தங்களுடைய முயற்சியில் சமஷ்டி ஆதரவாளர்கள் தோல்வியடைந்தபோதிலும், மிகமோசமான குறைபாடுகளினால் அல்லலுற்று வந்த ஏகாதிபத்திய அமைப்பின் சிரமங்களை அகற்றி அதனை மேம்படுத்துவதில் சமஷ்டி ஆதரவாளர்கள் தங்களது எதிராளிகளை வழிநடத்திச் சென்றனர். அதிக வருவாய்களைப் பெறவும் செலவினங்களின் விரயத்தைக் குறைக்கவுமான விதத்தில் வருவாய் சட்டங்களை மாற்றியமைக்கவும் கட்டுப்பாடு இயந்திரத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

ambedkar 297ஏகாதிபத்திய அமைப்பை வலுவானதாக ஆக்கும் முக்கிய நோக்கத்துடன், வெகுகாலமாக மக்களின் வனவாழ்வைப் பின்னடையச் செய்து அதன் விளைவாக அரசாங்கத்தையும் பின்னடையச் செய்து மிக மோசமான வரிகளை ஒழிக்கக், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு முடிவுகட்டத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

உள்நாட்டுச் சுங்கத் தீர்வைகள் ஒழிக்கப்பட்டன. வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவித்த எல்லாக் கட்டுப்பாடுகளிலிருந்தும் நாடு விடுவிக்கப்பட்டதுடன், இறக்குமதி வரியில் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் அவற்றிற்கு ஆக்கப்பூர்வமான ஊக்குவிப்பும் வழங்கப்பட்டது ஆங்கிலேய மற்றும் அன்னியக் கப்பல்கள் மீதான தீர்வைகள் சமமாக்கப்பட்டு வர்த்தகத்தற்கு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.

ஏற்றுமதி வரிகள் என்ற பளுவிலிருந்து ஏற்றுமதிப் பொருள்களுக்கு விலக்களிக்கப்பட்டது. ஐரோப்பா மற்றும் வேறு நாடுகளின் சந்தைகளில் பெரிதும் விரும்பப்பட்ட பருத்தி, தேயிலை மற்றும் இதர அவசியப் பண்டங்களின் சாகுபடியை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளபட்டன.

அடுத்தப்படியாக நிர்வாக இயந்திரம் சீரமைப்புக்கு உள்ளானது. “தமது கவுன்சிலில் செயல்பாடுகளை இலகுவாக்குவதற்காக அவ்வப்போது விதிகளை அமைத்து உத்தரவுகள் பிறப்பிக்கவும், கவுன்சிலின் ஒவ்வொரு உறுப்பினர்கள் வசமும் நிர்வாகத்துறையின் பொறுப்புகளை ஒப்படைத்து, அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்துவதில் கூட்டாக மொத்தக் கவுன்சிலும் பங்கேற்ற அமைப்புக்குச் சட்ட ரீதியாக முடிவுகட்டவும், வைஸ்ராய்க்கு அதிகாரமளிக்கும் 1861 ஆம் ஆண்டின் இந்தியக் கவுன்சில் ஒரு மந்திரி சபையாக மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு கவர்னர் ஜெனரல் தலைவரானார். இந்த வகையில் நிதித்துறைத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அதற்குப் பிரபல நிதியாளர் திரு.ஜேம்ஸ் வில்சன் நியமிக்கப்பட்டார்.

நிதிநிர்வாக இயந்திரத்தின் எல்லாத் துறைகளிலும் மேம்பாடு காண்பதிலேயே முதலில் திரு.வில்சனின் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவில் ஒரே சீரான கணக்குமுறை சிவில் மற்றும் ராணுவத் தணிக்கை மையப்படுத்தப்பட்டது. பட்ஜெட் ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியது போன்ற முறைகளை ஏற்படுத்திய பெருமை அவரையே சாரும். வருவாய் விதிகளில் மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட மற்றும் திறமையான நிர்வாகத்தின் மூலம் விரயங்களைத் தடுத்தல் ஆகியவற்றுடன் செலவினங்களைக் குறைக்கும் (சி.எப். 1860 நவம்பர் 19ஆம் தேதியிட்ட நிதித்துறைத் தீர்மானம் எண்.126 1800 நவம்பர் 24ஆம் தேதியிட்ட கல்கத்தா கெஸட்டின் இணைப்பு பக்.35.) கொள்கையும் இணைக்கப்பட்டது, பட்ஜெட் மற்றும் தணிக்கை விதிகள்,

“ஒவ்வொரு ஸ்தல அரசாங்கத்தின் அல்லது ஒவ்வொரு நிர்வாகப் பிரிவின் தலைவருக்கும் பெருமளவில் சமயத்துக்கேற்றவாறு முடிவெடுக்கும் அதிகாரங்கள், முன்னெப்போதும் இருந்ததை விட அதிகாரங்கள் வழங்கும் விதத்தில் வகுக்கப்பட்டன…. இது செலவினங்களின் விவரங்களை மாற்றியமைக்க உதவிற்று.” (அதே நூல். பாரா.20)

அதுவே செலவுக் குறைப்புக்கு இட்டுச் சென்றது. 1854 இல் உள்துறை செயலரின் கடிதத்தினால் நாடு முழுவதிலும் கல்வி பரப்பும் கொள்கை தொடங்கப்பட்ட உடனேயே மிகத் தீவிரமாக சிக்கனம் கடைப்பிடிக்கப்பட்டது. கல்வி மீதான செலவினங்களில் எந்த விதமான அதிகரிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. (தாக்கீதுகள், 1858 ஆகஸ்ட் 14 தேதியிட்ட கல்கத்தா கெஸட். பக். 1642)

பொருளாதாரத்தை மேம்படுத்தும் இந்த முயற்சிகள் எவ்வளவுதான் விடாமுயற்சியுடன் தொடரப்பட்ட போதிலும் அவை பொருளியல் ரீதியாக இந்தியாவின் நிதிகளில் மேம்பாட்டை ஏற்படுத்தவில்லை. 1860-61 ஆம் ஆண்டுக்கான தமது நிதிநிலை அறிக்கையில் திரு.வில்சன், நிதிநிலைமையைச் சுருக்கமாகப் பின்வருமாறு விளக்கினார்.

