எல்லா பாஸிஸ்டு வெகுஜன ஸ்தாபனங்களிலும் கம்யூனிஸ்டுகள் நுழைய வேண்டும்

குறிப்பிட்ட நாட்டில் பாஸிஸ்டுகளுக்கு ஏகபோகமாக சட்ட பூர்வமாக செயல்படுவதற்கு உரிமையுள்ள அந்ந நாட்டில் அந்தப் பாஸிஸ்டு வெகுஜன ஸ்தாபனங்களில் கம்யூனிஸ்டுகள் நுழைய வேண்டும். அதிலுள்ள சட்ட பூர்வமான, அரைகுறைச் சட்டபூர்வமான நிலைகளையும் மிகச் சிறிய அளவில் இருந்தாலும்கூட அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த ஸ்தாபனங்களுக்குள் வேலை செய்ய வேண்டும். அதிலிருந்து கொண்டே அதில் பாஸிஸ்டுகளின் கொள்கைகளுக்கு எதிரிடையாக மக்களுடைய நலவுரிமைகளை முன் வைக்க வேண்டும். அதன்மூலம் பாஸிஸ்டுகளின் வெகுஜன அடிப்படையை கீழறுக்க வேண்டும். உழைக்கும் மக்களுடைய மிக அவசரமான அன்றாடத் தேவைகளுக்காக சாதாரண ஆக ஆரம்ப நிலையிலான ஆட்சேபனை இயக்கங்களிலிருந்து தொடங்கி கம்யூனிஸ்டுகள் மேலும் மேலும் அதிகமான விரிவான மக்கள் பகுதிகளை இயக்கத்திற்குக் கொண்டு வருவதற்கு நெளிவு சுழிவான உபாயங்களைப் பயன்படுத்த வேண்டும்.

- ஐக்கிய முன்னணி தந்திரம், டிமிட்ரோவ் (தமிழில்: ஏ.சீனிவாசன்), பக்.226, பிப்ரவரி 1976

***

தேர்தல் பிரச்சார இயக்கங்கள்

தேர்தல் பிரச்சார இயக்கங்கள் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட ஐக்கிய முன்னணியை மேலும் வளர்ப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும். கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் ஈடுபட சுயேச்சையாக முன்வர வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத் திட்டத்தை மக்களுக்கு முன்பாக வெளிப்படுத்த வேண்டும். சமூக - ஜனநாயகக் கட்சிகளுடனும் தொழிற் சங்கங்களுடனும் (உழைக்கும் விவசாயிகள் கைத்தொழிலாளர்கள் முதலியவர்களுடைய ஸ்தாபனங்களோடும் சேர்ந்து) ஒரு ஐக்கிய முன்னணியை ஸ்தாபிக்க முயற்சி செய்ய வேண்டும். பிற்போக்கு பாஸிஸ்டு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் தடுப்பதற்கு எல்லாவித முயற்சிகளையும் செய்யவேண்டும். பாஸிஸ்ட் ஆபத்தை எதிர்நோக்கும்போது கம்யூனிஸ்டுகள் தங்களுடைய அரசியல் கிளர்ச்சிக்கும் விமர்சனத்திற்கும் உள்ள தனி உரிமையைப் பாதுகாத்துக் கொண்டே பாஸிஸ்ட் எதிர்ப்பு முன்னணியில் ஒரு பொதுத் திட்டத்தின் கீழ் ஒரு பொதுவான சின்னத்தில் தேர்தல் இயக்கத்தில் பங்கு கொள்ளக்கூடும். இது பெரும்பாலும் ஐக்கிய முன்னணி இயக்கத்தின் வளர்ச்சியையும் வெற்றியையும் பொறுத்தும் செயலில் உள்ள தேர்தல் முறைகளைப் பொறுத்தும் இருக்கிறது.

பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின்கீழ் உழைக்கும் விவசாயிகள் ‘நகர்ப்புறத்து குட்டி பூர்ஷ§வாக்கள்’ ஒடுக்கப்பட்ட தேசீயஇனங்களின் உழைக்கும் வெகுஜனங்கள் ஆகியோருடைய போராட்டத்தை ஒன்றுபடுத்த முயற்சித்துக் கொண்டே, அதில் கம்யூனிஸ்டுகள் பாட்டாளிவர்க்க ஐக்கிய முன்னணியின் அடிப்படையில் ஒரு பரந்த பாஸிஸ்டு எதிர்ப்பு மக்கள் முன்னணியை ஸ்தாபிப்பதைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இதில் பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை நல உரிமைகளோடு இசைவாக உள்ள பல்வேறு பகுதி பாட்டாளிகளின் எல்லாவித குறிப்பிட்ட கோரிக்கைகளையும் ஆதரிக்கும்.

