(1) 20.5.2016 அன்று சுமார் 30, 32 வயது டைய இரண்டு இளைஞர்கள் தாம்பரம் சானிட்டோரி யத்தில் மின்தொடர் வண்டியில் ஏறினர். இருவரும் தமிழ்நாட்டுத் தேர்தலைப் பற்றிப் பேசும் பொழுது ஒருவர் சொன்னார் : “மென்பொருள் மூலம் எதையும் செய்யலாம்; காணொளி மூலம் திறப்பு விழாக்கள், தொடக்க விழாக்கள் நடத்த முடியும்; எங்கிருந்து கொண் டும் வீட்டில் உள்ள (அல்லது) அலுவலகத்தில் உள்ள அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட்டு விவரங் களை அளித்தல் போன்ற செயல்களை, மென்பொருள் மூலம் திட்டமிட்டுச் செய்யமுடியும். அதுபோல் தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்கு எந்திரத்திலும் ஒரு சிறிய மாற்றத்தை மென்பொருள் செயல் திட்டத்தில் சேர்த்தால் ஒருவருக்கு கிடைக்கும் வாக்குகள் மற்றவர் களுக்கு மாற்ற வாய்ப்பு உண்டு. உலக நாடுகளே கை விட்ட மின்னணு வாக்கு எந்திரத்தை அப்பாவி இந்திய மக்களை ஏமாற்ற இங்கு மட்டும் கூட்டுச் சதியுடன் தேர்தல் ஆணையம் நடத்துகின்றது. அதனால் இந்த தேர்தல் நம்பிக்கையற்றது” என்றார். இதைக்கேட்ட மற்றொரு இளைஞர் ஆமாம் இது சாத்தியமே என்றார்.
(2) 20.5.2016 அன்று மாலை 5 மணியளவில் திருவல்லிக்கேணியில் தேநீர் கடையில் இரண்டு பெரியவர்கள் சுமார் 65, 70 வயது இருக்கும். இரு வரும் தேர்தலைப் பற்றிப் பேசியது : “இப்பொழுது வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் பணம் கொடுத் தும், பலனில்லா வாக்குறுதிகளைக் கொடுத்தும் பெற்ற வையாகும். ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, தோற்ற பெரிய கட்சி உறுப் பினர்கள் ரூ.200 முதல் ரூ.3000 வரை கொடுத்து வாக்குகளைப் பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையம் இதில் கண்டுதுடைப்பு நாடகமாகவே செயல்பட்டது. பெயருக்கு அங்கு இவ்வளவு, இங்கு இவ்வளவு பறிமுதல் செய்தோம் என்றது, தேர்தல் ஆணையம்” என்று ஒருவர் கூறினார்.
மற்றவர், “ஆமாம் இதுமட்டுமா? வாக்குகளை எண்ணும்பொழுது, மேலிடத்து உத்தரவு நாங்கள் சொல் வதுதான் முடிவு” என்று கூறியுள்ளனர். ஒருநாள் செல வுக்குப் பணம் கொடுத்து அய்ந்து ஆண்டுக்கு அடிமை யாக்கியது, மக்களை இந்தத் தேர்தல். எப்பொழுதுதான் இந்த மக்கள் விழிப்படைவார்களோ? பணம் கொடுக் காமல் வெற்றி பெறுபவர் மட்டுமே இந்த மக்களால் மதிக்கப்படும் உறுப்பினர் ஆவார் ” என்று பேசிக் கொண்டனர்.
நானும் தேநீர் குடித்துக்கொண்டே கேட்டதுதான் மேற்கண்ட செய்தி.
- உழவர் மகன் ப.வ.