விட்டமின் ஈ உடலில் குறைந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் என்பது பள்ளிக்கூட நூலகளில் காணப்படும் செய்தி. அது தவிர காலில் உணர்ச்சி குறைந்து நடக்க இயலாத நிலையும் ஏற்படும் என்பது புதிய செய்தி.

பெரிஃபெரல் ஆர்ட்டரி டிசீஸ் (Peripheral Artery Disease PAD) என்பது மருத்துவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நோய். கால்களில் ஓடும் ரத்த நாளங்களின் தடிமன் குறைந்து, அதில் கொழுப்பு உள்படிந்து, தொடர்ந்து கால்வலியும், நடக்கவே இயலாத நிலையும் ஏற்படும். இது மிகவும் சாதாரண நோய். உலகில் எண்பது மில்லியன் பேர்களுக்காவது இந்த நோய் இருக்கலாம்.

புற ரத்தநாள நோய்க்கான காரணம் விட்டமின் ஈ குறைபாடு என்பது ஒரு சர்வேயில் இருந்து வெளிப்பட்டது. 4839 அமெரிக்கர்களின் விட்டமின் ஈ அளவு கண்காணிக்கப்பட்டது. கூடவே அவர்களது இரத்த கொலஸ்ட்ரல் இரத்த அழுத்தம் முழங்கால் -மூட்டு இந்டெக்ஸ் (Ankle-Brachial Index) போன்ற புற இரத்தநாள நோய் தொடர்பான குறிகளும் அளவிடப்பட்டன. உடலில் விட்டமின் ஈ அதிகமுள்ளவர்களிடம் மிகக் குறைவாகவே புற இரத்தநாள நோய் இருப்பது தெரிந்தது.

எப்படி விட்டமின் ஈ இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது என்பதை டாக்டர் மைக்கேல் (Michael Milemad, Dept. of medicine and epidemiology & Population health science. Albert Einstin college of Medicine) ஆராய்ந்தபோது இரத்த நாளங்களின் மேல் பரப்பிலேயே விட்டமின் ஈ சென்று உட்காரக் கூடிய புரதங்கள் இருப்பதைக் கண்ணுற்றார். இதன் மூலம் விட்டமின் ஈ ஹார்மோன்களின் துணையில்லாமல் நேரடியாகவே இரத்த நாளங்களை விரித்து நிறுத்திக் காப்பாற்றும் என்பது தெரிய வருகிறது. எனவே மீன் சாப்பிடுங்கள்.

கலைக்கதிர்.
ஜூலை 2008

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It