nobel prizeமரபணு மாற்றம் (Genome editing) குறித்த ஆய்வுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தொடங்கப்பட்டது. இதனை சுருக்கமாக சொல்லப் போனால் 'உடலில் உள்ள செல்களை மாற்றம் செய்து மீண்டும் மறு உற்பத்தி (Re productive) செய்வது ஆகும்.

2012 ஆம் ஆண்டில் CRISPR-Cas9 என்ற Gene editing தொழில்நுட்பத்தை வடிவமைத்து, இதுகுறித்து ஆய்வுகளை சமர்ப்பித்த அமெரிக்காவின் Jenifer A Dounda என்பவருக்கும் (இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்), இவருடன் ஜெர்மனியின் Emmanurlle Charpentier என்பவருக்கும் (இவர் 'Max Planck Unit for the Science of Pathogens, Berlin, Germany' -ல் இயக்குனராக பணியாற்றி வருகிறார்) மரபணு மாற்று CRISPER tool -ஐ கண்டுபிடித்ததற்காக, இவ்விரு பெண்களுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு பகிரந்துக் கொள்ளப்பட்டது.

"இந்த தொழில்நுட்பம் வாழ்வில் அறிவியலில் ஒரு புரட்சிகர மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக புற்றுநோய் மாற்று சிகிச்சைக்கு புதிய வழிகளை காட்டியிருக்கிறது" என்கிறது வேதியியல் நோபல் குழு.

ஆய்வாளர்களின் கருத்துப்படி Gene editing tool மூலம் விலங்குகள், தாவரங்கள், மற்றும் நுண்ணுயிர்களின் மரபணுக்களை மாற்ற முடியும். இதில் சட்ட ரீதியான பிரச்சனைகளும், அதாவது முறையான முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் கிடையாது. அதேவேளையில் சர்ச்சைகளும் இருக்கிறது. இயற்கைக்கு எதிராக நம் உடலில் அல்லது விலங்குகளுக்கு, தாவரங்களுக்கு மாற்றம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

CRISPER-Cas9 tool என்றால் என்ன?

மரபணு மாற்றம் என்பதே பல்வேறு வகையான தொழில்நுட்ப முறையில் உடலில்/உயிரில் இருக்கும் உறுப்புகளின் DNA -வை மாற்றம் செய்வது அல்லது மாற்றி வடிவமைப்பது ஆகும் என்பதை நாம் சுருக்கமாக பார்த்தோம். இந்த தொழில்நுட்பம் மூலம் உயிர் உற்பத்தி ஆகும் போது கிடைக்கப் பெறும் genetic material -ஐ உடலினுள் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் சேர்க்கவும், அகற்றவும், அல்லது மாற்றி அமைக்கவும் முடியும்.

இதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இருந்தாலும் சமீபத்தில் கண்டறியப்பட CRISPER-Cas9 தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகளால் அதிகம் கையாளப்படுகிறது. Clustered Regularly Interspaced Dhort Palindromic Repeats and CRISPR-associated protein 9 இதன் சுருக்கமே CRISPER-Cas9 ஆகும்.

CRISPER-Cas9 என்ற முறை இயற்கையாக பாக்டீரியாக்களை மாற்றம் செய்வதில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. பாக்டீரியாக்கள் டி.என்.ஏவின் துணுக்குகளை படையெடுக்கும் வைரஸ்களிலிருந்து பிடிக்கின்றன, மற்றும் CRISPER-Cas9 arrays எனப்படும் டி.என்.ஏ (DNA-deoxyribonucleic acid) பிரிவுகளை உருவாக்க அவற்றைப் பயன்படுத்துகின்றன. CRISPR வரிசைகள் பாக்டீரியாக்களை வைரஸ்களை (அல்லது நெருங்கிய தொடர்புடையவை) "நினைவில்" வைக்க அனுமதிக்கின்றன.

வைரஸ்கள் மீண்டும் தாக்கினால், வைரஸ்களின் டி.என்.ஏவை குறிவைக்க பாக்டீரியா CRISPER-Cas9 வரிசைகளில் இருந்து ஆர்.என்.ஏ (RNA - Ribonucleic acid) பிரிவுகளை உருவாக்குகிறது. பின்னர் அந்த DNA -வைத் துண்டிக்க Cas 9 அல்லது இதே போன்ற நொதியைப் பயன்படுத்தி அதை வெட்டுகிறது.

இது வைரஸை முற்றிலுமாக முடக்குகிறது. இதுவே இதன் அடிப்படை செயல்படும் முறை என கூறலாம். இந்த முறையை பயன்படுத்தி ஒற்றை மரபணு கோளாறு நோய்களான Cystic fibrosis, Hemophilia, Sickle Cell Decease, போன்ற நோய்களை குணப்படுத்த முடியும், என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.

