I

இந்திய அரசியல் விவகாரங்களில் ஆர்வமும் அக்கறையும் காட்டும் அயல்நாட்டினரில் ஒருசிலரைத் தவிர ஏறத்தாழ எல் லோருமே காங்கிரசை ஆதரிப்பது ஒரு பொதுவான அனுபவமாகும். இந்து நாட்டிலுள்ள் இதர அரசியல் கட்சிகளிடம் திகைப்பையும் குழப் பத்தையும் ஏற்படுத்டியிருப்பது இயல்பே. இந்தக் கட்சிகளில் முசல் மான்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உரிமை கொண்டாடும் முஸ்லீம் லீக், பிராமணரல்லாதோர் சார்பில் பேசுவதாகக் கூறிக் கொள்ளும் ஜஸ்டிஸ் கட்சி – இப்போது அது செயலற்றுப் போயிருந் தாலும் – தீண்டப்படாதோரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படும் அகில இந்திய ஷெட்யூட்டு வகுப்பினர் சம்மேளனம் போன்ற வற்றை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடலாம். இக்கட்சிகள் யாவும் தங்களுக்கு ஆதரவு அளிக்குபடி அயல்நாட்டவரை நெடு கிலும் வேண்டி வருகின்றன.

ambedkhar 350ஆனால் அயல்நாட்டவர் இக்கட்சிகளின் வேண்டுகோளை பரிவோடு செவிமடுத்துக் கேட்கக் கூடத் தயாராக இல்லை. அயல்நாட்டவர் ஏன் காங்கிரசை ஆதரிக்கிறார்? இந்தியாவிலுள்ள மற்ற கட்சிகளை ஏன் ஆதரிக்கவில்லை? அயல் நாட்டவர் தமது இந்தப் போக்குக்கு பொதுவாக இரண்டு காரணங் களைக் கூறுவது வழக்கம். காங்கிரசை ஆதரிப்பதற்கு அவர் கூறும் ஒரு காரணம் காங்கிரசைதான் இந்தியர்களின் ஒரே பிரதிநிதித்துவ அமைப் போனால் தீண்டப்படாதவர்களின் சார்பில் பேசுவதற்கும் கூடத் தகுதி படைத்ததாகவும் அவர் கருதுவதே ஆகும். அவர் இவ்வாறு கருதுவது சரிதானா? இவ்விதம் அவர் கருதுவதற்கு இரண்டு சந்தர்ப்பச் சூழ் நிலைகளே பிரதான காரணம் எனலாம்.

இத்தகைய கருத்து பரவுவதற்கு முதலாவதும் முக்கியமானது மான காரணம் காங்கிரசை ஆதரித்து இந்தியப் பத்திரிகைகள் இடை விடாது நடத்திவரும் பிரசாரமேயாகும். இந்தியப் பத்திரிகை உலகம் காங்கிரசின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து வருகிறது; காங் கிரஸ் ஒருபோதும் தவறு செய்யாது என்ற வரட்டுச் சித்தாந்தத்தை உடும்புப் பிடியாக நம்புகிறது; காங்கிரஸ் செல்வாக்குக்கோ அல்லது காங்கிரஸ் சித்தாந்த்ததுக்கோ முரணான எந்தச் செய்தியையும் எத் தகைய முக்கியத்துவம் கொடுத்தும் வெளியிடுவதில்லை என்ற கோட் பாட்டின் அடிப்படையில் அது செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் தான இந்திய மக்கள் அனைவரின் ஏகப்பிரதிநிதி என்ற அதன் இந்தக் கோஷம் இந்தியப் பத்திரிகைகளால் இடைவிடாது தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இதன் விளைவாய் பற்றித் தெரிந்து கொண்ட ஒரே ஒரு விஷயம் காங்கிரஸ்தான் இந்தியாவி லுள்ள ஒரே பிரதிநிதித்துவ அமைப்பு என்பதாகும்.

காங்கிரஸ்தான் தீண்டப்படாதோர் உட்பட இந்தியா முழு வதையும் பிரத்நிதித்துவப்படுத்தும் ஒரே அமைப்பு என்று வெளி உலகம் ஏன் நம்புகிறது எனதற்கு இரண்டாவது சந்தர்ப்ப சூழ் நிலை ஒன்றும் இருக்கிறது. காங்கிரஸ் கொண்டாடும் இந்த் உரிமைக்கு எதிராக தீண்டப்படாதோர் சார்பில் பிரசாரம் செய்ய இல்லாமல் போனதே அந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையாகும். தீண்டப்படாதோர் இவ்வாறு செய்ய் இல்லாமல் போனதற்குப் பல காரங்கள் உண்டு. அவர்களுக்குப் பத்திரிகைகளின் ஆதரவு ஏதும் இல்லை. காங்கிரஸ் பத்திரிகைகளோ அவர்களுக்குத் தமது கதவுகளை மூடிவிட்டன. தீண்டப்படாதோருக்கு இம்மியும் விளம்பரம் தருவதில்லை என அவை உறுதிபூண்டுள்ளன. தீண்டப்படாதோரல் சொந்தமாகப் பத்திரிகை நடந்த முடியாது.

விளம்பர வருவாயின்றி எந்தப் பத்தி ரிகையும் உயிர் வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை, வர்த்தக, தொழில் நிறுவனங்களிலிருந்துதான் விளம்பர வருவாய் கிட்ட முடியும். ஆனால் இந்தியாவிலோ எல்லா பெரிய, சிறிய தொழில் நிறுவனங்களும் காங்கிரசுடன் பின்னிப் பிணைந் துள்ளன; காங்கிரஸ் அல்லாத எந்தப் பத்திரிகைகளையும் அவை ஆதரிக்க மாட்டா. இந்தியாவின் பிரதான செய்தி விநியோக நிறுவன மான “அசோசியேட்டட் பிரஸ் ஆப் இந்தியாவின்” அலுவலர் கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்த பிராமணர்கள்; இன்னும் சொல்லப்போனால் இந்தியப் பத்திரிகை உலகம் முழுவதுமே அவர்கள் கையில்தான் இருக்கிறது; அனைவருக்கும் தெரிந்த காரணங்களால் இவர்கள் முற்றிலும் காங்கிரஸ் ஆதரவாளர்கள்; காங்கிர சுக்கு விரோதமான எந்தச் செய்தியும் பிரதானம் பெற அவர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். இவை எல்லாம் தீண்டப்படாத வர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்கள்.

எனினும் பிரசாரத் துறையில் அவர்கள் மிகவும் பின் தங்கியிருந்ததற்குப் பிரதான காரணம் பிரசாரம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அவர்களிடம் இல்லாததுதான். வெளி உலகத்தாரின் கண்களில் நாட்டின் லட்சி யத்துக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய எதையும் செய்துவிடக் கூடாது என்ற தேசபக்த நோக்கிலிருந்தே இந்த ஆர்வமின்மை தோன்றுகிறது என்றும் சொல்லலாம். இந்தியாவின் அரசியலில் இரண்டு வேறு பட்ட அம்சங்கள் அடங்கியுள்ளன; அயல்நாட்டு அரசியல், அரசிய லமைப்புச் சட்ட அரசியல் ஆகியவையே அந்த இரு அம்சங்கள். இந்தியாவின் அயல்நாட்டு அரசியல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தி லிருந்து இந்தியாவின் விடுதலை சம்பந்தப்பட்டது; அரசியலமைப்பு புச் சட்ட அரசியலோ சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்டது. உண்மை யில் இவை இரண்டும் வெவ்வேறானவை.

ஆனால் இந்திய அரசி யலின் இந்த இரு அம்சங்களும் தனித்தனியானவை என்றாலும், அயல்நாட்டவர் இவற்றை வேறுபடுத்திப் பார்க்க இயலாமல் போவ தற்கும், அரசியலமைப்பு குறித்த சர்ச்சையை இந்தியாவின் அயல் நாட்டு அரசியலின் இறுதிக் குறிக்கோள் குறித்த கருத்து வேறு பாடாகத் தவறாகப் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு. இத னால்தான் இந்த விஷயத்தில் மௌனம் சாதிக்கும் போக்கையும், காங்கிரஸ் பிரசாரம் தங்குதடையின்றி நடைபெறுவதை அனு மதிக்கும் போக்கையும் தீண்டப்படாதவர்கள் மேற்கொண்டனர்.

தங்களுக்கு எதிராக நடைபெறும் காங்கிரஸ் பிரசாரம் குறித்து தீண்டப்படாதவர்கள் மௌனம் சாதிப்பதற்குப் பின்னாலுள்ள அவர் களது தேசபகத நோக்கங்களை காங்கிரஸ்காரர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனினும் தீண்டப்படாதவர்களின் இந்த மௌனமும், பகிரங்க எதிர்ப்பைத் தவிர்க்க வேண்டுமென்ற அவர்களது ஆர்வமும் தீண்டப்படாதவர்கள் உட்பட இந்திய மக்கள் அனைவரையுமே காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற ஒரு பொதுவான கருத் தைத் தோற்றுவிக்க முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

காங்கிரசின் பிரதிநிதித்துவத் தன்மை தேர்தலில் சோதித்துப் பார்க்கப்படாத ஒரு சமயத்தில் அயல்நாட்டவர் காங்கிரசின் பிரசார வலையில் விழுந்தது வருந்தத்தக்கதே என்றாலும் மன்னிப்புக்குரியதே ஆகும். இப்போது இந்த விஷயம் 1937ல் நடைபெற்ற தேர்தல்களில் சோதித்துப் பார்க்கப்பட்டுவிட்டது. இந்தத் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன? காங்கிரசின் பிரதிநிதித்துவ இயல்பை அதன் படாடோபமான பிரசாரத்தை மட்டும் வைத்துத் தீர்மானிப்பது நியாயமல்ல என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் புலப்படுத்து கின்றன.

இந்தத் தேர்தல் முடிவுகள் எதை வெளிப்படுத்துகின்றன என்பதை ஏற்கெனவே இந்த நூலின் ஆரம்பத்தில் பொதுப்படை யாகவும் அத்துடன் தீண்டப்படாதோர் சம்பந்தமாக குறிப்பாகவும் விளக்கிக் கூறியுள்ளோம். எனவே, அயல்நாட்டவர் இந்த விவரங் களை எல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பிரச்சினையை சீர் தூக்கிப் பார்க்க வேண்டுகிறோம்; முன்னர் செய்ததுபோன்று, தீண்டப் படாதோர் உட்பட அனைவரையுமே காங்கிரஸ்தான் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்ற பிரசாரத்தை இனிமேல் ஏற்க மாட்டார் என்று நம்புகிறோம்; மேலும் காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகள், குறிப்பாக தீண்டப்படாதவர்கள் இந்தியாவின் அரசியல் பிரச்சினை குறித்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் உணர்வார் என்றும் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக காங்கிரஸ்தான் போராடி வருகிறது என்று தாம் நம்புவதால் காங்கிரசை ஆதரிப்பதாக அயல் நாட்டவர் இரண்டாவது காரணம் ஒன்றைக் கூறுகிறார். காங்கிரஸ் காரர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டிருக்கின் றனர்; சட்ட மறுப்பு இயக்கங்களை நடத்தி வருகின்றனர்; அந்நிய அரசாங்கம் இயற்றிய சட்டங்களை மீறி வருகின்றனர்; வரிகொடா இயக்கங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்; ஆயிரக் கணக்கில் வெஞ்சிறைகளை நிரப்பி வருகின்றனர்; ஒத்துழையாமை இயக் கத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகின்றனர்; பட்டம் பதவி களைத் துறந்து வருகின்றனர்; நாட்டின் சுதந்திரத்திற்காக எல்லா வகைகளிலும் தியாகம் செய்யத் தயாராக இருக்கின்றனர். இவ்வாறு தான் காங்கிரஸ்காரர்களை அயல்நாட்டினர் பார்க்கின்றனர்.

