போரில் காணாமல் போனோர் பற்றி மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் எல்எல்ஆர்சி ஆணைக் குழு முன் கொடுத்த சாட்சியத்தை வைத்து பலர் பலவிதமாக வியாக்கியானம் செய்கிறார்கள். தனது சாட்சியத்தில் வன்னியில் கணக்கில் வராத மக்களின் தொகை 1,46,679 என்றார். 2008 ஒக்தோபர் மாதம் வன்னி மக்களின் தொகை 4,29,059 ஆக இருந்தது.

மே 18, 2009 இல் போர் முடிந்து புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் தொகை 2,82,380 மட்டுமே. எனவே கணக்கில் வராத மக்கள் தொகை 1,46,679. ஆனால் ஒக்தோபர் 2008க்குப் பின்னர் போர் உச்சத்துக்கு வந்த போது பல ஆயிரம் பேர் வன்னியில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு பெயர்ந்து விட்டனர்.

மேலும் போரில் காயப்பட்டவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்துக்குச் சொந்தமான கப்பல்களில் திருகோணமலைக்கு அப்புறப்படுத்தப்பட்டினர். எனவே உண்மையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 40,000, கூடிய பட்சம் 70,000 என்பதே ஐநாமஉ பேரவை அமைத்த நிபுணர் குழுவின் முடிவாகும். இது சரியாக இருக்க வேண்டும்.

- நக்கீரன்

Pin It