அண்மைக் காலமாக, கவுன்சிலர் பதவிக்காக புரட்சியாளராக மாறிய நம்ம "நாம் தமிழர் தோழர்கள் ", தேர்தல் நெருங்க நெருங்க, வண்டிச் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட நாய் போல, "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என இடும் சத்தம் அதிகமாகியுள்ளது.
2009க்குப் பிறகு, ஈழ விடுதலையின் பின்னடைவை சரி செய்ய வந்த சர்வலோக நிவாரணியாக தன்னைக் காட்டிக் கொண்ட திருவாளர் சீமான், "அண்ணே!! உங்க கலருக்கு நீங்க தானே அடுத்த சி.எம்" எனக் கூறிய கோமாளி ரசிகர் கூட்டத்தை நம்பி, அந்த முதலமைச்சர் பதவியை அடைய, தனக்கென ஒரு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க, "திராவிட எதிர்ப்பு" என்ற ஒன்றை கையில் எடுத்தார். (ஒரு நாள் திராவிடக் கொள்கை எதிர்ப்பு என்பார்... ஒரு நாள் திராவிடக் கட்சிகளைத்தான் எதிர்க்கிறோம் என்பார்... ஒரு நாள் 'பெரியார் இல்லாவிடில் இந்த சீமானே இல்லை' என்பார். ஒரு நாள் அப்படியே மாற்றி, 'தகப்பன் என்னைப் பெத்தவனா இருக்கணும், தலைவன் என் ரத்தவனா இருக்கணும்' என தான் எழுதி வைத்திருந்த பழைய கதைப் புத்தகத்தில் இருந்து வசனத்தைத் தேடி எடுத்து இரண்டு கரண்டி ஊற்றுவார்..)
ஆக, வரலாறு தெரியாத அப்பாவி மக்களிடம், திராவிடர் என்ற சொல்லை விட தமிழர் என்ற சொல் மக்களிடையே உணர்வுப்பூர்வமாக சென்றடையும் என்ற அடிப்படை உளவியலைக் கையில் எடுத்து, திராவிடர் என்ற சொல்லை ஏதோ ஒவ்வாமை மிக்க சொல்லாக மாற்றி, வயிறு வளர்க்கும் அரசியலில் இறங்கினார்.
திராவிடர் என்பது பார்ப்பனியத்திற்கு எதிராக இந்த மண்ணில் தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்கும் அரசியல் சொல் என்பதை மறைத்து, நான்காம் தரம் அரசியலை செய்ய முற்பட்டார்.
திமுக, அதிமுக மீது மக்களுக்கு உள்ள எதிர்ப்பைப் பயன்படுத்தி, அவர்களின் இந்த செயல்பாட்டிற்கு அவர்களின் திராவிடக் கொள்கை தான் காரணம் என்று பார்ப்பான் எழுதிக் கொடுத்த பெரியார் மீதான அவதூறுகளை, தன் ரசிகர் கூட்டத்தை வைத்து இணையத்தில் பரப்பினார்.
அதற்குப் பெரிதாக அவர்கள் பயன்படுத்தும் வாதம் "கர்நாடகா, கேரளா, ஆந்திரவில் திராவிடம் என பேசப்படுகிறதா?" என்ற மொக்கை வாதம்.
அதற்கு நம் பதில் " அங்கே எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளதா?? அங்கே எல்லாம் இந்திய எதிர்ப்பு உள்ளதா?? அங்கே எல்லாம் பண்பாட்டை மீட்டெடுக்கும் போர் நடக்கிறதா??" இவை அனைத்துக்கும் இல்லை என்பதே பதில்... பிறகு என்ன வெங்காயத்திற்கு அவன் திராவிடம் எனப் பேசப் போகிறான்???
மேற்கூறிய அனைத்து எதிர்ப்பும் நம்மிடத்தே உள்ளது என்பதால் திராவிடம் பேசுகிறோம்... ஒரு வேலை அது தான் பார்ப்பன பங்காளிக்கு உறுத்துகிறதோ?
