பூமி சூடாகிக் கொண்டிருக்கிறது, புவிக்கோளின் வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. வளிமண்டலம் கொதிக்கிறது. கொதிக்கிறது என்ற தொடர் தகவல்கள் நமக்கு ஊடகங்கள் மூலம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இது தொடர்பான விஞ்ஞானிகளின் விவாதங்களும், அறிக்கைகளும், ஆலோசனைகளும் நம்மைப் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால்.. புவி என்னவாகும்? கி.பி. 2100இல் மனிதன் வாழமுடியுமா? என்ற தகவல்கள் எதிர்காலத்தில் நம் புள்ளை குட்டிகள், இந்நிலத்தில் வாழ முடியுமா என்றெல்லாம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். வருங்காலத்தில் என்னதான் நிகழப்போகிறது? குடிக்க நீர் கிடைக்குமா? மூச்சுவிட நல்ல காற்று இருக்குமா? காரோட்ட எண்ணெய் கிடைக்குமா? என்றெல்லாம் ஒரே பயப் பிராந்திதான்! தெனாலி படத்தில் கமல் சொல்வது போல் பாத்தா பயம், தொட்டால் பயம், எழுந்தா பயம், நடந்தால் பயம் என ஏராளமான பயங்கள்.. நம்மைத் தொடுகின்றன. புவி வெப்பமயமாதலில் நெஜம்மாவே என்னதான் நடக்கிறது நண்பா?
புவியின் வெப்பமயமாதல் பற்றி, நாம் முழுமையாக பூமி சூடாவது என்ற விசயம் பன்முகப் பார்வை தேவை. இந்த பூமி சூடாவது என்ற விசயம் ஏதோ அடுப்பில் உலை வைத்து, அடுப்பை எரித்து, கொதிப்பது போன்ற ஒற்றை விஷயமல்ல கண்ணா? பலப் பல நிகழ்வுகள் இத்துடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. காடுகள் அழிதல், எரிதல், நாம் மற்றும் உயிரினங்கள் சுவாசித்தல், பயிர் வளர்த்தல், விவசாயம் செய்தல், ஆடுமாடு வளர்த்தல், மின்சாரம் உற்பத்தி செய்தல், கறிசாப்பிடுதல், கார், ஸ்கூட்டர், பைக் ஓட்டுதல் என ஏராளம்... ஏராளமான காரணங்கள் இதுல ஒரு முக்கியமான விஷயம். என்னென்னா, அதுதாம்பா..... கரியமில வாயு, நீராவி, மீதேன் மற்றும் குளோரோடிரூவோ கார்பன் போன்றவைகளை மற்றவற்றைவிட மனுஷன்தாம்பா.. அதிகமாக உற்பத்தி பன்றான்!
அதுசரி இந்த பூமி எப்படி சூடாகிறது? இது தெரியாதப்பா.. சூரியன்தானே நமக்கு வெப்பத்தையும், வெளிச்சத்தையும், ஆற்றலையும் தருகிறது என்கிறீர்களா? உண்மைதான். அவ்வளவு வெப்பம் சூரியனிலிருந்து வருகிறது? எவ்வளவு திரும்பிப் போகிறது? பொதுவாக ஒளி என்பது, ஒரு பொருளின்மேல் படும்போது அது பிரதிபலிக்கப்படுகிறது. உட்கிரகிக்கப்படுகிறது. கடத்தப்படுகிறது. இந்த ஒவ்வொரு நிகழ்வும், ஒல்வொரு மாதிரி, ஒவ்வொரு அளவாய் நடக்கிறது. சூரியன் என்ற பெரிய்...ய்..ய் அடுப்பிலிருந்து, வெப்பமும், ஒளிவும், ஆற்றலும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. நம்ம வீட்டு அடுப்புக்கு விறகு, கரி, மண்ணெண்ணெய் எரிபொருள் போடுவது போல, சூரிய அடுப்பின் எரிபொருள் ஹைட்ரஜன் அணுக்கள்.
சூரிய அடுப்பில், ஒவ்வொரு நொடியிலும், சுமார் 7,00,000,00, ஹைட்ரஜன் அணுக்கள், ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. இவை இணைந்து எரிவதால், அதன் விளைவால், 6,90,000,000 ஹீலியம் அணுக்கள் உருவாகின்றன. உபரியாக 5,000,000 டன் ஆற்றலும் கிடைக்கிறது. இந்த ஆற்றலாக, வான் வெளியில் வீசி அடிக்கப்படுகிறது. அப்ப, நம்ம பூமிக்கு எவ்வளவு வெப்பம் வருகிறது. என்கிறீர்களா? சூரியனிடமிருந்து வெளிப்படும் ஆற்றலில் 0.23% மட்டுமே .. பூமியின் மேற்பரப்பில் வந்தடைகிறது. அதாவது 2,000,000,000 சூரிய ஆற்றல் மட்டுமே பூமிக்கு வருகிறது. மற்றவை, வான் வெளியில் சிதறடிக்கப்படுகின்றன.
