தமிழ்த் தேசிய சட்டவியல் என்றவுடன் இதில் எந்தந்த சட்டங்கள் அடங்கும், இப்படி ஒன்று இருக்கிறதா என்ற கேள்விகள் எழுவது இயல்பு. தமிழ் பேசும் மக்களுக்கான நவீன கால தனித்த சட்டம் உண்டா எனில் இலங்கையில் நடைமுறையில் உள்ள தேச வழமைச் சட்டத்தை கூறலாம். மற்றப்படி தமிழ்த் தேசிய மக்களுக்கான தனித்த சட்டங்கள் உண்டா எனில் அப்படி இல்லை என்று கூறிவிட முடியும். அப்படியெனில் தமிழ்த் தேசிய சட்டவியல் என்ற தலைப்பில் எதைப் பற்றி பேச முடியும். தமிழ்த் தேசிய சட்டவியல் பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த சட்டவியலா? அல்லது முதலாளித்துவ நலன் சார்ந்த சட்டவியலா? இந்த கேள்விகள் நம்முன் எழுவது இயல்பு. திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை காலத்தில் கொண்டு வரப்பட்ட சுயமரியாதை திருமணச் சட்டம் பற்றி மிகவும் சிலாகித்து கூட்ட மேடைகளில் பேசுவார்கள். அந்த சட்டம் மிகவும் புரட்சிகரமானது என்றும், அது தமிழ் மக்கள் சார்ந்து இயற்றப்பட்டது என்றும் கூறுவார்கள்.

law booksஆனால், உண்மையில் கடந்த 1967ம் ஆண்டில் இந்து திருமண (சென்னை திருத்தம்) சட்டம் 1967 நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மேற்படி திருத்த சட்டமானது இந்தியா முழுவதுக்குமான இந்து திருமண சட்டம் 1955ன் பிரிவு 7ல் ஒரு திருத்தமாக மேற்கொள்ளப்பட்டதே தவிர மற்றப்படி அது தமிழர்களுக்கான ஒரு சட்டம் அல்ல. தமிழ்த் தேசிய சட்டவியல் என்ப தற்கான சிந்தனையை நாம் எங்கு இருந்து தொடங்குவது, எப்படி தொடங்குவது?

தேசம் என்பது ஒரு முதலாளித்துவ கால கட்ட சொல்லாகும். தேசம் என்பதை ஸ்டாலின் ஒரு மொழியை பேசுபவர்கள், அவர்கள் நிலைத்து வாழும் நிலப்பரப்பு, அந்த மக்களிடையே நிலவும் பொருளியல், அந்த மக்களின் பண்பாடு ஆகியவை சேர்ந்ததே ஆகும் என கூறுவார். இந்த வரையரையில் இடம் பெற்றுள்ள பொருளியல் என்பது முத லாளிய பொருளியலையே குறிக்கும். ஏனெனில் தேசம் என்ற வரையரை முதலாளித்துவ காலக்கட்டத்தில் எழுந்த ஒன்று என்பதால் அப்படி. தமிழ்த் தேசிய சட்ட வியலின் வரலாற்றை நாம் தமிழ் இலக்கியங்களி லிருந்தும், பிற பழங் கால சான்றிதழ் களிலிருந்தும் தொகுத்துக் கொள்ள வேண்டி யுள்ளது. மறுபுறம் ஆங்கில வந்தேறி ஏகாதி பத்தியம் கி.பி.1600-க்கு பிறகு தமிழகத்தை அடிமைப்படுத்தத் தொடங்கியது. ஆங்கில ஏகாதியபத்ய அடிமை காலத்தில் தான் முத லாளித்துவ காலத்திற்குரிய சட்டவிதிமுறை களும், ஒழுங்குகளும் தமிழகத்தில் ஏற்படுத் தப்பட்டன. அதன் பின்னர் கி.பி.1947 ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் 1949 இந்திய அரசிய லமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின் னரும், தமிழகத்தில் இந்திய ஆட்சியாளர் களின் நவீனகால சட்டங்கள் இருந்து வரு கின்றன. இத்தகைய சூழலில் தமிழகத்தில் நிலவுடமை கால சட்டவிதி முறைகளின் மீதான விமர்சனம் மற்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய அரசு காலகட்ட சட்ட விதிமுறைகள் மீதான விமர்சனம் ஆகிய வற்றிலிருந்தே நாம் தமிழ்த் தேசிய சட்ட வியலை தொகுத்துக் கொள்ள வேண்டி யுள்ளது.

