சிக்னலில்
வண்டியைத் துடைத்து
காசு கேள்

டீ சுமந்து கூலி பெறு
கிளாஸ் உடைந்தால் சூடு வாங்கு

இரும்பு பிளாஸ்டிக்
ரப்பர் குப்பைகளை
கோணியில் பொறுக்கு

பட்டாசு தீப்பெட்டி
சுரங்க கட்டட
வேலைகள் செய்

விலைக்குப் போன
சகோதரியை மறந்து தலைவர்கள்
போஸ்டர்கள் ஒட்டு

ஓடும் பஸ்ஸில்
உயிரைப் பணயம் வைத்து
சுண்டல் தண்ணீர் பாக்கெட்
விற்றுப் பிழை

கடையின் காற்றில்லா
மூலையில்
சாலையோரக் குப்பை நடுவில்
சாக்கடை தீவுக் குடிசையுள்ளே
ஒடுங்கி உறங்கு

பசியின் அமில அரிப்பு குதறி
இற்று ஊசலாடும் உன்
சமூக நூலிழை பேண்

மீசை முளைத்து
தசை பிடிக்கும்போது
பொறுப்புள்ள
குடிமகனாய் வந்து நில்
அது போதும்

Pin It