"மக்கள் தேசம்" என்ற ஒரு பதிவு செய்யப்பட்ட நாடு அமைப்பு போபாலில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அது சிறிய அமைப்பு, மிகப்பெரிய ஆளுமைகளைக் கொண்ட அமைப்பு. இவர்களுக்கு எல்லாவற்றையும் விட நாடும், மக்களும் தான் பெரிது. நாட்டில் நடைபெறும் வன்முறை அரசியலும், மலிந்து விட்ட ஊழலும், பொறுப்பற்ற நிர்வாகமும், செயலற்ற குடிமைச் சமூகங்களும் இந்த நாட்டின் சாபக்கேடுகளாக இருக்கின்றன என்பது இவர்களது கருத்து. இந்தச் சூழலில் தீங்கு விளைவிக்கும் தீயவர்களை விட அவற்றைச் சகித்துக் கொள்ளும் நல்லவர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதைச் சகிக்க முடியவில்லை, எனவே நாட்டுக்கு வழிகாட்ட நற்சிந்தனை கொண்டோர் ஒருங்கிணைந்து கட்சிகளைக் கடந்து, மதங்களைக் கடந்து, பிராந்தியங்களைக் கடந்து, மொழி கலாச்சாரப் பிரிவினைகளைக் கடந்து நாட்டின் ஒற்றுமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும், மக்களாட்சியைக் காக்க எந்த தியாகத்திற்கும் தயாராக வேண்டும், அந்தக் குரல் ஒங்கி ஒலிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கமாக இருக்கிறது. அதன் மூலம் இந்த நாட்டில் அமைதியும் நேர்மையும் தர்மமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கில்தான் இவர்கள் இணைந்து பயணிக்கின்றனர்.

voting 303அந்தச் சிறிய அமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அதன் அடித்தளத்தில் இருந்த ஆதரவாளர்கள் உதவி செய்தனர். அவர்களுக்கு நான் அந்த விழாவில் பேசிய உரையில் சில குறிப்புகள் அவர்களைப் போன்ற சூழல்களில் இன்னும் தயக்கமாக இருந்த தயக்கத்தில், நான் சரியான நேரத்தில் புரிந்து கொள்ளும் வகையில் வந்து சேர்ந்தேன். உரையில் "உரையாடல் என்பது உரையாடல் நூல்கள் செய்வதற்கு மட்டுமானது அல்ல. நூல்களைக் கடந்து ஒரு உரையாடல் இருக்கிறது, அது மேல்மட்ட உரையாடல், மக்கள் உரையாடல். இதுவரை வரும் மக்களுக்கு உரையாடல் செய்வது என்பது மட்டும் அல்ல. உரையாடல் நூல்களும் இதுவரை நிலைகளைக் கடந்து உரையாடலைப் பற்றி எழுதாமல், தற்போது உரையாடல் நூல்கள் சற்று வித்தியாசமாக உரையாடல் செய்கின்றன. இந்த மேலான உரையாடல், பாரம்பரியத்தைக் கடந்து உரையாடல்களை மாற்றுகிறது, மக்களை ஒருமனதாக்குகிறது, மக்களை அரசுக்குத் தேவையான ஒரு உரையாடலாக, இந்த மக்கள் உரையாடலின் உரையாடல் நூல்களின் உரையாடலை முன்னெடுத்து செல்லும் என்ற நோக்கத்தில் அவர்களுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் வந்து சேர்ந்தேன். அந்த வாய்ப்பை நாடி அவர்கள் "மக்களுக்குத் தேவையான உரையாடல் ஒன்றை மட்டுமின்றி, வேறு எதையும் இல்லை உரையாடலுக்காக இந்த நிலையில் நிற்கிறது. இருந்தாலும் இந்த ஒரு நிலைப் புரிதலும் இந்த நூல் உரையாடலை நிறுவனமற்று மக்களிடம் நாம் திறந்த நிலையில் நிறுத்த முடியும் மற்றும் திறமையான வழியில் மாற்றி அமைக்கும் முயற்சியில் தோல்வியில் நாம் இருந்தாலும் நாளை ஒரு புதிய ஆரம்பத்தில் தயாராக இருப்போம்" என்று கூறினர். இதுவரை நாம் பல நிலைகளில் உரையாடல்களைக் கடந்து நிற்கிறோம். இங்கு உரையாடலுக்கு ஒரு நிலை புரிதல் இருக்கிறது அது மக்களுக்குக் கிடைக்கும் தயக்கம் நிற்கிறது. உரையாடல் மூலம் அதை முன்னெடுக்க..." என்று கூறினர்.

