இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO-வில், விஞ்ஞானிகளைப் பணி அமர்த்துவதற்கெனத் தனிவாரியம் உள்ளது. அது மத்திய அரசின்  ICRB (ISRO Centralised Recruitment Board) v‹gjhF«. Electronics, Computer science, Civil, Mechanical  என்பதாகும்.  Electronics, Computer science, Civil, Mechanical போன்ற துறைகளில்  65% மேல் பெற்று B.E./ B.Tech முடித்த அனைவரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆண்டுதோறும் எந்தெந்தப் பாடப்பிரிவுகளில் காலி யிடங்கள் உள்ளதோ, அதற்கேற்ப செய்தித்தாள்களிலும், ISRO-வின் இணையதளத்திலும் விளம்பரங்கள் வெளியிடப்படும்.  விண்ணப்பித்த அனைவருக்கும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

அத்தேர்வின் வினாத்தாளில் 80 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான விடைக்கும் மூன்று மதிப்பெண்களென மொத்தம் 240 மதிப்பெண்கள். ஒவ்வொரு தவறான வினாவிற்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். தேர்வின் கால அளவு 90 நிமிடங்களாகும். அவரவர் துறைகளுக்கேற்ப, பொறியியல் படிப்பிலுள்ள அனைத்துப் பாடங்களிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடைபெறும். நேர்காணலிலும் அவரவர் துறைகளுக்கேற்ப டெக்னிக்கல் கேள்விகள் கேட்கப்படும். நேர்காணலில் தேர்ச்சி அடைந்தவர்கள் நாடு முழுவதுமுள்ள ஏதேனுமொரு ISRO மையத்தில் பணி அமர்த்தப்படுவர். ஆனால் இந்த எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் எதுவுமின்றி B.Tech முடித்தவுடன் நேரடியாக ISRO-வில் விஞ்ஞானி யாகப் பணிபுரிய ஓர் வழியுண்டு. அந்த நேரடி வாய்ப்பைப் பெற IIST இல் B.Tech பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Indian Institute of Space Science and Technology (IIST):

இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான IIST திருவனந்த புரத்தில் அமைந்துள்ளது. இது மத்திய அரசின் விண்வெளித் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. விண்வெளித் துறை சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கென Aerospace Engineering, Avionics)  பிரத்யேகமாக அமைக்கப்பட்ட முதல் நிறுவனம் IIST  தான். 2007ஆம் ஆண்டில், இஸ்ரோவின் அப்போதைய தலைவரான டாக்டர் ஜி.மாதவன் நாயர் திறந்து வைத்தார். IIST யின் முதல் துணைவேந்தர் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமாகிய அப்துல் கலாம் அவர்கள். ISRO -வின் தலைவராக இருப்ப வர்கள் அல்லது அங்கு பணிபுரியும் அனுபவமிக்க விஞ்ஞானிகள் தான் IIST யின் துணைவேந்தராகத் தேர்வு செய்யப்படுவர்.

இளங்கலைப் படிப்பின் போது, ஒவ்வொரு செமஸ்டரிலும் சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் IIST இல் உள்ளது. இதன் மூலம் இளங்கலைக் கல்வியை முற்றிலும் இலவசமாகப் படிக்கலாம். இந்த உதவித் தொகையை இந்திய விண்வெளித் துறை வழங்குகிறது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் எழுதும் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் வெளியிடுவதற்கு உண்டாகும் செலவுகளை IIST முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறது. IIST வுடன் இணைந்து பல ப்ராஜெக்ட்களை மாணவர்களும், பேராசிரியர்களும் மேற்கொள்ளலாம். இவை மட்டுமன்றி, கலை இலக்கிய செயல்பாடுகளிலும் மாணவர்கள் ஈடுபடும் வண்ணம் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இது போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்நுறுவனத்தில், B.Tech படிப்பில் 7.5 க்கு மேல் CGPA பெற்றுத் தேர்ச்சி அடையும் மாணவர் களுக்கு நேரடியாக ISRO வில் விஞ்ஞானிகளாகப் பணி புரிய வாய்ப்பளிக்கப்படுகிறது என்பது தான் கூடுதல் சிறப்பாகும். கல்லூரிகளில் படித்து முடித்தவுடன் மத்திய அரசின் உயரிய ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் (Group-A Gazetted Officer post) பணி கிடைப்பது IIST இல் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும். இப்பணியின் சம்பள விகிதம் ரூ.56,100-1,77,000 ஆகும்.

IIST இல் சேரும் முறை:

IIST யில் B.Tech படிக்க, JEE Advanced தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் இடங்கள் நிரப்பப்படுகின்றன. முந்தைய இதழ்களில் குறிப்பிட்டிருந்தது போல், JEE Main தேர்வை எழுதித் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே JEE Advanced தேர்வை எழுத முடியும். IIST இன் இணையதளத்தில் JEE Advanced மதிப்பெண்களையும், சுயவிவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தில் இணைய தளத்தில் குறிப்பிடப்படும் தேதியிலிருந்து மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். B.Tech சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் இறுதியில் நடைபெறும். எனவே, ISRO வில் விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்கள் IIST இல் B.Tech படிக்க முயற்சிக்கலாம். 

Pin It