‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலக மக்களையெல்லாம் அன்பு செய்த எம் தமிழினம் இன்று அகதிகளாக உலகெங்கும் சிதறிப் போயுள்ளது. ‘எங்கள் சகோதரி’ என அறிமுகப்படுத்த வேண்டிய எம்குலப் பெண்ணை ‘ஈழ அகதி’ என்று அடையாளம் காட்டும் துயரத்தோடு, எழுத்தாளர் தமிழ்நதியை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஈழத்தில் போர் உக்கிரமடைந்தபோது, அங்கிருந்து வெளியேறி கனடாவில் சில காலம் வாழ்ந்து, பின்பு தமிழ்நாட்டுக்கு வந்து தங்கியுள்ளார். ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற கவிதைத் தொகுதி மூலம் இலக்கிய உலகில் பரவலான வரவேற்பைப் பெற்றவர். அண்மையில் ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.

Tamilnathyதமிழ்நதியைப் பற்றி மேலும் சில கூறுவதற்குப் பதிலாக, அவரது கவிதையே அவருக்கு சிறந்த அறிமுகமாக இருக்கும் என்பதால் அவரது கவிதை ஒன்றை இங்கு தருகிறோம்.

தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்

ஆயுதங்களைக் கைவிடும்படி
அறிவித்தல் கிடைத்தது.

நல்லது ஐயா!

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்

எறிகணைகளுக்கும் விமானங்களுக்கும் தப்பி
எஞ்சிய வீடுகளையும் கோயில்களையும்
நாங்களே தரைமட்டமாக்கிவிடுகிறோம்.
கைவிடப்பட்ட கடவுளர் சிலைகளை
கடலின் ஆழத்துள் புதைத்துவிடுகிறோம்.
சுவர்களிலும் மரங்களிலும்
எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதறடிக்கப்படும்போதில்
வழியும் வெண் மூளைச்சாற்றின்
கனவில் இருப்பவர்களே!
சற்றே அவகாசம் கொடுங்கள்
எங்கள் குழந்தைகளுக்கு
நாங்களே நஞ்சூட்டிக் கொன்றுவிடுகிறோம்.
மேலும் நீங்கள்
வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
எங்கள் பெண்கள்
இழிவின்முன் தற்கொலைசெய்துகொள்ள
சற்றே அவகாசம் கொடுங்கள்.

போராளிகள் ஆயுதங்களைக் கைவிடும்முன்
கவிஞர்கள்
தம் கடைசிக் கவிதையை
எழுதிக் கொள்ளட்டும்.
பத்திரிகையாளர்கள்
'ஜனநாயகம்... ஜனநாயகம்' என்றெழுதி
துண்டாடப்படவிருக்கும் நாக்குகளால்
அச்சொல்லின் மீது காறியுமிழட்டும்.

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.
உங்களுக்கும் அது வேண்டியதே.

சுறுசுறுப்பாக இயங்கவிருக்கும்
உங்கள் வதைகூடங்களைச் சுத்திகரிக்க...
நவீன சித்திரவதைகளில்
சிறையதிகாரிகள் பயிற்சி பெற...
புகட்டுவதற்கென
மலமும் மூத்திரமும்
குடுவைகளில் சேகரிக்க...
நகக்கண்களுக்கென ஊசிகள்
குதிகால்களுக்கென குண்டாந்தடிகள்…
முகம் மூடச் சாக்குப்பைகள்...
கால்களுக்கிடையில் தூவ
மூட்டைகளில் மிளகாய்த்தூள்கள்
மேலும் சில இசைக்கருவிகள்
வதைபடும்போதில் எழும் கதறலை
நீங்கள் இசையமைத்து
பண்டிகைகளில் பாடவிரும்பலாம்.

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

மறந்தே போனேன்
எங்களைக் கைவிட்டவர்கள்
தேர்ந்த சொற்களால்
இரங்கலுரைகளை முற்கூட்டியே எழுதிக்கொள்ளலாம்.

எங்களது பூர்வீக நிலங்களில் குடியமர்த்த
ஆட்களையும் அடியாட்களையும்
தயார்ப்படுத்தியாயிற்றெனில்
யாவும் நிறைவு.

அந்தோ! பூரண அமைதி பொலிகிறது.

நாங்கள் கேட்கும்
அவகாசத்தை வழங்கி
தேவரீர் அருள்பாலிக்க வேண்டுகிறோம்.

--------------------- 

ஈழப்போராட்டம் குறித்து தமிழ் அறிவுஜீவிகள் மத்தியில் எழுப்பப்படும் கேள்விகள் சிலவற்றுக்கான பதிலை மின்னஞ்சல் வழியாக தமிழ்நதியிடம் வேண்டினோம். தமிழ்நதியின் பதில்கள் இதோ:

ஈழச்சிக்கல் தொடர்பாக இன்றைய தமிழகச்சூழல் எப்படி இருக்கிறது?