ஆனால் அதேசமயம் ஏனைய கட்சிகள் இவற்றிலிருந்தெல்லாம் ஒதுங்கி நிற்பதைக் காண்கின்றனர். இதிலிருந்து, காங்கிரசானது நாட்டின் சுதந் திரத்திற்காகப் போராடும் ஓர் அமைப்பு என்றும், எனவே, “சுதந்திரப் போரட்டத்தை” நடத்திவரும் காங்கிரசை ஆதரிப்பது சுதந்திரத்தை விரும்புவர்கள் என்ற முறையில் தமது கடமை என்றும் அயல் நாட் டவர் கருதுகிறார். சுதந்திரத்திற்கான போரட்டத்தில் ஏனைய கட்சி கள் ஏன் பங்கு கொள்ளவில்லை என்பதை வேறொரு இடத்தில் விளக்கியிருக்கிறேன். இப்போது இந்தப் பிரச்சினையின் மற்றொரு  அம்சத்தை அதாவது யாருடைய சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடி வருகிறது என்பதைப் பரிசீலிக்கலாம் என்று நினைக்கிறேன்.

 II

“சுதந்திரத்திற்காகப் போராடும்” ஓர் அமைப்பு என்ற முறை யில் காங்கிரசை ஆதரிக்கும் அயல்நாட்டவர் ஒரு நாட்டின் சுதந் திரத்திற்கும் அந்த நாட்டு மக்களது சுதந்திரத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை. இங்கு அந்த வேறுபாட்டை எடுத்துரைப்பது என் முழுநோக்கமல்ல, மாறாக, அயல்நாட்டவர் விஷயத்தைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக ஏமாற்றப்படுவதற்கு உள்ளாக விட்டாலும் தவறான எண்ணத் தால் வழிநடத்திச் செல்லப்படுவதற்குத் தம்மை அனுமதிக்கிறாரே என்பதால் இந்த வேறுபாட்டைப்பற்றி இங்கு குறிப்பிட்டேன்.

சமுதாயம், தேசம், நாடு போன்ற சொற்கள் திட்டவட்டமான, தெளிவான அர்த்தத்தைக் கொடுக்காத சொற்கள். “தேசம்” என்பது ஒரே சொல் லானாலும் அது பல வகுப்பினர்களை அர்த்தப்படுகிறது. தத்து வார்த்த ரீதியில் பார்த்தால் ஒரு தேசத்தை ஒரே யூனிட்டாக கருத லாம்; ஆனால் சமூகரீதியில் பார்க்கும்போது பல வகுப்பினர்கள் கொண்டதாக அதனை கருதமுடியும். ஒரு தேசத்தின் சுதந்திரம் என்று கூறும்போது, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதில் அடங்கி யுள்ள பல்வேறு வகுப்பினர்களின் சுதந்திரத்திற்கு அதிலும் குறிப் பாக அடிமைகள்போல் நடத்தப்படும் வகுப்பினர்களின் சுதந்திரத் தையும் அது உத்தரவாதம் செய்வதாக இருக்க வேண்டும். எனவே, காங்கிரஸ் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி வருவதால் அது இந்திய மக்களின், அடிமட்டத்திலும் அடிமட்டத்திலுள்ள மக்களின் சுதந்திரத்திற்காகவும் போராடுகிறது என்று அர்த்தம் செய்து கொள்வது மடமையிலும் மடமையாகும்.

சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடி வருகிறதா என்ற கேள்வி யாருடைய சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடி வருகிறது என்னும் கேள்வியுடன் ஒப்பிடும்போது மிகமிகக் குறைந்த முக்கியத்துவத் தையே பெறுகிறது. இது பெரிதும் பொருத்தமான, அவசியமான விசாரணையாகும். இந்த விஷயத்தை நன்கு ஆய்ந்து ஆராய்ந்துப் பரி சீலித்து, உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் சுதந்திரத்தை விரும்பும் எவரும் காங்கிரசை ஆதரிப்பது பெரும் தவறு. ஆனால் இவ்வாறிருக்கும்போது காங்கிரசை ஆதரிக்கும் அயல்நாட்டவர் இத் தகைய கேள்வியை எழுப்பக்கூட அக்கறை கொள்வதில்லை. இத்தகைய முக்கியமான பிரச்சினையில் அயல்நாட்டவர் ஏன் இத்தனை மெத்தனத்தோடு, அசட்டை மனப்பான்மையோடு நடந்து கொள்ள வேண்டும்? எனக்குத் தெரிந்தவரை, சுயாட்சி, ஜனநாயகம் போன் றவை குறித்து மேலைய நாடுகளில் நிலவும் தவறான கண்ணோட் டங்களில்தான் இத்தகைய அலட்சியத்தக்கான காரணத்தைக் காண் கிறேன்; இந்தியாவின் அரசியலில் அக்கறை காட்டும் அயல்நாட்ட வருக்கு இவைதான் கையிருப்பு சரக்காகும்.

தன்னாட்சி கைவரப்பெறுவதற்கு அவசியமானதெல்லாம் குரேட்டே கூறியதுபோல் மக்களிடையே அரசியலமைப்புச் சட்டம் குறித்துத் தார்மிகப் பண்பு இருக்க வேண்டும் என்பதேயாகும் என மேலைய அரசியல் பண்டிதர்கள் கூறுகின்றனர். அரசியலமைப்புச் சட்டத் தார்மிகப் பண்பு என்பது எதைக் குறிக்கிறது? இது பற்றி குரேட்டே கூறுவதாவது: ( குரேட்டே, கிரேக்க வரலாறு, தொகுதி III , பக்கம் 347.)

“அரசியலமைப்புச் சட்டத் தார்மிகப் பண்பு என்பது பின்வருபவற்றை அர்த்தப்படுத்துகிறது: அரசிய லமைப்புச் சட்ட வடிவத்தின்பால் தலையாய மரியாதை காட்டும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்; இந்த வடிவங்களின் கீழும், அவற்றின் கட்டுக்கோப்புக்குள்ளும் செயல்படும் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; அதேசமயம் திட்டவட்ட மாக சட்ட வரம்புக்குட்பட்டு மட்டுமே வெளிப்படையாகப் பேச லாம், செயல்படலாம்; அதிகாரிகளை அவர்களுடைய பொதுப் பணிகள் சார்ந்த செயல்பாடுகளைத் தாராளமாகக் கண்டிக்கலாம், அத்தோடு ஒவ்வொரு குடிமகனது உள்ளத்திலும் முழுநிறைவான நம்பிக்கை இருக்க வேண்டும்; கட்சிகளிடையே கடுமையான போட்டி அனுமதிக்கப்படுகிறது; ஆனால் அரசியலமைப்புச் சட்ட வடிவங் கள் ஒருவரது சொந்த நோக்கில்கூட எதிராளியின் நோக்கில் குறைந்த புனிதத்தன்மை கொண்டவையாக ஆகிவிடக்கூடாது.” மக்க ளிடையே இந்த பழக்க வழக்கங்கள், மனப்பாங்குகள் குடிகொண் டிருக்குமாயின் தன்னாட்சி என்பது எதார்த்தமாகிவிடும், இதற்கு மேல் வேறு எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை என்று மேலைய அரசியல் எழுத்தாளர்கள் கருதுகின்றனர்..

இதே போன்று, ஜனநாயகம் பற்றி எழுதும் மேலைய எழுத்தாளர்கள் ஜனநாயக லட்சியம் ஈடேறுவதற்கு அதாவது மக்களுக்காக, மக்களால் நடத்தப் படும் மக்கள் அரசாங்கம் உருவாவதற்கு வேண்டியதெல்லாம் வயது வந்தோர் வாக்குரிமையை நிலைநாட்டுவதைதான் என்று வலியுறுத்து கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைத்தல், பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு, குறுகிய கால நாடாளு மன்றங்கள் போன்ற வேறு சில யோசனைகளும் கூறப்பட்டு, சில நாடுகளில் அவை செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. ஆனால் மிகப் பெரும்பாலான நாடுகளில் வயதுவந்தோர் வாக்குரிமைக்கு அதிகமாக வேறு எதுவும் தேவையில்லை என்று கருதப்படுகிறது.

இந்த இரு கண்ணோட்டங்களுமே குறைபாடுடையவை, பெரிதும் தவறான எண்ணங்களுக்கு இட்டுச் செல்லக்கூடியவை என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எல்லா இடங் களிலும் ஜனநாயகமும், தன்னாட்சி சித்தாந்தமும் தோல்வியடைந் திருக்கின்றன என்றால் இந்தத் தவறான கண்ணோட்டங்களே அதற்குப் பெரும்பாலும் காரணம். அரசியலைப்புச் சட்ட வடிவ அர சாங்கத்தைப் பேணிக் காப்பதற்கு அரசியல் சட்டத்தார்மிகப் பண்புகள் இன்றியமையாதவையாக இருக்கலாம். ஆனால் அரசிய லமைப்புச் சட்ட வடிவ அரசாங்கத்தை நிலைநாட்டுவதும் மக்களின் தன்னாட்சி அரசாங்கமும் ஒன்றல்ல. இதேபோன்று, வயதுவந்தோர் வாக்குரிமை மன்னர் ஆட்சி போன்றல்லாது மக்களின் அரசாங் கத்தை அந்த வாசகத்தின் தருக்கமுறைப்பட்ட அர்த்தத்தில் உருவாக்கக் கூடும். ஆனால் இதை மட்டும் வைத்து மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசாங்கம் என்ற அர்த்தத்தில் ஒரு ஜனநாயக அர சாங்கத்தை உருவாக்கிவிட முடியாது.

ஜனநாயகம் மற்றும் தன்னாட்சி சம்பந்தமாக மேலைய அர சியல் எழுத்தாளர்கள் தெரிவித்துவரும் கருத்துகள் பல்வேறு கார ணங்களுக்காகத் தவறானவை. முதலாவதாக, ஒவ்வொரு நாட்டி லும் வரலாற்றுச் சந்தர்ப்பச் சூழ்நிலைமைகள் காரணமாக கருவாகி உருவாகி வளர்ந்துள்ள ஓர் ஆதிக்க வகுப்பினர் இருந்து வருகின் றனர். ஆளும் வாய்ப்பைப் பெறக்கூடிய வகுப்பினர் இவர்கள்: இவ்வாறே அவர்கள் ஆளவும் செய்கிறார்கள்’ அவர்கள் ஆட்சி பீடத்தை எட்டுவதற்கு வயதுவந்தோர் வாக்குரிமையோ, அரசியல் சட்ட தார்மிகப் பண்புகளோ எவ்விதத்திலும் குறுக்கே நிற்பதில்லை, அடிமட்டத்திலுள்ள வகுப்பினர் இந்த ஆதிக்க வகுப்பினரின் உறுப் பினர்களைத் தங்களது இயல்பான தலைவர்களாகக் கருதும் காரணத் தால் அவர்களையே ஆள்வோராகத் தேர்ந்தெடுக்க முன்வருகின்றனர் – இந்த மறுக்கமுடியாத உண்மையை கணக்கிலெடுத்துக் கொள்ள இந்த மேலைய அரசியல் எழுத்தாளர்கள் தவறிவிடுகின்றனர்.

இரண்டாவதாக, ஆதிக்க வகுப்பினர் இருந்துவருவது ஜனநாய கத்துக்கும் தன்னாட்சிக்கும் முரண்பாடானது என்பதையும், எங்கு  ஆதிக்க வகுப்பினர் ஆளும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண் டிருக்கிறார்களோ அங்கு ஜனநாயகமும் தன்னாட்சியும் நிலவுவதாகக் கூறுவது தவறு என்பதையும், அத்தகைய ஜனநாயகமும் தன்னாட்சி யும் வெறும் பெயரளவில் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கும் என்பதையும் இந்த எழுத்தாளர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள்.

