சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு

சினிமாவின் ஒரே பணி கதை சொல்வது அல்லது ஏதோ ஒன்றை விவரிப்பது என்று அடிக்கடி நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

கதை சொல்வது / விவரிப்பது மீதான காதல் சினிமா மீதான காதலாக உருமாற்றம் பெருகிறதா? அல்லது சினிமா மீதான காதல் கதை சொல்வது / விவரிப்பது மீதான காதலாக உருமாற்றம் பெருகிறதா?

திரைப்படக் கல்லூரிகளில் சேர்வதற்கான நேர்முகத் தேர்வுகளில் “நீங்கள் ஏன் சினிமாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்ற பொதுவான கேள்வியை மாணவர்களிடம் பல முறை கேட்டிருக்கிறேன். இதற்கான மாணவர்களின் பதில் பெரும்பாலான நேரங்களில் சலிப்பைத் தருவதாகவே இருக்கும். பெரும்பாலானவர்கள் சொல்வது இதுதான்: “எனக்கு சினிமா மீது கொள்ளை பிரியம். நான் சிறு வயது முதலே சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறேன்.’’

நான் பதிலுக்குக் கேட்பேன்: “யாருக்குத்தான் சினிமா மீது பிரியம் இல்லை? என் அம்மா, பாட்டிக்குக்கூட சினிமா மீது பிரியம்தான். ஒரு காலத்தில் அவர்களும் நிறைய சினிமா பார்த்தார்கள். இப்போது அதற்குப் பதிலாக டெலிவிஷன் சீரியல் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்’’ என்பேன்.

‘இவன் என்ன சொல்ல வருகிறான்’ என்பதுபோல் என்னைப் பார்ப்பார்கள். தொடர்ந்து நான் கேட்பேன்: “சினிமாவை உங்கள் வாழ்க்கைக்கான பாதையாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதனால்தான் திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளீர்கள். எனவே, சினிமா மீதான உங்கள் விருப்பத்தை, காதலை, ப்ரியத்தை, நுணுக்கமாக விவரிக்க முடியுமா?’’ என கேட்பேன்.

இதற்கான பதிலை ஒரு இடைவெளி மற்றும் தயக்கத்திற்குப்பின் சொல்ல ஆரம்பிப் பார்கள். அவர்கள் இந்தப் பதிலில் காட்டும் நுணுக்கம் மற்றும் ஆழத்தை வைத்து அவர்களின் சினிமா மீதான நேசிப்பின் தரத்தை ஓரளவு கணிக்கலாம்.

எதையோ சொல்ல வேண்டும், எதையோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு துடிப்பு ஒரு கலைஞனுக்கு ஏற்படும்பொழுது, அந்தத் துடிப்பு ஒரு குறிப்பிட்ட அளவை அடையும் பொழுது துடிப்பின் அளவிற்கேற்ப அவன் கவிதையையோ, கதையையோ, ஓவியத்தையோ, இசையையோ தேர்ந்தெடுக்கிறான். இந்தக் கலைகள் எல்லாம் அவன் துடிப்பு நிலையைத் திருப்திப்படுத்தாதபோதுதான், இந்தக் கலைகளை மீறிய அல்லது இந்தக் கலைகளையெல்லாம் உள்ளடக்கிய ஒரு கலையை தேடும்பொழுதுதான் சினிமா என்கின்ற கலை அவன் கண்களுக்குப் புலப்படுகிறதோ.

சினிமா என்கின்ற கலை எந்த ஒரு நுட்பமான கலைஞனையும் ஈர்க்கும். ஆனால், வெறும் ஈர்ப்பு மட்டுமே அவனை சினிமாக் கலைஞனாக மாற்றிவிடாது. அதற்கு ஈர்ப்பை மீறிய ஒருவித ஆழமான தேடுதல் அங்கே தேவைப்படுகிறது. அந்த ஆழமான தேடுதலில் அறிவியல், தத்துவம், மனிதம், அரசியல், சிக்கலான உறவுமுறைகள் என எல்லாவற்றையும் கடந்துபோக வேண்டி யிருக்கும்.

இன்றைய டிஜிட்டல் உலகில் சினிமா மீதான இந்த அதீத ஈர்ப்பு மட்டுமே தன்னை சினிமா கலைஞ னாக்கிவிடும் என்று நம்புகின்றனர். இதனால்தான் சினிமாவுக்கான கதையையோ கருப்பொருளையோ தேடும் பொழுது பலருக்கு ஓர் ஆழமில்லாத அவசரத்தன்மை அல்லது மேலோட்டப்போக்கு ஏற்படுகிறது.

சென்ற இரு இதழ்களில் நாம் விவரித்த நான்கு செயல்முறை திட்டங்களில், நான்காவதான செயல்முறைத் திட்டம் இதைத்தான் குறிப்பிடுகிறது. ஒரு திரைக்கதையை எழுதத் தொடங்கும் பொழுது அதன் தொடக்கமாக ஒரு சக்தி வாய்ந்த கருத்துத் திட்டத்தைத் (idea) தேடுகிறோம்.

அதற்காகத்தான், விவரங்களைச் சேகரிப்பது, பின்னர் முறைப்படுத்துவது, முறைப்படுத்திய விவரங்களை அடைகாப்பது என்று முதல் மூன்று செயல் முறைத் திட்டங்களைப் பார்த்தோம். பின்னர் அவ்வாறு அடைகாக்கும்பொழுதுதான் ஒரு பளிச் ‘ஐடியா’ தீப்பொறியாய்த் தோன்றும்.

‘இந்தத் தீப்பொறியை அணையாமல் பாது காப்பதுதான்’ நான்காவதும் இறுதியுமான செயல் முறைத் திட்டம்.

இது சற்று கடினமானப் பணி. குறிப்பாக சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் வாழும் டிஜிட்டல் யுக இளைஞர்களுக்கு மிகமிகக் கடின மான பணி.