மனிதச் சங்கிலி மற்றும் உண்ணாநிலைப் போராட்டங்கள் பேரணிகள் இவற்றால் செய்யமுடியாத ஒன்றை முத்துக்குமார் என்ற தனியொரு இளைஞன் செய்துகாட்டியிருக்கிறான். அவனது மரணத்தின் பின்பு தமிழகத்தில் பெரியதொரு மாறுதலை, உணர்ச்சி அலையை அவதானிக்க முடிகிறது. அதன் நீட்சியாக பள்ளப்பட்டி ரவி, மயிலாடுதுறை ரவி (இருவர் பெயரும் ரவிதான்) இருவரும் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். ஒரு உயரிய நோக்கிற்காக உயிரை விட்டிருக்கிறார்கள் என்றாலும் இது தொடருமோ என்று அச்சமாக இருக்கிறது. உயிரோடு இருந்து சொல்லும் வார்த்தைக்கு மதிப்பில்லாத ஒரு சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே வருந்தத்தக்கதுதானே? ஒருவன் செத்துத்தான் தன்னைச் சுற்றியிருப்பவர்களை விழிக்க வைக்க வேண்டிய சூழல் ஆரோக்கியமானதல்ல. கத்திச் சொன்னால் கேட்காததைக் கன்னத்தில் அடித்துச் சொல்லவேண்டியிருக்கிறது.

அரசியல்வாதிகளிடமிருந்து ஈழச்சிக்கலை பொதுமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்குக் கடத்தியதில் முத்துக்குமாரின் பங்கு அளப்பரியது. தமிழகம் என்றுமில்லாதபடி விழித்துக்கொண்டுவிட்டதாகத் தோன்றுகிறது. தமிழகத்தை மீளுறக்கம் கொள்ளச் செய்த நாடகங்களும் பலிக்கவில்லை. இப்போது பாரிய இக்கட்டில் இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல; தமிழக மக்களை ஏமாற்றுவதில் தோற்றுப் போயிருக்கிற சில பெருந்தலைகளுந்தான்.

புலிகள் நினைத்திருந்தால் இத்தகைய பேரழிவிலிருந்து எப்போதோ மீண்டிருக்கமுடியும்; தேவையில்லாமல் போரை வளர்த்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறதே...

உயிர்வாழ யாருக்குத்தான் ஆசையில்லை? அந்த ஆசை புலிகளுக்கு மட்டும் இருக்காதா என்ன? மண்ணுக்காகத் தங்கள் உயிரை ஈகம் செய்த 22,700 (ஏறத்தாழ) மாவீரர்களுக்கும் வாழ்வு குறித்த காதலும் கனவும் நிச்சயமாக இருந்திருக்கும். தலைவர் பிரபாகரன் அவர்கள் நினைத்திருந்தால் அனுபவித்திருக்கக்கூடிய வசதியான வாழ்வை, அடைந்திருக்கக்கூடிய பதவியை நினைத்துப் பாருங்கள். எப்போதும் தலைக்குமேல் மயிரிழையில் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் வாழ்வைத் தேர்ந்தது எதனால்? ஓராண்டல்ல; ஈராண்டல்ல. ஏறத்தாழ 35 ஆண்டுகள் அப்படி வாழ்வதென்பது இலகுவானதல்ல. எதிராளிகள் சொல்லும் பதவியின் பொருட்டும் கூட அத்தகைய வாழ்வு சகிக்கத்தக்கதல்ல. பழகிப் புளித்த வார்த்தைகளில் சொல்வதானால் போர் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. அதை எதிர்கொள்ளவும் திருப்பித் தாக்கவும் வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஈழத்தமிழர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இறங்கிப்போய் இனவாதத்திடம் கையேந்தினால் என்ன நடக்குமென்பதை யாவரும் அறிவர். மலினமான சமரசங்களுக்காக அடிப்படை வாழ்வுரிமைகளை விட்டுக்கொடுக்க இயலாத காரணத்தினால்தான் தொடர்ந்து சமராட வேண்டியிருக்கிறதேயன்றி, போர்வெறியினால் அல்ல.

பொருத்தமான தீர்வை வழங்காமல் ஏமாற்றியும் இழுத்தடித்தும் கொன்றுகுவித்தும் போரை வளர்த்துவருவது ஐயத்திற்கிடமின்றி இலங்கை அரசாங்கம்தான்.

புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையா?