CRISPER-Cas9 மூலம் செய்யப்பட்ட மரபணு மாற்று சிகிச்சை:

Sickle cell deceas நோயினால் பாதிக்கப்பட்டிருந்த Victoria Gray வயது 34, என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் பெண்மணி தாமாகவே முன்வந்து இந்த மரபணு மாற்று சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். இவர் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நேஷ்வில் நகரத்தில் வசித்து வருகிறார். அவர் மூன்று வயதாக இருக்கும்போது அவரது பாட்டி அவரை குளிக்க வைத்து போது, கையில் பயங்கரமான வலி ஏற்பட்டிருக்கிறது.

மற்ற குழந்தைகள் போல அவரால் விளையாடவோ, பயணம் செய்யவோ முடியவில்லை. ஒரு வேதனையான வாழ்க்கையை தான் தனது இளமைக் காலத்தில் கழித்தார். மருத்துவமனையில் சோதித்த போது தான் அவருக்கு Sickle cell deceas இருப்பது தெரியவந்தது. இவர் தான் பொதுவெளியில் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் முதல் நபர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 40 வயதுக்கு மேலே உயிர் பிழைப்பதே அரிதாக இருக்கிறது. உலகளவில் மில்லியனில் ஒரு நபருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.

அவரது உடம்பில் ஏற்பட்ட மரபணு குறைபாடுகளால் எலும்பின் மஜ்ஜை (bone marrow) சிதைந்த புரதத்தை உற்பத்தி செய்து, இரத்தத்தின் செல்களை அரிவாள் போன்ற வடிவில் மாற்றி இரத்த ஓட்டத்தைத் சரியாக இயங்காமல் தடிமனான மாறியுள்ளது. சிதைந்த செல்கள் இரத்த நாளங்களுக்குள் சிக்கிச் சாதாரணமாக ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லாததால் பலவீனமடையும் மற்றும் ஆயுளைக் குறைக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.

பொதுவாக ஒருவரின் உடலில் ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல ஹீமோகுளோபின் பயன்படுத்துகின்றது.

இந் நோயாளிகளின் சிவப்பு ரத்த அணுக்களை குறைபாடுள்ள ஹீமோகுளோபின் கொண்டு செல்வதால், அவை சிவப்பு செல்களை மேலும் சிதைக்கின்றன. இதனால் போதுமான ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லாது. (fetal hemoglobin) கருவில் உருவான ஹீமோகுளோபின் மீண்டும் அவரது உடலில் செலுத்துவதன் மூலம் குறைபாடுள்ள புரதத்திற்கு புதிய வடிவத்தை கொடுக்கும்.

fetal hemoglobin இதனை எப்படி உள்வாங்கி கொள்வது என்றால், தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது அதற்கு தேவையான புரதத்தை fetal hemoglobin மூலம் எடுத்துக் கொள்ளும். குழந்தை பிறந்தவுடன் fetal hemoglobin உற்பத்தியாகுவது தானாக நின்றுவிடும். பின்னர் குழந்தையின் உடலில் இருக்கும் hemoglobin தொடர்ந்து இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல உதவி புரியும்.

2019, ஜூன் 29 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது, அவரது Bone marrow -வை மரபணு மாற்றம் செய்து மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு CRISPER-Cas9 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை ஆரம்பமானது. அதாவது பில்லியன் கணக்கில் புதிய fetal hemoglobin ஆக மாற்றம் செய்து எலும்புகள் செல்லுமாறு சிகிச்சை நடைபெற்றது.

அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்த ஆண்டு ஜூன் மாதம் அவரின் சிகிச்சை முடிந்து ஓராண்டு காலம் ஆகிறது. அவர் நலமுடன் வசித்து வருகிறார். இது ஒரு அற்புதம் என்றே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் Dr. Haydar Frangoul தெரிவித்தார்.

மரபணு மாற்றம் சர்ச்சைகள்:

இப்புதிய தொழில் நுட்பத்தின் மூலம் தீராத சில வியாதிகளை தீர்த்து வைக்கும் ஆற்றல் இருக்கிறது என்றாலும், இதில் சர்ச்சைகளும் இல்லாமலில்லை. 2018ல் சீன விஞ்ஞானிகள் இத்தொழில் நுட்பத்தின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட (genetically modified human babies) இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கச் செய்தார்கள்.

ஒரு குழந்தையின் பெயர் Lulu மற்றொன்றின் பெயர் Nana. இவ்வுலகில் பிறந்த மற்றக் குழந்தைகளைப் போலவே அவ்விரு குழந்தைகளின் அழுகையை உலகம் பார்த்தது. பின்னர் நல்ல சுகத்துடன் பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்கள்.