கடும் உழைப்புக்குப் பின் ஒரு கருத்துத் திட்டத்தை ஓர் அனிச்சைச் செயலாய் அடையலாம். ஆனால், அந்தக் கருத்துத் திட்டத்தை, அந்தத் தீப் பொறியை அணையவிடாமல் பாதுகாப்பது என்பது அனிச்சை செயலாய் இருக்கமுடியாது. மாறாக, அதற்குப் பெரும் அளவிலான முயற்சி யும் ஒழுக்கமும் தேவைப்படுகின்றன. அத் தீப் பொறியிலிருந்து ஒரு இறுதிப் படைப்பை உருவாக்க திறமையும் உழைப்பும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

இத்தருணத்தில் இருவிதமான தவறுகள் ஏற் பட வாய்ப்புண்டு. ஒன்று, அடைகாக்கும் செயல் முறை திட்டத்தின்போது பலருக்குப் போதுமான பொறுமை இருக்காது. அதற்கு உரிய பணிவும் இருக்காது. இதன் காரணமாக அடைகாக்கும் பருவம் முடிவதற்குள் பொறிக்கப்பட்ட கோழி குஞ்சுபோல அரைவேக்காட்டுத்தனமான ஒரு கருத்துத்திட்டத்தை எடுத்துக்கொண்டு அதுவே மிகச்சிறந்த கருத்துத் திட்டம் என நம்புவர். அல்லது சிலர் அடைகாக்கும் பருவம் முடிந்ததுகூட தெரியாமல் செயலூக்கம் இல்லாமல் பொறுமை யாக இருப்பது. அதனால் ஏதோ ஒரு கருத்துத் திட்டத்தை எடுத்துக் கொண்டு சிறந்த கருத்துத் திட்டமாக செயல்படுவது.

ஒரு சிறந்த கருத்துத்திட்டத்தை முறையாக, உயிரோட்டத்தோடு வெளிப்படுத்துவதில்தான் தீப்பொறியை அணையாமல் பாதுகாக்கக்கூடிய சூட்சுமம் உள்ளது.

மேற்கூறிய இரண்டு தவறுகளிலுமே அனுபவ மின்மை என்கின்ற நீர் தீப்பொறியை அணைத்து விடும்.

எனவே, ‘தீப்பொறியை அணையாமல் பாதுகாப்பது’ என்கின்ற நான்காவது செயல் முறைத் திட்டத்தில் தொடர்ந்த கடும் உழைப்பும், அதன் மூலம் கிடைக்கும் அனுபவமும் முக்கிய மான ஒன்று. அனுபவம் வாய்ந்த சினிமா கலைஞ னுக்கு முதலில் தன் படத்திற்கான கதையை, கருப் பொருளை தேர்ந்தெடுப்பதில் போதை கிடைக் கிறது. பின்னர் அந்தக் கருத்தை, கருப்பொருளை புதுமையான முறையில் புத்துணர்வோடு வெளிப் படுத்துவதில் உச்சக்கட்ட போதை கிடைக்கிறது.

புகழ் பெற்ற ஈரானிய இயக்குநரான ‘அபாஸ் கைரொஸ்தமி’யின் சமீபத்திய படமான “சர்ட்டிஃபைடு காப்பி’’ (certified copy) படத்தைப் பார்த்தபோது இதை என்னால் முழுமையாக உணர முடிந்தது.

ஜப்பானிய இயக்குநர் குரோசாவாவுக்கு அபாஸை ரொம்பவே பிடிக்கும். அபாஸின் படங் களைப் பார்த்து நெகிழ்ந்த குரோசாவா ஒருமுறை அபாஸிடமே பின் வருமாறு கூறினார்: “சத்யஜித் ரே இறந்தபோது நான் மிகவும் கவலையடைந்தேன். அவரைப்போல் படமெடுக்க இவ்வுலகில் யாருமில்லையே என கவலைப்பட்டேன். உன் படங்களைப் பார்த்த பிறகு எனக்கு அந்தக் கவலைப் போய்விட்டது.’’

மிகவும் நுட்பமாக, கவித்துவமாகப் பட மெடுப்பவர் அபாஸ். அவரின் ‘சர்டிஃபைடு காப்பி’ சினிமாவை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது. இப்படத்தைப் பார்ப்பவர்கள் ஒன்று அதனுள் அப்படியே அமிழ்ந்துவிடுவர் அல்லது அதனோடு ஒட்டாமல் வெளியேயே நின்றுவிடுவர்.

படத்தில் நடுத்தர வயதைத் தாண்டிய ஓர் ஆணும் பெண்ணும் இத்தாலியில் உள்ள அழகான துஸ்கானி நகரின் புறநகர் பகுதியில் நாள் முழுதும் பயணித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார் கள். படம் முழுவதும் இவர்களின் உரையாடல் தான்.

நாம் நம் தமிழ்ப் படங்களை ‘மிகஅதிகமாக பேசுகிறார்கள்’ என்று பல நேரங்களில் கிண்டல டித்த துண்டு. வெறும் உரையாடலை பதிவு பண்ண சினிமா எதற்கு என்றுகூட கேட்டிருக்கிறோம்.

ஆனால், இந்தப் படம் முழுவதும் உரை யாடல்தான். இரு அற்புதமான நடிகர்களின் மிக அழகான உரையாடல்.

பெண்ணாக வருவது ஜூலியட் பினோஷ் என்கின்ற பிரெஞ்சு நடிகை (இப்படத்திற்காக இந்த ஆண்டு இவர் கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருக்கிறார்). ஆணாக வருவது வில்லியம் ஷிமெல் என்கின்ற முதன்முறை நடிகர். படம் முழுவதும் இருவரும் உரையாடிக் கொண்டேயிருந்தாலும் படத்தில் நம்மை வெகு வாக கவர்வது இருவரின் அழகான நடிப்பு மற்றும் உரையாடலைத் தாண்டிய மிளிரும் சினிமா. அந்த மிளிரும் சினிமாதான் நமக்குள்ளே நம் உணர்வு களை மெல்ல தட்டி, ஏதோ ஓர் அனுபவத்தை நமக்குள்ளே பாய்ச்சுகிறது.