Tamilnathyஅது எப்படி உண்மையாக இருக்கமுடியும்? அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் 'அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் போர் நடக்கும் வன்னிப் பகுதிக்கு வந்து உண்மை நிலையை அறியவேண்டும்' என்று திரு.நடேசனால் அழைப்பு விடுக்க முடியுமா? விடுதலைப் புலிகள் வேற்றுக் கிரகத்திலிருந்தோ வேறு நாட்டிலிருந்தோ வந்தவர்கள் அல்லர். அவர்கள் அங்கே செத்துக்கொண்டிருக்கும் மக்களின் பிள்ளைகள், சகோதரிகள், சகோதரர்கள். தங்கள் பிள்ளைகளை, சகோதரர்களை ஆபத்துக் காலத்தில் விட்டுவிட்டுப் போகமுடியாமல் மக்கள்தான் அவர்களோடிருக்கிறார்கள். தங்களைக் காக்க ஆயுதம் ஏந்தியவர்களை மக்களால் பிரித்துப் பார்க்க முடியாது.

1995ஆம் ஆண்டிலே 'ரிவிரச' இராணுவ நடவடிக்கையின் மூலமாக யாழ்ப்பாணத்திலிருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் விரட்டியடிக்கப்பட்டபோது, அவர்கள் ஏன் விடுதலைப் புலிகள் இருந்த வன்னியை நோக்கிப் போனார்கள்? புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அண்மையில் இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது, மக்களும் விடுதலைப் புலிகளோடு சேர்ந்து வெளியேறிச் சென்றது ஏன்? மக்களிடமிருந்து புலிகளைத் தனிமைப்படுத்தும் உள்நோக்கோடு 48 மணி நேர போர்நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்தது. வெறும் 65 பேர்தான் வெளியேறிச் சென்றதாகச் செய்திகள் கூறுகின்றன. இதிலிருந்தே தெரியவில்லையா மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பது?

போர் நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களைப் புலிகள் தடுக்கிறார்கள் என்றொரு நச்சுப்பிரச்சாரத்தை வேண்டுமென்றே முடுக்கிவிட்டிருக்கிறது இனவாத அரசாங்கம். தன்னுடைய இனவழிப்பு நடவடிக்கையை உலகின் கண்களின் முன் நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இருக்கிறது. 'புலிகள் தடுக்கிறார்கள்... தடுக்கிறார்கள்' என்று சொல்லிக்கொண்டே அங்கிருக்கும் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அழித்துவிடலாம் அல்லவா? மேலும், தன்னினத்தையே அழிப்பதற்குத் துணைபோகும் திருவாளர் கருணா ஜூனியர் விகடனுக்கு அளித்த நேர்காணலில் "முப்பதாயிரம் வீரர்கள் இருந்த புலிகளின் படை இரண்டாயிரத்துக்கும் கீழ் சுருங்கி இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார். அப்படியே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், இரண்டரை இலட்சம் மக்களை இரண்டாயிரம் புலிகள் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு அபத்தமானது.

எவ்வித விமர்சனமுமின்றி எத்தனை சதவீதம் ஈழத்தமிழர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள்?

விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். அதுவொரு உணர்ச்சிவசப்பட்ட நிலை. செயற்கரிய செயல்களைச் செய்பவர்கள் மீது இயல்பாகவே எழும் வியப்பில் பிறந்த பிடிப்பு அது. அதற்காக எல்லோரும் அப்படியென்றில்லை. விடுதலைப் புலிகளின் இனவுணர்வு, அர்ப்பணிப்பு, தியாகம், கட்டுப்பாடு, வீரம் இன்னபிறவற்றால்தான் புலிகளை - ஈழத்தமிழர்கள் என்றில்லை- உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் நேசிக்கிறார்கள். எல்லா மனிதர்களையும் போல அவர்களும் சில தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அந்தத் தவறுகளோடும் கூட, விமர்சனங்களோடும் கூட அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள்தான் எங்களுடைய இறுதி நம்பிக்கை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எத்தனை சதவீதமானவர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. 90 சதவீதத்தினராக இருக்கக்கூடும்.

போரின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் உதவுவது புலிகளா? சிங்களப் படையினரா?

சிங்களப் படைகளா? கொல்பவன் எப்படிக் காப்பாற்றுவான்? ஆபத்துக் காலங்களில் வைத்தியர்களாக, தாதியர்களாக, தூக்கிச் சுமப்பவர்களாக, உறவுகளை இழந்து கதறுபவர்களைத் தேற்றுபவர்களாக விடுதலைப் புலிகள் இருந்ததை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இயற்கைப் பேரழிவான சுனாமியின்போதும் அதைக் காணமுடிந்தது. பாதுகாப்பு வலையம் என்று அறிவித்துவிட்டு அங்கே மக்களை வரவழைத்துக் குண்டு போட்டுக் கொல்கிறது இலங்கை அரசாங்கம். அண்மையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் மீது அகோரமான எறிகணை வீச்சை நடத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களைக் கொன்று தள்ளியது. கேட்டால் 'நியாயமான இலக்கு' என்கிறார் ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான கோத்தபாய ராஜபக்சே. கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழர்களைக் கொன்று 'இலங்கைத் தீவில் இப்படியொரு இனம் வாழ்ந்தது' என்ற சுவடே இல்லாமல் அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் இனவெறி ஆட்சியாளர்கள். உயிர்காக்க உதவும் மருந்துகளைக் கூட போர் நடக்கும் பகுதிகளுக்குக் கொண்டு செல்லவிடாமல் தடைசெய்திருக்கிறார்கள். அவர்களாவது... தமிழர்களுக்கு உதவுவதாவது...!

சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா?

ஒரு வாக்கியத்தை ஒருவர் ஏதோவொரு சமயத்தில் சொல்ல ஆரம்பிப்பார். பிறகு அது அவரிடமிருந்து இன்னொருவருக்குக் கடத்தப்படும். சில நாட்களில் அந்த வாக்கியம் தன்னளவில் பொருள் இழந்து எல்லோராலும் சாதாரணமாகச் சொல்லப்படும் ஒரு வாக்கியமாக மாறிவிடும். 'எந்த அரசாங்கத்தினது காலத்திலும் இப்படியொரு இனவழிப்பு நடந்ததில்லை' என்று சொல்வதுபோலத்தான். 'பழைய காலம் நன்றாக இருந்தது' என்று சொல்வார்களே... அதுபோல. உண்மையில் அது துயர்மிகு காலமாக இருந்திருக்கும்.

சில புலி எதிர்ப்பாளர்களாலும் இலங்கை அரசாங்கத்தாலும் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட பிரச்சாரங்களில் நீங்கள் கேட்டதும் ஒன்றுதானேயன்றி வேறில்லை. ஏதோவொரு மனக்கசப்பில் விடுதலைப் போராட்டத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், புலிகளால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களை 'புலியெதிர்ப்புக் காய்ச்சல்' பீடித்திருக்கிறது. மிகுந்த முனைப்போடு, திட்டமிட்டு அவ்வாறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது காழ்ப்புணர்வு கலந்த பரப்புரை உலகநாடுகளில் மறைமுகமாக ஈழப்போராட்டத்திற்கெதிரான சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது. அது அரசியல் தளத்தில் உள்ளார்ந்து இயங்கி பாதகமான விளைவுகளுக்குக் காரணமாகிறது. இவ்வாறான பரப்புரைகளால் தமது சொந்த மக்களின் நலன்களுக்கே எதிரிகளாகிறார்கள்.

சரி, புலிகள் வேண்டாமென்றால் யாரை நமது பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்வது? தனிப்பட்ட வாழ்வின் அற்ப சலுகைகளுக்காக இனவாத அரசாங்கத்தின் கால்களைக் கழுவிக் குடித்துக்கொண்டிருப்பவர்களையா? நமது மக்களைக் கொன்றுகுவிக்க வரைபடம் வழியாக வழிகாட்டிக் கொண்டிருப்பவர்களையா? 'புலிகள் பாசிசவாதிகள்... அவர்கள் வேண்டாம்' என்றால் யாரைத் தொடர்வதென்று கைகாட்டச் சொல்லுங்கள். அந்தப் புனிதர்களின் முகங்களை நாங்களும் கண்டுகொள்கிறோம்.

புலிகளை முழுவதுமாக அழித்துவிட்டு, ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்புவதாக இராஜபக்ஷே கூறுவதை நீங்கள் நம்புகிறீர்களா? சிங்களவர்கள் ஆட்சியில் வாழ்வதை விரும்புவீர்களா?

இந்த இருண்ட, துயர்படிந்த, கையறு காலத்தில் யாராவது நமக்குச் சிரிப்பூட்ட வேண்டியிருக்கிறது. கோமாளிகளுக்குப் பதிலிகளாக அரசியல் தலைவர்களே தொழிற்படும் காலம்போலும் இது. ராஜபக்ஷே தனது அறிக்கைகளால் எங்களுக்குச் சிரிப்பூட்டிக் கொண்டிருக்கிறார்.

