தேவையானவை:

ஆட்டுக்கறி...............................1/4 கிலோ
சின்ன வெங்காயம்..................100 கிராம்
பூண்டு.........................................50 கிராம்.
முந்திரி.......................................10 பருப்பு
மிளகு............................................1 தேக்கரண்டி
சீரகம்..........................................1 தேக்கரண்டி
மல்லி ..........................................2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலம்.............மிகக் குறைவாக
உப்பு..............................................தேவையான அளவு
எண்ணெய் ....................................50 மில்லி
கறிவேப்பிலை ............................ஒரு கொத்து
மஞ்சள் பொடி ..............................கொஞ்சம்
சின்ன துண்டு இஞ்சி

செய்முறை:

கறியை நன்கு கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி போட்டு, இஞ்சி தட்டிப்போட்டு நன்றாக வேக வைக்கவும். சின்ன வெங்காயத்தை இஷ்டம் போல் நறுக்கிக் கொள்ளலாம். பூண்டை இரண்டாக நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு, ஏலம் இவற்றை வறுத்து, மிக்சியில் நன்றாகப் பொடிக்கவும். முந்திரி, கறிவேப்பிலையைப் பொறித்து எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் பூண்டு போட்டு, கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அதில் வேகவைத்த கறி+அரைத்த பொடி இவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். அதிலேயே வறுத்த முந்திரி, கறிவேப்பிலை போட்டு நன்கு பிரட்டவும். அடுப்பை குறைத்து வைத்து அடுப்பிலே கொஞ்ச நேரம் வைத்திருந்து பின் இறக்கவும்.

மிளகுக் கறி வறுவல் சூப்பரா இருக்கும்.

Pin It