• தமிழ்நாட்டின் பெயரை மாற்றினால் இந்தியாவுக்கே ‘தமிழ்நாடு’ பெயரை வச்சிடுவேன். - சீமான்
வைக்கிறதுதான் வைக்கிறீங்க... ‘ஆசியா’வுக்கே வச்சிடுங்கண்ணே.
• நான் பதவிக்கு வந்த உடனேயே வேலை வாய்ப்பு; வருமானம் இரண்டையும் உங்களுக்கு தந்துடுவேன். ‘மிக்சி’, கிரைண்டர் எல்லாம் நீங்க தான் வாங்கிக்கணும். - சீமான்
விடுங்கண்ணே; அதை நாங்க பாத்துக்கிறோம். ஆனால் வேலையையும் வருமானத்தையும் எங்கே வாங்கப் போறீங்கன்னு, யாரிடமும் சொல்லிடாதீங்க; இரகசியமா வச்சிக்குங்க; திராவிடக் கட்சி திருடிக்கும்!
• கல்வியில்தென் கொரியா தான் முதலிடத்தில் இருக்குது. - சீமான்
முதல் இடம் ‘பின்லாந்து’ நாடு என்று சொன்னாங்களே! சரி; சரி அண்ணன் தென் கொரியா நாட்டையே ‘பின்லாந்தா’ மாற்றியிருப்பாரு போல!
• நான் அதிகாரத்துக்கு வந்தா பள்ளிக் கல்வித் தரத்தை உலகக் கல்வி தரத்துக்கு உயர்த்திடுவேன். - சீமான்
இது தப்புண்ணே.... உலகக் கல்வித்தரத்தை நம்ம கல்வித்தரத்துக்கு மாற்றுவது தானே தமிழனுக்கு பெருமை! அவ்வையாரும் வள்ளுவரும் ‘ஆக்ஸ்போர்டு’ போய் படிச்சாங்களா? நீங்களே இப்படி செய்யலாமா?
• நான் சட்டசபையிலே உட்கார்ந்த உடனே கச்சத் தீவு, நம்ம கைக்கு வந்துடும். - சீமான்
கையோடு கையா, அந்த ஈழத்தையும் அப்படியே எடுத்துக்கிட்டா ஒரு ‘வேலை’ முடிஞ்சிடும்ல!
- விடுதலை இராசேந்திரன்