புலிகளை முழுவதுமாக அழிப்பது சாத்தியமா என்பதை ராஜபக்ஷே சிந்திக்க வேண்டும். அவர் விரிக்கும் பொருளில் புலிகள் தோற்றுப்போகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், இறுதிவரை போராடிய அவர்கள் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் வென்றவர்களே! அதன் பிறகு போராட்ட வடிவமும் அதில் பங்கேற்கும் ஆட்களும் மாறுவார்கள் அவ்வளவுதான். மக்கள் மனங்களிலிருந்து புலிகள் மீதான அபிமானத்தை ஒருபோதும் அகற்ற முடியாது. 'புலிகளை விரட்டிவிட்டோம்' என்று, துப்பாக்கியை நீட்டிக்கொண்டு அரசாங்கம் கொக்கரிக்கும்போது மக்கள் உள்ளுக்குள் கனன்றுகொண்டுதான் இருப்பார்கள். வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்கள் மண்ணில் நடக்கும் அப்பட்டமான இனப்படுகொலைகளால் கொதித்துப்போயிருக்கிறார்கள். தமிழகத்திலிருக்கும் இனப்பற்றாளர்களும் அப்படித்தான். நாற்காலிக்காகத் தன்னினத்தையே விற்றுப் பிழைக்கிற சிலரைத் தவிர மற்றெல்லோருக்கும் புலிகளின் பின்னடைவு என்பது பெருந்துயரைத் தரத்தக்கதே.

உலகிலேயே வன்முறைகளில் முதலிடம் வகிக்கிற ஒரு நாட்டின் ஜனாதிபதி, வைத்தியசாலைகள் மற்றும் வழிபாட்டிடங்களின் மீது குண்டுபோட்டுக் கொல்லும் இராணுவத்திற்குத் தலைவராக இருக்கக்கூடிய ஒருவர், பச்சைக் குழந்தைகளைத் துடிக்கப் பதைக்கக் கொன்றுவிட்டு அதைத் தலைநகரில் கொண்டாடப் பணிக்கிற பண்பாளர் ஜனநாயகத்தை பற்றிப் பேசுவது உங்களுக்கு நகைப்பூட்டவில்லையா?

பெரும்பான்மை ஆட்சியில் நாங்கள் பட்ட, படும் சீரழிவுகள் போதாதா? நாங்கள் பிரிந்துசெல்லவே விரும்புகிறோம்.

'நாம் எடுத்துக்கொண்ட முயற்சியினால் உலகத்தின் கவனம் ஈழத்தமிழர் அவலத்தின் மீது திரும்பியிருக்கிறது' என்ற தொனிப்பட கலைஞர் பேசியிருக்கிறாரே...

இதற்கான பதிலை நாம் அனைவரும் அறிவோம். 'தாம் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள். இருந்தாலும் ஆண்டவரே! இவர்களை மன்னியும்' என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

உலகநாடுகள் தலையிட்டு ஈழத்தில் அமைதி ஏற்பட்டால், நீங்கள் அங்கு சென்று வாழ விரும்புவீர்களா?

நிச்சயமாக. சொந்த மண்ணில் வாழ்வதைக் காட்டிலும் மகிழ்ச்சி வேறென்ன இருக்கமுடியும்? இதை வெறும் பேச்சுக்காகச் சொல்லவில்லை. புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்குப் போய், அங்கே பதினொரு ஆண்டுகள் வாழ்ந்தபின், தாயகத்தில் வாழவேண்டுமென்ற ஆசை உந்தித்தள்ள 2003 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றேன். 2006 ஆம் ஆண்டுவரை அங்கேதான் வாழ்ந்தோம். கடுமையான போர்ச்சூழல் இரண்டாவது தடவையாகவும் புலம்பெயர வைத்துவிட்டது. ஓரளவு போர்ப் பதட்டம் தணிந்தால்கூடப் போதும். நான் மீண்டும் ஊருக்குத் திரும்பிப் போய்விடுவேன். 

தமிழ்நதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வாசகர் கருத்துக்கள்
Vijayakumar
2009-02-08 11:32:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தெளிவான பதில்கள். புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி. நன்றி கீற்று.

Bathuvai
2009-02-09 02:39:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

A really nice interview..bringing the exact dimension of Eelam Tamils all over...NOW the world is against TAMILS...need to break the vicious cycle...TIME is NOW or NEVER...TAMIL YOUTH ..come together..lets make a FREE TAMIL WORLD for us

seenivasan
2009-02-09 04:05:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

i cannot accept your answer. Our aim is eelam tamil people have to live with peaceful life.
We never accept LTTE because LTTE not accepting the democratic movement. If EELAM FORM
IN SRILANKA ONLY THE HITLER GOVERNMENT WILL HAPPEN.Tamilnathi,pls think.

Seenivasan
Bangalore

S.T.jayasuthahar
2009-02-09 04:25:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

very nice

வெ.பாண்டிராஜா
2009-02-09 10:21:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

களத்தை அறிந்தவரின் கவிதை!சகோதரி அவர்களே தூங்குகிறவர்களை எழுப்பிவிடலாம்.ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை என்ன செய்வது.சிலர் அரசியலுக்காகவும், இன்னும் சிலர் விதண்டாவிதத்திர்காகவும் புலிகளுக்கெதிராக தமிழகத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் தமிழ் மக்கள் பலர் சில அரசியல் காரணங்களால் வெளிப்படுத்த முடியாமல் உள்ளனர்.