- ஐக்கிய முன்னணி தந்திரம், டிமிட்ரோவ் (தமிழில்: ஏ.சீனிவாசன்), பக்.219, பிப்ரவரி 1976

 ***

பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணி அல்லது பாஸிஸ்டு எதிர்ப்பு மக்கள் முன்னணி

சில தோழர்கள் தேவையில்லாமல் எதைத் தொடங்குவது-பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணியா அல்லது பாஸிஸ்டு எதிர்ப்பு மக்கள் முன்னணியா என்னும் பிரச்னையைப் போட்டு மூளையைக் குழப்பிக் கொள்கிறார்கள்.

சில தோழர்கள், ஒரு உறுதியான பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணியை உருவாக்காமல் அதுவரை பாஸிஸ்டு எதிர்ப்பு மக்கள் முன்னணியை அமைக்கும் வேலையை ஆரம்பிக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

இதர சில தோழர்கள் வாதிடுகிறார்கள்: பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கு சமூக-ஜனநாயகத்தின் பிற்போக்குப் பகுதியிலிருந்து பல நாடுகளில் கடும் எதிர்ப்பு இருப்பதால், உடனடியாக முதலில் மக்கள் முன்னணியைக் கட்டுவதைத் தொடங்குவோம், பின்னர் அதன் அடிப்படையில் ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தை வளர்க்கலாம், அதுதான் நல்லது என்கிறார்கள்.

இரு தரப்பாரும் ஒன்றைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்கள். ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க முன்னணியும், பாஸிஸ்டு எதிர்ப்பு மக்கள் முன்னணியும் உயிருள்ள தர்க்க ரீதியான போராட்டத்தில் இணைக்கப்பட்டவைகளாகும். அவை ஒன்றையன்று ஊடும்பாவும்போல் பின்னப்பட்டதாகும், பாஸிஸத்தை எதிர்த்து நடைபெறும் நடைமுறை போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் அவை ஒன்றிலிருந்து ஒன்றிற்குச் செல்லக் கூடியதாகம். அவைகளை ஒன்றையன்று வேறுபடுத்தும் சீனச்சுவர் ஒன்றுமில்லை.

பாஸிஸ எதிர்ப்பு மக்கள் அணியின் தலைமையான சக்தியாக உள்ள தொழிலாளி வர்க்கத்தின் செயல் ஒற்றுமையை அடையாமல் ஒரு உண்மையான பாஸிஸ எதிர்ப்பு மக்கள் முன்னணியை ஸ்தாபிப்பது சாத்தியமாகும் என்று கருத முடியாது. அதே சமயத்தில் பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட அணி மேலும் வளருவதற்கு அது பாஸிஸத்தை எதிர்த்துள்ள ஒரு மக்கள் முன்னணியாக மாற்றம் பெற்றால்தான் பெரும்பாலும் சாத்தியமாகும். கணிசமான அளவில் அதைச் சார்ந்தே இருக்கிறது....

அது எப்படியிருப்பினும் பாட்டாளி வர்க்கம் குறைவான எண்ணிக்கையில் உள்ள, விவசாயிகளும் நகரப்புறத்துக் குட்டி பூர்ஷ§வாக்களும் அதிகமாக உள்ள எல்லா நாடுகளிலும்கூட ஒன்றை நாம் மறந்துவிட முடியாது, அங்கு தொழிலாளி வர்க்கம் தன்னுடைய ஒரு உறுதியான ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கு ஒவ்வொரு முயற்சியையும் செய்ய வேண்டியது இன்னும் அதிகமாக அவசியமாகும். அதன்மூலம் அது சகல உழைக்கும் மக்களின்பால் ஒரு தலைமையான அம்சமாக இடம் பெற ஏதுவாகும்.

- ஐக்கிய முன்னணி தந்திரம், டிமிட்ரோவ் (தமிழில்: ஏ.சீனிவாசன்), பக்.153, பிப்ரவரி 1976

Pin It