பூமியை வந்தடையும், சூரியக்கதிர்களின் வெப்பம் மணிக்கு, ஒரு சதுரமீட்டருக்கு 135 கிலோவாட்தான்! இது பொதுவாக எப்போதும் மாறாமலே இருக்கிறது. இதனை நாம் சூரிய நிலையம் என்று அழைக்கிறோம். இந்த சூரியக்கதிர் வீச்சு பரவுதலும், வளிமண்டல வெப்படைதல் நடப்பதுவும், பூமியோட வளிமண்டலத்தில் சுமார் 100 கி.மீ. உயரத்தில் மட்டுமே! இந்த வளிமண்டலம்தான் பூமியோட போர்வை. இது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நம்பூமியும், மற்ற கோள்கள் போல எப்போதோ குளிர்ந்து போயிருக்கும். ஒரு புல், பூண்டுக்கூட முளைத்திருக்காது. பூமி உருவானபோது குளிர்ச்சியான கோளாகத்தான் இருந்தது. வளிமண்டலம், பூமி உருவானதிற்கும் பிறகு உருவானது. இந்த வளிமண்டலம் என்ற காற்றுமண்டலம்தான் இன்று உயிர்கள் வாழ்தலுக்குரிய, வெப்பத்தை தக்க வைத்துள்ளது. இது என்னப்பா... புதுக்கதை என்கிறீர்களா? உண்மை இதுதான்.. நண்பா!
நம் புவிக் கோளிலுள்ள வளிமண்டலத்தின் உயரம் சுமார் 80 கி.மீ. இதனை வெப்பநிலைக்குத் தகுந்தபடி 5 பகுதிகளாகப் பிரிக்கின்றனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ வரை வளிமண்டலத்தின் 80% என்பது அடிவளி மண்டலத்திற்குள் உள்ளது. அடிவளி மண்டலம் என்று அழைக்கின்றோம். இதற்கு மேலே 10, 50 கி.மீ உயரம் வரை காணப்படுவது அடுக்கு கோளம் நண்பா! இந்த இரண்டுப் பகுதிக்கும் இடையே டிரோபாபாஸ் என்ற இடம் உள்ளது. அடுக்ககு கோளம் வளிமண்டத்தில் 19.9% பகுதியைப் பெற்றுள்ளது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் உள்ளது. இந்த ஓசோன் படலம் இல்லாவிட்டால் நாமனைவரும் கருகி செத்திருப்போம். ஏராளமான தோல் வியாதிகள் வந்து மடிந்திருப்போம்! ஆம் நண்பா! சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களில் 93, 99% அளவுக்கு, ஓசோன் தன் வசம் ஈர்த்து வைத்துக் கொள்கிறது. எனவேதான் நாம் புறஊதாக்கதிர்களின் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம்.
ஓசோன் படலம், அடுக்கு வளிமண்டலத்தில் அடுக்குக் கோளத்தில் உள்ளது என்ற உண்மையைக் கண்டறிந்தவர்கள் சார்லஸ் ஃபாப்ரி மற்றும் ஹென்ரி புய்ல்ஸன் என்ற விஞ்ஞானிகள்தான். 1913இல் தான் இப்படி ஒரு பகுதி இருப்பதைக் கண்டறிந்தனர். ஓசோன் என்பது, மூன்று ஆக்ஸிஜன் தனிமங்களின் இணைப்புதான். புறஊதாக் கதிர்கள் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுடன் மோதி, ராதனை ஆக்ஸிஜனாக உடைக்கிறது. பின் அந்த ஆக்ஸிஜன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுடன் இணைந்து ஓசோன் ஆகிறது. இந்த ஓசோன் அடுக்குக் கோளம் முழுவதும் பரவியுள்ளது. ஆனால் 20 ,40 கி.மீ உயரத்தில் மட்டும் ஓசோனின் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதன் பரவல் தன்மை நிலையற்றதும் கூட தொடர்ந்து ஆக்ஸிஜன் பிரிவதும், இணைவதும் நடந்து கொண்டே இருக்கிறது. இதனை ஆக்ஸிஜன் ஓசோன் சுழற்சி என்கின்றனர். இந்த அடுக்கு கோளத்திலுள்ள ஓசோன் முழுவதையும், ஒரே அமுக்காக அமுக்கினால். முன்கனம் ஒரு சில மி.மீ மட்டுமே ஓசோன் சந்திக்கும்.