ஜெனிற்ரா
2009-02-09 08:38:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

”விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். அதுவொரு உணர்ச்சிவசப்பட்ட நிலை. செயற்கரிய செயல்களைச் செய்பவர்கள் மீது இயல்பாகவே எழும் வியப்பில் பிறந்த பிடிப்பு அது. அதற்காக எல்லோரும் அப்படியென்றில்லை”(தமிழ்நதி)

தமிழ்நதியும் இந்த வகைக்குள்த்தான் அடங்குகிறார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. உங்களைப் போன்றவர்களது கண்மூடித்தனமான ஆதரவுதான் புலிகளது ஜனநாயக விரோதப் போக்குகளையும், அராஜகத் தன்மைகளையும் உச்சத்திற்குக் கொண்டுபோய் விட்டுள்ளது. குறைந்தபட்ச அடிப்படை ஜனநாயக உரிமைகளைக்கூட தாங்கள் எந்த மக்களுக்காகப் போராடுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்களோ அவர்களுக்கே மறுக்கின்ற புலிகள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தரப்போவதில்லை.

"எல்லா மனிதர்களையும் போல அவர்களும் சில தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அந்தத் தவறுகளோடும் கூட, விமர்சனங்களோடும் கூட அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். (தமிழ்நதி)

சில தவறுகளல்ல. பல தவறுகள், பல மாபெரும் தவறுகளை இளைத்து தமிழ் பேசும் மக்களை இன்று கையறு நிலைக்குத் தள்ளியிருக்கிறார்கள். புலிகளது தவறுகளை விமர்சித்ததால் முகவரியற்றுப் போன எத்தனையோ மானுடநேயம் மிக்க தேசப்பற்றாளர்களை தமிழ்நதி அறியவில்லைப்போலும். யாழ். பல்கலைக்கழக மாணவியான தமிழ்நதிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான விமலேஸ்வரன், தில்லை, செல்வி, விஜிதரன் மற்றும் யாழ். பல்கலைக்கழக உடற்கூற்றியல்துறை விரிவுரையாளரான ராஜினி திரணகம போன்றவர்களுக்கு (மக்களை நேசித்ததற்காகவும், உண்மை பேசியதற்காகவும் கொன்று தெருக்களில் வீசப் பட்டவர்கள்) என்ன நேர்ந்தது என்று தெரியாது போலும். ஆண்டுகள் பல கடந்த பின்னரும் ராஜினி திரணகமவின் துறை சார்ந்த இடம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நிரப்பப் படாமலேயே இருந்தது. மேற்கூறப்பட்டவை மிகச்சிறிய உதாரணம் மட்டுமே. ஈழத்தில் புலிகளால் கொல்லப்பட்ட தேசப் பற்றாளர்கள், கல்விமான்கள், அப்பாவிப் பொதுமக்கள், சகபோராளிகள் போன்றோரது பட்டியலை வேண்டுமானால் நான் தமிழ்நதிக்கு அனுப்பி வைக்கின்றேன். புலிகளது மக்கள் ஜனநாயக விரோதப் போக்கும், அரசியல் தூரநோக்கின்மையும், மக்களை அரசியல்மயப் படுத்தத் தவறியமையுமே தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தின் படுதோல்விக்குக் காரணமாயிருந்தது மட்டுமல்லாமல் எதிரியையும் இன்று வலுப்படுத்தியுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களைக்கூட பணம் வசூலிப்பதற்கும், கொடிபிடித்து வெற்றுக்கூச்சல் போடுவதற்கும்தான் புலிகள் பயன் படுத்துகின்றார்கள். இன்று புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் இந்த அரசியலற்ற தன்மையை தாராளமாகவே அவதானிக்கலாம்.

”கேள்வி: புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையா?
அது எப்படி உண்மையாக இருக்கமுடியும்? அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் 'அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் போர் நடக்கும் வன்னிப் பகுதிக்கு வந்து உண்மை நிலையை அறியவேண்டும்' என்று திரு.நடேசனால் அழைப்பு விடுக்க முடியுமா? (தமிழ்நதி)

புலிகள் தங்களை ஆதரிக்காத, அல்லது விமர்சித்த மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலிருந்து ராணுவத்தினரை நோக்கித் தாக்குதல்களை நடத்துவதும், ராணுவத்தின் எதிர்த் தாக்குதலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கொல்லப்படுவதும், உடமைகள் வீடுகள் நிர்மூலமாக்கப் படுவதும் புலிகளினது முக்கால வரலாறாயும் உள்ளது. இந்தப் போரின் ஆரம்பத்தில் புலிகள் முல்லைத்தீவை நோக்கி கட்டாயமாக இழுத்துச் சென்ற பல கிராமத்து மக்களில் எனது கிராமத்தைச் சேர்ந்த 126குடும்பங்களும் அடங்கும். நேற்றைய தினம் (09.02.2009) விஸ்வமடு வடக்கு சுதந்திரபுரத்தில் வன்னியிலிருந்து வந்த மக்களோடு அனுப்பப்பட்ட பெண்தற்கொலையாளி வெடித்ததில் பொதுமக்களும் (பெண்கள், குழந்தைகள்) பலியாகினர். இது எதைக் குறிக்கின்றது..? மக்களைப் பற்றிய எந்தக் கரிசனையும் இல்லாதவர்கள் என்பதை வெளிப்படுத்தவில்லையா?