பொதுவாக சொல்வார்கள், ‘அனுபவம்தான் வாழ்க்கை; வாழ்க்கைதான் அனுபவம்’ என்று. ஆனால் மனிதனின் வாழ்நாளை கணக்கில் எடுத்துப்பார்க்கும்போது, ஒருவனின் சொந்த அனுபவம் மட்டுமே வாழ்க்கை யாக இருந்தால் அது வாழ்க்கையாக இருக்குமா என்ன? கலைதான் மற்ற பலரின் அனுபவத்தை ஒருவனுக்குத் தருகிறது. பல்வேறு மனிதர்களின் பல்வேறு அனுபவங் களை மனிதன் உட்கொள்வதால்தான் அவனது வாழ்க்கை விஸ்தாரமாகவும், வண்ணமயமாகவும் அதேநேரத் தில் சில சிக்கல்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

மற்றவர்களின் அனுபவம் ஒருபோதும் ஒருவனுக்குச் சொந்த அனுபவமாக மாறாது என்ற கருத்தும் உண்டு. இது ஒருவிதத்தில் உண்மையாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் உண்மை யல்ல.

சொந்த அனுபவங்கள் ஒருவனது சொந்த நடைமுறை வாழ்க்கை கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், மனிதன் உடல் ரீதியான நடை முறை வாழ்க்கைக்கு அப்பாற் பட்டு, மனதால், கற்பனையால், சிந்தனையால், உணர்வுகளால்தான் அதிகம் வாழ்கிறான். அதனால் தான் மனித வாழ்க்கையில் கலைக்கு அத்தனை மாபெரும் பங்கு உள்ளது. குறிப்பாக, சினிமா வால் (அது அற்புதமாக கையாளப்படும்பொழுது) அதன் படைப்பாளி பல்முனை அனுபவங்களைப் பலருக்கு சொந்த அனுபவமாக்குகிறான். இந்த நுட்பத்தை உணர்தலே ஆழமான சினிமா ரசிகனுக் கும் சினிமா படைப்பாளிகளுக்கும் சினிமா மீதான அவர்களின் தொடர்புக்கு மதிப்பீடு தருகிறது.

சினிமாவுக்காக எழுதும்பொழுது சினிமா வை அறிந்த எழுத்தாளன், தான் உணர்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்கான அனுபவமாக மாற்றுகின்ற மாயாஜால வேலையைத்தான் செய்கிறான். அதற்காக சினிமாவுக்கே உரிய பல்வேறு மாயவலைகளை வைத்து அடிப்படை கதைக்கு, கருப்பொருளுக்கு அழகூட்டுகிறான். ஒரு தேர்ந்த சமையல் கலைஞன் பல்வேறு பொருட் களைக் கொண்டு எப்படி ஒரு சுவையான உணவு பண்டத்தை உருவாக்கு வானோ அது போன்ற தொரு செயல்தான் சினிமா எடுப்பது. அந்த உணவு பண்டத்துக்கான செய்முறையை நுணுக்க மாக உணர்வுபூர்வமாக எழுதுவது போன்றுதான் திரைக்கதை எழுதுவது. அந்த திரைக்கதை எல்லோரும் படிப்பதற்கான ஒன்று அல்ல. மாறாக, அதை இயக்கப் போகும் இயக்குநருக்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு செய்முறை. தற்போது திரைக்கதைகளை வாசிப்புக்காக பலர் புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை திரைக்கதைகள் வாசிப்புக் கானவை அல்ல; மாறாக செய்முறைக்கானவை.

அபாஸின் ‘சர்ட்டிஃபைடு காப்பி’ முழுக்க முழுக்க அனுபவப்பட வேண்டிய படம். மிக உயர்நிலையில் அறிவு சார்ந்த, உணர்வு சார்ந்த படம் அது. அப்படத்தின் கதையை கதையாக நான் யாருக்கும் சொல்லமுடியாது. அப்படி சொன்னால் அபாஸ் சொல்ல முயன்றியதிலிருந்து வேறு எதையோ சொல்லிக் கொண்டிருப்பேன்.

தார்க்கோவ்ஸ்கி கூறுகிறார்: “கலையின் அடிப்படையே ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தத்தை கொண்டிருப்பதுதான்”. அப்பாஸின் இப்படம் அதைத்தான் செய்கிறது. இப்படத்தில் வரும் ஆண் ஓர் எழுத்தாளன், கலை விமர்சகன். படத்தின் துவக்கத்திலேயே அவன் தான் எழுதிய புத்தகம் பற்றி ஒரு கூட்டத்தில் பேசுகிறான். கலையின் மூலப்பிரதிக்கும் அதன் நகலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் ஒரே பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது. உண்மையில் நகல், மூலத்தை நோக்கி நம்மை பயணிக்க வைக்கிறது... என்று அவன் பேசுகிறான். அவன் புத்தகத்தின் கருப்பொருளும் அதுதான்.

படத்தில் வரும் பெண், அக்கூட்டத்தில் அவன் பேச்சை கேட்கும் ஒருத்தியாக இருக்கிறாள். அவள் ஓவியக் கூடம் ஒன்றை நடத்துகிறாள். கூட்டத்திற்கு பின் இருவரும் சந்திக்கிறார்கள். அவளின் காரில் இருவரும் தெற்கு துஸ்கானி (Tuscany) நகரின் அழகான பகுதியில் பயணிக்கின்றனர். அப்போது அவர்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசு கிறார்கள். கலை, அவர்களின் வாழ்க்கை, நெருக்க மானவர்கள், பண்பாடு, உணவு... என்று பல வற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். அவர்களின் உரையாடலில் உள்ள அழுத்தம், நெருக்கம் போன்றவற்றை உணரும்போது அவர்களைப் பற்றி பல குழப்பங்கள் நம் மனதில் எழும். அவர்கள் யார்? இப்போதுதான் முதன் முறையாக சந்திக் கிறார்களா? இதற்கு முன்பே சந்தித்திருக் கிறார்களா? என்றெல்லாம் பல கேள்விகளை நம் மனதில் எழுப்பும். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் ஓர் அழகான சிறு உணவு விடுதியில் இருக்கும்பொழுது அந்த உணவு விடுதியின் பெண், அவளிடம் அவர்கள் இருவரையும் கணவன் மனைவியாக பாவித்துப் பேசுவாள். அவளும் இதை பின்னர் அவனிடம் சொல்லுவாள். தொடர்ந்து அவர்கள் மீண்டும் பயணிப்பார்கள். முன்பு போலவே பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவார்கள். இப்போது நமக்கு அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருந்திருப் பார்களோ என்ற சந்தேகம் வரும். ஆனால், அதற்கான எந்த முகாந்தரமும் படத்தில் இருக்காது. இறுதியில் இருவரும் ஓர் ஓட்டலின் அறையில் இருப்பார்கள். அப்போது நாம் இருவரும் இந்த ஓட்டலில்தானே முதன்முதலாக தங்கினோம். இப்படித்தானே நடந்து கொண்டோம், இப்படித் தானே சண்டை போட்டோம் என்று பேசிக் கொள்வார்கள். இவர்கள் இருவரும் உண்மை யிலேயே கணவன் மனைவிதானோ என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். ஆனால், அப்படி இருக்க சந்தர்ப்பமே இல்லை என்று நம் மனது சொல்லும். படத்தின் ஒற்றை வரி கதையாக அபாஸ் சொல்வது இதுதான்: “இப்படத்தில் வரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழ்வது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்’’ என்கிறார்.

