எப்போதுமே ஒரு தோழியுடன் ஒரு கதாநாயகி இருப்பாள்... என்பதை வேறு விதமாக கூறுவதில் இருந்து ஆரம்பிக்கிறேன்... மெல்ல புன்னகைக்கத் தோன்றியது. அடுத்த காட்சியில் அந்த அழகி வந்து அவனைப் பார்வையால் துவம்சம் செய்யும் காட்சிக்குள்... கொஞ்சம் கொஞ்சமாக ரகசிய ஆசைகள் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை...

the loftஐந்து நண்பர்கள்..தங்களின் ரகசியங்களுக்கு... என்று ஒரு உயர்ந்த அப்பார்ட்மெண்டில் ஒரு வீட்டை வாங்குகிறார்கள்...அந்த வீட்டில் முதல் காட்சியிலேயே ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நிர்வாணமாக பெட்டில் படுக்க வைக்கப் பட்டிருக்கிறாள்.. கையில் விலங்கு மாட்டி அதை கட்டிலோடு இணைத்திருக்கிறார்கள்...... முதலில் உள்ளே வரும்.. நண்பன் பார்த்து பதறியதை அடுத்து, நண்பர்கள் நால்வரையும் வர சொல்கிறான்.. ஆளுக்கொரு சாவி இருக்கிறது என்பதும்.. ஐவருமே.. திருமணமானவர்கள் என்பதும்..குறிப்பிடத்தக்கது..

ரகசியங்களின் முடிச்சுக்கள் போடப்படும் முன்னே அவிழ்ந்து கொண்டே இருப்பதில்.. மாற்றி மாற்றி ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் நாம் காணும்போது... 'அட'... என்று வியக்காமல் இருக்க முடிவதில்லை..... எத்தனை நெருக் கமான நண்பனாக இருந்தாலும்...குரோதம் வளர.. உங்களை விட்டு உங்கள் நண்பனை ஒருபெண் சில நொடி பார்த்தாள் போதும்... அத்தனை மிருதுவான.. அதே சமயம் கோரமான மனம் கொண்டவனாகவே மனிதன் தன்னை வளர்த்தெடுத்திருக்கிறான் என்பதற்கு இந்தப் படத்தில் வரும் அந்த சாந்தமான.. (ஐ படத்தில் சுரேஷ் கோபி) நண்பன் உதாரணம்..... ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு அவன் மீது சந்தேகம் வந்து விட்டது... இனி உங்களுக்கும் வரலாம்....

"ஒன்னு நாம அஞ்சு பேர்ல யாரோ கொலை பண்ணிருக்கணும்... இல்ல நம்மல தாண்டி ஒருத்தன் வந்திருக்கணும்" என்று ஒருவரையொருவர் குற்றம் சாற்றிக் கொண்டு சண்டையிடும் போது ஒவ்வொருவராக தன் ரகசியங்களை வெளியிடம் இடம்.. அட்டகாசம்...ஒருவன் விட்ட இடத்தில் இருந்து இன்னொருவன் தனக்கான தவறை நீட்டித்திருப்பது... சூட்சும பின்னல்...

தங்களின் மனைவிகளுக்கு தெரியாமல்... மற்ற பெண்களுடன் சகவாசம்...கொள்ளும் போதும் சரி.. ஒரே பெண்ணை மாற்றி மாற்றி ஒவ்வொருவரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் கொண்டாடும் போதும் சரி..இறக்கை கட்டிப் பறக்கிறது... தன் கதை முனைப்பின்...தனிமனித ஆசையின் ரகசியம்.... அது இரவுப் பூனைகளை வெளி விட்டுக் கொண்டேயிருக்கிறது...நண்பர்களின் மனைவிகளை சூழ்நிலைக்குள் தள்ளி... அதே வீட்டுக்குள் கூட்டி வந்த கொண்டாடிய காட்சிகளை சாந்தமான நண்பன் போட்டு உடைக்கும் இடம்.. திருட்டுக்குள் திருட்டுக்குள் திருட்டு...அதைத் தொடர்ந்து... வில்லனைப் போல மாறி விட்ட நண்பனை போதை மருந்து கொடுத்து கட்டி வைத்து... ஏற்கனவே செத்துக் கிடப்பவள் அருகே படுக்க வைக்கிறார்கள்......அதன் பின் நடக்கும் தகிடுதத்தம் வேலைகள் ரத்தம் தெறிக்கும் சூடு...இன்னொரு முறை பார்க்க வேண்டிய திடுக் திருப்பத்துக்குள் தள்ளுகிறது...அங்கிருந்தும் கதை இன்னொரு சுழலுக்குள் சிக்கி நகர்தலில் அந்த அறைக்குள் புகும் மனம்.. கட்டுக்கடங்காமல் தேடுகிறது... சாயம் வெளுத்த மழை....நரி புலியாகும் தந்திரம்..மிரட்டுகிறது.....

ஆங்கிலப் பெண்கள்... பார்க்க பார்க்க அழகாகி விடும் சூட்சுமம்... இந்தப் படத்திலும் இருக்கிறது....படம்.. ஆரம்பத்தில் இருந்தே முன் பின்னாகத் தான் நகருகிறது.. எல்லாருமே தனி தனியாக காவல் துறையால் விசாரிக்கப் படுகிறார்கள்... கொலை என்று ஆரம்பித்து அது தற்கொலையாகி....அதன் பின்... அவள் செத்து விட்டாள் என்று நம்பி.. கை அறுக்கையில்தான் அந்தக் கொலை கொலையாக அரங்கேறுவதில்... ஒரே ஒரு மூளை மட்டும்... எல்லாம் தெரிந்த.. புள்ளியாக.. தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது... அந்தப்புள்ளி இழுக்கும் கோட்டில் முழுப் படமும்.. திக் திக் திடுக்... THE LOFT.... பார்க்க பார்க்க உயரம்.... ரகசியங்கள் என்று ஒன்று இல்லவே இல்லை....அது கண்டிப்பாக வெளி வந்தே தீரும்.. எப்படி என்பது... நேற்றைய இரவுச் சிந்தனை.. அது நாளையும் மாறலாம்.. ரகசியம் நாளுக்கு நாள்.. இடம் பெயரும் நகர்வு கொண்டவை...

- கவிஜி

Pin It