ஆரியப் பார்ப்பனிய அதிகாரங்களும், கருத்துகளும் துடைத்தெறியப்பட வேண்டும்

சனாதன வெறித்தனம்.. சமஸ்கிருத, இந்தி அதிகாரப் போக்குகள்.. வருணாசிரமத் திமிர்.. ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பு.. சாதிகளின் ஆணவப் போக்கு.. சுங்கச் சாவடி பெயரில் சாலை வழிப்பறிக் கொள்ளை.. ஜி. எஸ். டி. சூறையாடல்கள்.. மாநில உரிமைகள் பறிப்பு.. பொதுத்துறை அழிப்பு... ஆளுநர் அமைப்பு முறை அனைத்தும் முற்றும் முழுமையாகத் தடைசெய்யப்பட வேண்டும்.. முற்றதிகாரம் படைத்த மாநிலங்களின் ஒன்றியமாக மட்டுமே இந்திய அரசு இருக்க வேண்டும்..

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை என்பது தேவையற்றது; மாநிலங்களவை மட்டுமே போதுமானது. அதனால் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் மொழித்தேச மாநிலங்களுக்குள் நேரடியாக நடத்தப்படாமல், மொழிவழித் தேசச் சட்டமன்றங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவோர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாக இருக்கும்படியான முறையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவ்வகை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அளவில் இருக்கக்கூடிய எல்லா மொழித்தேசங்களுக்கும் ஒரே எண்ணிக்கையில் இருந்திடல் வேண்டும் ...

தமிழ்நாட்டிற்குரிய நீதித்துறையில் தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றமே உச்சநீதிமன்றமாக இறுதி செய்யப்பட வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரங்கள்  உச்சநிலை அதிகார இடங்களாகவும்  இறுதி  செய்யப்பட வேண்டும்...

தமிழ்நாட்டில் கங்காணியாகச் செயல்படும் ஆளுநர் என்கிற அதிகார முறை ஒழிக்கப்பட்டு, அதன்மூலம் ஆளுநர் மாளிகைகள் என்கிற பெயரில் தமிழகக் கிண்டி மாளிகையிலும், உதகை ஆளுநர் மாளிகையிலும் வீணாய் செலவு செய்யப்பட்டு வரும் பல ஆயிரம் கோடி ரூபாய் தொகையையும் தமிழ்நாட்டு நலனுக்காகத் தமிழக அரசு பயன்படுத்திடல் வேண்டும் ...

நெய்வேலி நிலக்கரி, நரிமணம் கன்னெய் (பெட்ரோல்), சேலம் இரும்பு உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கனிம வளங்களின் (எடுத்தல், உடைமை, பகிர்வு) அனைத்து அதிகாரங்களும் தமிழ்நாட்டு அரசிடமே இருத்தல் வேண்டும்...

ஒவ்வொரு மொழிவழித் தேசங்களும் தங்களுக்கெனக் காவல்துறை வைத்திருப்பதுபோல், படைத்துறையையும் அதனதன் அதிகாரங்களுக்கு உட்பட்ட நிலையில் வைத்துக் கொள்வதே தேவையானது. அவ்வகையில் தமிழ்நாட்டிற்கும் படைத்துறை தேவையானதாகிறது. தேவைப்படும் காலத்தில் மட்டுமே அவை ஒன்றிய அளவில் ஒருங்கிணைந்து செயல்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் ... - என்கிற அளவில் மாநிலங்களின் உரிமைகளைத் தமிழக மக்கள் முன்னணி முன்மொழிந்து வலியுறுத்துகிறது.

குமரியில் திருவள்ளுவர் சிலைக்குக் கடற்கரையிலிருந்து தனியே பாலம் அமைத்திட வலியுறுத்தித் திருக்குறள் ஆர்வலர்கள், தமிழறிஞர்களால் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.thiruma pozhilan and valasa vallavanகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்குக் கடற்கரையிலிருந்து தனியே பாலம் அமைத்திட வலியுறுத்தித் திருக்குறள் ஆர்வலர்கள், தமிழறிஞர்களால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் ஐயா கி. வீரமணி அவர்களிடமும்.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்களிடமும்.. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களிடமும்.. மார்க்சியப் பொதுவுடை மைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கே.பாலகிருட்டிணன் அவர்களிடமும்.. திருக்குறள் பேரவையம் சார்பில்.. தென்மொழி ஆசிரியர் முனைவர் மா பூங்குன்றன், கல்லக்குறிச்சி புலவர் ஐயா மோகன், தமிழியக்கம் பொதுச்செயலாளர் திரு.மு சுகுமாரன், மார்க்சியப் பெரியாரியப் பொது வுடைமைக் கட்சித் தோழர் வாலாசா வல்லவன், தமிழ்த் தேச நடுவத் தோழர் பாவேந்தன் ஆகியோருடன் தமிழக மக்கள் முன்னணி சார்பில் பொழிலனும் சென்று பேசி வலியுறுத்தினோம்.. அவர்களும் வலியுறுத்துவதாகக் கூறினர். வடகிழக்கு மாநிலப் பழங்குடியின மக்கள் கொத்துக் கொத்தாகச் சாகடிக்கப்படுகின்றனர்.

Pin It