ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன 'இந்து' ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் - தமிழ்நாட்டில், ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும், இப்படி தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார்.

விடுதலைப்புலிகளும், பிரபாகரனும் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் சிக்கி விட்டார்கள் என்றும், அவர்கள் கதை முடியப் போகிற நிலையில், அதைத் தடுக்கும் தமிழக எழுச்சிகள் கண்டிக்கத்தக்கது என்றும், சாக்கடைத்தனமாக பூணூல் திமிரோடு அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள இக்கட்டுரையை எதிர்த்து, கொதித்துப் போன கழக இளைஞர்கள் கோவையில் 'இந்து' பத்திரிகை அலுவலகத்தின் முன் கட்டுரை வந்த அதே நாளில் பகல் 12 மணியளவில் திரண்டு பார்ப்பன ஏட்டுக்கு எதிராக எச்சரிக்கை முழக்கமிட்டனர்.

மாலினி பார்த்தசாரதியின் 'மலநாற்றம்' வீசும் கட்டுரை வெளியிட்ட 'இந்து' ஏட்டுக்கு தீ வைத்தனர். கழக சட்டக் கல்லூரி மாணவர்களும், கழகத்தினரும் இரண்டு அணியினராக வந்தனர். பார்ப்பன இந்து நிர்வாகம் தோழர்களை தாக்கத் தொடங்கியது. இரு தரப்பிலும் கைகலப்பானது. பின்னர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானோர்: சாஜித், பன்னீர்செல்வம், மணி கண்டன், விசுவம், பிச்சுமணி, பாண்டியன், நேருதாஸ், சத்யா, ரகு, மணிவண்ணன், ரவி.

Pin It