தினமும் நடைப்பயிற்சி செய்வது இதயத் தசைகளை வலுவாக்குகிறது. அது உடலுக்குத் தேவையான இரத்தம் கிடைக்க, செல்களுக்குத் தேவையான பிராணசக்தி கிடைக்கச் செய்கிறது. இதனால் இரத்தம் சுத்தமாகி, கழிவுகள் நன்கு வெளியேறுகிறது. தேவையற்ற கொழுப்புகள் நீங்கி மாரடைப்பு உருவாவது தடுக்கப்படுகிறது.

மேற்கண்ட செயலுக்காக இரத்தத்திலுள்ள சர்க்கரை அதிக அளவு உபயோகிக்கப்படுவதால் நீரிழிவு (சர்க்கரை) நோயானது கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. தினமும் நடப்பதால் இன்சுலின் ஊசியைத் தவிர்க்கலாம்.

தொடர்ந்து சில வருடங்கள் நடைப்பயிற்சி செய்பவர்களது முதுகுத்தசை, முதுகெலும்பு வலுவடைவதால் அவர்கள் முதுகுவலி யில்லாமல் மகிழ்வாய் வாழலாம். அதே போல் முழங்கால் மூட்டுத்திசுகளும், சுற்றுப்பகுதி தசைகளும் வலுவடைவதால் மூட்டுவலித் தொல்லையின்றி ஆனந்தமாகலாம்.

உடலை இளமையாய் வைத்திருக்க

இது ஒரு எளிய வழி.

நடைப் பயிற்சியின் மூலம் உடல் கூடுதலாக சுமார் ஐந்து கிலோ வரை பிராணசக்தியைப் பெரும். இது மார்சளி சேர்தல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவற்றை சரிசெய்யவும். மேற்கண்ட தொல்லைகள் உள்ளவர்கள் இரண்டு வாரத்திலேயே சிறந்த நிவாரணம் பெறலாம். (நடைப்பயிற்சியின் போது முதல் சில நாட்கள் சளி நிறைய வெளிவரும். அதனை அவ்வப்போது துப்பிவிடவும்)

எல்லாம்சரிதான் ஆனால் நடக்க இடவசதியில்லை, வெளியே சுற்றுப்புறம் சரியில்லை, வாகனப்புகைத் தொல்லை, நாய்த்தொல்லை..........................என்பவர்கள் நமது முன்னோர்கள் கூறிய பாரம்பரிய, அற்புத முறையாகிய எட்டு நடைப்பயிற்சி ஐ மேற்கொண்டு மேலும் பல கூடுதல் நன்மைகளைப் பெறலாம்.

10 சதுரடி அளவுள்ள இடத்தில் பெரிதாக ஒரு எட்டு (8) வரையவும். அதில் படத்தில் அம்புக் குறியிட்டது போல தினசரி நடக்கவும். முதலில் 10-15 நிமிடமும், பின் மெல்ல மெல்ல கால அளவை 5-5 நிமிடங்களாகக் கூட்டி 30 நிமிடங்கள் வரை நடக்கலாம்.

முன்கூறிய பலன்கள் தவிர கண்பார்வை தெளிவு, மன அமைதி, மன ஒருமைப்பாடு, டென்சன் குறைதல், இரத்த அழுத்தம் சீராகுதல், பாதம், கால் வலி சரியாதல் இன்னும் பல நன்மைகளைப் பெறலாம்.

அற்புதமான

எட்டு நடைப்பயிற்சி

நீங்கள் நடக்க நடக்க நோய்கள் உங்களை விட்டு ஓட்டமாய் ஓடும்.

-மலர் மருத்துவர் ந. ஸ்ரீநிவாஸன் DYNS.., சேலம்.

Cell: 98426 38916

Pin It