இவ்விருவரின் வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் பல்வேறு ஆண் - பெண்ணுக்கு நிகழும் நிகழ்வு களின் அசலின் நகல்கள்தானோ! இதைத்தான் அபாஸ் மேற்கூறிய வரிகளில் அர்த்தப்படுத்து கிறாரா? என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன். கலையின் அடிப்படையான ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் தரும் பணியைச் சினிமாவில் இத்தனை அழகாக இதற்கு முன்பு யாரும் செய்ததில்லை.

திரைப்பட கலைஞன், அவன் எழுத்தாளனாக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி. அவன் ஒரு கடத்தல்காரன். அனுபவக் கடத்தல் காரன். அதற்காக அவன் கையில் எடுக்கும் ஆயுதம் தான் சினிமா என்கின்ற மாயப்பெட்டி. இந்தப் பெட்டியைத் திறக்கவும், அதில் பல்வேறு அனுபவப் புதையல்களைப் போடவும், பின்னர் அதை மூடவும், பின்னர் அதை நினைத்த இடத்துக்கு எடுத்துச் செல்லவும், பின்னர் அப்பெட்டியை மீண்டும் திறந்து உள்ளிருந்த அனுபவப் புதையல் களை மின்னும் நட்சத்திரங்களாக காற்றில் பறக்க விடவும் அவனுக்கு பல நுட்பங்களும், நுணுக் கங்களும் தெரிந்திருக்க வேண்டி யுள்ளது.

சினிமாவை அடிப்படையில் கலை ஊடகம் என்று சொன்னாலும், வேறு எந்த கலை ஊடகத் துக்கும் இல்லாத அளவு இதில் அறிவியலும் தொழில்நுட்பமும் ஒரு பாகமாய் உள்ளது. அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு கலை யில் ஆர்வம் இருக்கும். அதை அனுபவிக்க, அது குறித்து தெரிந்துகொள்ள நேரம் செலவழிப்பர். ஆனால், அடிப்படையில் சினிமா கலைஞர்களாக இருப்பவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் குறித்து அக்கறை செலுத்த வேண்டுமா? நிச்சயமாக செலுத்தியாக வேண்டும். ஏனென்றால், அறிவியல், தொழில்நுட்பத்துக்கும் சினிமாவின் பொருளா தாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நூறு கோடி ரூபாய் செலவழித்துப் படம் எடுக்கப் படுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாகவும் படம் எடுக்கப்படுகிறது. சமீபத்தில் தமிழ்ப்படம் ஒன்று HD-SCR எனப்படும் புகைப்பட கேமராவால் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் மற்ற படங் களைப் போலவே திரையிடப்பட்டது. அந்த கேமராவின் விலையே வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய்தான் என்று கேள்விப்பட்டவுடன் பல இளம் இயக்குநர்களும் எழுத்தாளர்களும் அந்தப் புகைப் படக் கருவி பற்றிய விவரங்களைக் கூகுளில் தேடினர்.

படப்பிடிப்பில் கேமராவுக்கு முன்னே நிகழ்த்தப்படுவது கலையாக இருந்தாலும், அடிப் படையில் படிப்பிடிப்பு என்பது கேமரா, ஒளி அமைப்பு, சூரிய ஒளித்தன்மை பற்றிய அறிவு, ஒலி அமைப்பு, லென்ஸ்... என்று தொழில் நுட்பமய மாகத்தான் இருக்கும்.

படப்பிடிப்பு முடிந்ததும், போஸ்ட் ப்ரொடக்ஷன் என்றழைக்கப் படும் படத்தொகுப்பு மற்றும் ஒலி சேர்க்கைப் பணியும் முழுக்க முழுக்க தொழில் நுட்பமய மானது. இந்தக் கட்டத்தின்போது படத்தின் இயக்குநர் தன் படத்தை குறைந்தது 200 - 300 முறை பார்க்க வேண்டும். ‘அவ்தார்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேம்ரூன், அப்படத்தை போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியின்போது கிட்ட தட்ட 5000 முறை பார்க்க வேண்டி வந்ததாம். காரணம், அப்பணி அத்தனை தொழில்நுட்பம் நிறைந்ததாய் இருந்ததாம். இப்படி பலமுறை படத்தின் இயக்குநர் தன் படத்தை பார்ப்பதற்குக் காரணம், அது பலரால் முதன் முறையாக பார்க்கப்படப் போகிறது, அப்போது அது சரியான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் பார்ப்பான்.

முதன்முறையாக பார்க்கப்போகும் ரசிகனின் சார்பாகத்தான் தன் படத்தை இயக்குநரும், உருவாக்கியவர்களும் உருவாக்கத்தின்போது பல நூறு முறை, பல ஆயிரம் முறை பார்க்கிறார்கள்.

படத்திற்கான கதை, திரைக்கதை எழுதும் போது இந்தத் தொழில்நுட்ப கலப்பு, தொழில் நுட்ப அறிவு பற்றிய அடிப்படை தெளிவாவது எழுத்தாளனுக்கு இருக்க வேண்டும்.

வரும் இதழ்களில் இன்றைய சினிமாவுக்கும் தொழில் நுட்பங்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றி பார்ப்போம். 