மூன்றாவதாக, வயதுவந்தோர் வாக்குரிமை அடிப்படையில் அமைந்த அரசியலமைப்பு உருவாவதால், அன்றி, ஆளும் அதிகாரத்தைகைப் பற்றும் ஆற்றலை ஆதிக்க வகுப்பினர் இழந்துவிடும்போதுதான் தன்னாட்சியும், ஜனநாயகமும் மெய்யானவையாகின்றன என்பதையும் இந்த எழுத்தாளர்கள் அறிந்திருப்பதாகத் தோன்றவில்லை.

நான்காவதாக, சில நாடுகளில் வயதுவந்தோர் வாக்குரிமையைப் பயன்படுத்தி ஆதிக்க வகுப்பினரை அதிகார பீட்த்திலிருந்து வீழ்த்துவதில் அடி மட்டத்திலுள்ள வகுப்பினர் வெற்றியடையக் கூடும் என்பதையும், வேறு சில நாடுகளில் ஆதிக்க வகுப்பினர் மிகவலுவாக வேரூன்றிக் கொண்டிருக்கும் காரணத்தால் அவர்களை ஆதிக்க பீடத்திலிருந்து இறங்குவதற்கு அடிமட்ட வகுப்பினருக்கு வயதுவந்தோர் வாக் குரிமை தவிர, வேறு சில பாதுகாப்புகளும் தேவைப்படும் என்பதையும் இந்த எழுத்தாளர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள் என்றும் தோன்றுகிறது. இறுதியாக, ஆதிக்க வகுப்பினர் இருந்து வரும் நிலைமையில், எந்த ஒரு ஜனநாயக, தன்னாட்சித் திட்டத்தையும் பரிசீலிக்கும்போது, ஆதிக்க வகுப்பினரின் சமூகக் கண்ணோட்டத்தையும் சமுக சீத்தாந்தத்தையும் கணக்கிலெடுத்துக் கொள்வது அவசிய மாகிறது, ஏனென்றால் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவற்தகான வாய்ப்பு வசதிகளை அந்த ஆதிக்க வகுப்பினர் பெற்றிருக்கும் வரை அடிமட்டத்திலுள்ள வகுப்பினரின் சுதந்திரமும், நல்வாழ்வும் ஆதிக்க வகுப்பினரின் சமூக உணர்வையும், அவர்களது வாழ்க்கை சித்தாந் தத்தையும் பொறுத்தே இருக்கும் – மேலைய அரசியல் எழுத்தாளர்கள் இதனைக் கவனத்தில் கொள்ளத் தவறி விட்டனர்.

ஆதிக்க வகுப்பினர் இருந்தவருவது ஜனநாயகத்தையும் தன்னாட்சியையும் எதிர்நோக்கும் ஒர் அடிப்படையான, மிக முக்கிய மான உண்மை என்பதை அங்கீகரிப்பது அவசியம்; இதுதான் ஜன நாயகமும் தன்னாட்சியும் தட்டுதடங்லின்றி வார்ச்சியுறுவதை விரும்புவோர் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பான, எதர்த்த பூர்வமான அணுமுறையாக இருக்க முடியும்.

ஓரு சுதந்திர நாட்டில் சுதந்திரம் என்பது ஆதிக்க வகுப்பினர் மட்டுமே அனுபவிக்கக் கூடிய ஓரு தனிச்சலுகையாக இருக்குமா அல்லது அந்த சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதாக எல்லோருக் அனுபவிக்கக் கூடியதாக இருக்குமா என்பதை முடிவு செய்வதில் இதனைக் கணக்கி லெடுத்துக் கொள்ளத் தவறுவது பெரிதும் தீங்கு விளைவிக்கக்கூடிய மிகப் பெரும் பிழையாக இருக்கும்.

ஆதலால் காங்கிரசை ஆதரிக் கும் அயல்நாட்டவர் காங்கிரஸ் சுதந்திரத்திற்காகப் போராடுகிறாதா என்று கேட்கக் கூடாது, அதற்குப் பதிலாக பின்கண்ட கேள்வியைக் கேட்க வேண்டும் என்பது என் கருத்து; யாருடைய சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடி வருகிறது? ஆதிக்க வகுப்பினரின் சுதந்திரத் திற்காகவே காங்கிரஸ் போராடுகிறது என்பதை அயல்நாட்டவர் கண்டால் அவர் காங்கிரஸ்காரர்களிடம் பின்வருமாறு கேட்க வேண் டும்: இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் ஆளுவதற்குத் தகுதி படைத்தவர்களா? காங்கிரசை ஆதரிப்பதற்கு முன்னர் அவர் குறைந்த பட்சம் இதையாவது செய்ய வேண்டும்.

காங்கிரஸ்காரர்கள் இந்தக் கேள்விகளுக்கு என்ன பதிலளிப் பார்கள்? இது எனக்குத் தெரியாது. ஆனால் இந்தக் கேள்விகளுக்கு எவை உண்மையான பதிலாக இருக்க முடியும் என்று நான் கருது வதை மட்டும் இங்கு தருகிறேன்.

 III

முதலில், இந்தியாவில் ஆதிக்க வகுப்பினராக இருப்பது யார் என்பதைத் தெரிந்து கொள்வது நலம். இந்தியாவில் ஆதிக்க வகுப் பினர்களாக இருப்பவர்கள் பிரதானமாக பிராமணர்களே ஆவர். இன்றைய பிராமணர்கள் ஒரு காலத்தில் தங்களை பூதேவர்களாக (அதாவது இப்புவியிலுள்ள தெய்வங்களாக) வருணித்துக் கொண்ட னர்; அப்படிப்பட்டவர்கள் தாங்கள் ஆதிக்க வகுப்பினர் என வரு ணிக்கப்படுவதை இப்போது மறுதலிப்பது விந்தையாக இருக்கிறது.

இந்தத் திடீர் குட்டிக்கரணத்துக்கு என்ன காரணம்? “நீங்கள் உலக நீதிமன்றக் குற்றங்கூண்டில் ஏற்ற்ப்படாதிருக்க வேண்டுமென்றால் உங்கள் சொந்த வகுப்பினர் நலன்களுக்கு மட்டுமே சேவை செய்வதை விடுத்து, அனைவரது நலன்களையும் பாதுகாக்க முன்வாருங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவுத்துறையினருக்கு மனித குலப் புனிதச் சட்டம் விதித்துள்ள கடமைப் பொறுப்பை நிறை வேற்றத் தவறி விட்டோமே என்று உணர்ந்ததால் ஏற்பட்ட மனச் சான்றின் பொறுமலா இது? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா? அல்லது இது அவர்களது தன்னடக்கமா? இதில் எது உண்மை என்று ஊகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பிராமணர்கள் ஆதிக்க வகுப்பினர்க்தான் என்பது சர்ச்சைக்கு இடமற்ற விஷயம். இது சம்பந்தமாக இரண்டு சோதனைகளைப் பயன்படுத்தலாம். ஒன்று மக்களின் மனப்போக்கு; மற்றொன்று நிர்வாகத்தில் ஆதிக்கம். இவை இரண்டைத் தவிர சிறந்ததான, தீர்மானமான வேறு சோதனைகள் இருக்க முடியும் என்று நான் கருதவில்லை. முதல் சோதனையைப் பொறுத்தவரையில் அதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை. மக்களின் மனப்போக்கைக் கொண்டு பார்க்கும்போது பிராமணன் புனிதமானவன். பண்டைக் காலத்தில், அவன் எத்தகைய கொடிய குற்றம் செய்தாலும் அவனைத் துக்கிவிட முடியாது.

புனிதமானவன் என்ற முறையில் அவனுக்குப் பல சட்டக்காப்புரிமைகளும் சலுகைகளும் உண்டு; இவை அடி மட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டன. எதிலும் திருமண பலன்கள் பிராமணனையே சேரும். சம்பந்தம் என்னும் திருமண முறை நடை முறையிலுள்ள மலபாரில் நாயர்கள் போன்ற அடிமட்ட வகுப்பினர் தங்கள் பெண்களை பிராமணர்கள் காமக்கிழத்திகளாக வைத்துக் கொள்வதை ஒரு கௌரவமாகக் கருதுகின்றனர்.

மன்னர்களே கூட தங்கள் ராணிகளுடன் முதலிரவை அனுபவித்துக் கன்னிக் கழிப்ப தற்கு பிராமணர்களை விரும்பி அழைத்தனர் (16-ஆம் நூற்றாணாடின் மத்தியில் இந்தியாவுக்கு வந்து மலபாரில் சுற்றுப் பயணம் செய்தலுதவிகோ டி வர்த்தேமா பின்வருமாறு கூறுகிறார்: “இந்தப் பிராமணர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வது முறையானதும் அதேசமயம் உகந்ததுமாகும். நம்மிடையே குருமார்கள் இருப்பதுபோன்று இவர்கள்தான் சமய வினை முறைகளில் பிரதானமானவர்கள். மன்னர் ஒரு பெண்ணை தன்னுடைய மனைவியாகத் தேர்ந்தெடுத்ததும் இந்தப் பிராமணர்களில் மிகச் சிறந்தவனை மிகவும் தகுதியானவனை அழைத்து தன்னுடைய மனைவியுடன் முதலிரவைக் கழித்து கன்னிக் கழிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறான்.

அந்தப் பிராமணன் இந்தத் காரியத்தைச் செய்ய தானே விருப்பாவத்துடன் செல்லுவதாக செல்லுவதாக நினைத்துவிடாதீர்கள். இதன் பொருட்டு மன்னன் அவனுக்கு நூறு முதல் ஐநூறு டுகாட்பணம் தருவதற்குக் கடமைப்பட்டிருக்கிறான். கள்ளிக் கோட்டையில் மன்னனைத் தவிர வேறு எவரும் இவ்வாறு செய்வதில்லை. வர்த்தேமாவின் சுற்றுப் பயணம் (ஹக்லுயத் சமுதாயம்), தொகுதி I பக். 141. ஏனைய யாத்ரிகர்கள் இந்தப் பழக்கம் மிகப் பரவலாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஹாமில்டன் தமது கிழக்கிழந்தியப் பயண அனுபங்களில் பின்வருமாறு கூறுகிறார்.

“சமோரின் திருமணம் செய்து கொள்ளும்பொது, மணப்பெண்ணை நம்பூரி (நம்பூத்ரி) அல்லது தலைமைப் புரோகிதன் அனுபவிக்கும்வரை அவளுடன் அவன் கூடி வாழ முடியாது. புரோகிதான் விரும்பினால் மேலும் மூன்று இரவுகளை அவளுடன் கூடி மகிழலாம். ஏனென்றால் அவளது மண உறவின் முதல் கனிகள் அவள் வழிபடும் தெய்வத்துக்கு புனித காணிக்கையாகப் படைக்கப்பட வேண்டும். பிரபுக்கள் சிலரும் வரவேற்கின்றனர். சமானிய மக்களும் தங்கள் பெண்களை புரோகிதர்களின் வீடுகளுக்கு அனுப்பும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொகுதி I பக்கம் 308.

இந்தப் பழக்கம் குறித்து புச்சனன் தமது பயண நூலில் பின்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “தமூரி குடும்பப்பெண்கள் பொதுவாக நம்பூதிரிகளால் கருவுறச் செய்யப்படுகின்றனர்; அவர்கள் விரும்பினால் நாயர்களின் உயர்நிலையில் உள்ளவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; எனினும் நம்பூதிரிகள் புனிதத்தன்மை வாய்ந்தவர்களாகக் கருதப்படுவதால் எப்போதும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.”பிங்கர்டெனின் பயணங்கள், தொகுதி VIII, பக்கம் 734.