“கடந்த மூன்றாண்டுகளில் நமக்கு 30,547,485 பவுண்டு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் 6,500,000 பவுண்டு பற்றாக்குறையை எதிர்பார்க்கிறோம். ஏற்கெனவே நமது கடன் 38,410,755 பவுண்டாக உயர்ந்துவிட்டது.

இந்த மிகப்பெரிய பற்றாக்குறையை ஈடுசெய்யத் திரு.வில்சன் பத்திரத் தீர்வையை உயர்த்தவும், அன்னிய சுங்கத் தீர்வையை இரட்டிப்பாக்கவும், இதுவரை மக்கள் அறிந்திராத வருமானவரி விதிக்கவும் தூண்டிடப்பட்டார். திரு.வில்சனுக்குப் பின்னர் இப்பதவிக்கு வந்த திரு.சாமுவே லெங்கிற்கு இந்த “மூன்று மிகப் பெரிய வரிகளின்” வருவாய்கள் ஒரு வளமான சூழலை ஏற்படுத்த உதவவில்லை. ஏனெனில், அவரும் கூட 1861-62 ஆம் ஆண்டிற்கான தமது சிறுபகுதி வருமானத்துடன் எளிதில் செயல்பட 500,000 பவுண்டு வேண்டுமென்று கூறினார். இடையில் ஒரு சில ஆண்டுகள் நிதி நிலையில் வளம் காணப்பட்டது. ஆனால் திரு.லெய்ங்கின் இடத்திற்கு வந்த திரு.மாஸ்லி 1866 இல்

“சாம்ராஜ்யத்தின் நிதிநிலைமையையும் அதன் செல்வாதாரங்களின் மீது அதிகரித்துவரும் தேவைகளையும் மறுபரிசீலனை செய்து பார்க்கும்போது.. இப்போது இருக்கும் வருவாய்களுடன் குறைந்த பட்சம் 10 லட்சம் ஸ்டெர்லிங்கை ஒரு நிரந்தரச் சேர்க்கையாக்குவதற்கு வகை செய்வது உசிதிமானது என்று கருதினார்.” (1866 பிப்ரவரி 21 ஆம் தேதியிட்ட ஸ்தல அரசாங்கங்களுக்கான சுற்றறிக்கை)

அடுத்தடுத்து வந்த இந்த நிதி அமைச்சர்களின் முயற்சிகள் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை, நாட்டின் நிர்வாகம் மற்றும் பொதுத் தேவைகள் அளவிட முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டன என்ற காரணத்தினால்தான் விளக்க முடியும். கலகத்திற்குப் பின்னர்,

“பல்லாயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள், படைவீரர்கள் ஒப்படைக்கவேண்டும் என்பதையும் கண்டனர். ஸ்தல அரசாங்கத்தின் தேவைகளைத் தெரிந்த வழிவகைகளையே முற்றிலுமாகச் சார்ந்திருக்குமாறு செய்யும் உரையில் பொருளாதாரத்தின் தரம் மேம்படாது என்று அவர்கள் உறுதிபட நம்பினர். ஸ்தல அரசாங்கங்களின் உபயோகத்திற்காக ஒரு நிச்சயமான… தயாரிக்கப்பட்ட நிதியை ஏகாதிபத்திய நிதியிலிருந்து பெறுவதை விடத், தங்களுடைய ஒதுக்கீட்டுக்குக் கைவசமுள்ள வழிமுறைகளை அடையாளம் காட்டுவதும் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு தங்களது நிதியில் ஒரு சமநிலையையும் பராமரிக்கும் பொறுப்பை அவர்கள்மீது திணிப்பதனால் எந்தப் பயனும் ஏற்படாது.

இவ்வாறு, அவர்கள் சமஷ்டி ஆதரவாளர்களைப் போன்று அதே முடிவுக்கு வரவேண்டியதாயிற்று. ஆயினும், ஏகாதிபத்தியவாதிகளுக்கு இத்திட்டம் ஏற்புடையதாக இருக்கச் செய்வதற்கு அவர்கள் இத்திட்டத்தின் செயல்பாடுகளில் எவ்வித சமரசமும் ஏற்படுத்திக் கொள்ளாமல் சில சலுகைகளைச் செய்தனர் இந்திய அரசாங்க அமைப்பின் அரசியல் சட்டத்தில் சமஷ்டித் திட்டம் ஒரு மாற்றத்தைக் கோரியது. மத்திய மற்றும் பல மாகாண அரசாங்களுக்கிடையில் இந்தியாவின் வருவாய்களையும் செலவினங்களையும் சட்டரீதியாகப் பிரிவினை செய்வதை அது அவசியமாக்கியது.

