periyar hosp 350கல்கத்தா டவுன் ஹாலில் வங்காள ஸ்திரீகள் மகாநாடு ஸ்ரீமதி சாரளா தேவி சௌத்ராணி தலைமையில் நடைபெற்றது. ஸ்திரீகளின் உரிமைகள் வற்புறுத்தப்பட்டும் அதை எவரும் சட்டை செய்யவில்லை என்றும், சிறப்பாக பண்டிதர் ஜவர்லால் நேரு கூட அதை அசட்டை செய்தது ஆச்சர்யமான தென்றும் சென்குப்தாவை மாகாண இளைஞர் மகாநாட்டில் தலைமை வகிக்காது தடுத்தது ரொம்பவும் சரி என்று ஆதரித்ததும், பலர் பிரசங்கமாரி பொழிந்தார்கள்.

பிறகு அங்கு செய்யப்பட்ட தீர்மானங்களாவன:-

சாரதா சட்டம் உடனே அமுலில் கொண்டு வரப்பட வேண்டுமென்றும், பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருக்க வேண்டுமென்றும், கலப்பு மணம், விதவை மணம், இவைகளை அனுஷ்டிக்க வேண்டுமென்றும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஒழுக்க முறை இருத்தல் வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

சிறை புகுந்த வங்க நாட்டு பெண்களை நமது நாட்டு வீரர்கள் போற்றுகிறார்கள், புகழுகிறார்கள், வீரமணிகளென்கிறார்கள், இவர்கள் வங்க நாட்டு வீரப் பெண்மணிகளின் அடிகளை பின்பற்ற வேண்டுமென்றே சுயமரியாதைக்காரர்கள் விரும்புகிறார்கள். கேரள நாட்டில் காந்தி காந்தி என்று கதறிக் கொண்டும், தேசீய மகாநாடுகளில் தலைமை வகித்து பிரபலஸ்தராக விளங்கும் சென்குப்தாவுக்கு ஸ்ரீமதி சாரளாதேவி சௌத்ராணி தலைமையில் கூடிய வங்க நாட்டுப் பெண்கள் மகாநாட்டில் ஆதரவு இல்லாமல் போனதேன்? இதையும் தென்னாட்டார் தெரிந்து தெளிதல் அவசியம்.

(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 10.05.1931)

Pin It