இந்தியா 1947இல் பிரிட்டனில் இருந்து தனது தேசிய சுதந்திரத்தை பெற்ற பிறகு, ஒரு வளம் நிறைந்த மற்றும் மக்கள்தொகை நிறைந்த நாடாக தொழில்மயமாக்கல் மற்றும் மூலதன பொருட்களின் உற்பத்திக்கு ஒரு விரிவான அடித்தள மிட்டது. இதற்காக பெரிய அளவிலான நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன.
1956க்குப் பின்னர் சமூக ஏகாதிபத்திய சோவியத் ஒன்றியத்தின் புதிய காலனியத்துவத்திற்கு இந்தியாவின் சுயாதீனமான வளர்ச்சி கட்டுப்படுத்தப் பட்டது. இந்த சமயத்தில் இந்தியாவும் குறிப்பிடத் தக்க வகையில் அதிகாரத்துவ-முதலாளித்துவ அம்சங்களை வளர்த்ததானது அரசு-ஏகபோக முதலாளித்துவத்தின் எதிர்கால வெளிப்பாடுக் கான ஒரு எதார்த்தமான அடிப்படையாகும்.
“பசுமை புரட்சி” மூலம் விவசாயத்தின் முதலா ளித்துவ தொழில்மயமாக்கல் ஆரம்பிக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டில் வந்த கொத்தடிமை தொழில் களை ஒழிக்கும் சட்டம் அதற்கு தேவையான பண்ணை தொழிலாளர்களை விடுதலை செய்தது. உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் பொருட்களுக் கான இந்திய உள்நாட்டு சந்தையின் மகத்தான வளர்ச்சியை அமைத்தது இதுவே ஆகும். இந்தக் காலத்தில் எண்ணெய், எரிவாயு, பெட்ரோல், நிலக்கரி, எஃகு மற்றும் அலுமினியத் துறைகளில் இந்திய மூலப்பொருள் நிறுவனங்கள் நிறுவப் பட்டன. அவர்களில் பெரும்பான்மையானவைகள் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களாக இருந்தாலும் இன்னும் மற்ற நாடுகளிலிருந்து நிதிரீதியாகவும் தொழில்நுட்பரீதியாகவும் ஏகாதிபத்தியவாதிகளை நம்பியிருந்தனர்.
1991இல் நடந்தேறிய சமூக ஏகாதிபத்திய சோவியத் ஒன்றியத்தின் தகர்வு சர்வதேச நிதி மூலதனத்திற்கு அதன் புதிய தாராளவாதக் கொள்கை மற்றும் இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்து வதற்கான உறுதியான முன்நிபந்தனை ஆகும்.
“புதிய பொருளாதார கொள்கை”யை மத்திய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் 1995இல் உலக வர்த்தக அமைப்பின் மூலம் இந்தியாவில் உலக ளாவிய சந்தைக்கான கதவினை திறந்துவிட்டார். இந்த கொள்கையானது பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயமாக்கலுக்கு ஏற்பாடு செய்தது. மன்மோகன் சிங், பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுதல் (SEZ) ஆகியவற்றை ஊக்குவித்தார். “சிறப்புப் பொருளாதார மண்டல சட்டம்” 2005இல் நிறைவேற்றப்பட்டதிலிருந்து 2017ஆம் ஆண்டுக்குள் புதிய (SEZ) களின் எண்ணிக்கை 421 ஆகவும் 1.7 மில்லியன் ஊழியர் களுடனும் 4486 ஆக அதிகரித்துள்ளது.
