நீங்கள் புத்திசாலியாக மாறவேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்கவழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.

ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, 15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெறமுடியும். அதனால் மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது என்றனர்.

தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படுசுட்டியாக இருப்பார்களாம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.

இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய் மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார் கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

தாய்மார்களின் உணவுப் பழக்கம் ஆராயப் பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனை கள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.

மீன்களை உண்ணும் மீன்கள் மற்றும் அதிக காலம் வாழும் மீன்கள், போன்ற வை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் தரவரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்கவேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்து கிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் எந்த நோய் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால் நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை எதுவும் உங்களை அண்டவே அண்டாது.

ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள் மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பலமுறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

மீன் உணவில் கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள ஒமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் வேறு எந்த உண விலும் இல்லை. உடலில் எந்த நோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே ஒமேகா 3” கிடைக்கிறது.

அதனால், வாரத்தில் குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது மீன் உணவு சாப்பிட்டு வருவது மிகமிக நல்லது.

ஆண்களின் ஆயுளுக்கு மீன் துணைபுரியுமா?

ஜப்பானில் மருத்துவப் பேராசிரியர் ஒருவர் 1980 முதல் 1999 வரை 30 முதல் 64 வயது வரையான 4070 ஆண்களையும், 5182 பெண்களையும் சோதனைக்கு உட்படுத்தினார். 20 ஆண்டுகளாக கண்காணித்த பின் ஆய்வறிக்கை தயாரித்தார். ஆண் ஒருவர் நாள் தோறும் ஒரு முறை மீன் உட்கொண்டால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விகிதத்தை 30 விழுக்காடு வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை மீன் உட்கொண்டால் உடம்புக்குத் தேவைப்படும் சத்து போதிய அளவு கிடைக்கலாம்.

பெண்களிடையே உயிரிழப்பு விகிதம் குறைவு என்பதால் அவர்கள் மீன் உட்கொள்வதன் விளைவு சரியாகத் தெரியவில்லை. மீன் இறைச்சி ரத்தக் கட்டியைத் தடுக்கலாம். இருதய நோய் மூளையில் ரத்தம் உறைவது முதலானவற்றைத் தடுக்கலாம்.

தடுக்கப்படும் நோய்கள் :

ஆஸ்துமா : மீன் உணவு சாப்பிட்டு வருவோர்க்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு மீன் உணவு கொடுத்து வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

கண் பாதிப்பு :மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது. மீன் உணவில் உள்ள ஒமேகா 3” ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

கேன்சர் :பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில் ஒமேகா 3”யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்தவகை புற்றுநோயும் வராது.

இருதய நோய் : கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால் இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்சனை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

-மாற்று மருத்துவம் செய்தியாளர்