மலபார் மற்றும் அஞ்செங்ரோ கெஜட்டீரின் ஆசிரியரான திரு. சி.ஏ. இன்னல் சென்னை அரசாங்கத்தின் அனுமதியோடு பின்வருமாறு கூறுகிறார்: மருகக்கத்தாயம் என்னும் முறையைப் பின்பற்றும் எல்லா வகுப்பினரிடையேயும் அதேபோன்று மக்கத் தாயத்தைக் கடைப்பிடிப்போரில் பலரிடையேயும் “தாலிகட்டும் திருமணம்” என்னும் மற்றோரு ஏற்பாடு நடைமுறையி இருந்து வருகிறது. மலையாளிகளின் திருமண பழக்க வழக்கங்களிலேயே இது நூதனமானது, தனித்தன்மை வாய்ந்தது என வருணிக்கப்படுகிறது.

இதன்படி,ஒரு யுவதி பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்னர் அவள் கழுத்தில் தாலி (தங்கத்தாலோ அல்லது வேறு ஏதேனும் உலோகத்தாலோ செய்யப்பட்ட பதக்கம் போன்ற ஒரு சிறு ஆபரணம் நூல்கற்றில் கட்டப்படுவது) கட்டப்படுகிறது. அதே சாதியை அல்லது உயர் சாதியைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாலிகட்டப்படுகிறது.

இவ்வாறு செய்த பிறகுதான் அந்த இளம் பெண் சம்பந்தம் செய்து கொள்ள முடியும். தாலிகட்டுபவனுக்கு அல்லது மணவாளனுக்கு (மணமகன்) அந்தப் பெண்ணுடன் கூடி வாழும் உரிமை அளிப்பதற்காகவே இந்தச் சடங்கு செய்யப்படுவதாக பொதுவாகக் கருப்படுகிறது. கீழ்ச்சாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்கு பூதேவர்களும் (அதாவது பிராமணர்களும்) சத்திரியர்களும் உரிமை கொண்டாடி வந்ததிலிருந்தும் இந்த வழக்கம் தோன்றியிருக்கக் கூடும், தொகுதி I, பக்கம் 101.)

கீழ்மட்ட வகுப்பைச சேர்ந்த எந்த ஒரு நபரும் பிராமணர்களின் பாதங்களைக் கழுவிய நீரை அருந்தாமல் தனது உணவை உண்ண முடியாத காலம் ஒன்று இருந்தது. இது சம்பந்தமாக தமது குழந்தைப் பருவ நாட்களை சர் பி.சி. ரே பின்வருமாறு வருணிக்கிறார்: அந்நாட்களில் கீழ்ச் சாதி களைச் சேர்ந்த குழந்தைகள் காலை வேளையில் கல்கத்தாவின் சாலை யாக நிற்பார்கள்; அந்தப் பக்கம் ஒரு பிராமணன் எப்போது வருவான் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஏன் தெரி யுமா? அந்தப் பிராமணனின் பாதங்களைக் கழுவிய நீரை வீட்டிற்கு எடுத்துக் சென்றால்தான் அவர்களுடைய பெற்றோர்கள் அதனைச் சிறிதளவு உறிஞ்சிக் குடித்துவிட்டு உணவு உண்ண ஆரம்பிப்பார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் சமத்துவ சட்டக்கோட்பாடு காரணமாக இந்த உரிமைகள், காப்புரிமைகள், சலுகைகள் யாவும் முடிவுக்கு வந்தன. எனினும் இந்த உரிமைகள் தந்த அனுகூலங்கள் இன்னும் இருந்து வரவே செய்கின்றன; கீழ்ப்பட்ட வகுப்பினர்களின் கண் ணோட்டத்தில் பிராமணன் இன்னும் தனிச் சிறப்புடையவனாக, புனிதமானவனாகவே கருதப்படுகிறான்; இன்னமும் அவன் “சாமி” (எசமான் என்று இதற்குப் பொருள்) என்றே அழைக்கப்படுகின்றான்.

இரண்டாவது சோதனையும் இதுபோன்றே ஐயத்துக்கிட மற்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. உதாரணத்துக்கு சென்னை மாகாணத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். 17 ஆவது அட்டவணை யைப் பாருங்கள் (பக்கம் 335). 1934 அரசு பதிவு பெற்ற பதவிகளில் பிராமணர்களும் ஏனைய வகுப்பினர்களும் பெற்றுள்ள பதவிகளின் எண்ணிக்கையை அது காட்டுகிறது.

இதர மாகாணங்களின் புள்ளி விவரங்களும் இதனையே உறுதிப்படுத்துகின்றன. எனினும் அவற்றை எல்லாம் இங்கு எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பிராமணர்கள் தாங்கள் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று உரிமை கொண்டாடினானலும் சரி, கொண்டாடாவிட்டாலும் சரி, நிர்வாகத்தை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையும், அதே போன்று கீழ்மட்ட வகுப்பினர்கள் அவர்களது உச்ச நிலையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்றஉண்மையும் நாம் கூற வந்த விஷயத்தை நிலைநாட்டப் போதுமானவையாகும்.

ஆதிக்க வகுப்பு அந்தஸ்தை தனக்கு அளிக்கத் தயாராக இருப் பவர்களும், தனக்கு அடிபணிந்து ஒத்துழைக்கக் கூடியவர்களுமான ஏனைய வகுப்பினரை பிராமணன் எப்போதுமே தன்னுடைய கூட் டாளிகளாக வரித்துக் கொண்டு வந்திருக்கிறான் என்பதை வரலாறு காட்டுகிறது. பண்டைக் காலத்திலும் மத்தியக் காலத்திலும் போர்வீரர் வகுப்பினரான சத்திரியர்களுடன் அவன் இத்தகைய நேச உறவை வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறான். இந்த வகுப்பினரும் சேர்ந்து பொது மக்களை அடக்கி ஆண்டு வந்திருக்கின்றனர்; இன்னும் சொல்லப்போனால் பிராமணன் தனது எழுதுகோலைக்கொண்டும், சத்திரியன் தனது வாளைக் கொண்டும் அவர்களைப் பணியவைத்து வந்திருக்கின்றனர் என்று கூற வேண்டும்.

அட்டவணை – 17

 

 

 

வகுப்பினர்

 

மக்கள் தொகை லட்சத்தில்

 

மக்கள் தொகை சதவீதம்

அரசு பதிவு

பெற்ற மொத்த

பதவிகளில் (2,200) ஒவ்வொரு

வகுப்பினரும் பெற்றுள்ள பதவிகளின் எண்னிக்கை

 

 

பணி நிய

மனங்களின் சதவிகிதம்

 

அரசு பதிவு பெறாத பதவிகள்
ரூ. 100க்கு மேல் மொத்தம் 7,500 ரூ. 35க்கு மேல் மொத்தம் 20,732
ஒவ்வொரு வகுப்பினரும் பெற்றுள்ள பதவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வகுப்பினரும் பெற்றுள்ள பதவிகளின் சதவிகிதம் ஒவ்வொரு வகுப்பினரும் பெற்றுள்ள பதவிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வகுப்பினரும் பெற்றுள்ள பதவிகளின் சதவிகிதம்
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
பிராமணர்கள் 15 3 820 37 3,280 43.73 8,812 42.4
கிறித்தவர்கள் 20 4 190 9 750 10 1,655 8.0
முகமதியர்கள் 37 7 150 7 497 6.63 1,624 7.8
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்       70 14 25 1.5 39 .52 144 .69

பிராமண    ரல்லாதோர்

            

முன்னேறிய

பிராமண

ரல்லா தோர்

  113    22      620      27

2,543

33.9

8,440

40.6

பின்தங்கிய வகுப்பினர்    

245

   50       50      2
ஆசியரல்லாதோரும் ஆங்கிலோ-இந்தியர்களும்    -    -       -      -      372        5.0       83        .4
இதர வகுப்பினர் - - - - 19 .5 24

0.11

தற்போது, பனியாக்கள் எனப் படும் வைசிய வகுப்பினருடன் பிராமணன் கூட்டுறவை வளர்த்துக் கொண்டு வருகிறான். இந்தக் கூட்டுறவு சத்திரியனிடமிருந்து பனியாவுக்கு மாறியது முற்றிலும் இயல்பே. பெரு வணிகம் கொடி கட்டிப் பறந்து வரும் இக்காலத்தில் பணம் வாளைவிட வலிமை மிக்கது. வகுப்புகளின் உறவில் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் அரசியல் எந்திரத்தை செம்மையுற இயக்குவதற்குப் பணம் இன்றியமையாததாக இருப்ப தாகும். பனியாவிடமிருந்தே கிடைக்க முடியும். பனியாக்கள் தான் காங்கிரசுக்குப் பிரதானமாக நிதி உதவி அளித்து வருகின்றனர். திரு. காந்தி ஒரு பனியாவாக இருப்பதும், அரசியலில் முதலீடு  செய்யப்படும் பணம் நல்ல ஆதாயத்தை அளிக்கும் என்று அவன் உணர்ந்திருப்பதும்தான். இது விஷயத்தில் எவருக்கேனும் ஐயமிருக்கு மாயின் 1942 ஜுன் 6ஆம் தேதி திரு. லூயி பிஷரிடம் திரு. காந்தி என்ன கூறினார் என்பதைப் படித்துப் பார்ப்பது நலம். பிஷர் கூறுகிறார்.

”காங்கிரஸ் கட்சியைப் பற்றி அவரிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருப்பதாக நான் கூறினேன். காங் கிரஸ் பெரு முதலாளிகளின் ஆதிக்கத்தில் இருக்கிறதென்றும், திரு. காந்தி பம்பாய் மில் முதலாளிகளின் ஆதரவைப் பெற் றிருக்கிறார் என்றும், அதனால் அவர் எவ்வளவு பணம் கேட்டாலும் அவர்கள் அள்ளி வாரித் தருகிறார்கள் என்றும் உயர் நிலையிலுள்ள பல பிரிட்டிஷ்காரர்கள் என்னிடம் கூறியதை நினைவு கூர்ந்தேன். இந்தக் கூற்றுகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது’ என்று அவரிடமே கேட்டேன்.”

"துரதிர்ஷ்டவசமாக அது உண்மைதான்’ என்று சர்வ சாதாரணமாகக் கூறினார். ‘காங்கிரஸ் தனது பணியைச் செய்ய அதனிடம் போதிய பணமில்லை, ஒவ்வோரு உறுப் பினரிடமிருந்து ஆண்டுக்கு நான்கு அணாக்கள் (சுமார் எட்டு செண்ட்டுகள்) வசூலித்து கட்சியை நடத்தலாம் என்று ஆரம் பத்தில் நினைத்தோம். ஆனால் அது காரியசாத்தியமாக வில்லை.’’

’’காங்கிரசின் வரவு செலவுத் திட்டத்தில் செல்வந்தர் களின் பங்கு எவ்வளவு என்று’ கேட்டேன்.’’

"அநேகமாக எல்லாம் அவர்கள் பங்குதான்’ என்று அவர் கூறினார். ‘உதாரணமாக இந்த ஆசிரமத்தில் நாங்கள் இப்போது செய்வதைவிட மிகச் சிக்கனமாக வாழ முடியும், மிகக் குறைவாக செலவிட முடியும். ஆனால் நாங்கள் அவ் வாறு செய்வதில்லை. ஏனென்றால் எங்களுடைய செல்வந் தர்களான நண்பர்களிடமிருந்து எங்களுக்குப் பணம் வருகிறது.”

இந்தக் காரணத்துக்காக பனியாவை ஆதிக்க வகுப்பு அந்தஸ் திலிருந்து கீழே இறக்குவது பிராமணனுக்கு சாத்தியமில்லை. உண்மையில், பனியாவுடன் வெறும் செயல் முறையிலான உறவை மட்டுமன்றி, நேச பூர்வமான உறவையும் பிராமணன் வளர்ந்து வரு கிறான் என்றே கூற வேண்டும். இதன் விளைவாக இன்று இந்தியா வில் ஆதிக்க வகுப்பினர் பிராமணன் – சத்திரியன் என்றிருந்தது மாறி பிராமணன் – பனியா என்றாகிவிட்டது.