சினிமாவின் ஒரே பணி கதை சொல்வது அல்லது ஏதோ ஒன்றை விவரிப்பது என்று அடிக்கடி நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

கதை சொல்வது / விவரிப்பது மீதான காதல் சினிமா மீதான காதலாக உருமாற்றம் பெருகிறதா? அல்லது சினிமா மீதான காதல் கதை சொல்வது / விவரிப்பது மீதான காதலாக உருமாற்றம் பெருகிறதா?

திரைப்படக் கல்லூரிகளில் சேர்வதற்கான நேர்முகத் தேர்வுகளில் நீங்கள் ஏன் சினிமாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்ற பொதுவான கேள்வியை மாணவர்களிடம் பல முறை கேட்டிருக்கிறேன். இதற்கான மாணவர்களின் பதில் பெரும்பாலான நேரங்களில் சலிப்பைத் தருவதாகவே இருக்கும். பெரும்பாலானவர்கள் சொல்வது இதுதான்: எனக்கு சினிமா மீது கொள்ளை பிரியம். நான் சிறு வயது முதலே சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறேன்.’’

நான் பதிலுக்குக் கேட்பேன்: யாருக்குத்தான் சினிமா மீது பிரியம் இல்லை? என் அம்மா, பாட்டிக்குக்கூட சினிமா மீது பிரியம்தான். ஒரு காலத்தில் அவர்களும் நிறைய சினிமா பார்த்தார்கள். இப்போது அதற்குப் பதிலாக டெலிவிஷன் சீரியல் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்’’ என்பேன்.

இவன் என்ன சொல்ல வருகிறான்என்பதுபோல் என்னைப் பார்ப்பார்கள். தொடர்ந்து நான் கேட்பேன்: சினிமாவை உங்கள் வாழ்க்கைக்கான பாதையாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதனால்தான் திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளீர்கள். எனவே, சினிமா மீதான உங்கள் விருப்பத்தை, காதலை, ப்ரியத்தை, நுணுக்கமாக விவரிக்க முடியுமா?’’ என கேட்பேன்.

இதற்கான பதிலை ஒரு இடைவெளி மற்றும் தயக்கத்திற்குப்பின் சொல்ல ஆரம்பிப் பார்கள். அவர்கள் இந்தப் பதிலில் காட்டும் நுணுக்கம் மற்றும் ஆழத்தை வைத்து அவர்களின் சினிமா மீதான நேசிப்பின் தரத்தை ஓரளவு கணிக்கலாம்.

எதையோ சொல்ல வேண்டும், எதையோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு துடிப்பு ஒரு கலைஞனுக்கு ஏற்படும்பொழுது, அந்தத் துடிப்பு ஒரு குறிப்பிட்ட அளவை அடையும் பொழுது துடிப்பின் அளவிற்கேற்ப அவன் கவிதையையோ, கதையையோ, ஓவியத்தையோ, இசையையோ தேர்ந்தெடுக்கிறான். இந்தக் கலைகள் எல்லாம் அவன் துடிப்பு நிலையைத் திருப்திப்படுத்தாதபோதுதான், இந்தக் கலைகளை மீறிய அல்லது இந்தக் கலைகளையெல்லாம் உள்ளடக்கிய ஒரு கலையை தேடும்பொழுதுதான் சினிமா என்கின்ற கலை அவன் கண்களுக்குப் புலப்படுகிறதோ.

சினிமா என்கின்ற கலை எந்த ஒரு நுட்பமான கலைஞனையும் ஈர்க்கும். ஆனால், வெறும் ஈர்ப்பு மட்டுமே அவனை சினிமாக் கலைஞனாக மாற்றிவிடாது. அதற்கு ஈர்ப்பை மீறிய ஒருவித ஆழமான தேடுதல் அங்கே தேவைப்படுகிறது. அந்த ஆழமான தேடுதலில் அறிவியல், தத்துவம், மனிதம், அரசியல், சிக்கலான உறவுமுறைகள் என எல்லாவற்றையும் கடந்துபோக வேண்டி யிருக்கும்.

இன்றைய டிஜிட்டல் உலகில் சினிமா மீதான இந்த அதீத ஈர்ப்பு மட்டுமே தன்னை சினிமா கலைஞ னாக்கிவிடும் என்று நம்புகின்றனர். இதனால்தான் சினிமாவுக்கான கதையையோ கருப்பொருளையோ தேடும் பொழுது பலருக்கு ஓர் ஆழமில்லாத அவசரத்தன்மை அல்லது மேலோட்டப்போக்கு ஏற்படுகிறது.

சென்ற இரு இதழ்களில் நாம் விவரித்த நான்கு செயல்முறை திட்டங்களில், நான்காவதான செயல்முறைத் திட்டம் இதைத்தான் குறிப்பிடுகிறது. ஒரு திரைக்கதையை எழுதத் தொடங்கும் பொழுது அதன் தொடக்கமாக ஒரு சக்தி வாய்ந்த கருத்துத் திட்டத்தைத் (idea) தேடுகிறோம்.

அதற்காகத்தான், விவரங்களைச் சேகரிப்பது, பின்னர் முறைப்படுத்துவது, முறைப்படுத்திய விவரங்களை அடைகாப்பது என்று முதல் மூன்று செயல் முறைத் திட்டங்களைப் பார்த்தோம். பின்னர் அவ்வாறு அடைகாக்கும்பொழுதுதான் ஒரு பளிச் ஐடியாதீப்பொறியாய்த் தோன்றும்.

இந்தத் தீப்பொறியை அணையாமல் பாது காப்பதுதான்நான்காவதும் இறுதியுமான செயல் முறைத் திட்டம்.

இது சற்று கடினமானப் பணி. குறிப்பாக சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் வாழும் டிஜிட்டல் யுக இளைஞர்களுக்கு மிகமிகக் கடின மான பணி.

