மக்கள் தொகைக் கணக்கெடுப்பை முன்னிட்டு, இறந்துபோன பார்ப்பன மொழியான சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்கும் வேலையில் பார்ப்பனர்கள் ரகசியமாக ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக ரகசிய மின்னஞ்சல் பிரச்சாரத்தை செய்துவருகின்றனர். இதை வெளிப்படுத்த வேண்டும் என்று கீற்றின் கவனத்திற்குக் கொண்டுவந்த தோழர் பாலாவிற்கும், பார்ப்பனர்களது மின்னஞ்சலை மொழிபெயர்த்துக் கொடுத்த தோழர் முத்துக்குட்டிக்கும் நன்றிகள்!! - கீற்று

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சமற்கிருதத்தை இரண்டாவது மொழியாகப் பதியுங்கள்                                       - பார்ப்பனர்களின் கமுக்கச் சுற்றறிக்கை. 

நமச்தே, பிரணாம், வணக்கம், ஆதாபு, குட் ஈவினிங். 

இந்திய அரசு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியிருக்கிறது. இக்கணக்கெடுப்பில் சமற்கிருதத்தை உங்களுடைய இரண்டாவது மொழியாகக் கொடுக்கப்படும் விண்ணப்பத்தில் நிரப்புங்கள். 

சமற்கிருதத்தைக் கொல்லவும் ஒன்றுமில்லாமல் அழித்துவிடவும் உலகமெங்கும் (இந்தியாவில் கூட) ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதைச் செய்ய நாம் விட்டுவிடக்கூடாது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக அலுவலர்கள் உங்களுடைய வீட்டிற்கு வரும்போது இரண்டாவது மொழி பற்றிய கேள்வியைக் கேட்பார்கள். அப்போது நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் சமற்கிருதம் என்று சொல்லுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இப்போதோ இதைச் சொல்லி அறிவுறுத்துங்கள். வெளிவாசலுக்குப் பக்கத்தில் சமற்கிருதம் இரண்டாவது மொழி என்பதை எழுதித் தொங்க விடுங்கள். அப்போது தான் கணக்கெடுப்பின் போது சமற்கிருத்தைப் பதிய மறக்காமல் இருக்கும். 

கடந்த முறை கணக்கெடுப்பில் பதினான்காயிரத்து நூற்று முப்பத்தைந்து பேர் (14,135) சமற்கிருதத்தைத் தங்கள் தாய்மொழி என எழுதினார்கள். 

நீங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கணி, மராத்தி, இந்தி, குசராத்தி, மைத்தாலி, வங்காளம், அசாமி, ஒரியா, பஞ்சாபி, தொங்கரி, உருது என எந்த மொழி பேசினாலும் கவலை இல்லை. சமற்கிருதத்தை இரண்டாவது மொழி என எழுதி விடுங்கள். அது போதும்! நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் ஏராளமான சமற்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.

‘ச்திரி’ (பெண்), தீர்த்தம், பிரசாத்/பிரசாதம், முகூர்த்/முகூர்த்தம், நெய்வேத்திய/நெய்வேத்தியம், சுவாசு(மூச்சு), நேத்ரா/நேத்திரம்(கண்கள்), சல்(தண்ணீர்), போசன்(உணவு), குங்கு/கும்கும்/திலக் எனப் பல வார்த்தைகளைச் சொல்லலாம்.

இது மட்டுமில்லாமல், நம்முடைய குழந்தைகளுக்கு நாராயணன், சத்திய நாராயணன், சவுந்தரியா, முருகன், கணேசன், கணபதி, கணேசா, கிருட்டினா, சிறீ கிருட்டினா, பினாகபாணி, இலட்சுமி, வெங்கடேசு, சிறீ அரி, சங்கர், கார்த்திக்கு, சத்திய பாமா, சுபத்திரா, கங்கா, கங்கா தேவி எனப் பெயர்களும் வைக்கிறோம்.