என்ன மாற்றம் செய்தார்கள் என்றால்? தந்தையின் விந்து அணுவிலும் தாயின் கரு முட்டையிலும் HIV (human immunodeficiency virus) வராமல் தடுக்க மாற்றி அமைத்தார்கள். HIV என்ற வைரஸ் தான் எயிட்ஸ் நோயாக கருதப்படுகிறது. அக் குழந்தைகளின் தந்தை மார்க் இவருக்கு HIV positive இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மரபணு மாற்றப்பட்ட இரட்டை குழந்தைகள் குறித்த செய்தி உலகுக்கு தெரிந்த அடுத்த கணமே, மருத்துவ சம்மேளனம் கண்டனம் தெரிவித்து. சீன நாட்டின் மருத்துவ வழிமுறைகளையும், சட்டத்தை பெண்களையும் இவர் கையாளவில்லை என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர் சீன அரசாங்கம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் செய்த ஆய்வுகள் குறித்து அவரது பல்கலைக்கழகத்துக்கு தெரியாது. இப்போது அவர் சிறையில் இருக்கிறார். ஆனால் இதை மறைமுகமாக அமெரிக்காவும் சீனாவும் ஆதரிக்கிறது என்றே அப்போது செய்திகள் வெளிவந்தன.

சீன விஞ்ஞானிகளின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட குழந்தைகள் குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார் Jennifer Doudna, "இந்த வேலை உலகளாவிய விஞ்ஞான சமூகத்தின் CRISPR-Cas9 -ஐ மனித மரபணு மாற்றம் பயன்பாட்டின் எச்சரிக்கையான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையிலிருந்து ஒரு முறிவு ஆகும்" என்றார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் Jennifer Doudna, biochemist at the University of California, இவருக்கு தான் இப்போது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் அவர் கூறுகையில், HIV தொற்று நோயைத் தவிர்ப்பதற்காக இது செய்யப்பட்டிருந்தால், ஏற்கனவே பயனுள்ள தொற்று நோயைத் தடுப்பதற்கான மாற்று வழிகள் உள்ளன. எச்.ஐ.வி ஒழிக்க பாதிக்கப்பட்ட விந்து தானம் செய்பவர்களின் விந்தணுக்களை "கழுவுதல்" (Washing) போன்றவை, ஏற்கனவே நிறுவப்பட்ட அணுகுமுறைக்கு பதிலாக இதை ஏன் பயன்படுத்துவீர்கள்? என்று அப்போதே காட்டமாக தெரிவித்திருந்தார்.

"இது ஒரு சிக்கலான தொழில்நுட்பம்" என்கிறார் பேராசிரியர் Sheila Jasanoff, இவர் பாஸ்டன் ஹார்வர்ட் கென்னடி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். Genetic engineering இதுவே ஒரு வெகுநாள் விவாதத்திற்கு உட்பட்ட பாடமாக உள்ளது. அமெரிக்காவில் மரபணுவின மறு உற்பத்தி என்பது சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தனிமனிதர் உரிமையாக கூட இருக்கிறது. உதாரணமாக ஒருவருக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் வேண்டுமென்றால் அவர் மரபணு மாற்றம் மூலம் அதை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், இது இயற்கைக்கும் மரபுக்கும் முரணானது. பல மனித உரிமை குழுக்கள் இதை எதிர்க்கிறார்கள்." என்றார்.

இத்தொழில் நுட்பம் குறித்த பரந்துபட்ட பார்வையை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றிச்செல்வன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதுவும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் மனித சமூகத்தை கட்டுக்கள் வைத்திருக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது.
2. இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயற்கையாக உயிர் உள்ள செல்களை உருவாக்க முடியும் என்று சீன விஞ்ஞானி கூறியதை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
3. இத் தொழில்நுட்பத்தை கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் உலகளவில் போதிய சட்டங்கள் இல்லை.
4. இத்தொழில் நுட்பம் மூலம் சமூக வேறுபாடுகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
5. பல நாடுகளில் தொழில் நுட்பத்தின் மூலம் மனிதர்கள் மீது செயல்படுவதற்கு தடை விதித்திருக்கிறது.
6. விரும்பிய வகையில் குழந்தைகளை உருவாக்குவதற்கு இத்தொழில்நுட்பம் பயன்படலாம்.

கடைசியாக இத்தொழில் நுட்பம் குறித்த சட்டங்களும் கண்காணிப்பு குழுக்களும் உருவாக்க வேண்டிய நிலை தற்போது எழுந்திருக்கிறது. (நன்றி; வெற்றிச்செல்வன் முகநூல் பதிவு)

அறிவியலின் வளர்ச்சி இப்பூமியில் உள்ள உயிரினங்களுக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க வேண்டும். மரபணு மாற்று சிகிச்சை ஒருபுறம் நல்ல பயன்களை கொடுத்தாலும் அதன் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

(Courtesy: https://www.npr.org/2020/10/07/921043046/2-female-scientists-awarded-nobel-prize-in-chemistry-for-genome-editing-research)

- பாண்டி

Pin It