கடும் உழைப்புக்குப் பின் ஒரு கருத்துத் திட்டத்தை ஓர் அனிச்சைச் செயலாய் அடையலாம். ஆனால், அந்தக் கருத்துத் திட்டத்தை, அந்தத் தீப் பொறியை அணையவிடாமல் பாதுகாப்பது என்பது அனிச்சை செயலாய் இருக்கமுடியாது. மாறாக, அதற்குப் பெரும் அளவிலான முயற்சி யும் ஒழுக்கமும் தேவைப்படுகின்றன. அத் தீப் பொறியிலிருந்து ஒரு இறுதிப் படைப்பை உருவாக்க திறமையும் உழைப்பும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

இத்தருணத்தில் இருவிதமான தவறுகள் ஏற் பட வாய்ப்புண்டு. ஒன்று, அடைகாக்கும் செயல் முறை திட்டத்தின்போது பலருக்குப் போதுமான பொறுமை இருக்காது. அதற்கு உரிய பணிவும் இருக்காது. இதன் காரணமாக அடைகாக்கும் பருவம் முடிவதற்குள் பொறிக்கப்பட்ட கோழி குஞ்சுபோல அரைவேக்காட்டுத்தனமான ஒரு கருத்துத்திட்டத்தை எடுத்துக்கொண்டு அதுவே மிகச்சிறந்த கருத்துத் திட்டம் என நம்புவர். அல்லது சிலர் அடைகாக்கும் பருவம் முடிந்ததுகூட தெரியாமல் செயலூக்கம் இல்லாமல் பொறுமை யாக இருப்பது. அதனால் ஏதோ ஒரு கருத்துத் திட்டத்தை எடுத்துக் கொண்டு சிறந்த கருத்துத் திட்டமாக செயல்படுவது.

ஒரு சிறந்த கருத்துத்திட்டத்தை முறையாக, உயிரோட்டத்தோடு வெளிப்படுத்துவதில்தான் தீப்பொறியை அணையாமல் பாதுகாக்கக்கூடிய சூட்சுமம் உள்ளது.

மேற்கூறிய இரண்டு தவறுகளிலுமே அனுபவ மின்மை என்கின்ற நீர் தீப்பொறியை அணைத்து விடும்.

எனவே, ‘தீப்பொறியை அணையாமல் பாதுகாப்பதுஎன்கின்ற நான்காவது செயல் முறைத் திட்டத்தில் தொடர்ந்த கடும் உழைப்பும், அதன் மூலம் கிடைக்கும் அனுபவமும் முக்கிய மான ஒன்று. அனுபவம் வாய்ந்த சினிமா கலைஞ னுக்கு முதலில் தன் படத்திற்கான கதையை, கருப் பொருளை தேர்ந்தெடுப்பதில் போதை கிடைக் கிறது. பின்னர் அந்தக் கருத்தை, கருப்பொருளை புதுமையான முறையில் புத்துணர்வோடு வெளிப் படுத்துவதில் உச்சக்கட்ட போதை கிடைக்கிறது.

புகழ் பெற்ற ஈரானிய இயக்குநரான அபாஸ் கைரொஸ்தமியின் சமீபத்திய படமான சர்ட்டிஃபைடு காப்பி’’ (certified copy) படத்தைப் பார்த்தபோது இதை என்னால் முழுமையாக உணர முடிந்தது.

ஜப்பானிய இயக்குநர் குரோசாவாவுக்கு அபாஸை ரொம்பவே பிடிக்கும். அபாஸின் படங் களைப் பார்த்து நெகிழ்ந்த குரோசாவா ஒருமுறை அபாஸிடமே பின் வருமாறு கூறினார்: சத்யஜித் ரே இறந்தபோது நான் மிகவும் கவலையடைந்தேன். அவரைப்போல் படமெடுக்க இவ்வுலகில் யாருமில்லையே என கவலைப்பட்டேன். உன் படங்களைப் பார்த்த பிறகு எனக்கு அந்தக் கவலைப் போய்விட்டது.’’

மிகவும் நுட்பமாக, கவித்துவமாகப் பட மெடுப்பவர் அபாஸ். அவரின் சர்டிஃபைடு காப்பிசினிமாவை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது. இப்படத்தைப் பார்ப்பவர்கள் ஒன்று அதனுள் அப்படியே அமிழ்ந்துவிடுவர் அல்லது அதனோடு ஒட்டாமல் வெளியேயே நின்றுவிடுவர்.

படத்தில் நடுத்தர வயதைத் தாண்டிய ஓர் ஆணும் பெண்ணும் இத்தாலியில் உள்ள அழகான துஸ்கானி நகரின் புறநகர் பகுதியில் நாள் முழுதும் பயணித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார் கள். படம் முழுவதும் இவர்களின் உரையாடல் தான்.

நாம் நம் தமிழ்ப் படங்களை மிகஅதிகமாக பேசுகிறார்கள்என்று பல நேரங்களில் கிண்டல டித்த துண்டு. வெறும் உரையாடலை பதிவு பண்ண சினிமா எதற்கு என்றுகூட கேட்டிருக்கிறோம்.

ஆனால், இந்தப் படம் முழுவதும் உரை யாடல்தான். இரு அற்புதமான நடிகர்களின் மிக அழகான உரையாடல்.

பெண்ணாக வருவது ஜூலியட் பினோஷ் என்கின்ற பிரெஞ்சு நடிகை (இப்படத்திற்காக இந்த ஆண்டு இவர் கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருக்கிறார்). ஆணாக வருவது வில்லியம் ஷிமெல் என்கின்ற முதன்முறை நடிகர். படம் முழுவதும் இருவரும் உரையாடிக் கொண்டேயிருந்தாலும் படத்தில் நம்மை வெகு வாக கவர்வது இருவரின் அழகான நடிப்பு மற்றும் உரையாடலைத் தாண்டிய மிளிரும் சினிமா. அந்த மிளிரும் சினிமாதான் நமக்குள்ளே நம் உணர்வு களை மெல்ல தட்டி, ஏதோ ஓர் அனுபவத்தை நமக்குள்ளே பாய்ச்சுகிறது.

