சென்னை, திருச்சி, திருப்பத்தூர் என தமிழகத்தின் சில இடங்களில் பெரியார் சிலையின் மீது செருப்பு வீசியும், செருப்பு மாலை அணிவித்தும் சங் பரிவாரத்தைச் சேர்ந்த பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள் (சூத்திரர்கள்) தங்களின் பெரியார் எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் சீண்டுவார் யாருமின்றி அருவருப்பான ஜந்துவாக சுற்றிவரும் இந்த அற்ப கூட்டத்திற்கு தங்கள் இருத்தலை காட்டிக் கொள்ளக் கூட இன்று பெரியார்தான் தேவைப்படுகின்றார். பெரியார் சிலையின் மீது செருப்பை வீசுவதாலோ, இல்லை செருப்பு மாலை போடுவதாலோ பெரியாரை எந்த வகையிலும் கொச்சைப்படுத்திவிட முடியாது. அதை எல்லாம் அவர் வாழ்ந்த காலத்திலேயே பார்த்தவர். பொதுவாழ்க்கையில் ஈடுபடுகின்றவர்களுக்கு மான, அவமான உணர்ச்சி இருக்கக்கூடாது என்பதை தம் வாழ்வின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர். “குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்” என்ற குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் பெரியார்.

periyar 381தமிழ்ச் சமூகத்தின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் மீட்டெடுக்க தன் வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட அந்தக் கிழவன், ஒருநாளும் தன்னுடைய சுயமரியாதையையும், தன்மானத்தையும் பார்த்தவரல்ல. அப்படிப் பார்த்திருந்தால் இன்று பெரியாரை எதிர்ப்பவனெல்லாம் பார்ப்பானின் முன் கைக்கட்டி வாய் பொத்தி கூழைக்கும்பிடுதான் போட்டுக் கொண்டு இருந்திருப்பான். பெரியார் தான் வாழ்ந்ததற்கான சுவடுகளை இந்த மண்ணில் மிக ஆழமாகப் பதிய வைத்துச் சென்றிருக்கின்றார். அவரால் பயனடைந்தவர்கள் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளார்கள். பல பார்ப்பன அடிமைகளுக்குத் தெரிவதில்லை, பார்ப்பனர்கள் மட்டுமே தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு இருந்த கல்வியையும், வேலைவாய்ப்பையும் அவர்களின் பிடியில் இருந்து விடுவித்தவர் பெரியார் என்பது. இதை எல்லாம் வானத்தில் இருந்து வந்த கடவுள்கள் அவர்களுக்குக் கொடுத்துவிடவில்லை இந்த மண்ணில் பெரியார் நடத்திய தொடர் போராட்டத்தாலும், தள்ளாத வயதில் மூத்திரச்சட்டியுடன் அவர் பட்ட பாடுகளாலுமே கிடைத்தது.

சூத்திரன் என்ற இழிபட்டம் சில மானங்கெட்ட பிறவிகளுக்கு புகழ்மாலையாகத் தெரிகின்றது. அது போன்ற அற்பப் பதர்கள்தான் சங்பரிவாரம் போன்ற விபச்சார மாஃபியாக்களுடன் சேர்ந்து பெரியாரை கண்மூடித்தனமாக எதிர்க்கின்றார்கள். பார்ப்பான் மட்டுமே படிக்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றி, அவனால் கல்வி மறுக்கப்பட்ட மற்ற எல்லா சாதி மக்களும் படிப்பதற்கான உரிமையை பெரியார் பெற்றுக் கொடுத்தாலும், ஏனோ அவரை எதிர்ப்பவர்கள் அவரின் எழுத்துக்களைப் படிப்பதில்லை. அவர் எழுதியதில் ஒரு சதவீதம் படித்திருந்தால் கூட பாசிச பார்ப்பனியத்தை இந்த மண்ணில் இருந்து வேரறுக்க புறப்பட்டு இருப்பார்கள்.

