கட்டுரையாளர் பொறியாளர் பி. மாணிக்கம், ஆன்மிக நம்பிக்கையாளர். அவரது பார்வையில் ‘வாஸ்து’ குறித்து விளக்குகிறார்.
ஜோதிடமா? ஆன்மிகமா? பொறியியல் துறையைச் சார்ந்ததா? வாஸ்து ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் உரியதா? முகமதியரானாலும் கிறித்தவரானாலும் வாஸ்து பார்க்க வேண்டியதில்லையா? இதுபோன்ற பல கேள்விகள் வாஸ்து என்ற கூற்றைக் கேட்டவுடன் எழக்கூடிய சாதாரண அய்யங்கள்.
“வாஸ்து பகவான் நெற்றியில் திரு நீரோடும் பூணுலோடும் மல்லாந்து படுத்திருக் கிறார்; ஆண்டுக்கு எட்டு முறை மட்டுமே விழித்திருக்கிறார். மற்ற நேரத்திலெல்லாம் தூங்கிக் கொண்டேயிருக்கிறார். அவர் விழித்தெழுந்து காலைக் கடன் முடித்து குளித்து, பூஜை செய்து போஜனம் அருந்தி தாம்பூலம் தரிக்கிறார். அந்த நேரத்தில் வாஸ்து பூஜை செய்து வீடு, பூமி பூஜை, கிரகப்பிரவேசம் ஆகியவை செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் வாஸ்து பகவான் வீட்டில் வசிப்போரைத் துன்பத்திற்குள்ளாக்குவார்” என்றெல்லாம் கூறப்படுகிறது.
வருடத்தில் 1ஙூ மணி நேரம் மட்டுமே விழித்திருக்கும் வாஸ்து பகவான் மற்ற நேரத்தில் தூங்கிக் கொண்டே இருக்கும்போது எப்படி வீட்டில் வசிப்போரைத் துன்புறுத்த முடியும்? இதுபோன்ற அறிவுப்பூர்வமான கேள்விகளைக் கேட்டால் இவன் நாத்திகம் பேசுகிறான் என்பார்கள். 34 ஆண்டுகளாக விரதம் இருந்து சபரிமலை சென்று அய்யப்பனைத் தரிசித்து வரும் நான் சொல்வதும் எழுதுவதும் கேட்பதும் அறிவுப்பூர்வமான விஷயங்கள் என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.
சூரியன் உலக உயிரினங்கள் அனைத் திற்கும், அனைத்து இன, மத மக்களுக்கும் பொது; காற்று, மதம், இனம் பார்த்து வீசுவதில்லை. மழை பொழிவதும் அனைத்து மத - இன மக்களுக்கும் பொதுவாகவே தான்.
பஞ்சபூத சக்திகளின் ஒருங்கிணைந்த, ஆனால் நமக்குத் தேவையான அளவு கிடைக்கும்படி வீடு கட்டுமானம், நமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கேற்பக் கட்டப்பட வேண்டும் என்ற விதியை, ஒரு கற்பனை வடிவான ‘வாஸ்து’ என்ற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டுள்ளது. அவரவர் தேவைக்கேற்ப அறிவுக்கேற்ப நம்பிக்கையூட்டும் வகையில், வாஸ்துவானது அதிகமாகவே மூட நம்பிக்கையை வளர்த்துள்ளதோடு, மக்களை வேறுபடுத்தியும் சாஸ்திரம் காட்டியுள்ளது.
‘பிராமணர்களுக்கு, சத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு, சூத்திரர்களுக்கு என்று மனைத் தேர்வு செய்யப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. எந்த ஜோதிடராவது அல்லது ஆன்மிகவாதியாவது இதை மறுக்க முடியுமா? அல்லது தன்னிடம் வாஸ்து யோசனை கேட்க வருபவர்களிடம் இதுபோன்ற மனைதான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறத் துணிச்சல் இருக்கிறதா?