பொதுவாக சொல்வார்கள், ‘அனுபவம்தான் வாழ்க்கை; வாழ்க்கைதான் அனுபவம்என்று. ஆனால் மனிதனின் வாழ்நாளை கணக்கில் எடுத்துப்பார்க்கும்போது, ஒருவனின் சொந்த அனுபவம் மட்டுமே வாழ்க்கை யாக இருந்தால் அது வாழ்க்கையாக இருக்குமா என்ன? கலைதான் மற்ற பலரின் அனுபவத்தை ஒருவனுக்குத் தருகிறது. பல்வேறு மனிதர்களின் பல்வேறு அனுபவங் களை மனிதன் உட்கொள்வதால்தான் அவனது வாழ்க்கை விஸ்தாரமாகவும், வண்ணமயமாகவும் அதேநேரத் தில் சில சிக்கல்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

மற்றவர்களின் அனுபவம் ஒருபோதும் ஒருவனுக்குச் சொந்த அனுபவமாக மாறாது என்ற கருத்தும் உண்டு. இது ஒருவிதத்தில் உண்மையாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் உண்மை யல்ல.

சொந்த அனுபவங்கள் ஒருவனது சொந்த நடைமுறை வாழ்க்கை கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், மனிதன் உடல் ரீதியான நடை முறை வாழ்க்கைக்கு அப்பாற் பட்டு, மனதால், கற்பனையால், சிந்தனையால், உணர்வுகளால்தான் அதிகம் வாழ்கிறான். அதனால் தான் மனித வாழ்க்கையில் கலைக்கு அத்தனை மாபெரும் பங்கு உள்ளது. குறிப்பாக, சினிமா வால் (அது அற்புதமாக கையாளப்படும்பொழுது) அதன் படைப்பாளி பல்முனை அனுபவங்களைப் பலருக்கு சொந்த அனுபவமாக்குகிறான். இந்த நுட்பத்தை உணர்தலே ஆழமான சினிமா ரசிகனுக் கும் சினிமா படைப்பாளிகளுக்கும் சினிமா மீதான அவர்களின் தொடர்புக்கு மதிப்பீடு தருகிறது.

சினிமாவுக்காக எழுதும்பொழுது சினிமா வை அறிந்த எழுத்தாளன், தான் உணர்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்கான அனுபவமாக மாற்றுகின்ற மாயாஜால வேலையைத்தான் செய்கிறான். அதற்காக சினிமாவுக்கே உரிய பல்வேறு மாயவலைகளை வைத்து அடிப்படை கதைக்கு, கருப்பொருளுக்கு அழகூட்டுகிறான். ஒரு தேர்ந்த சமையல் கலைஞன் பல்வேறு பொருட் களைக் கொண்டு எப்படி ஒரு சுவையான உணவு பண்டத்தை உருவாக்கு வானோ அது போன்ற தொரு செயல்தான் சினிமா எடுப்பது. அந்த உணவு பண்டத்துக்கான செய்முறையை நுணுக்க மாக உணர்வுபூர்வமாக எழுதுவது போன்றுதான் திரைக்கதை எழுதுவது. அந்த திரைக்கதை எல்லோரும் படிப்பதற்கான ஒன்று அல்ல. மாறாக, அதை இயக்கப் போகும் இயக்குநருக்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு செய்முறை. தற்போது திரைக்கதைகளை வாசிப்புக்காக பலர் புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை திரைக்கதைகள் வாசிப்புக் கானவை அல்ல; மாறாக செய்முறைக்கானவை.

அபாஸின் சர்ட்டிஃபைடு காப்பிமுழுக்க முழுக்க அனுபவப்பட வேண்டிய படம். மிக உயர்நிலையில் அறிவு சார்ந்த, உணர்வு சார்ந்த படம் அது. அப்படத்தின் கதையை கதையாக நான் யாருக்கும் சொல்லமுடியாது. அப்படி சொன்னால் அபாஸ் சொல்ல முயன்றியதிலிருந்து வேறு எதையோ சொல்லிக் கொண்டிருப்பேன்.

தார்க்கோவ்ஸ்கி கூறுகிறார்: கலையின் அடிப்படையே ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தத்தை கொண்டிருப்பதுதான்”. அப்பாஸின் இப்படம் அதைத்தான் செய்கிறது. இப்படத்தில் வரும் ஆண் ஓர் எழுத்தாளன், கலை விமர்சகன். படத்தின் துவக்கத்திலேயே அவன் தான் எழுதிய புத்தகம் பற்றி ஒரு கூட்டத்தில் பேசுகிறான். கலையின் மூலப்பிரதிக்கும் அதன் நகலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் ஒரே பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது. உண்மையில் நகல், மூலத்தை நோக்கி நம்மை பயணிக்க வைக்கிறது... என்று அவன் பேசுகிறான். அவன் புத்தகத்தின் கருப்பொருளும் அதுதான்.

படத்தில் வரும் பெண், அக்கூட்டத்தில் அவன் பேச்சை கேட்கும் ஒருத்தியாக இருக்கிறாள். அவள் ஓவியக் கூடம் ஒன்றை நடத்துகிறாள். கூட்டத்திற்கு பின் இருவரும் சந்திக்கிறார்கள். அவளின் காரில் இருவரும் தெற்கு துஸ்கானி (Tuscany) நகரின் அழகான பகுதியில் பயணிக்கின்றனர். அப்போது அவர்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசு கிறார்கள். கலை, அவர்களின் வாழ்க்கை, நெருக்க மானவர்கள், பண்பாடு, உணவு... என்று பல வற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். அவர்களின் உரையாடலில் உள்ள அழுத்தம், நெருக்கம் போன்றவற்றை உணரும்போது அவர்களைப் பற்றி பல குழப்பங்கள் நம் மனதில் எழும். அவர்கள் யார்? இப்போதுதான் முதன் முறையாக சந்திக் கிறார்களா? இதற்கு முன்பே சந்தித்திருக் கிறார்களா? என்றெல்லாம் பல கேள்விகளை நம் மனதில் எழுப்பும். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் ஓர் அழகான சிறு உணவு விடுதியில் இருக்கும்பொழுது அந்த உணவு விடுதியின் பெண், அவளிடம் அவர்கள் இருவரையும் கணவன் மனைவியாக பாவித்துப் பேசுவாள். அவளும் இதை பின்னர் அவனிடம் சொல்லுவாள். தொடர்ந்து அவர்கள் மீண்டும் பயணிப்பார்கள். முன்பு போலவே பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவார்கள். இப்போது நமக்கு அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருந்திருப் பார்களோ என்ற சந்தேகம் வரும். ஆனால், அதற்கான எந்த முகாந்தரமும் படத்தில் இருக்காது. இறுதியில் இருவரும் ஓர் ஓட்டலின் அறையில் இருப்பார்கள். அப்போது நாம் இருவரும் இந்த ஓட்டலில்தானே முதன்முதலாக தங்கினோம். இப்படித்தானே நடந்து கொண்டோம், இப்படித் தானே சண்டை போட்டோம் என்று பேசிக் கொள்வார்கள். இவர்கள் இருவரும் உண்மை யிலேயே கணவன் மனைவிதானோ என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். ஆனால், அப்படி இருக்க சந்தர்ப்பமே இல்லை என்று நம் மனது சொல்லும். படத்தின் ஒற்றை வரி கதையாக அபாஸ் சொல்வது இதுதான்: இப்படத்தில் வரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழ்வது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானா லும் நிகழலாம்’’ என்கிறார்.