ஆதிக்க வகுப்பினர் இருந்து வருவதை கூறுவது மட்டுமே எல்லாவற்றையும் விளக்கி விட்டதாகாது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பின் உறுப்பினர் கள் தாங்கள் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும், தாங்கள் மட்டுமே நாட்டை ஆளப்பிறந்தவர்கள் என்பதையும் முற்றிலும் உணர்ந்திருப்பதேயாகும். காலஞ்சென்ற திரு. திலகர் தாம் ஒரு பிரா மணர் என்பதையும், ஆதிக்க வகுப்பைச் சேர்ந்தவர் என்பதையும் என்றுமே மறந்ததில்லை.

பண்டித ஜவஹர்லால் நேரு, அவருடைய சகோதரியான திருமதி விஜயலட்சுமி பண்டிட் ஆகியோர் விஷயமும் இதேபோன்றதுதான் (திரு. ஒய். ஜி.கிருஷ்ண மூர்த்தி எழுதிய பண்டித ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு திரு. பட்டபி சீத்தாராமய்யா அளித்த முன்னுரையில் பண்டித நேரு தாம் ஒரு பிராமணர் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் என்று கூறுகிறார். பண்டித நேரு ஒரு சோஷலிஸ்டு என்றும் சாதிஅமைப்பில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்றும் எண்ணியிருக்கக்கூடிய பலரை இது நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்யும்.

ஆனால் திரு.பட்டாபி சித்தாராமய்யாதாம் என்ன கூறிகிறோம் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். தாம் ஒரு பிராமணர் என்பதை பண்டித நேரு உணர்ந்திருந்தார் என்பது மட்டுமல்ல, அவருடைய சகோதரி திருமதி விஜயலட்சுமி பண்டிட்டும் இவ்வாறே தாம் ஒரு பிராமணர் என்பதை உணர்ந்திருந்தார் என்றே தோன்றுகிறது.

1940 டிசம்பரில் டில்லியில் கூடிய அகில இந்திய மாதர் மாநாட்டில், குடிமதிப்புக் கணக்கில் ஒருவர் தாம் இந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கூறக்கூடாது என்னும் பிரச்சினை விவாதத்திற்கு வந்தது. திருமதி பண்டிட்டுக்கு இந்தக் கருத்தில் உடன்பாடில்லை, தமது உடலில் பிராமண இரத்தம் ஓடுவது குறித்துத் தாம் ஏன் பெருமிதம் கொள்ளக்கூடாது என்பதற்கும், குடிமதிப்புக் கணக்கில் தம்மை ஒரு பிராமணத்தியாக ஏன் அறித்துக் கொள்ளக்கூடாது என்பதற்கும் தாம் எத்தகைய காரணத்தையும் காணவில்லை என்று அவர் கூறினார். “ராஸ்த் ரஹபார்” என்னும் குஜராத்தி வார இதழில் 1945 ஜனவரி 14-ஆம் தேதி திரு. ஜே.சி. சஞ்சனா எழுதிய “அரசியலில் அர்த்தமும் அனர்த்தமும்” என்னும் கட்டுரையைக் காண்க. தொடர் எண். XIII.).

திரு. வல்லபாய் பட்டேலும் இதற்கு விதிவிலக்கல்ல; அவரும் தாம் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த பெருமிக உணர்வைப் பெற்றிருந்தார். திரு. திலகர் சுயராஜ்ய இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். பண்டித நேருவும் திரு. வல்லபாய் பட்டேலும் காங்கிரஸ் மேலிடத்தில் பிரதான இடங்களை வகிப்பவர் கள். இவர்களும் இவர்களைப் போன்றவர்களும் தாங்கள் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வைக் கொண்டிருந்தது மட்டு மல்லாமல், கீழ்த்தட்டு வகுப்பினர் வெறுக்கத்தக்கவர்கள் என்றும், அவர்கள் அடித்தட்டில்தான் இருக்க வேண்டும் என்றும், ஆட்சிக்கு வருவதற்கு அவர்கள் ஒருபோதும் ஆசைப்படக்கூடாது என்றும் கருதி வந்தனர். இத்தகைய கருத்துகளை அவர்கள் பகிரங்கமாகவே வெளி யிட்டனர்; இதற்காக அவர்கள் சிறிதும் வெட்கப்படவோ, கழி விரக்கம் கொள்ளவோ இல்லை.

சட்டமன்றங்களில் தங்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று 1918ல் பிராமணரல்லாதோரும் பிற்பட்ட வகுப்பினரும் ஒர் இயக்கத்தைத் தொடங்கினர். அச்சமயம் ஷோலாப்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் திரு. திலகர் பேசும்போது, எண்ணேய் எடுக்கும் செட்டி யார்களும், புகையிலைக் கடைக்காரர்களும், சலவையாளர்களும், அவர்களைப் போன்ற ஏனையோரும் – இதுதான் பிராமணரல்லா தோரையும் பிற்பட்ட வகுப்பினரையும் பற்றிய அவரது வருணனை யாகும் – சட்டமன்றத்துக்குச் செல்ல வேண்டுமென்று ஏன் ஆசைப் படுகிறார்கள் என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார். தமது அபிப்பிராயத்தில், சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்வதுதான் அவர்களது கடமையே தவிர சட்டங்களை இயற்றும் அதிகாரங்களைப் பெறுவதற்கு அவர்கள் விழையக்கூடாது என்னும் குறிப்பிடாஅர்.

1942ல் லின்லித்கோ பிரபு இந்திய மக்களில் பல்வேறு பகுதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 52 முக்கிய மான இந்தியப் பிரமுகர்களைத் தமது இருப்பிட்த்துக்கு அழைத்தார்; போர் முயற்சியில் அனைத்து இந்தியர்களது ஒத்துழைப்பையும் ஒத்துணர்வையும் ஈடுபடுத்தும் வகையில் மத்திய அரசாங்கத்துக்கு பொது மக்களின் ஆதரவை மேலும் திரட்டுவதற்கு என்ன வழிவகை களை மேற்கொள்ளலாம் என்பது குறித்து இந்தப் பிரமுகர்களுடன் கலந்தாலோசிப்பதே இதன் நோக்கம். இவ்வாறு அழைக்கப்பட்ட வர்களில் ஷெட்யூல்டு வகுப்புகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இத்தகைய கீழ்த்தரமானவர்களுக்கு வைசிராய் அழைப்பு விடுத் த்தை திரு. வல்லபாய் பட்டேலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆமதாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய திரு. வல்லபாய் பட்டேல் பின்கண்டவாறு கூறினார் ( அரசியலில் அர்த்தமும் அனர்த்தமும் என்னும் கட்டுரையில் திரு. சஞ்சனாவின் மேற்கோள்.):

“வைசிராய் இந்துமகாசபைத் தலைவர்கள் அழைத்  தார், முஸ்லீம் லீக் தலைவர்களை அழைத்தார், அத்  தோடு காஞ்சிகள் (எண்ணெய் எடுப்போர்), மோச்சிகள்  (செருப்பு செப்பணிடும் செம்மான்கள்) போன்றோரையும் கூட அழைத்தார்.”

திரு. வல்லபாய் பட்டேல் மனக்காழ்ப்பும் வன்மமும் சுடு சொல்லும் கொண்ட தமது சொற்களில் காஞ்சிகளையும், மோச்சி களையும் மட்டுமே குறிப்பிட்ட போதிலும், இந்த நாட்டின் அடிமட்ட வகுப்புகளிடம் ஆதிக்க வகுப்புகளும் காங்கிரஸ் மேலிடமும் கொண் டுள்ள பொதுவான வெறுப்பையும் இகழ்ச்சியையும் அவருடைய உடை குறிக்கிறது என்பதில் அணுவளவும் ஐயமில்லை. மேலும், ஆதிக்க வகுப்பினரும் காங்கிரஸ் மேலிடமும் கொண்டுள்ள இந்த விபரீதப் போக்கை தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெற்ற சில நிகழ்ச்சிகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அவை ஆதிக்க வகுப் பினரதும் காங்கிரசினதும் உண்மைகளை வெளிப்படுத்துபவை பவையாகவும், சில கசப்பான் உண்மைகளை வெளிப்படுத்துபவை யாகவும் இருப்பதால் அவற்றை இங்கு விசேடமாகக் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கும்.

திரு. காந்தி 1919ல் காங்கிரசைக் கைப்பற்றியதிலிருந்து சுயராஜ்யக் கோரிக்கைக்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்தை இணங்க வைக்கும் நிர்ப்பந்த நடவடிக்கைகளில் ஒன்றாக சட்டமன்றப் பகிஷ்காரத்தை காங்கிரஸ்காரர்கள் கருதி வந்துள்ளனர். இந்தக் கொள்கையின்படி, தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு சமயத்திலும் அதில் கலந்து கொள்வதில்லை என்று காங்கிரஸ் தீர்மானித்து வந்தது; காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் எவரையும் நிறுத்தாத தோடு, சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட முன்வரும் எந்த இந்துவையும் எதிர்த்துக் கடுமையாக பிரசாரமும் செய்து வந்தது. இத்தகைய கொள்கையின் தகுதி பற்றி எவரும் சர்ச்சை செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்துக்கள் சுயேட்சை வேட் பாளர் களாகப் போட்டியிடுவதைத் தடுப்பதற்கு காங்கிரஸ் கையாண்ட வழிமுறைகள்’ என்ன? சட்டமன்றங்களை இகழ்ச்சிக்கும் ஏளனத் துக்கும், அவமதிப்புக்கும் வெறுப்புக்கும் உரியவையாக சித்தரித்துக் காட்டும் கீழ்த்தரமான வழிகளை அவர்கள் கையாண்டனர். இதன் படி, பல்வேறு மாகாணங்களில் விதம் விதமான விளம்பர அட்டை களைத் தாங்கிச் செல்லும் ஊர்வலங்களை காங்கிரஸ் நடத்தத் தொடங்கிற்று; “சட்டமன்றங்களுக்கு யார் செல்வார்கள்? சவரம் செய்வர்களும், செருப்புத் தைப்பவர்களும், குயவர்களும், தோட்டி களும்தான் அங்கு செல்வார்கள்” என்ற சுலோகங்கள் அந்த அட்டை களில் எழுதப்பட்டிருந்தன.