இதன்படி யோசனை தெரிவித்தால் ‘உதை’ விழும் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் தான், பணம் சம்பாதிக்கத் தேவையான அளவு மட்டும் ‘ரீல்’ விட்டு பணம் பண்ணுகிறார்கள்.
ஆனால் வாஸ்து என்பது ஒரு அறிவியல் சார்ந்த கட்டுமானக் கலை. கட்டிடப் பொறியாளர்களால் மட்டுமே கையாளப்பட வேண்டியவை. இயற்கை சக்திகள், மின்காந்த ஆற்றல் என்று கூறக்கூடிய உடிளஅiஉ நநேசபல போதுமான அளவு நிறைவாக வீட்டில் கிடைக்கக்கூடிய வகையில் நம் வீட்டுக் கட்டுமானம் அமையவேண்டும் என்பதுதான் இக்கலை. இதை ஆன்மிகவாதிகள், சோதிடர்கள், குறி சொல்பவர்கள், சாமி ஆடுபவர்கள், போலிச் சாமியார்கள், சமீபத்தில் கல் மண் விற்பவர்களும் ‘வாஸ்து’ யோசனை கூறத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் மிகவும் ‘கமர்சியல்’ ஆன வியாபாரம் முதலாவது அரசியல், இரண்டாம் இடத்தில் ஆன்மிகம் (குறி சொல்வது), மூன்றாவது ஜோதிடம். எதிரில் இருப்பவர் வாழ்க்கையில் நொந்து போய் இருப்பதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவரிடமிருந்து பணத்தை எப்படிக் கறப்பது என்பதை இவர்கள் முழுமையாக அறிந்து கொண்டுள்ளனர். எனவே ‘வாஸ்து’ என்ற கட்டுமானக் கலை குறித்து கீழே மிகச் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறேன்.
பஞ்சபூத சக்திகள் 1. நிலம், 2. நீர், 3. நெருப்பு, 4. காற்று, 5. ஆகாயம்
நிலம் : மனை தேர்வு செய்வது; சதுரம், செவ்வகமாக இருத்தல் அவசியம். வடக்கு தெற்கு, காந்தமுள்ளுக்கு இணையாக இருக்கிறதா சாய்ந்துள்ளதா என அறிந்து தேவையற்று நீண்டுள்ள இடத்தை ஒதுக்கிவிட்டு (ஈசான்யம் தவிர), மண் வளத்தை அறிந்தும், சுற்றுப்புறச் சூழ்நிலையை அறிந்தும் கட்டுமான வரைபடம் சரியான அஸ்திவாரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும்.
நீர் : பூமி - மனை, நீர்வளம் இருப்பதாக அமைந்திருக்க வேண்டும். வடகிழக்கு, கிழக்கு, வடக்கு ஆகிய திசைகளில் போர்வெல், கீழ்நிலைத் தொட்டி, செப்டிக் டேங்க் ஆகிய குழிகள் இருக்கும் படியும் வீட்டு மனையில் விழும் நீர், கழிவு நீர், வடகிழக்கில் வெளியேறும்படியும் கட்டுமான வரைபடம் தயாரிக்க வேண்டும்.
நெருப்பு : சமையலறை தென்கிழக்கில் அமைய வேண்டும் என்பதுதான் ஜோதிடர்கள் கூறக் கூடியது. இருப்பினும் மற்றொரு காரணம், வெப்பம் நமக்குத் தேவையான அளவு கிடைக்கும்படி வெளிச்சம் வீட்டினுள் இருக்கும்படி வீட்டின் அமைப்பு இருக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் வீட்டின் மீது விழுமாறு அமைந்திருக்க வேண்டும். அதனால் வீட்டில் கிழக்கு, வடக்கு, வடகிழக்கில் பெரிய மரங்கள் இருந்தால் வீட்டின் மீது வெயில் விழாது. அதனால் தேவைக்கேற்ற வெப்பம் கிடைக்காது என்பதுதான்அறிவியல் பூர்வமான செய்தியாகும்.