இவ்விருவரின் வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் பல்வேறு ஆண் - பெண்ணுக்கு நிகழும் நிகழ்வு களின் அசலின் நகல்கள்தானோ! இதைத்தான் அபாஸ் மேற்கூறிய வரிகளில் அர்த்தப்படுத்து கிறாரா? என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன். கலையின் அடிப்படையான ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் தரும் பணியைச் சினிமாவில் இத்தனை அழகாக இதற்கு முன்பு யாரும் செய்ததில்லை.

திரைப்பட கலைஞன், அவன் எழுத்தாளனாக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி. அவன் ஒரு கடத்தல்காரன். அனுபவக் கடத்தல் காரன். அதற்காக அவன் கையில் எடுக்கும் ஆயுதம் தான் சினிமா என்கின்ற மாயப்பெட்டி. இந்தப் பெட்டியைத் திறக்கவும், அதில் பல்வேறு அனுபவப் புதையல்களைப் போடவும், பின்னர் அதை மூடவும், பின்னர் அதை நினைத்த இடத்துக்கு எடுத்துச் செல்லவும், பின்னர் அப்பெட்டியை மீண்டும் திறந்து உள்ளிருந்த அனுபவப் புதையல் களை மின்னும் நட்சத்திரங்களாக காற்றில் பறக்க விடவும் அவனுக்கு பல நுட்பங்களும், நுணுக் கங்களும் தெரிந்திருக்க வேண்டி யுள்ளது.

சினிமாவை அடிப்படையில் கலை ஊடகம் என்று சொன்னாலும், வேறு எந்த கலை ஊடகத் துக்கும் இல்லாத அளவு இதில் அறிவியலும் தொழில்நுட்பமும் ஒரு பாகமாய் உள்ளது. அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு கலை யில் ஆர்வம் இருக்கும். அதை அனுபவிக்க, அது குறித்து தெரிந்துகொள்ள நேரம் செலவழிப்பர். ஆனால், அடிப்படையில் சினிமா கலைஞர்களாக இருப்பவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் குறித்து அக்கறை செலுத்த வேண்டுமா? நிச்சயமாக செலுத்தியாக வேண்டும். ஏனென்றால், அறிவியல், தொழில்நுட்பத்துக்கும் சினிமாவின் பொருளா தாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நூறு கோடி ரூபாய் செலவழித்துப் படம் எடுக்கப் படுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாகவும் படம் எடுக்கப்படுகிறது. சமீபத்தில் தமிழ்ப்படம் ஒன்று HD-SCR எனப்படும் புகைப்பட கேமராவால் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் மற்ற படங் களைப் போலவே திரையிடப்பட்டது. அந்த கேமராவின் விலையே வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய்தான் என்று கேள்விப்பட்டவுடன் பல இளம் இயக்குநர்களும் எழுத்தாளர்களும் அந்தப் புகைப் படக் கருவி பற்றிய விவரங்களைக் கூகுளில் தேடினர்.

படப்பிடிப்பில் கேமராவுக்கு முன்னே நிகழ்த்தப்படுவது கலையாக இருந்தாலும், அடிப் படையில் படிப்பிடிப்பு என்பது கேமரா, ஒளி அமைப்பு, சூரிய ஒளித்தன்மை பற்றிய அறிவு, ஒலி அமைப்பு, லென்ஸ்... என்று தொழில் நுட்பமய மாகத்தான் இருக்கும்.

படப்பிடிப்பு முடிந்ததும், போஸ்ட் ப்ரொடக்ஷன் என்றழைக்கப் படும் படத்தொகுப்பு மற்றும் ஒலி சேர்க்கைப் பணியும் முழுக்க முழுக்க தொழில் நுட்பமய மானது. இந்தக் கட்டத்தின்போது படத்தின் இயக்குநர் தன் படத்தை குறைந்தது 200 - 300 முறை பார்க்க வேண்டும். அவ்தார்படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேம்ரூன், அப்படத்தை போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியின்போது கிட்ட தட்ட 5000 முறை பார்க்க வேண்டி வந்ததாம். காரணம், அப்பணி அத்தனை தொழில்நுட்பம் நிறைந்ததாய் இருந்ததாம். இப்படி பலமுறை படத்தின் இயக்குநர் தன் படத்தை பார்ப்பதற்குக் காரணம், அது பலரால் முதன் முறையாக பார்க்கப்படப் போகிறது, அப்போது அது சரியான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் பார்ப்பான்.

முதன்முறையாக பார்க்கப்போகும் ரசிகனின் சார்பாகத்தான் தன் படத்தை இயக்குநரும், உருவாக்கியவர்களும் உருவாக்கத்தின்போது பல நூறு முறை, பல ஆயிரம் முறை பார்க்கிறார்கள்.

படத்திற்கான கதை, திரைக்கதை எழுதும் போது இந்தத் தொழில்நுட்ப கலப்பு, தொழில் நுட்ப அறிவு பற்றிய அடிப்படை தெளிவாவது எழுத்தாளனுக்கு இருக்க வேண்டும்.

வரும் இதழ்களில் இன்றைய சினிமாவுக்கும் தொழில் நுட்பங்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றி பார்ப்போம்.

(செம்மலர் ஜனவரி 2011 இதழில் வெளியானது)

Pin It