1965-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தது. அச்சமயம் முதலமைச்சராயிருந்த திரு.எம்.பக்தவத்சலம் கட்சித் தலைவர்களை ஒன்று கூட்டி விழா ஒன்று எடுத்தார்.

சபைக்கு முதலமைச்சர் வந்ததும், யந்திரம் போன்று எழுந்து நின்றவர் பெரியார் ஒருவர் மட்டுமே. தாங்கள் தள்ளாதவர்! வயதில் பெரியோர். நீங்கள் அமர்ந்து இருக்கலாம். நம்ம முதலமைச்சர் உங்களைத் தவறாகக் கருத மாட்டார் என்றனர் அங்கிருந்த நிர்வாகிகள்.

"மன்னிக்கனும், மரியாதை எவருக்கும் கொடுக்க வேண்டும்" என்றார் பெரியார்.

முதலமைச்சரே வந்து, "தாங்கள் உட்காருங்கள்" என்று வேண்டினார் பெரியாரிடம்.

ஆனாலும், தந்தை பெரியார் அவர்கள் முதலமைச்சர் பக்தவத்சலம் மேடையில் அமர்ந்த பிறகே உட்கார்ந்தார்.

இந்நிகழ்சியைக் குறித்து,

"நாள்தோறும் என்னையும், என் கொள்கைகளையும் எதிர்ப்பவர் பெரியார். ஆனால் அவர் என் பதவியைக் கவுரவம் செய்கிறார்; இந்தப் பாசமும், பரிவும் உள்ளவர் பெரியார் ஒருவரே" என்று பலரிடமும் சொல்லி பெருமிதம் அடைந்தார் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்கள்.

- ஆதாரம்: "பெரிய மனிதர் பெரியார்"

அனுப்பி உதவியவர்: மகிழ்நன்

 

Pin It