ஏகாதிபத்தியவாதிகள் உள்ளிட்ட அனைவரும் நிதி சார்ந்த பொறுப்பையும் சிக்கனத்தையும் அமல்படுத்துவதற்கான ஒரு சக்தி வாய்ந்த நடவடிக்கையாக சமஷ்டித் திட்டத்தை அங்கீகரித்த அதே சமயம் அது சட்டரீதியாகவும் நிரந்தரமாகவும் இந்தியாவின் செல்வாதாரங்களை மத்திய அரசாங்கத்திடமிருந்து பறித்துவிடும் என்ற உண்மையிலிருந்து பிரதான எதிர்ப்பும் கிளம்பியது. நடைமுறை அரசியல்வாதிகள் என்ற முறையில் அந்த நிபுணர்கள் சமஷ்டித் திட்டத்தில் உள்ள இக்குறைபாட்டைப் போக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். பிரிட்டிஷ் நாடாளுமன்றம் செயல்படுவதில் தங்கள் அனுபவங்களைக் கொண்டு அரசியல் சட்டரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை என்பதை அவர்கள் கண்டனர். மரபுகள் சட்டத்தைப் போன்று, சிறந்தவையாகக் கருதப்பட்டன. ஒரு முறை ஏற்படுத்தப்படும் மரபைத் தொந்திரவின்றி ஒரு போதும் மாற்றியமைக்கமுடியாது.

மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கிடையில் செலவினங்களையும் வருவாய்களையும் பிரிப்பது என்பதை ஒரு மரபு சார்ந்த விஷயமாக ஆக்கும் யோசனை தெரிவிக்கப்பட்டது சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அவ்வாறு செய்வது லாபகரமானதாக இருக்கும் வரை அது நீடித்திருக்கக்கூடும். இந்தியாவின் செல்வாதாரங்களின் மீதான தனது கட்டுப்பாட்டை மத்திய அரசாங்கத்திடமிருந்து சட்ட ரீதியாக நீக்காமல் சமஷ்டித்திட்டத்திற்கு அது சகல அனுகூலங்களையும் வழங்கியது. அதன் தன்மையில் அது அரசியல் சட்டரீதியான ஏகாதிபத்தியத்திற்கும் அரசியல் சட்ட ரீதியான சமஷ்டி அமைப்புக்கும் இடையில் ஒரு சமரச ஏற்பாடாக இருந்தது. ஏகாதிபத்திய நிர்வாகம் இல்லாத ஏகாதிபத்திய நிதி அமைப்பு என்று அது அர்த்தப்படுத்தியது.

அந்த சமரசத் திட்டத்தின்படி வருவாய்களும் செலவினங்களும் அவற்றின் அந்தஸ்தில் ஏகாதிபத்தியத் தன்மையுடையவையாக இருந்தன. ஆனால், அவற்றின் நிர்வாகம் மாகாணங்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. ஒவ்வொரு மாகாண அரசாங்கமும் தனது பிரதேசத்தில் செய்யப்படும் ஏகாதிபத்தியச் செலவினங்களின் ஒருபகுதியைத், தனது பிரதேசத்திற்குள் வசூலிக்கப்பட்ட ஏகாதிபத்திய வருவாய்களின் ஒரு பகுதியின் வரையறைக்குள் நிர்வகிக்கும் பொறுப்பை பெற்றது. புதிய திட்டத்தின் சாரம் இதுவேயாகும். தலைமைக் கட்டுப்பாட்டை ஏகாதிபத்திய அரசாங்கத்தின் வசம் ஒப்படைப்பதில், அதன் நிர்வாகத்தின் ஒரு பகுதியின் விவரங்களில் உண்மையில் ஈடுபடாமல் ஆலோசனை வழங்குவதிலும் இந்திய நிதியமைப்பு சம்பந்தமான எல்லா விவகாரங்களிலும் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவதிலும் அது சமஷ்டித் திட்டத்திலிருந்து மாறுபட்டிருந்தது.

மேலே விவரிக்கப்பட்ட திட்டத்தின் சாரத்தில் மறுசீரமைப்புப் பண்பை மேற்கொள்ளுமாறு அழைக்கப்பட்ட மூன்று நிதியமைச்சகளும் ஒப்புக்கொண்டனர். ஆனாலும், அவை மேற்கொள்ளப்படவிருந்த அளவில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். திட்டத்தைப் பற்றிய தமது சொந்தக் கருத்துக்களைத் திரு.வில்சன் விளக்கினாரா என்பது ஐயத்திற்கிடமானது. ஆனால், அவருக்கு அதைப் பற்றிய ஒரு கருத்துத் தோன்றியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. அவரால் நிர்ணயிக்கப்பட்ட 1860 ஆம் ஆண்டின் வருமானவரிச் சட்டம் XXXII,

“இரு பாகங்களைக் கொண்டதாக இருந்தது. முதலாவதாக மாறும் தன்மையுள்ள ஒரு வரி. வருவாய்களின் மீது 3 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்ட இந்த வரியை சாம்ராஜ்யத்தின் அவசரத் தேவைகளைப் பொறுத்து அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும், நிதி நிலவரம் அனுமதிக்குமானால் இந்த வரியை முற்றிலுமாக நீக்கிவிட முடியும். இரண்டாவதாக 1 சதவிகித நிரந்தர வரி, இது ஸ்தல நிர்வாகத்தின் பொறுப்பில் இருக்கும். வரி செலுத்திய பகுதிக்குள் சாலைகள், கால்வாய்கள் இதர மீண்டும் மீண்டும் பயனளிக்கும் பொதுபணிகள் அமைக்க அது செலவிடப்படும் (விதியின் 190-4 பிரிவுகளின்படி).