இந்த உரையாடலை முழுமையாக கேட்ட ரசிகர்கள் அதைப் பின்தொடரும் வகையில் தயாரானார்கள். தயக்கம் இங்கு வேறு மேலும் பல முக்கியமான கூறுகள் இருந்தன. இந்த முறையில் ஏறத்தாழ 5000 உரையாடல் பயிற்சிகளும் 4865 அரசாங்க அதிகாரிகளும் சுமார் 3900 இந்த வகையான தன்னார்வ நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தினர். நிறுவனத்திலும் எதிர்காலத்திலும் ஒரு காலத்தில் 80% தலைசிறந்த அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் இருந்தனர். இன்று 80% சந்தையைச் சார்ந்த, வணிகம் சார்ந்தவர்கள் இருப்பதுதான் இன்றைய ஒட்டுமொத்த அரசியலை சந்தைப்பக்கம் திருப்பி வைத்திருக்கிறது என்பதைப் படம்பிடித்துக் காட்டினர். கடந்த முப்பது ஆண்டுகளில் சாதாரணமாகக் கட்சிகள் வழியாக நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் வந்தவர்கள் மிகப்பெரும் தொழில் அதிபர்களாகப் பட்டியலையும் விளக்கினர். அதேபோல் ஏறத்தாழ 55% சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசமான குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பது இந்திய அரசியலையே குற்றப் பின்னணி கொண்டதாக மாற்றிவிட்டு என்பதையும் விவாதித்தனர்.

இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தை மக்களுக்காக உபயோகப்படுத்தியதை விட துஷ்பிரயோகம் செய்ததுதான் அதிகம் என்பதையும் எடுத்து வைத்து விவாதித்தனர். அங்கு வந்தவர்களில் பலர் அரசியல் கட்சிகள் நியாயத்திற்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் என எண்ணி அவர்களுடன் பயணித்து அது எவ்வளவு பாவச் செயல் என உணர்ந்து வெளிவந்தவர்களாக இருந்தனர். இந்தியாவில் நடைபெறுவது போலத்தான் உலகத்திலும் மக்களாட்சியை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருவதையும் அவர்கள் உரையாடலில் மையப்படுத்தினர். ஒரு காலத்தில் அரசியல் கட்சிகள் அறிவு ஜீவிகள், பொதுக் கருத்தாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தனர். குடிமைச் சமூக அமைப்புக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளித்தன. இன்று அறிவு ஜீவிகளின் கருத்தை அவர்கள் கேட்பதற்குத் தயாராக இல்லை என்பதை தங்கள் அனுபவத்திலிருந்து எடுத்து விளக்கினர். அரசியல் கட்சிகள் பேசுவதற்கும் நடந்து கொள்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் விளக்கினர். பெரும்பாலான கட்சிகள் தேர்தலின்போது கூறும் அனைத்து உத்தரவாதங்களையும் எந்தவித கூச்சமும் இன்றி மறந்து விடுகின்றனர். மகாத்மா காந்தி உண்மையை சத்தியமாக்கி அதைக் கடவுளாக்கினார். நம் கட்சிகள் பொய்யுரைத்தலையே தொழிலாகக் கொண்டுள்ளது என்பதையும் தங்கள் அனுபவப் பகிர்வுகளில் விளக்கினர்.

எப்படியாவது நம் மக்களாட்சியைப் பாதுகாக்க நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாம் விவாதிக்க வேண்டும். அப்படி விவாதிக்கும்போது நம் அரசியல் கட்சிகளைக் கடந்து, அதாவது கட்சி அரசியலைக் கடந்து நாம் விவாதிக்க வேண்டும் என்று விவாதித்தனர். இந்திய மக்களாட்சி ஒற்றைப் புள்ளியில்தான் சுழல்கின்றது. அதுதான் தேர்தல். அந்த ஒற்றை அடிப்படைக் கூறையும் சிதைவுற்ற நிலையில் நடத்துவது என்பதுதான் நம் மக்களாட்சியில் நாம் பார்க்கும் வடு. தொடங்கிய இடத்திலேயே அது ஊனத்துடன் நகர முடியாமல் இருப்பது என்பதுதான் மக்களாட்சி புரிந்தவர்களுக்கு வேதனையளிக்கிறது. சந்தைப் பணத்தில் வாக்குகளை விலை கொடுத்துப் பெற்ற வெற்றி என்பது விலை மாதிடம் அனுபவித்த இன்பத்திற்குச் சமமாக உள்ளது எனப் பலர் பொது வெளியில் விவாதித்த பிறகும் அது தொடர்வது எந்த வகையில் நியாயம். அதைத் தொடர விட்டுவிட்டு நாம் நல்லவர்கள் என்று நம்மை எப்படிக் கூறிக்கொள்ள முடியும் என்ற கருத்தையும் முன் வைத்தனர். இந்த முறைமையைப் பயன்படுத்தி பதவிகளுக்கு வந்ததால் ஒன்று அவர்களுக்கு மக்கள் மேல் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டுவிட்டது. அடுத்து அவர்களின் மேலேயே அவர்களுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. மக்கள் தலைவராக வலம்வர வேண்டியவர்கள் சந்தைத் தரகராகச் செயல்படுவது ஒரு மக்களாட்சியின் விந்தை. வாக்குகளை வாங்குவதும் விற்பதும் ஒட்டுமொத்த மக்களாட்சியை மாசுபடுத்துவதும் தியாகம் செய்து வாங்கிய விடுதலையைக் கேலிக்கூத்தாக்கும் அரசியலை நாம் ஏற்றுக் கொண்டு குடிமக்களாக வாழ்வது எவ்வளவு கேவலமானது என்பதை விளக்கினர். நம் நாட்டில் நடக்கும் தேர்தல் மிகவும் சிக்கலானதாக அரசியல் கட்சிகளை புரிந்து கொள்ளமுடியாத நிலையில் வைத்திருப்பது மற்றொரு மக்களாட்சியின் சோகம் என்பதை விளக்கினர்.