ஏராளமான தொழில்துறை, வங்கி, வணிகர் மற்றும் விவசாய மூலதனம் ஆகியவற்றை ஏற்கனவே தன்வசமாக்கியிருந்த இந்திய ஏகபோக முதலாளித்துவம், தனியார்மயமாக்கல் மற்றும் SEZகளின் உருவாக்கம் ஆகியவற்றிற்கான அரசின் செயல்திட்டங்களிலிருந்து பயனடைந்தன.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 1995 முதல் 2007 வரை 1.2 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக உயர்ந்தது. இது 75 சதவீத அதிகரிப்பு. 2004இல் பிரதமர் பதவிக்கு சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே இந்தியாவின் பங்குச் சந்தைப் பரிவர்த்தனை 135 ஆண்டுகளில் மிகவும் வியத்தகு சரிவுக்கு தள்ளப்பட்டது. அரசாங்கமானது தனியார் மயமாக்கலுக்கான வழியை கைவிட்டுவிடலாம் என்பதற்கு பின்னால் சர்வதேச நிதி மூலதனத்தின் கரிசனம் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் ஏகபோக முதலாளித்துவம் பிரதம மந்திரி பதவியை “கைவிடுமாறு” சோனியா காந்தியை வலியுறுத்தியது. மன்மோகன் சிங் பிரதம மந்திரியாக ஆனபோது பங்குச் சந்தை மேல்நோக்கிச் சென்றது. இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் மீது இந்திய ஏகபோக முதலாளித்துவ வர்க்கம் மற்றும் சர்வதேச ஏகபோகங்களுக்கும் இடையி லான போட்டியில் முன்னணி இந்திய ஏக போகங்கள் அதிகரித்தளவில் தீர்மானகரமான செல்வாக்கினை அடைந்தது.
இது உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் பாத்திரத்தின் வேகமான வளர்ச்சியால் தொடர்ந்து இருந்தது. 2006 ஆம் ஆண்டில் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக இந்தியாவை ஆறாவது அணு சக்தி வல்லரசு என அங்கீகரித்தது. விரைவான வளர்ச்சியைப் பெற்ற தகவல் தொடர்பு களும் இணையதளமும் இந்திய ஏகபோகங்கள் சிறப்பாக போட்டிபோடக்கூடிய சாதகமான நிலைமைகளை உருவாக்கின. அவற்றில் பெரும் எண்ணிக்கையிலான சிறப்பான பயிற்சி பெற்ற ஐ.டி. வல்லுநர்கள் அவர்கள் வசம் இருந்தனர்.
தீவிர நவீன தொழில்துறை பகுதிகளுக்கு முற்றிலும் மாறாக, நாட்டின் பெரும் பகுதிகள் பெரும் வறுமையால் ஆதிக்கம் செலுத்தப் படுகின்றன. அவை பின்தங்கியுள்ள மற்றும் அரை நிலவுடைமை கிராமப்புற உற்பத்தியில் நீடிக்கின்றன. இது இந்தியாவின் புதிய ஏகாதி பத்திய தன்மையை சந்தேகிக்க சில இடது பொருளாதார வல்லுனர்களை தூண்டுகிறது.
இதேபோன்ற சூழ்நிலையில், 1917இல், லெனின் ரஷ்யாவின் ஏகாதிபத்திய தன்மையைப் பற்றி கூறியதாவது:
மேலும், ரஷ்யாவின் விஷயத்தில், ஏகாதிபத்தி யத்தை ஒரு (ஏகாதிபத்தியம் பொதுவாக ஒத்திசை வற்ற முழுமையே ஆகும்) ஒத்திசைவான முழுமை (Coherent whole) என முன்வைப்பது தவறானது. ஏனெனில் ரஷ்யாவில் இயற்கை அல்லது அரை - இயற்கை பொருளாதாரத் திலிருந்து முதலாளியத்திற்கு மாறிச்செல்லும் நிலையிலேயே இன்னமும் பல துறைகளும் உழைப்புப் பிரிவினைகளும் இருக்கின்றன. (“கட்சித்திட்ட திருத்தத்துடன் தொடர்புடைய மூல அம்சங்கள்”, ஏப்ரல் - மே 1917இல் எழுதப்பட்டது, லெனின், நூல் திரட்டு, தொகுதி 24, ஆங்கிலப் பதிப்பு, பக்.425)
இந்திய தொழில் கழகங்கள் இப்பொழுது பிற நாடுகளின் மீதான புதுக் காலனிய சார்புத் தன்மையை அதிகரித்து வருகின்றன. இலங்கையில் மிகப்பெரிய எண்ணெய் தயாரிப்பாளராக இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளது.