ஊர்வலத்தில் செல்லும் ஒருவர் சுலோ கத்தின் ஒரு பகுதியாக மேற்கண்ட கேள்வியை உரத்த குரலில் கேட்பார்; கூட்டத்தினர் சுலோகத்தின் இரண்டாவது பகுதியை இதற்குப் பதிலாக முழக்கமிடுவர். எவரும் தேர்தலில் நிற்காதபடி தடுப்பதற்கு இது போதுமானதல்ல என்பதை காங்கிரஸ்காரர்கள் கண்டபோது, இவற்றைவிட கடுமையான நடவடிக்கைகளை எடுப்ப தெனத் தீர்மானித்தனர். சவரம் செய்வோர், குயவர்கள், தோட்டி கள் போன்றோருடன் சேர்ந்து சட்டமன்றங்களில் தாங்கள் அமர நேரிடும் என அஞ்சி கௌரவமானவர்கள் தேர்தல்களில் போட்டி யிட மாட்டார்கள் எனக் காங்கிரஸ் நம்பிற்று. இந்த நம்பிக்கை யோடு, இந்தக் கீழான வகுப்புகளைத் சேர்ந்த வேட்பாளர்களை காங்கிரஸ் சார்பில் நிறுத்தி அவர்களை வெற்றி பெறச் செய்யும் அளவுக்கும் காங்கிரஸ் சென்றது. காங்கிரசின் இந்த அருவருப்பான நடத்தைக்கு சான்று கூறும் சில நிகழ்ச்சிகளை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

1920 தேர்தலில் மத்திய மாகாண சட்ட மன்றத்திற்கு ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியைத் தேர்ந் தெடுத்தது (ஃபகுவா ரோஹிதாஸ்). 1930ஆம் ஆண்டுத் தேர்தலில் மத்திய மாகாணங்களில் இரண்டு செருப்புத் தைக்கும் தொழிலாளர்களையும் (குரு கோரிசைன் அகம்தாஸ் மற்றும் பலராஜ் ஜைஸ்வார்), ஒரு பால்காரரையும் (சுன்னு), ஒரு சவரத் தொழிலாளியையும் (அர்ஜுன்லால்), ஒரு தோட்டியையும் (பன்ஸிலால் சௌதாரி) காங்கிரஸ்காரர்கள் தேர்ந்தெடுத்தனர். 1934ல் மத்திய சட்டமன்றத்திற்கு ஒரு குயவரை (பகத் சண்டி மால்கோலா) காங்கிரஸ் தேர்ந்தெடுத்து அனுப் பிற்று. இதெல்லாம் பழங்கதை என்று கூறலாம். இந்தக் கருத்து சரி யானதல்ல என்பதை மெய்ப்பிக்க 1943ல், பம்பாயின் புறநகர்ப் பகுதி யான அந்தேரியில் நடைபெற்ற நகரசபைத் தேர்தல்களில் என்ன நிகழ்ந்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நகரசபைத் தேர்தல்களை மற்றவர்கள் பகிஷ்கரிக்கச் செய்ய வேண்டும் என்ற நயவஞ்சக நோக்கத்துக்காக காங்கிரஸ் ஒரு சரவத் தொழிலாளியை வேட்பாளராக நிறுத்திற்று.

 எத்தகைய வெங்கொடுமை! அயர்லாந்திலுள்ள சின் ஃபெயின் இயக்கமும் கூட பிரிட்டிஷ் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிக்கவே செய்தது. ஆனால் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற் காக தங்கள் நாட்டு மக்களையே அவர்கள் இவ்வாறு அருவருக்கத் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டார்களா? 1930ல் இந்தியா வில் நடைபெற்ற சட்டமன்றப் பகிஷ்கார இயக்கம் ஒருவகையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நாம் மேலே குறிப்பிட்ட சம்பங்கள் நடைபெற்றா 1930ஆம் வருட மாகாண சட்டமன்றத் தேர்தல்களின் போதுதான் திரு. காந்தியின் 1930 ஆம் வருட உப்பு சத்தியாக்கிரகமும் நடைபெற்றது! அச்சமயம் எவ்வாறு திரு. காந்தி சில கோரிக்கைகளை வைசிராய் இர்வின் பிரபுவிடம் முன்வைத்து அவை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நிறைவேற்றப்பட வேண்டுமேன வற்புறுத்தினார் என் பதையும், இக்கோரிக்கைகளை வைசிராய் ஏற்காவிட்டால் சட்ட மறுப்பு இயக்கம் நடத்த எவ்வாறு திரு. காந்தி தீர்மானித்தார் என் பதையும், இது சம்பந்தமான தனது எச்சரிக்கையை வைசிராயிடம் தெரிவிக்க எவ்வாறு திரு. காந்தி ஓர் ஆங்கிலேயரைத் தேர்ந்தெடுத் தார் என்பதையும், எவ்வாறு திரு. காந்தி தனது தாக்குதலுக்கு உப்புச் சட்டத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதையும், எவ்வாறு அவர் தண்டியை போராட்டக்களமாகப் பொறுக்கியெடுத்தார் என்பதையும், எவ்வாறு அவர் இந்த இயக்கத்துக்குத் தாமே தலைமை தாங்க முடிவு செய்தார் என்பதையும், எவ்வாறு அவர் ஆமதாபாத்திலுள்ள் தமது ஆசிரமத்திலிருந்து ஆடம்பர ஆர்ப்பாட்டமாக பவனி புறப்பட்டார் என்பதையும், எவ்வாறு ஆமதாபாத் பெண்மணிகள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், நெற்றியில் வெற்றித் திலகமிட்டும் அவரை வழியனுப்பி வைத்தார்கள் என்பதையும், இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்கு குஜராத் மட்டுமே கூடப் போதும் என்று எவ் வாறு திரு. காந்தி அவர்களுக்கு உறுதி கூறினார் என்பதையும், சுய ராஜ்யம் கிடைக்காமல் தாம் ஆமதாபாத்துக்குத் திரும்பப் போவ தில்லை என்று எவ்வாறு திரு. காந்தி பிரகடனம் செய்தார் என்பதை யும் எதிர்கால காங்கிரஸ் வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

அதேசமயம் இன்னொரு விஷயத்தையும் அவர் கள் குறிப்பிடத்தவற மாட்டார்கள் (காங்கிரசின் அதிகாரப்பூர்வ மான வரலாற்றாசிரியரான டாக்டர் பட்டாபி சீத்தாராமய்யா இதைச் செய்யத் தவறிவிட்டார்) என்று எதிர்பார்க்கிறேன்; அதாவது மக்களின் சார்பில் மக்களுக்காக நாங்கள் சுயராஜ்யப் போராட்டத்தில் ஈடுபட் டிக்கிறோம் என்று காங்கிரஸ்காரர்கள் ஒருபுறம் கூறிக் கொண்டு இன்னொருபுறம் இதே ஆண்டில் அதே மக்களை வெறுத்தொதுக்கப் பட வேண்டியவர்களாக, தவிர்க்கப்பட வேண்டியவர்களாகப் பகி ரங்கமாப் படம்பிடித்துக் காட்டி அவர்களுக்கு எதிராக கொடிய அட்டூழியங்கள் புரிந்து வருகிறார்கள் என்பதையும் அவர்கள் பதிவு செய்யத் தவற மாட்டார்கள் நம்புகிறேன்.

 கீழ்மட்ட வகுப்பினர்களின் கீழ் இந்தியாவின் கீழ்மட்ட வகுப்பினர்களின் கதி எப்படி இருக்கும்?

 IV

 இந்த ஆதிக்க வகுப்பினர்களின் கீழ் இந்தியாவின் கீழ்மட்ட வகுப்பினர்களின் கதி எப்படி இருக்கும்?

சுயராஜ்யம் உதித்ததும் கீழ்மட்ட வகுப்பினர்களுக்கு – காங் கிரஸ் மக்கள் என்ற கூறுகிறது, ஆதிக்க வகுப்பினர்களால் அடிமைகள் போல் நடத்தப்படும் அடிமட்ட வகுப்பினர் என்றே உண்மையில் அவர்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் - மந்திரத்தில் மாங்காய் விழுவது போல் பல அற்புதங்களை நிகழ்த்தப் போவதாக படாடோப மாக காங்கிரஸ் பறைசாட்டுகிறது. புரட்சிகர மாற்றங்களைச் செய்யவே தான் விரும்புவதாகவும், ஆனால் அதற்கான அதிகாரம் தன் னிடம் இல்லை என்னும், எனவே சுயராஜ்யத்திற்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் அது பசப்புகிறது. இந்த வெறும் வாய்ச்சவடால் பேச்சுதான் அப்பாவியான அயல்நாட்டவரை எளிதில் ஏமாற்று வதற்குப் பயன்படுத்துகிறது.

இந்தக் கூற்றுக்குப் பின்னாலுள்ள சொற் சிலம்பத்தையும் வீம்புரையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒருவர் பின்வருமாறு ஒவினவக்கூடும்: இந்தியா முழு அரசுரிமை படைத்த ஒரு சுதந்திர நாடாக ஆன பிறகு உண்மையில் என்ன நிகழும்? எது எப்படியிருப்பினும் ஒன்று மட்டும் நிச்சயம். சுதந்திரம் என்னும் மந்திரக்கோலால் ஆதிக்க வகுப்பு மறைந்துவிட மாட்டாது.

அது என்றும் போல் வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய பூதத்திடமிருந்து விடுபட்ட காரணத்தால் அது முன்னிலும் வலுவும் வலிமையும் பெற்றதாக இருக்கும். எல்லா நாடுகளிலும் ஆதிக்க வகுப்புகள் செய்வது போன்றே அது அதிகாரத்தைக் கைப்பற்றும். சுருக்கமாகக் கூறினால் சுயராஜ்யம் மக்களின் அரசாங்கமாக இருக்காது; மாறாக அது ஆதிக்க வகுப்பால் நடத்தப்படும் அரசாங்கமாகவே இருக்கும்; மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கமாக இருக்காது; அதற்குப் பதிலாக ஆதிக்க வகுப்பின் சித்தம் எப்படியோ அப்படி அது இருக்கும்.

இந்தியா முழு அரசுரிமை படைத்த சுதந்திர அரசாக மாறி யதும் ஆதிக்க வகுப்பினர் என்ன செய்வார்? அவர்கள் குத்தகைச் சட்டங்களைத் திருத்துவார்கள்; ஆரம்பக் கல்வியை விஸ்தரிப்பார் கள்; மது விலக்கை அமல்படுத்துவார்கள்; சர்க்காக்களைச் சுற்று வதற்கு மக்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்; சாலைகள் போடுவார்கள், கால்வாய்கள் வெட்டுவார்கள்; நாணய செலாவணியை சீர்திருத்து வார்கள்; எடுத்தலளவையும் முகத்தலளவைகளையும் செம்மை செய்வார்கள்; மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் திறப்பார்கள்; அடிமட்ட வகுப்பினர்களின் நிலைமையை மேம்படுத்த இதர பல நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் சிலர் எதிர்ப்பார்க்கின்றனர். அடிமட்ட வகுப்புகளைச் சேர்ந்த எவரும் இத்தகைய திட்டங்களைக் கண்டு உற்சாக மிகுதியால் மிகவும் துள்ளிக் குதிக்க மாட்டார்கள்: ஏனென்றால் முதலாவதாக மிகவும் பெருமைப் படத்தக்க எதுவும் இதில் இல்லை.

இன்றைய உலகில், சமுதாயத்தை நாகரிக நிலையில் பேணிக் காப்பதற்கு அவசியமான சீர்திருத்தங் களைச் செய்யாமல் எந்த ஆதிக்க வகுப்பாலும் இருக்க முடியாது. இத்தகைய சர்வசாதாரண சமூக மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல் படுத்துவதற்குக் கூட இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் முன் வருவார்கள் என்பது ஐயமே என்பது என் சொந்தக்கருத்து. பிரிட் டிஷ் அதிகார வர்க்கத்தை விட காங்கிரஸ் சிறந்தது என்பதை வெளி உலகுக்குக் காட்டும் ஆர்வத்தால் உந்தப்பட்டே காங்கிரஸ் இத் தகைய திட்டத்தை பறைசாற்றுகிறது என்பதை பெரும்பாலான மக்கள் மறந்துவிடுகிறார்கள். ஆனால் அதிகார வர்க்கம் ஒழித்துக் கட்டப்பட்டதும் மக்களின் நிலையை மேம்படுத்தும் இதே ஆர்வம், அக்கறை இருக்குமா? இது விஷயத்தில் எனக்கு மிகுந்த ஐயப்பாடு உண்டு.

