மனித உடலின் செல்லில் ஒரு இடைவெளி உண்டு. இந்த இடைவெளியை எச்.ஐ.வி. கிருமி ஆக்கிரமித்துக் கொண்டு நுழைந்த வேகத்திலே ஒன்றுபலவாக பலநூறாக பல்கிப் பெருகி அந்த செல்லை அழிக்கிறது. பிறகு இன்னொரு செல்லுக்குத் தாவுகின்றது. இவ்வாறு பல செல்கள் அழிக்கப்பட்டு உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறையும் போது தயாராகக் காத்திருக்கும் ஏராளமான தொற்று நோய்களில் ஒன்று உடனே வந்து ஒட்டிக்கொள்கின்றது.

மனித உடலில் செல்லில் உள்ள இடைவெளியில் எச்.ஐ.வி. கிருமி நுழைவதைத் தடுக்க இடைவெளியை நிரப்பக் கூடிய ஒரு அணு திறன் கூட்டுப் பொருளை உருவாக்கி யுள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் விளைவாக எச்.ஐ.வி கிருமியை ஒழிக்கும் ஒரு மருந்து தயாரிக்கப்பட்டு மருத்துவமனைப் பரிசோதனைக்கு உட்படுத்தப் படலாம். ஆனால் இதன் முடிவு வெளியாக சிறிது காலம் ஆகலாம்.

மனித உடம்பின் செல்லில் உள்ள இடைவெளிக்குள் செலுத்தப்படும் அணுத்திரள் கூட்டுப்பொருள் எச்.ஐ.வி. கிருமி நுழையாத படிக்கு நீண்ட காலத்திற்கு அங்கேயே இருக்குமென்பதை அறிவியல் அறிஞர்கள் நிரூபிக்க வேண்டும். உலகில் தினமும் 16 ஆயிரம் புதிய எச்.ஐ.வி.கேஸ்கள் வருகின்றன. ஒவ்வொரு நிமிடமும் 5பேர் எச்.ஐ.வி. கிருமிக்கு இரையாகி மடிகின்றனர். இது போன்ற ஆய்வு முடிவுகள் இந்த நோய்க்கு எதிரான நம்பிக்கையை தருகின்றன. 

(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)

Pin It