சில பேர் தங்களுடைய மென்பொருள்களுக்குக் கூட ‘சிறீ லிபி’ என்றெல்லாம் சமற்கிருதப் பெயர்களை வைக்கிறார்கள். ‘சிறீ லிபி’ என்பது இந்தியாவின் மிகப் பழமையான எழுத்துருக்களில் ஒன்றாகும். மாடுலர் இன்போடெக் தன்னுடைய மென்பொருள்களுக்குச் சமற்கிருதத்தில் மட்டும் தான் பெயர்களை வைக்கிறது. அவையும் அதிக எண்ணிக்கையில் விற்கின்றன. எனக்கு அவர்களுடன் ஏழாண்டுகளாகத் தொடர்பு உண்டு.

சில பேர் தங்களுடைய வணிக நிறுவனங்களுக்கும் சமற்கிருதத்தில் தான் பெயர் வைக்கிறார்கள். நம்முடைய கோவில்களின் பெயர்கள் சமற்கிருதத்தில் தாம் இருக்கின்றன. நம்முடைய குடும்பக் கடவுள்கள்/ தேவதைகளின் பெயர்கள் எல்லாம் கூட இலட்சுமி, கணேசு, வியாதேசுவர், அரியரேசுவர், சரசுவதி என்று சமற்கிருத்தில் தாம் இருக்கின்றன.

நம்முடைய வேதங்கள் சமற்கிருதத்தில் தாம் இருக்கின்றன. சுலோகங்களும் மந்திரங்களும் சமற்கிருதத்தில் தாம் இருக்கின்றன.

இத்தனை ஏன்? நீதிமன்றங்களில் நாள்தோறும் பயன்படுத்தப்படும் ‘பகவத் கீதை’ சமற்கிருதத்தில் தானே இருக்கிறது! இவ்வளவும் சமற்கிருதத்தில் இருக்க, நாம் ஏன் நம்முடைய இரண்டாவது மொழி சமற்கிருதம் என்று சொல்லக் கூடாது?

என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் நான் சொல்லியிருக்கும் இக்கருத்துகளை நீங்கள் எதிர்க்க மாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இவை மட்டுமல்ல. ‘சமற்கிருதம்’ தான் இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் தாய்மொழி என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. அதையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கணக்கெடுப்பு மே 2010 இல் தொடங்குகிறது. இந்தியர்களாகிய நாம் வீட்டில் அலுவலகத்தில், சமூகத்தில் எனப் பல இடங்களில் பல மொழிகள் பேசினாலும் அவற்றில் ஐம்பது விழுக்காடு சமற்கிருதம் தான்! அதை நாம் கவனிக்காமல் விட்டிருக்கலாம்! ஒன்றும் கவலையில்லை! ஆனால் அந்த உண்மையை ஒப்புக்கொள்ளாமல் இருக்கக்கூடாது.

சமற்கிருதத்திற்கு உரிய மதிப்பைக் கொடுப்போம்!

சமற்கிருதம் தான் எங்களுடைய இரண்டாவது மொழி எனப் பதிவோம்!

இந்தியமொழிகளின் தாய்மொழியைக் காப்போம்! இதை நாம் செய்யாவிட்டால் வேறு யாரும் செய்யமாட்டார்கள். 

இதை நான் செய்யப் போகிறேன். என்னுடைய குடும்பம் செய்யப்போகிறது. உங்களையும் என்னுடைய குடும்பத்தில் ஒருவராகத் தான் பார்க்கிறேன். நீங்களும் உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள், பள்ளித்தோழர்கள், கல்லூரித் தோழர்கள், உடன் வேலை செய்வோர், உங்களுக்குக் கீழ் வேலை செய்வோர், வாடிக்கையாளர் என அனைவரையும் கேளுங்கள். இக்கருத்தை இந்தியா முழுவதிலும் கொண்டு செல்வோம்! எங்கெல்லாம் இந்தியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கொண்டு செல்வோம்! காட்டுத் தீப் போல இதைப் பரப்புவோம்.

நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் தொடர்பில் இருக்கும் நூறு பேருக்கு இதைத் தெரியப்படுத்தினால் போதும்! இந்தியா முழுமைக்கும் செய்தி போய் விடும்! சரிதானே!

மொழிபெயர்ப்பு: முத்துக்குட்டி

மின்னஞ்சல் மூலம்:

Register Sanskrit as second language during census

 

Namaste, Pranam, Vanakkam, Aadab & Good Evening,

Our Government of India is starting with census.

Please register "Sanskrit" as 2nd language in the form which they would like you to fill it up.

There are tons of people across the globe including India who want to kill & demolish our "Sanskrit" language.

Reasons could be anything.

But please don't allow them to do so. Officers who are going to visit your home? Are going to ask this question to you as well as to your family members. Empower them today only. You can also think of writing it on a piece of paper and hang out that paper near main entrance door so that you and your family don't forget.

In last census, only 14,135 fellow citizens wrote "Sanskrit" as their mother language.

You may be speaking Tamil, Telugu, Kannada, Malayalam, Kokani, Marathi, Hindi, Gujarati, Maithali, Bengali, Assamese, Oriya, Punjabi, Dongari or Urdu language. And that's ok with me and all.

But please do write "Sanskrit" as 2nd language.

Remember, on day to day basis there are tons of words which we all use as it is written in "Sanskrit".
 
Let me give some example "Stree (Female)", "Tirth/Tirtham", "Prasad/Prasadam", "Muhurt/Muhurtam", "Naivaidya/Naivaidyam", "Suvas (Smell)", "Netra/Netram (Eyes), "Jal (Water)", "Bhojan (Lunch/dinner)", "kunku/Kumkum/Tilak"  & many more. Over & above, we also give "Sanskrit" names to our kids like Narayan, Satyanarayan, Soundarya, Murugan, Ganesh, Ganapati, Ganesha, Krishna, Sri Krishna, Shrikrishna, Pinackpani, Laxmi, Saraswati, Venkatesh, Sri Hari, Shankar, Kartik/Karthik, Satyabhama, Subhadra, Ganga, Gangadevi,  & so on.
Some people also give "Sanskrit" names to their software products like "Shree-Lipi". One of the oldest & largest sold Indian language font package from India. ModularInfoTech have been giving only "Sanskrit" names to their software products and they are selling in huge numbers. i was associated with them for more than 7 years.
 
Some people also give "Sanskrit" names to their businesses.
Our temple names are in "Sanskrit"
 
Our family God/Goddesses names are also in "Sanskrit", Laxmi, Ganesh, Vyadeshwar, Hari Hareshwar, Saraswati, etc.
Our Veda's are in "Sanskrit"
Our various "Shloka's" and "Mantra's" are also in "Sanskrit"
Our "Bhagwat Gita" is also in "Sanskrit" and which is used every day across all the courts.
Now the question is? When we use & speak so many "Sanskrit" words in our day to day life? Why not declare "Sanskrit" as our 2nd language & give due respect to her?

i am sure you will not disagree on this simple observation that i have done using common sense.

i am also sure you must have heard a famous quote in English and it goes like this "Sanskrit" is mother of all Indian languages.

Census is going to start from May 2010. It is well known fact that today we all Indian citizens speak & use many Indian languages (in home, in office, in society & in Nation). While doing so we use & we speak around 50% of "Sanskrit" words as it is. We all may not be noticing it. But that's ok with me.
At the end of the day, let's not run away from the truth.
 
Let's give due respect to "Sanskrit"
 
Let's declare "Sanskrit" as our 2nd language of communication.
Let's protect "Mother of all Indian Languages"
If we don't do it? No one else is going to protect it.
i am going to do it.
 
My family is going to do it.
You are also a member of my family.
Now would you please do it in your home and ask all your relatives, friends, schoolmates, collegemates, subordinates, colleagues, suppliers & customers to do so?

Please!

Let's spread this message all across India and all across globe where ever Indians are located. Spread this like a wild fire.

If we send this message to 100 contacts within our network and i am sure reaching outall across India will not be a difficult task.

Am i right?