவிலும், மலேசியாவிலும் நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டில், பரவலாக இந்துக்களும்,சில இடங்களில் முகமதியர்களும் தீமிதிவிழாக்களை நடத்துகிறார்கள்.

தீ குழியின் அமைப்பு : தீ குழியின்அளவு ஒவ்வொரு இடத்திலும்மாறுபட்டிருக்கும். சராசரியாக 15அடி நீளமும், 5 அடி அகலமும், 2 அடி உயரமும் உடையதாக இருக்கும்.பாற்குழி ஒன்று இருக்கும். (பசு அல்லது வெள்ளாட்டின் பால்நிரப்பப்பட்ட சிறிய குழி) முதலில் பெரிய பெரிய மரக்கட்டைகளை எரியவிடுகிறார்கள்.

அந்த மரக்கட்டைகள் எரிந்து தணல் கட்டிகளாக ஆனபின்னால் இரண்டு மூன்று பேர்நீளமான மூங்கிற் குச்சிகளைக்கொண்டு தணல் கட்டிகளைக் குத்திஉடைத்து தீ குழி முழுவதும் பரப்பிமட்டமாக்கி விடுவார்கள். பெரியதட்டிகளைக் கொண்டு (விசிறி போல்)தணல் கட்டிகள் மீது விசுறுவார்கள்.அப்போது தணல் கட்டிகள் மீதுபூக்கும் சாம்பல் நீக்கப்படுகிறது.இப்படி அடிக்கடி விசுறுவார்கள்.

பின்னர் ஒவ்வொருவராக தணல்கட்டிகள் மீது வேகமாக நடந்து (ஓடி) சென்று பாற்குழியில் கால்களைநனைத்துக் கொள்வார்கள். அப்போது பலருக்கு கால்கள்தீயவோ, கொப்புளிக்கவோ இல்லாததால் அதற்குகடவுள் பக்திதான் காரணம் என்றபெரும்பாலோர் நம்புகின்றனர்.அறிவியல் கண் கொண்டு ஆராயமுன்வந்த மேல் நாட்டாருக்கும்சமீபகாலம் வரை இந்நிகழ்ச்சி பெரும்புதிராகவே இருந்தது.

கோவூரின் ஆராய்ச்சி : இலங்கை பகுத்தறிவாளர் கழகத் தலைவர்டாக்டர் டி. கோவூர், தீ மிதியின்தத்துவத்தை ஆராய்ச்சி மூலம் மெய்ப்பித்துக் காட்டினார். இலங்கைமருத்துவப் பல்கலைக்கழகத்தின்நூற்றாண்டு விழாவின்போதுமாணவர்கள் மத்தியில் ஒரு தீ குழிஅமைத்து ஆராய்ந்தார். கடவுள் பக்திஇல்லை என்பதைக் காட்டுவதற்காகமாணவர்கள் கைகளில் மதுப்பாட்டில்களையும்சிகரெட்டுகளையும் கோழிகளையும் கொடுத்து நெருப்பின் மேல்வேகமாக நடக்கச் செய்தார். வேகமாகநடந்தவர்களுக்குக் கால்கள் தீயவில்லை.

ஆனால் சிறிது மெதுவாகநடந்தவர்களுக்கு சிறிது சுடச் செய்தது.வேகமாக நடந்தவர்கள் தங்களுடையகால்களை நெருப்பின்மேல் வைத்துஎடுக்க, எடுத்துக்கொண்ட நேரம்அரை வினாடிக்கும் குறைவு. ஆனால்அரை வினாடிக்கும் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டு நடந்தவர்களுக்கே கால் சுடச் செய்தது. ஆகவே மனிதப் பாதங்களின் அடித்தோலுக்குசராசரியாக அரை வினாடி நேரம் நெருப்பின் வெப்பத்தைத் தாங்கும்சக்தி உண்டு என்பதையும் அதுவரை மனித உடலில் வெப்பம் தாக்குவதில்லை என்பதையும் நிரூபித்துக்காட்டினார்.