நம் நாட்டில் உள்ள கல்வித் திட்டத்தில் எந்த இடத்திலும் மக்களாட்சிக்கான கல்வியோ குடிமக்கள் தங்கள் பொறுப்புக்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான குடிமைப் பயிற்சியோ இல்லாமல் இருப்பது அடுத்த பெரும் சகிக்க இயலாப் பெரும் கேடு என்பதையும் படம்பிடித்துக் காண்பித்தனர். நம் கல்வி என்பது அறமற்று வாழ்வாதாரத்திற்கான பணத்தை சம்பாதித்து, செல்வ வாழ்க்கை வாழ்வதற்கான அரசாங்க வேலைகளுக்கான சாலைகளைக் காட்டி, அதற்கான திறன்களை உருவாக்கி, அரசியல் கட்சிகளுக்கான ஊழியர்களை தயாராக செய்வதற்குத் தேவையான நூல்களாக நாட்டைப்பார்க்கும் கண்ணோட்டத்தில் செயல்படும் மனிதர்களை உருவாக்கவில்லை என்ற ஒரு பெரும் சோக நிகழ்வு என்பதை விளக்கினர். இதுவே நாம் நோக்கிய நோக்கு.

தேர்தலில் வெற்றிபெறத் தெரிந்த அரசியல்வாதிகளுக்கு மக்களின் மேம்பாட்டைக் கொண்டுவரத் தெரியவில்லை என்பதும் நாம் பார்க்கும் ஓர் அவலம். இந்தச் சூழலில் இன்று நாம் என்ன செய்வது என்பதுதான் கேள்வி. சமூகத்தையும் சந்தையையும் நெறிப்படுத்த வேண்டிய அரசாங்கம் சந்தையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மக்களிடம் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்குச் சென்ற அரசியல்வாதிகள் மக்களுக்கு உரிமையையும் சந்தைக்கு உரிமையையும் காண்பிப்பதைத் தொழிலாக்கிக் கொண்டு விட்டனர். மக்கள் நிறுவனங்களான அரசுத்துறை நிறுவனங்கள் கம்பீரமாக உருவாக்கப்பட்டன. அவைகள் இன்று ஆயநலக்காரர்களின் பிடியில் இருந்து செயல்பட்டு சிதிலமடைந்து விட்டன. இது தனியாரைச் செழிப்படையச் செய்து விட்டன. அரசாங்கமே தன் நிறுவனங்களை அழிப்பதுதான் சோகத்தின் சோகம் என்பதை விளக்கினர்.