இந்தியாவின் பல பகுதிகளையும் தின்று செரித்து ஏப்பம் விட்ட பார்ப்பனியத்தின் குரல்வளையை அறுக்கும் அரிவாளாய் இருக்கின்றது பெரியாரியம். அதுதான் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் இந்த மண்ணில் இருந்து ஓட ஓட விரட்டியடித்தது. ராமனையும், பிள்ளையாரையும் உச்சிக்குடுமியைப் பிடித்து உலுக்கியது. பெரியார் எதன் மீதும் கருணை காட்டவில்லை. கலை, இலக்கியம், மொழி, அரசியல், பண்பாடு என எங்கெல்லாம் பார்ப்பனியம் ஒளிந்துகொண்டு இந்த மக்களை அடிமைப்படுத்திக் கொண்டு இருந்ததோ, அதை எல்லாம் தேடித் தேடி அம்பலப்படுத்தினார். பார்ப்பனியம் எந்த வடிவத்தில் வந்தாலும், அதை முதல் ஆளாய் கண்டறிந்து இந்த மக்களை எச்சரித்தார். எப்படி உலக முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத நெருக்கடியைப் பற்றி மார்க்ஸ் முன் உணர்ந்து கூறியது மாறா உண்மையாக நடந்தேறுகின்றதோ, அதே போல பெரியார் பார்ப்பனியத்தின் குண இயல்புகளை முன் உணர்ந்து கூறியது மாறா உண்மையாக இன்றுவரை நடந்து வருகின்றது.

பெரியார் என்ற பெயர் தமிழ்மண்ணில் ஒலித்துக் கொண்டிருக்கும் வரை இங்கே மதவாத சக்திகளாலோ, சாதியவாத சக்திகளாலோ தங்கள் ஆதிக்கத்தை ஒருநாளும் நிலைநாட்ட முடியாது. அந்த ஆத்திரமும், இயலாமையும், கையறுநிலையும் தான் காவி கூட்டத்தை ஆத்திரமடையச் செய்கின்றது. மத்தியில் ஆட்சியில் இருந்தும், அனைத்து அரசு அமைப்புகளையும் தங்கள் ஏவல் நாய்களாக மாற்றி வைத்திருந்தும், அவர்களால் இந்தத் தமிழ் மண்ணில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதும், நோட்டாவைக் கூட தாண்ட முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பும் தான் பார்ப்பன எச்சை ராஜா முதல் சூத்திர தமிழிசை வரை அனைவரையும் தூங்க விடாமல் துன்புறுத்திக் கொண்டு இருக்கின்றது. அதனால்தான் தனது அல்லக்கை முண்டங்களை பெரியார் சிலையை அவமானப்படுத்தச் செல்லி ஏவி விடுகின்றார்கள். காசுக்காக யாரை வேண்டும் என்றாலும் கூட்டிக் கொடுக்கும் ஒரு கீழ்த்தரமான தொண்டர் படையை வைத்திருக்கும் காவிக்கும்பலுக்கு தனிமையில் இருக்கும் பெரியார் சிலைகள் மீது செருப்பு வீசுவதோ, இல்லை சிலையை சேதப்படுத்துவதோ ஒன்றும் பெரிய காரியமில்லைதான்.

மேலும், அவர்கள் இதனால் ஒரு அரசியல் விளைவை இங்கே ஏற்படுத்த முடியுமா என்று நோட்டம் பார்க்கின்றார்கள். இப்படி பெரியார் சிலைமீது செருப்பை வீசுவதால் தமிழ்நாட்டில் மிக வலுவாக இருக்கும் முற்போக்கு இயக்கங்களை ஆத்திரமடையச் செய்து, அதனால் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் அதை வைத்து அனுதாபம் தேடி குறைந்தபட்சமாகவேனும் ஓர் அடித்தளத்தை இங்கு ஏற்படுத்த முடியுமா என்று பார்க்கின்றார்கள். கேரளாவில் கூட மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டார்களால் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பல பேர் கொல்லப்பட்டருக்கின்றார்கள் என்று சொல்ல முடிந்த அவர்களால் இங்கே தமிழ்நாட்டில் ஜனநாயக வழியில் போராடும் தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களால் ஒருவர் கூட கொல்லப்பட்டதாக சொல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் இந்து இயக்கத்தைச் சேர்ந்த சில பேர் கொல்லப்பட்டிருந்தாலும் அதற்கு தவறான பெண் சகவாசம், ரியல் எஸ்டேட், ரவுடியிசம் போன்றவையே காரணமாக இருந்துள்ளன. அதனால் இவர்கள் கட்டமைக்க விரும்பிய பிம்பத்தை ஒருபோதும் இங்கே கட்டமைக்க முடியவில்லை. அதற்காகத் தான் தற்போது இந்த உத்தியை இவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள்.