சோதனை 1 : தீ மிதிக்கும் தத்துவத்தை எளிய சோதனைகள் மூலம்அறியலாம். சுவாலையுடன் எரியும்விளக்கு அல்லது மெழுகு வர்த்தியில் சுவாலையின் நுனி பாகத் திற்கு மேல்நமது உள்ளங் கையை வேகமாக அசைத்தால் தீ சுடுவதில்லை. ஆனால்வேகத்தை சிறிது சிறிதாகக் குறைத்துக்கொண்டு வந்தால் சுட ஆரம்பிக்கிறது.இந்த அடிப்படையில் தான் நெருப்பில் வேகமாக நடக்கும் போதுகால்கள் சுடுவதில்லை என்பதையும், வேகம் குறையும்போது கால்கள்தீய்க்கச் செய்கிறது.

சோதனை 2 : நமது வீடுகளில் தாய்மார்கள் சமையல் செய்யும்போது அடுப்பிலிருந்து வெளியில் விழும்நெருப்புக் கட்டிகளை கையால் எடுத்து மீண்டும் அடுப்பில் போடுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் சூடேறிக்காய்ந்துவிட்ட பாத்திரங்களையோ பழுத்துப்போன இரும்புச் சட்டிகளையோ வெறுங்கையால் எப்போதும் எடுக்க முற்படுவதில்லை. இதிலிருந்து நெருப்பின் மேல் நடத்தலில்உள்ள மர்மத்தை அறியலாம்.வெப்பத்தால் பழுப்பேறிய உலோகம்அல்லது கற்களைப்போல வெறும்கட்டைகளாலான தணல்வெப்பத்தைக்கடத்துவதில்லை.

தணல்ஒரு குறைந்த வெப்பக் கடத்தி.அதனால்தான் தீ மிதி விழாநடத்துபவர்கள் மரக்கட்டைகளைப்பயன்படுத்துகிறார்கள். குழியில் உள்ளகற்களை அப்புறப்படுத்துகிறார்கள்.தீ குண்டத்தில் நெருப்பின் மீது அடிக்கடி விசுறுகிறார்கள் என்றுமுன்பு குறிப்பிட்டோம். அவ்வாறுசெய்யாத போது சாம்பல் படியஆரம்பிக்கும். அப்போது அதைஉணராமல் அதில் இறங்கி நடக்கும்போது, வெப்பமான சாம்பல் பாதங்களில் ஒட்டிக் கொள்கிறது. பாதங்களில் ஒட்டிக் கொண்ட சாம்பல்குறிப்பிட்ட வினாடி நேரத்திற்கு மேல்பாதங்களில் இருப்பதால் வெப்பம்உடலில் ஊடுருவ ஆரம்பித்துகொப்புளங்கள் ஏற்படுகின்றன.உண்மை அறிய :

1. தணல் கட்டிகளில் நடப்பவர்கள் நெருப்பைக்கொழுந்துவிட்டு எரியச் செய்து அந்தத் தீச் சுவாலைகளின் மத்தியில்ஏன் இறங்கி நடக்கக் கூடாது?

2. தீ குண்டத்தில் நடப்பவர்கள் ஏன்சற்று நேரம் படுத்து உருண்டுகாட்டக் கூடாது?

3. மரத்தை எரித்து நெருப்புக்கட்டிகள் மீது நடப்பவர்கள் ஏன்பழுக்கக்காய்ச்சிய உலோகத்தகடுகள் மீது நடக்கக் கூடாது?

4. நெருப்பில் பூக்கும் வெப்பமானசாம்பல்மீது ஏன் நடந்துகாட்டக்கூடாது என்று கேட்பார்களானால்தீ மிதிப்பதில் உள்ள அறிவியல்உண்மை வெளிப்படும்.

Pin It