இந்தச் சூழலில் தீர்வை எங்கே தேடுவது. புதிய சட்டத்திலா, புதிய கொள்கையிலா, புதிய தொழில்நுட்பத்திலா, புதிய திட்டத்திலா என்றுதான் அனைவரும் தேடுதலில் இருக்கின்றனர். இவை அனைத்திலும் தீர்வைத் தேடி நடைமுறையும் படுத்திப் பார்த்துத் தோல்வியுற்றுத்தான் இன்று நாம் இருக்கிறோம். இதற்கு ஒரே தீர்வு மக்களிடம்தான் இருக்கிறது. நாம் பெற்ற விடுதலையை நாம் கடைப்பிடிக்கும் மக்களாட்சியை முறையாகப் பயன்படுத்த நம் மக்களிடம் விழிப்புணர்வு இருந்திருந்தால் உலகத்திற்கு வழிகாட்டும் நாடாக நாம்தான் இருந்திருப்போம். நமக்கு வழிகாட்ட நாம் ஓர் அரசமைப்புச் சாசனத்தை உருவாக்கினோம். அதுதான் நம் மக்களுக்கு நம் அரசாங்கத்திற்கு வழிகாட்டும் சாசனம். ஆனால் அந்தச் சாசனத்தை இன்றுவரை மக்களிடம் நாம் எடுத்துச் சென்று, இதுதான் நம் அனைவருக்குமான பாதுகாப்பு இருக்கிறது என்று விளக்கி அவர்கள் மனதில் அந்தச் சாசனத்தைப் பதியவில்லை. அடுத்து ஒரு மக்களாட்சி நாட்டில் மக்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளத் தேவையான குடிமக்களுக்கான கல்வியை நாம் தந்து நேர்மையான குடிமக்களை நாம் உருவாக்கவில்லை, சுதந்திரத்திற்காகப் போராடிய நமக்கு மக்களாட்சி என்பது கிடைத்தது. ஆனால் கிடைத்த இந்த மக்களாட்சியை முறையாகப் படுத்தத் தேவையான கல்வியை நம் மக்களுக்குத் தரவில்லை. அதன் விளைவுதான் சான்றளிக்கப்பட்ட வாக்கு, அரசியல் அறியாமை என்பது நம் மக்களாட்சி என்ற அற்புதமான ஆயுதத்தை முறையற்றுப் பயன்படுத்தி வருகிறோம். அதன் விளைவை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு நாடு மேம்படுவதற்கு அரசாங்கமும் அரசாங்கத்தின் திட்டங்களும் மட்டுமே போதாது. மக்களின் பங்கேற்பு என்பது அத்தியாவசியமானது. அரசாங்கம் உருவாக்கும் கொள்கையை, திட்டத்தை, சட்டத்தை நிறைவேற்ற மக்களின் பங்கேற்பு இன்றியமையாதது. அந்தப் பங்கேற்பு என்பது வீதியில் நின்று ஒலி எழுப்பும் பங்கேற்பு அல்ல. அரசு அறிவித்ததை சிந்தாமல் சிதறாமல் அப்படியே அந்தப் பயன்களை யாருக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமோ அப்படி கொண்டு சேர்க்க வேண்டும். அரசு கொண்டு வரும் திட்டம், கொள்கை, நிதி ஒதுக்கீடு அனைத்தும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவைகள் யார் மூலமாக எப்போது எப்படி யாருக்குச் சென்று சேர வேண்டும் என்பதை அறிந்து கொண்டு அவைகள் வந்து சேரவில்லை என்றால் அவைகளை முறையாகப் பெறுவதற்கான புரிதலுடன் செயல்பட்டால் பொதுமக்களுக்கு வரும் பயன்களை நம் கட்சிக்காரர்களும் அரசின் அதிகாரிகளும் அவைகளில் கை வைக்க முடியாது. இவைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ஒவ்வொரு ஊரிலும் வழிகாட்டும் தலைமையை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த வழிகாட்டும் மனிதர் ஒரு குழுவில் இருந்து இயங்க வேண்டும். அப்படிப்பட்டவரைத்தான் நமக்கான தலைவராக மக்கள் உள்ளாட்சியில் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விவரம் அறியா தற்குறிகளை நம் சாதி என்றும், நம் ஊர் என்றும், நம் உறவினர் என்றும் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு வரவேண்டியதை யாரோ எங்கோ துண்டு போட்டுவிடுவார்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த தற்குறித் தலைவர் அந்த நிதி எங்கிருக்கிறது என்பது தெரியாமல் விபரமற்று செயல்பட்டு அதிகாரம் இல்லை, நிதி இல்லை என்று புலம்புவார். அவரால் புலம்பலைத் தவிர வேறு ஏதும் செய்ய இயலாது. எனவே மக்களுக்கு வழிகாட்டும் தலைமை உருவாகி அந்தத் தலைமையை ஒரு கூட்டுத் தலைமையாக்கி அந்தக் கூட்டுத் தலைமை ஆங்காங்கே பொறுப்பெடுத்துச் செயல்பட்டால் அதுதான் நல்லாட்சியாக மலரும்.

நம் தேர்தலில் இருக்கும் சிக்கல்களிலேயே மிக முக்கியமானது வாக்கை சந்தைப்படுத்துவது. அதைத் தடுத்தாக வேண்டும். அடுத்து தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவர உரத்த குரலில் தேசம் முழுவதும் பொதுக் கருத்தாளர்கள் விவாதிக்க வேண்டும். அரசியல் கட்சிகளை அரசமைப்புச் சாசனத்திற்குள் கொண்டு வந்து கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அடுத்து அரசில் சீர்திருத்தமும், அரசியல் கட்சிகளில் சீர்திருத்தமும் முன்னெடுக்கப்படல் வேண்டும். இதற்கு
இன்றைய தேவை, பொதுக்கருத்தாளர்கள் கட்சிகளைக் கடந்து ஒன்றுபட்டு நாட்டையும் மக்களையும் மக்களாட்சியையும் காத்திடக் கட்சிகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து நிறைவு செய்தனர் அந்த இரண்டு நாள் உரையாடலை.

- க.பழனித்துரை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.