காற்று: வீடு காற்றோட்ட வசதியோடு இருக்க வேண்டும். அதாவது கதவுத் திறப்பு நீங்கலாக ஒரு அறைக்கு அறையின் பரப்பில் 15 முதல் 20 சதவீதம் ஜன்னல், வென்டிலேட்டர் வசதி இருக்க வேண்டும். மேலும், திறப்புகள் உச்சப் பகுதியில் இருக்கும்படி அமைக்கப் படுவது மிக அவசியம். ஆக, ஜன்னல் திறப்புகள் வெப்பம் (வெளிச்சம்), காற்று ஆகிய இரண்டு சக்திகள் கிடைக்க வழிவகை செய்கிறது.
ஆகாயம் : ஆகாயம் வீட்டினுள் எப்படி வருகிறது? தரையிலிருந்து அன்னாந்து பார்த்தால் ஆகாயம். தரைக்கும் ஆகாயத்திற் குமிடையே கூரை (ஊநடைiபே) அமைத்து மறைத்து விடுகிறோம். அதனால் தரையிலிருந்து கூரையின் அடிமட்டம் வரை ஆகாயம் என்றால், அதுவே னுiஅநளேiடிளே என்று கூறக்கூடிய அளவு ஆகும். அதன்படி கட்டிடத்தின் உள்-வெளி அளவுகள் ஆகாயம் எனப்படும். எனவே மனையில் கட்டப்படும் வீட்டில் வெற்றிடம் விடுவதும் ஆகாயம் ஆகும். அதனால் வீட்டின் தென்புறமும், மேற்குப் பகுதியிலும் குறைந்த அளவு வெற்றிடம் விட வேண்டும். ஆனால் பெரிய மரங்கள் வளர்க்கலாம். ஏனெனில் காலையில் எழும் சூரியன் 12.00 மணி வரை ருடவசய ஏiடிடநவ சுயலள என கூறக்கூடிய நல்ல சக்தியுடன் வெயிலின் தாக்கம் அமையும். 12 மணி முதல் மாலை 3 மணி வரையில் வெயிலின் தாக்கம் ஐகேசய சுநன சுயலள எனப்படும் கதிர்வீச்சைத் தாங்கும் வகையில் பெரிய மரங்களோடு சிறிய அளவு இடைவெளி விட்டு கட்டுமானம் செய்ய வேண்டும் என்று அறிவியல்பூர்வமாகக் கூறப்படு கிறது. எனவே இந்த இயற்கையின் சக்திகள் நமக்குத் தேவைக்கேற்பக் கிடைக்குமாறு வீட்டின் கட்டுமானம் அமைய வேண்டும் என்பதால் நல்ல பொறியாளரை அணுகி வீட்டின் வரை படம் தயாரிக்க வேண்டும். இதை மறுப்பவர்கள் ஜோதிடர்களையே வரைபடம் தயாரிக்கச் சொல்லி அவர்கள் மூலமாகவே வீட்டைக் கட்டிக் கொள்ளட்டும்.
மேற்கூறிய விளக்கங்களைக் காணும் போது ஒரு நாத்திகக் கட்டுரை, படித்தது போன்ற ஒரு உணர்வு வரக்கூடும். முழு நேர ஆன்மிகவாதியான நான் பணிவுடன் வேண்டுவது, மூடநம்பிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதோடு போலி ஆன்மிகவாதிகள் மக்களின் அறியாமையையும், இயலாமையையும் மூலதனமாகக் கொண்டு ‘வாஸ்து’ என்ற பெயரில் மக்களைக் குழப்புவதையும் பணம் பண்ணுவதையும் வன்மையாகச் சாடுகிறேன்.