வரியின் இப்பகுதியை ஒருபோதும் நீக்கமுடியாது. அது எதற்குப் பிரயோகப்படுத்தப்படுகிறதோ அந்தச் செலவினங்களை சமாளிப்பதற்காக மட்டுமன்றி வரி வசூலிப்பு இயந்திரத்தைப் பராமரிப்பதற்காகவும் கூட அந்த வரி எப்போதும் தொடரும். அப்போதுதான் எந்த ஒரு அவசர காலத்திலும், வரியின் இதர பகுதி தற்காலிகமாகத் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும் கூடப், பொதுவான நிதியின் உதவிக்குப் பயன்படும் விதத்தில் எந்தவிதமான கிளர்ச்சியும் விவாதமும், பிரச்சினையும் இன்றி மறுபடியும் வரி விதிக்க முடியும்.” (1866, நவம்பர் 25ஆம் தேதியிட்ட சர்.பி.ஃபிரெரேயின் நடவடிக்கைக் குறிப்புகள், பாரா.30. ஸ்தல அரசாங்கங்களின் நிதி அதிகாரங்களை விஸ்தரிப்பு சம்பந்தமான ஆவணங்கள் போன்றவை. பக்.42)

ஆனால், தமது கருத்துக்களை ஒரு திட்டமாக விளக்குவதற்கு திரு.வில்சன் உயிரோடு இருக்கவில்லையாதலால் அவற்றை எந்த அளவுக்கு நடைமுறையில் செயல்படுத்த அவர் விழைந்தார் என்று கூறுவது கடினம்.

திரு.வில்சனைத் தொடர்ந்து அப்பதவிக்கு வந்த திரு. லெய்ங் ஒரு நிச்சயமான வடிவத்தை வழங்கினார். 1861-62 ஆம் ஆண்டிற்கான அவரது பட்ஜெட் பற்றாக்குறையுடையதாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், பயனுள்ள பொதுப்பணிகளுக்காக ஸ்தல அலுவலகங்களின் அவசரத் தேவைகளேயாகும். அவருடைய நிதி பாதுகாப்பு உணர்வு,

“சாலைகள், கால்வாய்கள் மற்றும் இந்த விளக்கத்தைக் கொண்ட இதர பயனுள்ள பணிகளைக், கலகம் நடைபெற்றது முதல் அவற்றை மேற்கொள்வதற்காக அல்லது மேற்கொள்ளப்படாமலிருந்த பணிகளுக்கான ஒதுக்கீட்டைக் குறைக்க” அவரைக் கட்டாயப்படுத்தியது.

ஆனால், பயனுள்ள பொதுப்பணிகளை ஊக்குவிக்க அவரது கவலை – அதனுடைய அவசரத் தன்மையை அவர் முழுமையாக அங்கீகரித்தார் – அவர்களுக்கு வழங்கப்பட்ட மிகக் குறைவான ஏகாதிபத்திய மானியத்தைப் பெருக்க மாகாண அரசாங்கங்களுக்கு அவர் யோசனையை வழங்கினார். அவர் கூறியதாவது:

“உங்களுக்கு எங்களால் கொடுக்க முடிந்ததைப் பெற்றுக் கொள்ளுங்கள். மீதமுள்ளவற்றிற்கு நீங்களே சில வரிவிதிப்பு அதிகாரங்களை எடுத்துக் கொண்டு நிதி திரட்டிக் கொள்ளுங்கள்…. ஏனெனில், சில விஷயங்களை ஏகாதிபத்திய வரி விதிப்பைவிட ஸ்தல அளவில் சிறப்பாகச் செய்ய முடியும்….”

அவருடைய நோக்கம் ஸ்தல பட்ஜெட்டுகளை உருவாக்குவதேயாகும். “தற்காலிகச் சிரமங்களைச் சமாளிப்பதற்கு மட்டுமின்றி ஒரு நிரந்தர அபிவிருத்தியைத் தொடங்குவதுமாகும்”. இதனால் ஏகாதிபத்தியக் கருவூலத்திற்குப் பொறுப்புகள் குறைந்து ஸ்தல அரசாங்கங்களுக்கு அனுகூலம் ஏற்படும். ஏகாதிபத்திய வருவாய்களிலிருந்து பெற்ற ஒதுக்கீடுகளுடன் பொதுப்பணிகளுக்கான செலவினங்களை ஸ்தல அரசாங்கங்கள் நிர்வகிக்கும். இத்திட்டமும், வரிவிதிக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுவதும் பொதுவான ஆதரவைப் பெற்றன.

வழங்குவதாகப் பிரேரணை செய்யப்பட்ட வரிவிதிப்பிற்குத் தேவையான சட்டமியற்றும் அதிகாரங்களும், அதைச் செயல்படுத்துவதற்கான நிர்வாக இயந்திரமும் ஸ்தல அரசாங்கத்தின் வசம் இல்லாதிருந்தது. ஆகவே, அப்போது நாடாளுமன்றம் மேற்கொள்ளவிருந்த .ஸ்தல சட்டமியற்றும் கவுன்சில்கள் சட்டம் இயற்றப்படும் வரை அத்திட்டத்தை ஒத்திப் போடவேண்டியதாயிற்று. ஆனால் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நிதிநிலைமை வளமடைந்ததன் காரணமாக அத்திட்டத்தின் மீதான அக்கறையில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் அது காலவரையின்றிக் கைவிடப்பட்டது.

நிதி நிலைமையின் வளம் தற்காலிகமானதாகவே இருந்தது. பழைய நிலைமை திரும்புவதைக் கண்ட திரு.மாஸ்சே அத்திட்டத்திற்கு மிக விரிவான வடிவத்தில் புத்துயிரூட்டும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். (1866 பிப்ரவரி 25 ஆம் தேதியிட்ட ஸ்தல அரசாங்கங்களுக்கு நிதி ஆதாரங்களை விஸ்தரிப்பது சம்பந்தமான ஆவணங்கள் போன்றவை.)