இறுதியாக: உங்களது இந்தக் கேள்வி பதில்களுக்கு வரிக்கவரி ஆதாரங்களோடு என்னால் எழுத முடியும். ஆனால் இது ஒரு பின்னூட்டம் என்பதால் ஒரு சில விடையங்களோடு நிறுத்துகிறேன். உங்களது மூளைக்குள் நிறைந்து போயுள்ள புலிப் பாசாணத்தை துடைத்தெறிந்துவிட்டு உங்களது அறிவுக் கண்ணைத் திறந்தீர்களானால் அப்போது நிறைய விடையங்கள் உங்களுக்குப் புலப்படும். என்வரையில் இலங்கையில் அரச பயங்கரவாதமும், புலிப் பயங்கரவாதமும் கொழுக்கட்டையும் மோதகமும் கதை போன்று உருவத்தில்த்தான் வௌ;வேறானவை தவிர உள்ளடக்கத்தில் ஒன்றுதான்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழகத்தில் எழுந்துள்ள ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு எழுச்சி என்பது சற்று ஆறுதலையும், நம்பிக்கையையும் தரும் விடையமாயுள்ளது. இந்த எழுச்சி தமிழ் நாட்டு கட்சியரசியலுக்குள்ளும், புலி மாயைக்குள்ளும் சிக்காது மக்கள் எழுச்சியாக பாதுகாக்கப் படவும், வளர்த்தெடுக்கப்படவும் வேண்டும். இதுவே ஈழத்தமிழ் மக்களின் எதிர் காலத்திற்குப் பலமாக அமைய முடியும்.

-ஜெனிற்ரா-

lakshmanaraja
2009-02-10 07:55:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

@jenita,

//சரி, புலிகள் வேண்டாமென்றால் யாரை நமது பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்வது? தனிப்பட்ட வாழ்வின் அற்ப சலுகைகளுக்காக இனவாத அரசாங்கத்தின் கால்களைக் கழுவிக் குடித்துக்கொண்டிருப்பவர்களையா? நமது மக்களைக் கொன்றுகுவிக்க வரைபடம் வழியாக வழிகாட்டிக் கொண்டிருப்பவர்களையா? 'புலிகள் பாசிசவாதிகள்... அவர்கள் வேண்டாம்' என்றால் யாரைத் தொடர்வதென்று கைகாட்டச் சொல்லுங்கள். அந்தப் புனிதர்களின் முகங்களை நாங்களும் கண்டுகொள்கிறோம்.
//

இதற்கும் ஒரு பதிலை கொடுத்துவிடுங்கோலேன் சகோதரி திரு.jenitta. உதவியாய் இருக்கும்





சாத்திரி
2009-02-10 11:35:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

///யாழ். பல்கலைக்கழக மாணவியான தமிழ்நதிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான விமலேஸ்வரன், தில்லை, செல்வி, விஜிதரன் மற்றும் யாழ். பல்கலைக்கழக உடற்கூற்றியல்துறை விரிவுரையாளரான ராஜினி திரணகம போன்றவர்களுக்கு (மக்களை நேசித்ததற்காகவும், உண்மை பேசியதற்காகவும் கொன்று தெருக்களில் வீசப் பட்டவர்கள்) என்ன நேர்ந்தது என்று தெரியாது போலும். ஆண்டுகள் பல கடந்த பின்னரும் ராஜினி திரணகமவின் துறை சார்ந்த இடம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நிரப்பப் படாமலேயே இருந்தது. மேற்கூறப்பட்டவை மிகச்சிறிய உதாரணம் மட்டுமே. ஈழத்தில் புலிகளால் கொல்லப்பட்ட தேசப் பற்றாளர்கள், கல்விமான்கள், அப்பாவிப் பொதுமக்கள், சகபோராளிகள் போன்றோரது பட்டியலை வேண்டுமானால் நான் தமிழ்நதிக்கு அனுப்பி வைக்கின்றேன். புலிகளது மக்கள் ஜனநாயக விரோதப் போக்கும், அரசியல் தூரநோக்கின்மையும், மக்களை அரசியல்மயப் படுத்தத் தவறியமையுமே தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தின் படுதோல்விக்குக் காரணமாயிருந்தது மட்டுமல்லாமல் எதிரியையும் இன்று வலுப்படுத்தியுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களைக்கூட பணம் வசூலிப்பதற்கும், கொடிபிடித்து வெற்றுக்கூச்சல் போடுவதற்கும்தான் புலிகள் பயன் படுத்துகின்றார்கள். இன்று புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் இந்த அரசியலற்ற தன்மையை தாராளமாகவே அவதானிக்கலாம்.///


