ரேடியோ கதிர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, எலும்புக் கட்டியை நீக்கும் முறையை டில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) மருத்துவர்கள் முதல் முறையாக வட இந்தியாவில் பயன்படுத்துகின்றனர்.
இந்த புதிய தொழில்நுட்பத்தினால் சாதாரணமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையைப் போல இல்லாமல் கட்டி இருக்கும் இடத்தில் மிகச் சிறிய துளை மூலம் கட்டி அகற்றப்படுகிறது. இதனால் அறுவை சிகிச்சையால் வழக்கமாக ஏற்படும் எந்த பிரச்சனையும் சிக்கல்களும் இதில் இருப்பதில்லை என்பதுடன் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவும் மிக குறைவாகவே இருக்கிறது.
சாதாரணமாகவே எலும்பில் இருக்கும் கட்டியை அகற்றுவதற்கு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்த ரேடியோ கதிர் தொழில் நுட்பட்த்திற்கு ஆயிரம் ருபாய்க்கு குறைவாகவே செலவாகிறது. இந்த புதிய முறை இதற்கு முன் நுரையீரல், கல்லீரலில் உள்ள மென் திசுக்களில் ஏற்படும் கட்டியை அகற்றுவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் ஸ்வாஆலம், ஸ்ரீதர் மற்றும் டாக்டர்.சஞ்சய் துல்லார், சுமன் பாந்து ஆகியோர் இந்த புதிய ரேடியொ கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- உயர்சாதி ஏழைகள் உண்மையில் பின்தங்கியவர்களா?
- வ.உ.சி கப்பல் தந்த விடுதலை எழுச்சி!
- சூரியனின் கதிர்களை திசை திருப்பி விட்டால் பூமியில் சூடு குறையுமா?
- பாரதியின் கடவுள் கோட்பாடு
- சங்க இலக்கிய திணை மயக்கம்: சமகாலப் புரிதல்
- உள்ளங்கை என் இதயக்கனி
- ஏன் வரி குறைக்க வேண்டும்?
- இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாப்பார்களா? சீர்குலைப்பார்களா?
- தமிழ் மொழி உணர்ச்சியும் தமிழ்நாட்டு உணர்ச்சியும்
- பொருளாதார நீதி பற்றிய மறுபார்வை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: எலும்பு நோய்கள்