இது ஒருபுறமிருக்க, சமூக மேம்பாடுதான் சுயராஜ்யத்தின் எல் லாமுமே ஆகுமா? அடிமட்ட வகுப்பினர் சார்பில் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்: முழு அரசுரிமைப்படைத்த சுதந்திர இந்தியா வில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் என்ற முறையிலும், ஒரு சமூக அமைப்பு என்ற முறையிலும் பிராமணீயம் அடியோடு ஒழித்துக் கட்டப்பட வேண்டும், ஆழ குழிதோண்டிப் புதைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இவ்வாறில்லாமல் சமூக மேம்பாடு குறித்து அவர்களுக்கு எத்தகைய அக்கறையும் இல்லை என்று துணிந்து கூறுவேன். அவர் களுடைய வறுமையும் இல்லாமையும் நேர்மையற்ற, கொடிய, நச்சுத்தனமான சமூக அமைப்பில் அவர்கள் அனுபவிக்கும் அவ மதிப்பு, அவமரியாதை, ஏளனம், இகழ்ச்சி, நிந்தை, பரிகாசம் இவற் றுடன் ஒப்பிடும்போது அத்தனை ஒன்றும் பெரிதல்ல. அவர்களுக்கு வேண்டியது மானமும் மரியாதையுமே தவிர ரொட்டியல்ல.

ஆதலால் இங்கு எழும் கேள்வி இதுதான்: இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர்கள் அரசு எந்திரத்தைக் கைப்பற்றிய பிறகு சமூக மேம் பாட்டுத் திட்டத்திலிருந்து வேறுபட்ட்தொரு திட்டத்தை அதாவது சமூக அமைப்பைச் சீர்திருத்தும் திட்டத்தை மேற்கொள்வார்களா?

இந்தியா மட்டும் முழு அரசுரிமை படைத்த நாடாக, சுதந்திர நாடாக இருக்குமாயின் எத்தனை எத்தனையோ அற்புதங்களை காங் கிரஸ் புரிய முடியும் என்று காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார்கள். சரி, இது வெறும் பிரசாரமல்ல, மெய்யான விழைவு, நாட்டம் என்றே வைத்துக் கொள்வோம். அப்போது மக்கள் விரும்புவதைச் செய்ய வேண்டுமானால் அதற்கு அதிகாரம் தேவை என்ற கருத்தின் அடிப் படையில் செயல்பட காங்கிரஸ் முற்படக்கூடுமல்லவா? இத்தகைய கருத்து பரிதாபத்துக்குரியது மட்டுமல்ல, உண்மையில் ஓர் அபாய கரமான போலி நம்பிக்கையுமாகும். இத்தகைய ஒரு விபரீதக் கற்பனை யில் மூழ்கிப் போவதில் நாட்டம் கொண்டோர் அரசதிகாரத்துக்கும், அது எத்தனைதான் முழுமையானதாக இருந்தாலும், சில கடுமை யான வரையறைகள் உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள். இந்த வரம்புகளை மிகவும் தெள்ளத் தெளிந்த வார்த்தைகளில் கூறியவர் திசேயைவிட வேறு யாரும் இருக்க முடியாது. அவர் தமது அரசிய லமைப்புச் சட்டத் தொகுதியில் பின்வருமாறு கூறுகிறார்:-

”எந்த ஓர் ஆட்சியாளனும், குறிப்பாக நாடாளுமன்றம்  கையாளும் அதிகாரம் இருவகை வரம்புகளுக்கு உட்பட்  டுள்ளது அல்லது கட்டுப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று  புற வயவரம்பு; மற்றொன்று அகவயவரம்பு.

“ஓர் ஆட்சியாளனது உண்மையான அதிகாரத்தின்  அகவய வரம்பு அவனது குடிமக்கள் அல்லது அவர்களில்  பெரும் எண்ணிக்கையினர் அவனது சட்டங்களுக்குக் கீழ்ப்  படிய மறுக்கும் அல்லது அவற்றை எதிர்க்கும் சாத்தியக்  கூறில் அல்லது நிச்சயத்தன்மையில் அடங்கியுள்ளது.

“மிகவும் வல்லாட்சியான, கொடுங்கோன்மையான முடி  யாட்சிகளில் கூட இந்த வரம்பு நிலவுகிறது. பதினெட்டாம்  நூற்றாண்டின் மத்தியில் ஒரு ரோமாபுரி சக்கரவர்த்தி அல்லது  பிரெஞ்சு மன்னன் (தற்காலத்தில் ஜார் இருப்பது போன்று)  “முழு அரசதிகாரம் படைத்தவனாக” அந்தச் சொல்லின்  கறாரான சட்ட அர்த்தத்தில் இருந்து வந்தான். அவன் சட்டம்  இயற்றும் முழு அதிகாரத்தைப் பெற்றிருந்தான். அவனால்  இயற்றப்படும் எந்தச் சட்டமும் எல்லோரையும் கட்டுப்  படுத்துவதாக இருந்தது; அந்தப் பேரரசிலோ அல்லது இராச்  சியத்திலோ இத்தகைய சட்டத்தை ரத்து செய்யக்கூடியவர்  கள் எவருமே இல்லை. ஆனால் இதை வைத்து எப்படிப்  பட்ட முழு சர்வாதிகாரம் படைத்த ஆட்சியாளனும் தன்  விருப்பம் போல் உண்மையில் ஓவ்வொரு சட்டத்தையும்  இயற்ற முடியும் என்றோ, மாற்ற முடியும் என்றோ எண்  ணுவது தவறாகும்.......

“ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் கூட அவனுடைய குடிமக்கள் அல்லது அவர்களில் ஓரு பகுதியினர் அவனது ஆணைகளுக்குக் கீழ்ப்படிய தயாராக இருப்பதையே பொறுத் திருக்கிறது; கீழ்ப்படிய தயாராக இருக்கும் இந்த நிலை உண்மையில் எப்போதுமே ஒரு வரையறைக்குட்பட்ட தாகும். மிகவும் அபகீர்த்தி வாய்ந்த வரலாற்று உண்மை கள் இதனை மெய்ப்பிக்கின்றன. ஆரம்பகால சீசர்களில் எவராலும் பண்டைய ரோமாபுரியினர் தங்களது பழக்க வழக்க மரபுகளைப் பின்பற்றுவதைச் சீர்குலைக்க முடிய வில்லை......

சுல்தானால் முகமதியத்தை ஒழித்துக் கட்ட முடியவில்லை. பதினான்காம் லூயி அதிகாரத்தின் உச்சக் கட்டத்திலிருந்த போது நான்டேசின் ஆணையை ரத்து செய்ய முடிந்தது; ஆனால் அவனால் புராட்டஸ்டென்டி சத்தின் மேலாண்மையை நிலைநாட்ட இயலவில்லை; இதே காரணத்தால்தான் இரண்டாம் ஜேம்ஸால் ரோமன் கத்தோலிசத்தின் மேலாண்மையை நிலைநாட்ட முடிய வில்லை....

ஒரு சர்வாதிகாரியின் அதிகாரத்திற்கு அல்லது அரசியல் நிர்ணய சபையின் ஆணையுரிமைக்குப் பொருந்தும் உண்மை நாடாளுமன்றத்தின் அரசுரிமைக்கும் விசேட மாகப் பொருந்தும்; மக்களின் எதிர்ப்பு காரணமாக அது பல வகையிலும் வரம்புக்குட்பட்டதாகும். நாடாளுமன்றம் ஸ்காட்லாந்தில் சட்டரீதியாக எபிஸ்கோபல் திருச்சபையை அமைக்க முடிந்தது; நாடாளு மன்றம் சட்ட ரீதியாக காலனி  நாடுகள்மீது வாரி விதிக்க முடிந்தது; நாடாளுமன்றம் சட்டத் திற்குப் புறம்பாக இல்லாத முறையில், அரியாசனம் ஏறு வதற்குள்ள வாரிசுரிமையை மாற்ற முடிந்தது அல்லது மன்ன ராட்சியையே ஒழித்துக் கட்ட முடிந்தது; ஆனால் இன்றைய உலக நிலைமையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் இவற் றில் எதையும் செய்ய இயலாது என்பதை அனைவருமே அறிவர். ஒரு குறிப்பிட்ட சட்டம் சட்டரீதியாக செல்லுபடி யாகத்தக்கதாக இருந்தாலும் மிகப் பரவலான எதிர்ப்பு காரணமாக உண்மையில் மிகப்பல சந்தர்ப்பங்களில் அது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாகி விடுகிறது.

“அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தும் அகவய வரம்பு அந்த அரசு அதிகாரத்தின் இயல்பையே பொறுத்திருக்கிறது. ஒரு சர்வாதிகாரி கூட தனது அதிகாரங்களை தன் இயல்புக்கு ஏற்பவே பயன்படுத்துகிறான்; அந்த இயல்பு அவன் வாழும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உருவாக்கப்படுகிறது; அவன் சார்ந்த சமுதாயம் மற்றும் காலத்தின் தார்மிக உணர்வுகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுல்தானால் முகமதிய உலகின் சமயத்தை மாற்ற முடியாது; முகமதியிசத்தின் தலைவன் முக மதின் சமயத்தைக் கவிழ்க்க விரும்புவது என்பது பெரிதும் நம்புதற்கரியதாகவே இருக்கும்; சுல்தானின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அகவய வரம்பு குறைந்த பட்சம் புற வயது வரம்பு போன்றே வலுவானதாக இருக்கும்.

போப் பாண்டவர் ஏன் இந்தச் சீர்திருத்தத்தைக் செய்யவில்லை, அந்த சீர்திருத்தத்தைச் செய்யவில்லை என்று மக்கள் சில சமயங்களில் வீண் கேள்வி கேட்பது உண்டு. இந்தக் கேள்விக் கான உண்மையான பதில் ஒரு புரட்சிக்காரன் போப்பாண் டவர் ஆவதில்லை, அதேபோல் போப்பாண்டவராக மாறிய ஒரு மனிதன் புரட்சிக்காரனாக இருக்க விரும்புவதில்லை என்பதுதான்.”

திசே கூறிய உண்மையை எவரும் மறுக்க முடியாது. திசே கூறியதுபோன்று ஆதிக்க வகுப்பு என்ன சாதிக்க முடியும் என்பது அதன் அரசு அதிகாரத்தின் அளவைப் பொறுத்தல்லாமல் அந்த அரசு அதிகாரத்துக்குள்ள புறவய, அகவய வரம்புகளையே பொறுத்துள்ளது. இவை இரண்டில், நன்மை செய்யத் தவறுவதற்கு புறவய வரம்புகள் காரணமாக இருக்குமானால் ஆதிக்க வகுப்பினரை எவரும் குறை கூற முடியாது. புறவய வரம்புகள் முன்னேற்றத்தைத் தடை செய்து விடுமோ என்ற அச்சம் காரணமாக அதிகம் கவலைப்படத் தேவை யில்லை.

ஏனென்றால் ஆதிக்க வகுப்பினரின் அகவய வரம்பு களுக்குத்தான் புற வயது வரம்புகளைவிடத் தீர்மானிக்கும் சக்தி அதிகம். முன்னேற்ற மானது ஆதிக்க வகுப்பினரின் புறவய வரம்பு களை விட அகவய வரம்புகளையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்த அகவய வரம்புகளைத் தீர்மானிக்கும் அம்சங்கள் யாவை? ஆதிக்க வகுப்பினரின் கண்ணோட்டம், பாரம்பரியங்கள், சுயநல நோக்கங் கள், சமூக சித்தாந்தம் போன்ற வற்றிலிருந்தே அகவய வரம்புகள் தோன்றுகின்றன.

இந்த விவாதத்தின் நோக்கம் அடிமட்ட வகுப் பினர்களுக்கு காங்கிரஸ் என்ன சாதிக்கும் என்பது குறித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னதாக பின்கண்ட கேள்வியைக் கேட்க வேண்டும் என்று அயல் நாட்டவரை எச்சரிப்பதே ஆகும்; ஆதிக்க வகுப்பினரின் மனோபாவம் என்ன? அதன் பாரம்பரியங்கள் யாவை? அதன் சமூக சித்தாந்தம் யாது?