அவர் பிரேரணை செய்ததாவது: “கூடுதல் தொகையை (ஒரு மில்லியன் ஸ்டெர்லிங்) வசூலிப்பதற்கான வழிவகைகளைப் பரிசீலனை செய்ததில் கூடுதல் வசதியான வழி ஸ்தலத் தன்மை கொண்ட செலவினங்களின் ஒரு பகுதியை ஏகாதிபத்தியக் கணக்கிலிருந்து ஸ்தலக் கணக்குக்கு மாற்றுவதேயாகும்.”

இந்தியாவில் ஸ்தலக் காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய ஸ்தல நிதிகளின் வருடாந்திர விளைபொருள் இரண்டு மில்லியன் ஸ்டெர்லிங்கைத் தாண்டவில்லையாதலால், பல மாகாணங்களிலும் ஸ்தல அரசாங்கங்களிடமிருந்தும் கூடுதலாக 1,200,000 ஸ்டெர்லிங்கைத் திரட்ட உத்தேசிக்கப்பட்டது. அப்போது ஏகாதிபத்திய வருவாய்களிலிருந்து ஸ்தல சேவைகளுக்காகச் செலவு செய்யப்பட்ட அதே தொகையை நிவாரணமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. மேற்கூறப்பட்ட தொகையான 1,200,000 ஸ்டெர்லிங் பல ஸ்தல அரசாங்கங்களின் (பர்மாவைத் தவிர) உத்தேச வருவாய்களிலிருந்து 4 சதவிகிதம் கணக்கிடப்பட்டு எட்டப்பட்டது.

இதில் சுங்கத் தீர்வைகளும் வருமானவரியும் அடங்காது. (அதே நூல் பாரா.8) இப்புதிய நிதிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தக்கூடிய புதிய இனங்கள் வருமாறு. 1.கல்வி, 2.காவல்துறை, 3.மாவட்ட சிறைச்சாலைகள், 4.பொதுப்பணிகள், 5.சாலைகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள். இத்தொகையைப் பெறுவதற்கான வரிகளின் பட்டியலில் 1.வர்த்தகங்கள் மற்றும் தொழில்களின் மீதான லைசென்ஸ் வரி, 2.வீட்டுவரி, 3.நகரங்களில் நுழைவுவரி, 4.வருவாய் செலுத்தாத நிலங்களின் மீது வாரிசு வரி ஆகியவை அடங்கும். கவுன்சிலில் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்தையும் பொறுத்து, வசூலிக்கும் செலவைக் கழித்துத் தேவையான முழுத் தொகையையும் பெறவும் மேற்கூறப்பட்ட சேவைகளுக்காக வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகையையும் அல்லது அதன் ஒரு பகுதியைத் தங்கள் விருப்பம்போல் செலவு செய்யும் விதத்தில் தங்களுடைய சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் வரிவிதிப்புற்குப் பொருத்தமான ஒரு குறிப்பிட்ட வரியைத் தேர்வுசெய்து விதிக்கும் சுதந்திரத்தை ஸ்தல அரசாங்கங்கள் பெற்றன.

இத்திட்டம் சம்பந்தமாக ஸ்தல அரசாங்கங்கள் மற்றும் நிர்வாகிகளின் பதில்கள், இதுபோன்ற செலவினங்களை மாற்றுவதன், இவற்றைச் சமாளிப்பதற்காக ஸ்தல வரிவிதிப்பு முறையின் நடைமுறை சாத்தியத்தை சம்பந்தமாக ஒரு பொதுவான உடன்பாட்டைச் சுட்டிக்காட்டின, ஆனால், செலவினங்களை மாற்றும் அதே சமயம் அவற்றைச் சமாளிக்கும் வருவாய்களையும் இதே ஆட்சேபிக்கும் ஒரு பொதுவான மனநிலையும் கூடக் காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலைகளில் இந்திய அரசாங்கம் ஸ்தல அரசாங்கங்களுக்கு மாற்றவிருந்த செலவினங்களை 8,000 ஸ்டெர்லிங்காகக் குறைக்கவும், அதற்குப் போதிய வகை செய்வதற்கான ஒரு வழிமுறையாக லைசென்ஸ் வரியின் வருவாய்களை அவர்களுக்கு மாற்றித் தரவும் ஒப்புக் கொண்டது.

(1867 செப்டம்பர் 19 ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை. ஒபி. சிஐடி. பக்.67) அத்திட்டதிற்குக் கிடைத்த சாதகமான வரவேற்பும் அனுதாபத்துடன் கூடிய விமர்சனமும் திரு.மாஸ்சேயை அத்திட்டத்தை விஸ்தரித்து மேம்படுத்துவதற்கு இட்டுச் சென்றது. புதிய விரிவுபடுத்தப்பட்ட திட்டதிற்கான விளக்கவுரையில் திரு.மாஸ்சே பின்வருமாறு எழுதினார்.