பெரியாரிய இயக்கத் தோழர்களும், மற்ற முற்போக்கு இயக்கத் தோழர்களும் உணர்ச்சிவசப்பட்டு இது போன்ற நிகழ்வுகளுக்கு எந்தவித தவறான எதிர்வினையையும் ஆற்றிவிட வேண்டாம். இங்கே காவல்துறை, நீதிமன்றம் என அனைத்துமே பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. அதை நாம் வெளிப்படையாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இங்கே கருணாசுக்கு ஒரு நீதி, எச்.ராஜாவுக்கும், எஸ்.வி.சேகருக்கும் ஒரு நீதி என வெளிப்படையாகவே காவல்துறையும், நீதிமன்றமும் நடந்து வருகின்றது. பெரியார் சிலை மீது செருப்பு வீசிய ஒரு வழக்கறிஞரை இந்த அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கின்றது. ஆனால் இதே செயலை எச்.ராஜா செய்திருந்தான் என்றால் இந்த அரசு கைக்கட்டி வாய்பொத்திதான் இன்றுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கும்.

இந்த அரசுக்கு நன்றாகவே தெரியும், நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் இங்கே திட்டமிட்டு நடத்தப்படுகின்றது என்று. ஆனால் ஊழலிலும், அதிகார முறைகேட்டிலும், கையாலாகாதனத்திலும் இருக்கும் இந்த அரசு, பார்ப்பன பிஜேபியை தாஜா செய்து பிழைப்பை ஓட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் இருக்கின்றது. அதற்காக அது தமிழ்நாட்டின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் அழித்து, இத்தனை ஆண்டுகளாக முற்போக்கு அமைப்புகள் பாடுபட்டு இங்கே கட்டிக் காத்த ஒருமைப்பாட்டை எல்லாம் குழிதோண்டிப் புதைக்கத் துணிந்திருக்கின்றது.

ஆனால் இந்த அரசு ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும், இந்த மண்ணின் முற்போக்கு பாரம்பரியத்தை அழிக்க யார் நினைத்தாலும், அதற்கான மிக மோசமான எதிர்வினைகளை இந்த அரசு சந்தித்தே ஆகவேண்டும் என்பதை. ஓரளவுக்கு மேல் பெரியாரிய இயக்கத் தொண்டர்கள் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். எவ்வளவுதான் தோழர்களைக் கட்டுப்படுத்தி வைத்தாலும் அளவு ரீதியான மாற்றங்கள் பண்பு ரீதியான மாற்றங்களுக்கு இட்டுச்செல்லும் என்பதுதான் அறிவியல். அதனால் இதற்குக் காரணமான எச்சை ராஜாவையும், தமிழிசையையும் இந்த அரசு கைது செய்து சிறையிலோ, இல்லை பைத்தியக்கார மருத்துவமனையிலோ அடைக்க வேண்டும். செருப்பை நாங்கள் அவமானகரமான ஒன்றாக என்றுமே கருதியதில்லை. அதற்காக அதை அரியணையில் வைத்து அரசாட்சி செய்ய வைக்கும் மாட்டுமூளையும் எங்களுக்கில்லை. நாங்கள் வருத்தப்படுவதெல்லாம் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடக்கூடாது என்றுதான். இந்த அரசே அப்படி நடக்க வேண்டும் என விரும்புவதாகவே நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் தெரிகின்றது.

- செ.கார்கி

Pin It