தட்பவெப்ப நிலைக்கேற்ப இயற்கையின் வல்லமையை நமக்குத் தேவையான அளவு பயன்படுத்தும் வகையில் பஞ்சபூத சக்திகளின் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) ஒரு விகிதாச்சார சங்கமத்தை நமது வீட்டினுள் கொண்டு வருதல் வேண்டும். அதற்கு ஏதுவாக நமது வீட்டின் கட்டுமானம் அமைய வேண்டும். இதற்குரிய வழிமுறைகளைக் கையாளும் பொறியாளரை அணுகி வரைபடம் தயாரித்தல் வேண்டும். வெறும் நான்கு மூலைகளை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டும், மேலும் சிலர் அஷ்டதிக்கு வாஸ்து நிபுணர் என்ற பெயரோடு வாஸ்து பலன் பரிகாரம் கூறுவார்கள்.
நிச்சயமாக பல மனைகள் வடக்கு, தெற்கு காந்த முள்ளுக்கு இணையாக இருப்பதில்லை. சற்று கோணம் சாய்ந்திருக்கும். பத்து டிகிரிக்கும் மேல் 25 டிகிரிக்குள்ளாகவும் சாய்ந்துள்ள மனைகளில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு ஈசான்யம், கிழக்கு ஆக்கினேயப் பகுதி, தெற்கு ஆக்கினேயப் பகுதி, தெற்கு நைருதி பகுதி, மேற்கு நைருதி பகுதி, மேற்கு வாயு மூலை, வடக்கு வாயு மூலைப் பகுதி மற்றும் வடக்கு ஈசான்யம் ஆகிய பகுதிகள் சாய்ந்துள்ள மனையில் எவ்வாறு அமைகிறது என துல்லியமாக ஆராய்ந்து பின்னர் அதற்கு ஏற்றாற்போல் வரைபடம் தயாரித்தல் வேண்டும். காந்தமுள்ளுக்கு சாய்ந்துள்ள மனையில் திக்குகள் அனைத்தும் மாறுபடும். எனவே இயற்கை சக்திகள் எந்தவித இடர்ப்பாடுமின்றி வீட்டினுள் நுழைய வழிவகுத்து அதற்குரிய பாதை அமைப்புகளுடன் வரைபடம் தயாரித்தல் வேண்டும். இவையனைத்தும் கட்டுமானம் பற்றி முழுமையாக அறிந்த ஒரு பொறியாளரால் மட்டுமே செய்யக்கூடிய செயலாகும்.
கடவுள் படத்திற்கு முன் விளக்கேற்றி தியானம் செய்தோ, ஜோதிடர்களாலோ, வெற்றிலையில் மை தடவிப் பார்த்தோ அல்லது சோலி உருட்டிப் போட்டு குறி சொல்பவர்களாலோ இந்தக் காரியம் செய்ய இயலாது. வாஸ்து பகவான் மல்லார்ந்து படுத்துள்ளாரா? அல்லது ஒருக்களித்துப் படுத்துள்ளாரா? என்ற சந்தேகத்தை உறுதியுடன் எந்தச் சோதிடராலும் விளக்க இயலாது. மேலும் வாஸ்து பகவான் வாஸ்துப்படி வீடு அமையாவிட்டால் இந்துக்களை மட்டும் தான் துன்புறுத்துவாரா? அல்லது ஏனைய மதத்தினரையும் துன்புறுத்துவாரா? வார வாஸ்து, தின வாஸ்து, பெங்சூயி சீன வாஸ்து என பல்வேறு வாஸ்து முறைகளில் எதைப் பின்பற்றுவது? இது போன்ற கேள்விகளுக்கு இவர்களால் அறிவார்ந்த பதில் கூற இயலாது. மடமையைப் புகட்டுபவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் பணம் பண்ணுவதைத் தவிர வேறு நோக்கமில்லை. எனவே அறிவு, அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களாகக் கட்டுமானத் துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு பொறியாளரால் மட்டுமே வீட்டின் கட்டுமானம் சரிவர அமைய சரியான ஆலோசனை கூற இயலும். எனவே மூட நம்பிக்கையை ஒதுக்குவீர்! அறிவுப்பூர்வ ஆலோசனைக்கு முறையான, சரியான பொறியாளர்களை அணுகுவீர் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: ‘பில்டர்ஸ் வாய்ஸ்’