“எனது முதலாவது குறிக்கோள், ஸ்தல அரசாங்களுக்கு மாற்றப்படவிருக்கும் செலவினங்களின் முதலாவது தொகுதியைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தது. இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து எளிதில் மாற்றப்படத்தக்க செலவுகளின் இனங்களாகும் அவை. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது நிர்வகிப்பதற்குக் கடினமாக இராத, ஆயினும் இந்த நடவடிக்கை ஓர் எதார்த்தமாக இருக்க முனைவது என்பதைச் சுட்டிக்காட்டுமளவிற்குப் போதுமான அளவுக்கு முக்கியத்துவமுடையதாகவும், ஸ்தல அரசாங்கங்களுக்கு நிதி நிர்வாகத்தை முழுமையாக மாற்றித் தருவதை நோக்கிய ஒரு நடவடிக்கையாகவும் இருக்கும். சிவில் மதிப்பீடுகளைப் பார்க்கும்போது, வெவ்வேறு மானியங்களிலிருந்து சிறப்பு இனங்களைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக மொத்தமாக ஒரு சில மானியங்களை அல்லது மானியங்களின் ஒரு பிரிவை மாற்றித்தரும் நடவடிக்கைமுறை மிகவும் வசதியானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் கணக்கு முறையில் எந்தவிதமான மாற்றமும் கோரப்படாது ஒரே மாற்றம் என்னவெனில், பல்வேறு காரணங்களுக்கான மானியங்களின் சில பகுதிகள் ஒரு சிறப்புத்தன்மையுடன் வழங்கப்படும். இந்த விதிக்கு ஒரே விதிவிலக்கு “இதர” இனம் சம்பந்தப்பட்டதாகும். அது ஒரு முன்னுக்குப்பின் முரணான செலவினங்களின் தொகுதியாகும்.

ஸ்தல செலவினங்கள் என்று நியாயமான முறையில் அழைக்கப்படும் எல்லா இனங்களும் ஸ்தல நிர்வாகத்துக்கு மாற்றப்படுவதற்காகத் தக்கவைத்துக் கொள்ளப்படும். மீதமுள்ள இதர பிரதான செலவு இனங்களின் கீழ் எளிதாகக் கொணர முடியும். மாற்றுவதற்கு நான் பிரேரணை செய்யும் செலவினங்களில் மிக முக்கியமானது. சட்டம் மற்றும் நீதித்துறைக்குத் துணையான ‘சிறைச்சாலை’க்கானதாகும்.

அது மொத்தமாக எடுத்துக் கொள்ளப்படும். ‘பத்திரப்பதிவு’ மற்றும் ‘துலுபனா’வுக்கான செலவினங்களும் கூட “சட்டம் மற்றும் நீதித்துறை’யின் கீழ் கொண்டுவரப்படும். சட்டம் மற்றும் நீதித்துறை என்னும் இனத்தின் கீழ் செலுத்தப்படும் சிறப்புக் கட்டணங்களிலிருந்து இவை செலவழிக்கப்படும். இச்செலவினங்களுக்கான ஒதுக்கீடாகச் “சட்டம் மற்றும் நீதித்துறை” யின் கீழ் வருவாயை மாற்றித்தரவும் பிரேரணை செய்யப்பட்டுள்ளது. “கல்வி” என்ற தலைப்பின் கீழ் “இதர” செலவினங்கள், “கல்வி”யின் கீழ் செலுத்தப்பட்ட வருவாய்களின் இணையான மாற்றத்திற்கு மாற்றித் தரப் பிரேரணை செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக, நிரந்தர ‘மருத்துவ நிறுவனங்கள் மற்றும் வேதியியல் ஆய்வாளர்கள்’ தவிர ‘மருத்துவ சேவைகள்’ என்ற தலைப்பின் கீழ்வரும் ஒட்டுமொத்தச் செலவினங்களாகும். ‘எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை’ யின் கீழ் உள்ள மொத்தச் செலவினங்களும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ரயில்வே போலீஸ் உள்ளிட்டுக் “காவல்துறை”யின் கீழ் உள்ள செலவினங்கள் ஸ்தல செல்வாதரங்களின் பங்களிப்பிலிருந்து சமாளிக்கப்பட்டு வந்ததையும் மாற்றித்தரப்படுகிறது. இதற்காகக் ‘காவல்துறை’ என்ற இனத்தின் கீழ் வரவுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மேற்கூறப்பட்டவற்றைத் தவிர, நிலவருவாய், வருமானவரி, லைசென்ஸ் வரி ஆகியவற்றை வசூலிப்பதற்காகச் செலவினங்களின் ஒரு பகுதியை மாற்றித்தரவும் பிரேரணை செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிகளை… வருங்காலத்தில் விதிக்கப்படக் கூடியவையாக நான் கருதுகிறேன். பொதுவான செலவினங்களைச் சமாளிக்கப் போதுமான ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வது அவசியமாக இருந்து வந்துள்ளது, அத்தொகை மாற்றித் தரப்படும். அதை வசூலிப்பதற்கான செலவுக்கு இணையான ஒரு பகுதி மாற்றித் தரப்படும் என்பது தெளிவு. நில வருவாயின் வசூலுக்கான செலவினங்களின் தலைப்பின்கீழ் நில அளவை மற்றும் நில உடமை ஏற்பாடு ஆகியவற்றுக்கான செலவினங்கள் சேர்க்கப்படவில்லை. ஏனெனில், அவை தனிச் சிறப்பு வாய்ந்தவை, மாற்றக்கூடியவை. ஆயினும், “கிராம அதிகாரிகளுக்கு அலவன்சுகள்” என்ற தலைப்பின் கீழ் செலவினங்கள் சேர்க்கப்படவில்லை.

வருவாயின் முதலும் முக்கியமுமான மாற்றுதல் நில வருவாயின் ஒரு பகுதியாக இருக்கும். அது ஒரு ரூபாயில் ஒரு அணாவாக அல்லது 1/16 பாகமாக நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று பிரேரணை செய்கிறேன். மாற்றித்தரப்படும் வசூலுக்கான வீதாசாரத்தையும் அதே விகிதமும் கட்டுப்படுத்தும்.