இவ்வகையில் முதலில் பிராமணர்களை எடுத்துக் கொள் வோம். மொத்த இந்துக்களின் மக்கட் தொகையில் சுமார் 80 சதவீதத் தினராக உள்ள சூத்திரர்கள், தீண்டப்படாதவர்கள் போன்ற அடிமட்ட வகுப்பினர்களின் நீண்ட நெடுங்கால வன்நெஞ்சம் படைத்த வைரி களாக பிராமணர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இது வரலாறு கூறும் அசைக்க, மறுக்க முடியாத உண்மை. இந்தியாவிலுள்ள அடிமட்ட வகுப்புகளைச் சேர்ந்த ஒரு சாமானிய மனிதன் இன்று தாழ்ந்து பட்டவனாக, விழ்ந்துபட்டவனாக, இழிவினும் இழிந்த பிறவியாக, எத்தகைய லட்சியங்களும் இல்லாதவனாக இருக்கிறான் என்றால் அதற்கு பிராமணர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமே முற்றிலும் காரணம்.

பிராமணீய சித்தாந்தத்தின் அடிப்படையான, முக்கியமான ஐந்து கோட்பாடுகள் வருமாறு: (1) பல்வேறு வகுப்பினர்களிடையே படிநிலையில் அமைந்த ஏற்றத்தாழ்வு: (2) சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாதவர்களின் அறவே பாதுகாப்பற்ற நிலைமை; (3) சூத்தி ரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் கல்வி வசதி முற்றிலும் மறுக்கப்படுதல்; (4) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் உயர் பதவிகள் வகிப்பதைத் தடை செய்தல்; (5) சூத்திரர்களும் தீண்டப் படாதவர்களும் சொத்துகள் வைத்துக் கொள்வதைத் தடை செய்தல். (6) பெண்களை முற்றிலும் அடிமைப்படுத்தி ஒடுக்குதல். ஏற்றத் தாழ்வு என்பது பிராமணீயத்தின் அதிகாரப்பூர்வமான கோட்பாடு; சமத்துவம் விழையும் கீழ்மட்ட வகுப்பினரை ஈவு இரக்கமின்றி, மனச்சான்றின் உறுத்தலின்றி அடக்கி ஒடுக்குவதை பிராமணீயம் தனது புனித கடமையாகக் கருதுகிறது. கல்வி ஒரு சிலருக்கு அப்பால் பரவாத நாடுகள் இருக்கின்றன.

ஆனால் இந்தியா ஒன்றில்தான் கல்வியை பிராமணர்கள் தங்களுடைய ஏகபோகச் சொத்தாக்கிக் கொண்டிருந்தனர். கீழ் மட்ட வகுப்பினர்கள் கல்வி கற்க விரும்புவதை தண்டனைக்குரிய கொடுங் குற்றமாகப் பிரகடனம் செய்தனர்; அவர் களுடை நாவுகள் துண்டிக்கப்படும் அல்லது அவர்களுடைய செவி களில் பழுக்கக் காய்ச்சிய ஈயம் ஊற்றப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். இந்திய மக்களை முற்றிலும் நிராயுதபாணிகளாக, பாது காப்பற்றவர்களாக ஆக்கி பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டு வரு கின்றனர் என்று காங்கிரஸ் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டி வரு கிறார்கள்.

ஆனால் சூத்திரர்களையும் தீண்டப்படாதவர்களையும் நிராயுதபாணிகளாகவும், பாதுகாப்பற்றவர்களாவும் ஆக்குவது பிராமணர்களின் பிரகடனப்படுத்தப்படாத சட்டமாக இருந்து வரு வதை அவர்கள் மறந்து விட்டார்கள். உண்மையில், சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும் என்ப தில் பிராமணர்கள் மிகத் தீவிரமாக இருந்தார்கள். இதனால்தான் பிராமணர்கள் தங்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தங்களை ஆயுதபாணிகளாக்கிக் கொள்வதற்கு சட்டத்தைத் திருத்தியபோது இது விஷயத்தில் சூத்திரர் கள் மீதும் தீண்டப்படாதவர்கள் மீதும் இருந்த தடையை அதன் கடுமையைச் சற்றுக்கூடக் குறைக்காமல் அப்படியே நீடிக்க விட்டு விட்டனர்.

இந்திய மக்களில் மிகப் பெரும்பாலோர் இன்று கோழை களாக, மோழைகளாக, எழுச்சியற்றவர்களாக, கிளர்ச்சியற்றவர்களாக தோன்றுகின்றார்கள் என்றால் பிராமணர்கள் அவர்களைக் காலகாலமாக முற்றிலும் நிராயுதபாணிகளாக ஆக்கி வைத்திருந் ததே அதற்குக் காரணம். பிராமணன் தன் ஆதரவை அளித்திடாத எந்தஒ சமூகத் கேடுமே, சமூக அநீதியுமே இல்லை எனலாம். வெறித் தனமான சாதி உணர்வு, தீண்டாமை, அணுகாமை, பார்க்காமை போன்ற மனிதனிடம் மனிதன் நடந்து கொள்ளும் சிறிதும் மனிதா பிமானமற்ற, மனித நேயமற்ற செயல்கள் அவனுக்கு தர்மம் போன்ற தாகும். எனினும் மனிதனுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மட்டுமே அவனுக்கு தர்மம் என்று எண்ணிவிடாதீர்கள்.

உலகின் எந்தப் பகுதி யிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் மிகமிக மோசமாக அக்கிர மங்களை எல்லாம், அட்டூழியங்களை எல்லாம் அவன் ஆதரித் திருக்கிறான். விதவைப் பெண்களை சதிகளாக உயிரோடு சுட்டெரிக்கப்பட் டனர். விதவைப் பெண்களை உயிரோடு துள்ளத்துடிக்க சுட்டெரிக் கும் சதி முறைக்கு பிராமணன் தனது முழு ஆதரவை அளித்தான்.

விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த சித்தாந்தத்தை அவன் உறுதியோடு நிலைநாட்டினான். சிறுமி கள் வயதுக்கு முன்னதாக திருமணம் செய்து வைக்கப்பட்டனர். அவள் பூப்புப் பருவத்தை எய்தியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவ ளுடைய கணவன் அவளுடன் உடல் உறவு கொள்ள உரிமை பெற்றி ருந்தான். இந்த சித்தாந்தத்துக்கும் பிராமணனது பலமான ஆதரவு இருந்தது. சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும், பெண் களுக்கும் சாஸ்திர சட்ட விதிமுறைகளை வகுத்துத் தருபவர்கள் என்ற முறையில் பிராமணர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனை உலகின் இதர பகுதிகளிலுள்ள அறிவுத்துறை வகுப்பினர்களின் சாதனைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குரூரமானதாகும்.

ஏனென்றால் கல்வி அறி வற்ற தனது நட்டு மக்களை என்றென்றும் சாசுவதமாக அறியாமை யிலும் வறுமையிலும் ஆழ்த்திவைப்பதற்கு ஒரு சித்தாந்தத்தை உரு வாக்க இந்தியாவிலுள்ள பிராமணர்களைப் போல் வேறு எந்த அறிவுத்துறை வகுப்பினரும் தங்கள் அறிவை சோரம் போகவிட்ட தில்லை. தன்னுடைய முன்னோர்களால் வகுத்துத் தரப்பட்ட இந்தப் பிராமணீய சித்தாந்தத்தில் இன்று ஒவ்வோரு பிராமணனும் முழு நம்பிக்கை வைத்திருக்கிறான். அவன் இந்து சமுதாயத்தில் ஓர் அந்நிய சக்தி ஆவான். பிரெஞ்சுக்காரனுக்கு ஜெர்மானியன் எவ்வாறு அந்நி யனோ, யூதனல்லாதவனுக்கு யூதன் எவ்வாறு அந்நியனோ, நீக்ரோ வுக்கு வெள்ளையன் எவ்வாறு அந்நியனோ அவ்வாறே சூத்திரர் களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கு பிராமணன் அந்நியன்.

அவனுக்கும் கீழ்மட்ட வகுப்பினர்களான சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் இடையே உண்மையிலேயே ஒரு படு பாதாளம் இருக்கிறது. அவன் அவர்களுக்கு அந்நியன் மட்டுமல்ல, பகை வனுமாவான். அவர்களுக்கிடையேயான உறவில் மனச்சான்றுக்கு, நேர்மை உணர்வுக்கு இடமில்லை, நியாயத்தின் குரலை அங்கு கேட்க முடியாது.

பனியாதான் வரலாற்றிலேயே மிகவும் புல்லுருவித்தனமான, அட்டை போன்ற வகுப்பாகும். பணம் சேர்க்கும் அவனது பேராசை யில் மனச்சான்றுக்கோ பண்பாட்டுக்கோ இடமில்லை. எங்கும் கொள்ளை நோய் பரவி சாவு தலைவிரித்தாடும்போது அதில் ஆதாயம் பெறா நினைக்கும் வெட்டியான் போன்றவன் அவன். பனியாவுக்கும் வெட்டியானுக்கும் இடையே உள்ள ஒரே வேறுபாடு வெட்டியான் கொள்ளை நோயைத் தோற்றுவிப்பதில்லை, பனியா அதைச் செய்கிறான். அவன் தனது பணத்தை உற்பத்தி நோக்கங்களுக்குப் பயன் படுத்துவதில்லை. மாறாக, ஆக்க வளமற்ற காரியங்களுக்கு கடுவட்டிக்கு பணத்தைக் கடன் கொடுத்து, வறுமையை, ஏழ்மையை மேன்மேலும் வளர்க்கிறான். வட்டியைக் கொண்டே அவன் பிழைக்கிறான்; வாழ் கிறான்; லேவாதேவிதான் மனு அவனுக்கு வகுத்துத்தந்த தொழில் என்று அவனுடைய மதம் அவனுக்குக் கூறுகிறது; இத்தொழிலை அவன் தனது புனித உரிமையாகவும் தர்ம்மாகவுமே கருதுகிறான்.

அவன் தொடுக்கும் வழக்குகளில் எல்லாம் சாதகமாகத் தீர்ப்பளிக்கும் பிராமண நீதிபதியின் உதவியோடு அவன் தனது தொழிலை தங்கு தடையின்றிச் செய்கிறான். வட்டி, வட்டி, வட்டி என்று மேன்மேலும் கூட்டிக் கொண்டே சென்று அதன்மூலம் குடும்பம் குடும்பமாக தனது நயவஞ்சக வலையில் நிரந்தரமாக வீழ்த்துகிறான். அவன் கடன் மேல் கடன் கொடுத்து ஏழை எளிய மக்களை என்றென்றைக்கும் கடனாளிகளாக்குகிறான். அணுவளவும் மனச்சான்று இன்றி அவன் செய்யாத பித்தலாட்டம் இல்லை. மோசடி இல்லை, ஏமாற்று வித்தை இல்லை. நாட்டின்மீது அவனுக்குள்ள பிடி முழுமையானது. ஏழ்மை யிலும், பட்டினியிலும், கல்லாமையிலும் மூழ்சிக் கிடக்கும் இந்தியா முழுவதுமே பனியாவிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது.

இரத்தினச்சுருக்கமாக்க் கூறினால் பிராமணன் உள்ளத்தை அடிமைப்படுத்துகிறான், பனியாவோ உடலை அடிமைப்படுத்து கிறான். அவர்கள் தங்களது பகற்கொள்ளையை, சூறையாடலை தங்க ளுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்; இவை ஆதிக்க வகுப்பினர்களுக் குச் சொந்தமாகின்றன. இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்புகளின் கண்ணோட்டம், பாரம்பரியம், சமூக சித்தாந்தம் ஆகியவற்றை அறிந்த எவரும் காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திர இந்தியா இன்றைய இந்தியாவிலிருந்து மாறுபட்டதாக இருக்கும் என்று நம்ப முடியுமா?

("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 9)

Pin It