என்ன கொள்கையை நிறைவேற்றுவ தற்காக என்ன வகையான ஆட்சியை என்ன அங்கங்களை கொண்டு அமைப்பது என்பதை விளக்குவதுதான் அரசியலமைப் புச்சட்டம். மக்களவை என்று ஒன்று இருக்க வேண்டும். அந்த மக்களவை மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்களால் நிரப்பப்பட்டதாக இருக்க வேண்டும். அந்த மக்களவைக்கு சட்டத்தை ஏற்றக்கூடிய அதிகாரமும், செயல் படுத்த வேண்டிய அதிகாரமும் உடையதாக இருக்க வேண்டும். அந்த மக்களவை தான் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும். அவ்வாறு தான் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அந்த மக்களவை இயங்கும். இப்படிதான் நாடாளுமன்றம் இயங்க வேண்டும். இப்படிதான் நீதிமன்றங்கள் இயங்கவேண்டும் என வரையறுத்து வழி வகுப்பது தான் அரசியலமைப்பு சட்டம். இதுவரையில் தமிழ்த் தேச அரசியலமைப்பு சட்டம் என்று வரலாற்றில் எதுவும் இருந்த தில்லை. தமிழ்த் தேசிய சட்டவியலில் தேடும் நோக்கத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதான விமர்சனங்களையும், ஆங்கில வல்லரசின் சட்ட விதிகள் மீதான விமர்சனங்களையும் காண்போம்.

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் 42-வது திருத்தத்தின் படி செய்யப்பட்ட திருத்தத்திற்கு பின்னர் இந்திய அரசிற்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட் டுள்ளது. அதாவது இறையாண்மை கொண்ட சோசலிச மதசார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசிய லமைப்பு சட்டத்தின் 395 சட்டக்கூறுகளில் எந்த ஒரு இடத்திலும் சோசலிசம், மதசார் பின்மை, மக்களாட்சி, குடியரசு ஆகியவற்றுக்கான பொருள் விளக்கம் தெளிவுப்பட தரப்பட வில்லை. உண்மையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ ஊழ் தொடங்கிய காலத்தில் அரசில் இருந்து மதத்தை பிரிக்க வேண்டும் என்ற இயக்கம் தொடங்கியது.

அரசின் தலைவரே மதத்தின் தலைவராக இருந்த நிலையில் அரசியலில் இருந்து மதத்தை பிரித்து மதச்சார்பின்மை ஏற்படுத்த வேண்டும் என கோரினார்கள். இதன் தொடர்ச்சியாகவே மதச்சார்பின்மை என்ற கோட்பாடு உருவானது. இந்திய அரசிய லமைப்பு சட்டத்தின் முகப்புரையில் இந்தியாவின் மதச்சார்பற்ற நாடு என எழுதி விட்டு, நடைமுறையில் மதச்சார்பின்மை என்பதற்கு அனைத்து மதங்களையும் சமமாக பாவித்தல் என விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது போலவே சோசலிசம் என்ற கருத்தானது மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற அடிப்படையில் இருந்து உருவானது ஆகும். நாட்டின் செல்வங்களும், உடமைகளும் மக்கள் அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்னும் கோட்பாட்டின் அடிப்படையிலான செயல்பாடு மற்றும் கருத்துக்களே சோசலிசம் என்பதாகும். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் சோசலிசம் என்பதற்கு சரியான வரையறை எதுவும் கூறவில்லை. ஆனால் அதே சமயம் சோசலிசக் கோட்பாட்டின் அடிப்படையில் எந்த திட்டங்களையும் இந்திய அரசு முன் வைப்பதில்லை.

தொடரும்....

- இரா.வைத்தீஸ்வரன்

Pin It