வருவாயின் அடுத்த இனம் வருமான வரி மற்றும் லைசென்ஸ் வரியின் நான்கில் ஒரு பங்காக இருக்கும் என்று கருதுகிறேன், அதைப் பின்வருமாறு திரட்ட எண்ணுகிறேன். (பங்கினை இவ்வாறு கணக்கிட்ட திரு.மாஸ்சே எழுதியதாவது: “வருமான வரியை நான் இரண்டு சதவிகிதமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். 2000 ரூபாய்களுக்குக் கீழுள்ள வருவாய்களுக்கு வரி விதிக்கப்படமாட்டாது என்று கருதியிருக்கிறேன். நான் கருதியிருக்கும் லைசென்ஸ் வரி, இப்போதுள்ள அளவில் வர்த்தக வரியாக ஆரம்பித்து வருமான வரியை எட்டும் விதத்தில் உயரும்.)

பின்வரும் இனங்களின் கீழ் பெறப்படும் வரவுகள் முழுவதையும் அடுத்தபடியாக மாற்றித்தரப் பிரேரணை செய்யப்பட்டுள்ள. 1.சட்டம் மற்றும் நீதித்துறை, 2.காவல்துறை, 3.கல்வி, 4.நிதித்தன்மை கொண்ட இனங்கள் தவிர இதர இனங்கள், 5.நீர்ப் பாசனத்திலிருந்து பெறப்படும் வருமானத்தைத் தவிர காவல்துறைப் பணிகளின் கீழ் பெறப்படும் அனைத்து வருமானங்கள். பொதுப் பணிகளின் கீழ் மாற்றித்தர உத்தேசிக்கப்பட்டுள்ள செலவினங்களின் தலைப்புகள் வருமாறு. 1.சாலைகள், 2.பழுதுபார்ப்புகள் மற்றும் சிவில் கட்டிடங்கள், 3.புதிய மற்றும் பழுதுபார்ப்புகள் அடங்கிய இதர பணிகள் மற்றும், 4.கருவிகள் மற்றும் ஆலைகள்.”

பல்வேறு கண்ணோட்டங்களிலிருந்து விளக்கமாக விவாதிக்கப்பட்ட பின்னர் இத்திட்டம் இவ்வாறு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அது மிகக் கவனமாக விமர்சனங்களின் அங்கீகாரத்தைப்  பெற்றபோதிலும் கூட (சர் ஸ்டாஃபோர்டு நார்த்கோட் பிரகடனம் செய்ததாவது: “இந்திய நிதி அமைப்பின் ஒருமைப்பாடு ஆட்டங்கண்டுவிடாதிருக்குமாறு நாம் கவனமாக இருக்க வேண்டும். பொறுப்பற்ற செலவினங்களுக்கு எதிரான பாதுகாப்பை நாம் வழங்க வேண்டும். இந்தியாவின் மதிப்பை மிக உயர்ந்த அளவுக்கு அதிகரித்துள்ள ஓர் அமைப்பை நாம் கொண்டிருக்கிறோம்.

ஆகவே அதற்குக் குந்தகம் விளைவிக்கும் கடைசி நபராகத்தான் நான் இருப்பேன். எந்த மாற்றத்தையும் அறிமுகப்படுத்துவதில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பேன். ஆயினும் திரு.மாஸ்சேயின் யோசனைகளின் கோட்பாடுகளில் நான் உடன்படுகிறேன் என்பதை திரும்பவும் கூறுகிறேன்.” –ஹன்சார்டின் நாடாளுமன்ற விவாதங்கள் – தொகுதி 191. 1868 ஏப்ரல் 23.) அத்திட்டம் ஏகாதிபத்தியவாதிகளுக்கு மிகப் பெரியதாக இருந்தது. அவர்களில் இரு மாமனிதர்களான இந்தியாவின் வைஸ்ராய் லார்டு லாரன்ஸ், மதராசின் கவர்னரான மெர்ச்சிஸ் டூனின் லார்டு நேபியர் ஆகியோர் அதை அங்கீகரிக்கவில்லை. அவர்களுடைய எதிர்ப்பின் காரணமாக அத்திட்டம் நனவாகத் தவறியது.

ஏகாதிபத்திய நிதி அமைப்பு – என்ற தங்களது நோயாளியின் மீது எந்தவிதமான அறுவை சிகிச்சையையும் மேற்கொள்வதற்கு இப்பத்தாண்டுகளின்போது, உறுதியுடன் எதிர்ப்புத் தெரிவித்து வந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு, அந்த நோயாளி குணமடைந்து வருவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. மாறாக, அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தாமதம் அதன் நோய்களை அதிகப்படுத்தியது. வரிவிதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததையும், செலவினங்களில் குறைப்பு ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல், 1860க்கும் 1870க்கும் இடையிலான பத்தாண்டுகளின்போது இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்ட இந்திய நிதியமைச்சர்கள் மூவரும் மூன்றாண்டுகள் மட்டுமே உபரிவருவாயைக் காட்ட முடிந்தது.

மறுபுறத்தில் நாட்டின் பொது நிதிமுறையில் ஒழுங்கையும் சிக்கனத்தையும் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பட்ஜெட் அமைப்பு வருந்தத்தக்க விதத்தில் தகர்ந்து பட்டதுடன், இடையறாத பற்றாக்குறைகளும் சேர்ந்து ஏற்கனவே நிலவிய குழப்பங்களை அதிகரித்தன. பொருளாதாரத்தின் ஒரு கருவி என்ற முறையில் அதன் திறமை ஒருபுறமிருக்க, மிகுதியான மத்தியமயமாக்கல் காரணமாக மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்த பட்ஜெட் அமைப்பு, ஒழுங்கை ஏற்படுத்தும் ஒரு கருவி என்ற முறையிலும் கூட அது பயனற்றது என்று நிரூபித்தது.