மேலும் விடுதலைப் புலிகளையும், ஈழத் தமிழர்களையும் குறியீடாகப் பொருத்தி, நாம் எல்லாம் தமிழர்கள் என்று அவர்களையும் இணைத்துக் கொண்டார். ஆக, ஒருவர் விடுதலைப் புலிகளை நேசிப்பவர் என்றால், அவர்களும் இவரைப் போல திராவிடர் என்ற சொல்லை வெறுக்க வைக்கும் மறைமுக உளவு அரசியலை இங்கே செய்து வருகிறார்...
நீங்கள் இங்கே அரசியலில் பொறுக்கித் தின்பதற்கு வரலாற்றைப் புரட்டுவதா?? தங்கள் நலனுக்கு அடுத்த இனத்தின் வரலாற்றைப் புரட்டும் பார்ப்பனர்களை விட... தன் இனத்தின் வரலாற்றையே புரட்டும் இது ஈனத்தனம் அல்லவா???
புலிகளும், ஈழத்தமிழருமே தங்களை திராவிடர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டது உங்களுக்குத் தெரியமா??
ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் தங்களை திராவிடர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டதை மறைக்கும் அரசியல் ஏனோ??
இதோ உங்கள் புரட்டுகளுக்கும், கீழ்த் தர அரசியலுக்கும் எங்கள் புலிகளே ஆதாரப்பூர்வமாக தந்திருக்கும் மறுப்பு...
முதல் ஆதாரம்:
1978 ஆம் ஆண்டு, கியூபாவில் நடந்த புரட்சிகர இயக்கங்கள் நடத்திய கலந்தாய்வுக்கு "விடுதலைப் புலிகளை" அழைத்தனர்...
அதில் கலந்து கொண்ட "விடுதலைப் புலிகள்" தங்களை... "தமிழ் பேசும் திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டதற்க்கான ஆதாரம்...
இரண்டாம் ஆதாரம்:
1940 ஆம் ஆண்டு... பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனு கொடுக்கையில்... "இந்த சிலோன் மண்ணில், சிங்களர்களும், திராவிடர்களும் இருக்கிறோம்... நாங்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்... நாங்களும் இந்தியாவில் தென்னகத்தில் வாழும் மக்களும் ஒருவரே"" என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
இந்த மனு கொடுக்கப்பட்டது 1940 ஆம் ஆண்டு... அப்போது திராவிடர் கழகமே உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது... (திராவிடர் கழகம் உருவானது 1944 ஆம் ஆண்டு தான்)
மூன்றாம் ஆதாரம்:
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச அரசியல் தளத்தின் உயிர் நாடியாக இருந்தவர் தேசத்தின் குரல் "ஆண்டன் பாலசிங்கம்" அவர்கள். அவர் ஈழ மண்ணின் வரலாற்றையும், ஈழ விடுதலைப் போரின் வரலாற்றையும் ஒருசேர "போரும் சமாதானமும்" என்ற புத்தகமாக தொகுக்க, அதை விடுதலைப் புலிகள் வெளியிட்டனர். அதில் மிகத் தெள்ளத் தெளிவாக "திராவிடக் குடியிருப்புகள்", "திராவிட ராச்சியங்கள்" என்ற வார்த்தைகள் மூலம் ஈழத் தமிழராகிய தங்களை "திராவிடர்கள்" என அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். (போரும், சமாதானமும் - அன்ரன் பாலசிங்கம் பக்கம் - 15).
எந்த பெரியார் போய் ஈழத்திலே திராவிடர் என்ற சொல்லை புகுத்தினார்? உலக பூகோள அரசியலை விரல் நுனியில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை விட இந்த சீமான் பெரிய அரசியல் விஞ்ஞானியா??
ஆக தமிழீழ விடுதலைப் புலிகளும்... ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் தங்களை திராவிடர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டனர்.
வரலாறு இப்படி இருக்க... இங்கே இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, அரசியலில் பொறுக்கித் திங்க இப்படியா பொய் புளுகுவது???
இங்கே மான, ஈனமுள்ள தமிழர்களும், தங்களை திராவிடர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டனர்.
ஆக "ஈழத்தமிழர் முதல் தமிழகத் தமிழர்கள் வரை திராவிடர்கள்"...
நாங்கள் திராவிடர்கள் இல்லை எனக் கூறி, பாப்பானுக்கு சொம்பு தூக்கும் இந்த ஒட்டுண்ணிகளை எதில் சேர்ப்பது???
- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்