ஏர்டெல் நிறுவனமானது 2015ஆம் ஆண்டில் 15 ஆப்பிரிக்க நாடுகளின் செல்பேசி வலைப் பின்னலை (நெட்வொர்க்கை) எடுத்துக் கொண்டது. துருக்கி, மலேசியா, சீனா, பிரிட்டன் மற்றும் நெதர் லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்திய ரசாயன ஏக போக நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உலகளாவிய அளவில் இழைகள் (fiber)) மற்றும் பாலியெஸ்டர் உற்பத்திக்கான முக்கிய உற்பத்தித் தளங்கள் உள்ளன. ஏற்றுமதிகள் 121 நாடுகளுக்கு செல்கின்றன.
உலக சந்தையில் முன்னணியில் உள்ள இந்திய நிறுவனங்களாக டிராக்டர் உற்பத்தியில் மஹிந்திரா, தொழில்நுட்ப துறையில் விப்ரோ மற்றும் மின்மாற்றி உற்பத்தியில் க்ராம்ப்டன் கிரீவ்ஸ் (Crompton Greaves) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இந்திய எஃகு நிறுவனமான ஆர்சலார்-மிட்டல் (Arcelor-Mittal) 2007இல் நிறுவப்பட்ட குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக அது தீவிரமாக முன்னேறியுள்ளது. லுக்சம்பர்க்கில் இருந்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு நிறுவனமான ஆர்சலார் நிறுவனத்தை மிட்டல் ஸ்டீல் எடுத்துக்கொண்ட போது இது துவங்கப்பட்டது. 2016இல் 41 மில்லியன் டன் உற்பத்தி மற்றும் உலகளாவிய அளவில் 1,99,000 ஊழியர்களோடும் ஆர்சலார்-மிட்டல் ஐரோப்பாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாள ராகவும் இந்திய ஏகபோக டாட்டா ஸ்டீலின் 24 மில்லியன் டன் உற்பத்தித் திறன் மற்றும் 70,000 ஊழியர்களின் வருடாந்திர உற்பத்தித் திறனை விட அதிகமாக உள்ளது. மனிதர்களையும் சூழலையும் சுரண்டும் இரக்கமற்ற முறைகளில், 30,000க்கும் அதிகமான சுரங்கத் தொழிலாளர்கள் கஜகஸ்தான், உக்ரைன், போஸ்னியா, கனடா, அமெரிக்கா, மெக்ஸிக்கோ, பிரேசில் மற்றும் லைபீரியாவில் ஆர்சலார்-மித்தலுக்கு வேலை செய்கின்றனர்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களை தனியார் மயமாக்குதல் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு எதிரான பரந்த வெகுஜன எதிர்ப்பை மன் மோகன் சிங் சந்தித்தபோது இந்து பாசிசத்துடன் உறவு கொண்ட நரேந்திர மோடியின் அரசாங்கம் 2014இல் பதவி ஏற்றது. அவரது “மேக் இன் இந்தியா” என்ற திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்பன இந்திய ஏகபோகங்களை குறிப்பாக விரிவாக்குவதற்கான கட்டமைப்பு நடவடிக்கை களும் முதலீடுகளுமே ஆகும்.
வெளிநாடுகளில் முதலீடு செய்யும் முதலீட் டாளர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள், சர்வதேச ஏகபோக நிறுவனங்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கைகள் ஆகியவையும் இந்த நோக்கத்திற்காக சேவையாற்றின.
2016 வாக்கில் 58 இந்திய நிறுவனங்கள் உலகெங் கிலும் 2,000 மிகப்பெரிய நிறுவனங்கள் என்ற குழுவிற்குள் நுழைந்தன. இது ஜெர்மனியின் 51ஐ காட்டிலும் அதிகம்.