நிதிகள் குழப்பதில் ஆழ்ந்தன. பட்ஜெட் மதிப்பீடுகளை வரைவதில் உள்ள துல்லியத்தன்மை சம்பந்தமாக வெளியிடப்பட்ட விரிவான சுற்றறிக்கைகளும் உத்தரவுகளும் ஒருபுறமிருக்க, பெருமளவு உபரிவருவாய்களுடன் மதிப்பீடு செய்யப்பட்டதுடன் தொடங்கிய பட்ஜெட்டுகள், விநோதமான முறையில் பெருமளவில் நிஜமான பற்றாக்குறைகளுடன் முடிந்தபோது நிதி அமைச்சர்களை எதிர்கொண்ட அந்த நிலைமை மிக அசாதாரணமாகக் காட்சியுண்மையாக இருந்தது. எந்த அளவுக்கு உண்மை நிலவரங்கள் மதிப்பீடுகளிலிருந்து தவறின என்பதைப் பின்வரும் பட்டியலிலிருந்து காணலாம்:

     அரசாங்க நிதிகளின் கோளாறு (ஹன்டர், டபிள்யூ.டபிள்யூ., மேயோவின் வாழ்க்கை, தொகுதி 2, பக்.7-8)

ஆண்டு மதிப்பீடு பற்றாக்குறை / உபரி பவுண்டு உண்மையான பற்றாக்குறை / உபரி பவுண்டு
1866-67 -66,700 -2,307,700
1867-68 1,628,522 -923,720
1868-69 1,893,508 -2,542,861
1869-70 48,263 -1,650,000 (மதிப்பீடு)

1868-9 மற்றும் 1869-70 மதிப்பீடுகள், 1868-69 ன் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை ஆதாரமாகக் கொண்டிருந்தன. அவை முறையே 1,893,508 பவுண்டு மற்றும் 48,263 பவுண்டு உத்தேசம் மிகுதியாக முடியும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டன என்பது மேற்கண்ட அட்டவணையிலிருந்து தெளிவாகும். ஆனால் 1868-69 ஆம் ஆண்டுக்கான உண்மை நிலவரம் உபரி வருவாய்க்குப் பதிலாகப் பெரும் பற்றாக்குறையைக் காட்டியபோது, இதற்கிடையில் இந்தியாவின் வைஸ்ராய் பதவிக்கு நியமிக்கப்பட்ட லார்ட் மேயோ, இந்த முடிவுகளின் அடிப்படையில் தமது பட்ஜெட் மாற்றியமைக்கப்படுமானால் மதிப்பிடப்பட்ட உபரிக்குப் பதிலாக உண்மையில் பற்றாக்குறையில்தான் முடியும் என்பதை உறுதிபட நம்பினார். இந்த நிதி சார்ந்த ஆச்சரியம் அவரது பட்ஜெட்டைக் குழப்பதில் ஆழ்த்தியது. ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக, நிதி ஆண்டின் மத்தியில் கூடுதல் வரிவிதிக்கவும் செலவினங்களைக் குறைக்கவுமான வழக்கத்திற்கு மாறான நடைமுறையை ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் சுருக்கம் வருமாறு:

I)கூடுதல் வரிவிதிப்பு      பவுண்டு
  • 1.1% லிருந்து 2½யாக உயர்த்தப்பட்ட வருமானவரி
 
320,000
  • அதிகரிக்கப்பட்ட உப்புத் தீர்வை (சென்னையிலும் பம்பாயிலும்)
 
180,00
                  மொத்தம் 500,000
II)செலவினங்களின் குவிப்பு    பவுண்டு
  • கல்வி
350,00
  • பொதுப்பணிகள்
800,00
             மொத்தம் 1150,000
உத்தேசப் பற்றாக்குறை 1,650,000

மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டபோதிலும் கூட அவர் தமது பட்ஜெட்டை உத்தேசப் பற்றாக்குறையான 1,650,000 பவுண்டுடன் முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாதிருந்தது. அபிசினியப் போரில் கைப்பற்றப்பட்ட சப்ளைகளின் மதிப்பு, பழைய தீர்க்கப்படாத கணக்குகளைத் தீர்த்தது போன்ற சில வரவுகள் மட்டும் இல்லை என்றால் இப்பற்றாக்குறை தவிர்க்கப்பட முடியாததாக இருந்திருக்கும். ஆனால் இந்த வரவுகள் தமது பெரும் பற்றாக்குறைகளை மாற்றி ஒரு சிறிய உபரி பட்ஜெட்டாக்க முடிந்தது.

தமது முயற்சிகளின் உடனடி வெற்றிகளைக் கண்டு மகிழ்ந்த லார்டு மேயோ, ஏகாதிபத்திய நிதி அமைப்பில் ஏதோ கோளாறு இருப்பதாக உறுதிபட நம்பினார். அதற்கு முடிவு கட்டுவதில் ஆர்வம் காட்டாத அவர், சமரசத்தின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண நிதித் திட்டத்தைத் தொடங்கி வைப்பதன் மூலம் அதைத் துணிவுடன் செப்பனிட முனைந்தார். அதனுடைய வளர்ச்சியே இந்த ஆய்வின் இரண்டாம் பாகத்தின் ஆய்வுக்குரிய விஷயமாக இருக்கும்.

 (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 11)

Pin It