இந்திய சுரங்கத் துறையின் குழுமமான அதானி 11.5 பில்லியன் யூரோக்களை ஆஸ்திரேலியாவில் கார்மைக்ஹேல் நிலக்கரி சுரங்கத்தில் முதலீடு செய்து வருகின்றது. இது ஆண்டுதோறும் 60 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகின்ற உலகெங்கிலும் மிகப் பெரிய சுரங்கங்களில் ஒன்றாகும். இந்த முதலீட்டில் இரயில் பாதை அமைத்தல் மற்றும் 99 வருட குத்தகையிலான நிலக்கரி துறைமுகமான அபோட் பாயின்ட் (Abbot Point) கட்டிடமும் அடங்கும். ஆஸ்திரேலிய அரசாங்கம் 2017இல் இந்த தற்பெருமைக்கான (Megalomaniac) திட்டத்தை அங்கீகரித்தது.இந்த திட்டமானது பரந்த நிலப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை குறைத்து கடற்கரையிலிருந்து விலகி அமைந்துள்ள கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) என்ற பவளப்பாறை பகுதிகளை முற்றிலும் அழித்து விடும். மோடி அரசாங்கம் வலிய 370 நிலக்கரி மின்சக்தி நிலையங்களை கட்டியெழுப்புகிறது; பத்து புதிய அணு உலைகளை கட்டமைக்க விரும்புகிறது. மோடி வெளிப்படையாக இந்துத் துவா சித்தாந்தத்துடன் தனது அரசாங்க திட்டத்தை நியாயப்படுத்துகிறார். இது முழு இந்திய துணைக் கண்டத்தின் “புவிசார்” பண்பாட்டு ஒற்று மையையும் உள்ளடக்கிய இந்து சாம்ராஜ்யத்தின் நோக்கமாகும்.
இது ஏகாதிபத்திய அபிலாசைகளுக்கு ஒரு சித்தாந்த அடிப்படையை வழங்குகிறது.
நேபாளத்தில் இந்தியாவானது சர்வதேச சட்டத்திற்கு முரணாக 2015இல் பொருளாதாரத் தடையை விதித்தமை, அந்நாட்டில் தெராயில் பிரிவினைவாத இயக்கங்களை ஆதரித்தமை யுடன் சட்டமியற்றுதலில் நேரடியாக தலை யிட்டமை என இந்தியாவின் ஆதிக்கத்தில் உள்ள இந்து அரசாக மாற்றுவதற்கு முனைகிறது. இந்து தேசியவாதம், ஒரு ஆக்கிரோஷமான கம்யூனிச எதிர்ப்பு சித்தாந்தமானது; மார்க்சிச-லெனினிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களின் அறிவிக்கப்பட்ட எதிரி.
2016ஆம் ஆண்டில் இந்திய அரசு, இராணுவ செலவினங்கள் என 55.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கொண்டுள்ளது. இது ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் இராணுவ செலவினங்களைத் தாண்டிவிட்டது. 2013இல் இந்தியாவில் முதலாவது விமானம் கட்டும் தளம் துவங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டில் முதல் மறுபயன்பாட்டிற்கான விண்வெளி விமானம் தொடங்கப்பட்டது.
மோடி ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து நேரடியாக சீனாவுக்கு எதிராக “மூலோபாய” கூட்டணிகளில் நுழைந்தார். உலக மேலாதிக்கத்திற்கான உரிமை கோரலில் அமெரிக்காவிற்கு சீனா அச்சுறுத்தலாக இருப்ப தால் கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவானது இந்தியா மீதே சார்ந்துள்ளது. ஏகாதிபத்தியங் களுக்கு இடையிலான இக்கூட்டணியானது இந்தியா தனது சீனப் போட்டியாளருக்கு எதிராக தனது நலனை சுதந்திரமாக அறுதியிடுவதையும் கொண்டுள்ளது. பரஸ்பர நன்மைக்காக இது ஒரு தற்காலிக மற்றும் முரண்பாடான கூட்டு ஆகும்.
அமெரிக்காவானது ஏகாதிபத்திய மேனிலை வல்லரசாக இன்னமும் ஆதிக்கத்தை செலுத்தினாலும் இந்தியாவானது முன்பு அமெரிக்காவை ஒரு சார்பாக மேலும் மேலும் சார்ந்திருந்ததானது மாறி மாறி ஒன்றையன்று ஊடுருவிச் செல்வதற்கான (interpenetration) வழியை வழங்குகிறது. உள்நாட்டு அரசியலில் இந்தியாவின் புதிய ஏகாதிபத்திய விரிவாக்க முனைவானது பல இலட்ச சர்வதேச தொழிற்துறை பாட்டாளி வர்க்கப்படை மற்றும் கோடிக்கணக்கான கிராம மக்களின் வர்க்கப் போராட்டத்தை அடக்கு வதையே முதன்மையான குறிக்கோளாக கொண்டு இருக்கிறது.
(ஆக. 2017இல் வெளியான** On the Emergence of the New-Imperialist Countries by Stefan Engel என்ற நூலிலிருந்து)
தமிழில் : சரவணன் வீரையா