அம்மணி ஜெனிற்றாவிற்கு அன்பான வணக்கங்கள்.யாழ்பல்கலைக்கழக மாணவர்களான விமலேஸ்வரன், தில்லை, செல்வி, விஜிதரன் இவர்களை புலிகள் கொன்று எந்தெந்த இடங்களில் விசியிருந்தார்கள் என.ற கொங்சம் விபரமாய் சொன்னால் நானும் அறிந்து கொள்ளலாம்.அடுத்தது யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர் ராஜினி இந்திய இராணுத்தின் படுகொலைகள் முக்கியமாக யாழ் வைத்தியசாலைப்படுகொலை மற்றும் தமிழ் தேசிய இராணுவம் என்கிற பெரால் தமிழ் இளைஞர்களை இந்திய இராணுவத்தின் உதவியுடன் ஈ.பி. ஆர்.எல்.எல் அமைப்பு பிடித்து கட்டாயப்பயிற்சி கொடுத்தவை போன்ற மனிதவுரிமை மீறல்களை சர்வதேச மன்னிப்புச்சபைக்கு ஆதாரங்களுடன் வழங்கிவந்ததனால் அன்றை ஈ.பி. இராணுவப்பொறுப்பாளர் சுபத்திரனால் கொலை செய்யப்பட்டார்.அடுத்ததாய் நீங்கள் சொல்லிய தேசப்பற்றாளர்கள் யாரர்?? அல்பிரட்துரையப்பா . அமிர்தலிங்கம்.பஸ்தியாம்பிள்ளை . யோகேஸ்வரன். இவர்களைத்தானே ... கிகிகி.. போராளிகள் என்றது சிறீ சபாரத்தினம் பத்மநாபா..இவர்களைத்தானே கிகிகீகீ.....கல்வி மான்கள் நீலன் திரச்செல்வம். கதிர்காமர்.இவர்களைத்தானே..கிகீகீகீ.....அடுத்ததாய் அப்பவிப் பொதுமக்கள்...அது கருணாவையும் டக்லசையும்தானே....கீகீகீகீ... சொன்னீர்கள்...அது உங்களுக்கு மட்டுமல்ல உலகத்தமிழினத்திற்கே தெரிந்த விடயம்தான். எனவே இறுதியாய் ஒன்று ஊரில் உள்ளவர்களைத்தான் புலிகள் மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்றீர்கள் ஆனால் புலம்பெயர் தேசங்களில் கவனயிர்ப்பு நிகழ்வுகளில் பல்லாயிரம் ஏன் இலச்சம் மக்கள் கலந்து கொள்கிறார்கள் இங்கும் துவக்கை காட்டியா இவ்வளவு மக்களையும் மிரட்டி ஊர்வலத்திற்கு லொறிகளில் ஏற்றிப்போகின்றனர். அதுவும் இவளிநாட்டு காவல்துறைக்கும் தெரியாமல் புலிகள் மக்களை மிரட்டி வெறும் அரசியலற்ற கூச்சல் போட இழுத்துச்செல்கிறார்கள். சரி நீங்களாவது அரசியலுடன் கூச்சல் போடுவது எப்படி என்று உலகத்தமிழர்களிற்கு ஒரு வகுப்பெடுக்கலாமே????கீகீகீகீ......

nambira
2009-02-10 12:12:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

pl don't follow thw footsteps of cho ramaswamu jenuta

வெற்றிச்செல்வி
2009-02-10 05:51:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஜெனிற்றாவிற்கெல்லாம் பதில் சொல்லி எதற்கு உங்கள் நேரத்தை வீணடிக்கின்றீர்கள்? தமிழன் செய்த தலைவிதியாய் சில தலைவலிகள் நமக்குள்ளேயே இருக்கின்றன. கோத்தபாயவிற்கும் ராஜபக்ஷேவிற்கும் வால் பிடிக்கும் கருணா போல சில கோடாரிக்காம்புகள்.

'காந்தியை கோட்சே சுட்டதனால் காந்தி கெட்டவராகி விட்டாரா என்ன? விட்டுத்தள்ளுங்கள் அந்த அம்மணிக்கு வரலாறும் தெரியவில்லை இப்போதைய வாழ்வியலும் தெரியவில்லை. வாய்புளிச்சுதா மாங்காய் புளிச்சுதான்னு சுப்ரமணிய சுவாமி மாதிர் தன் கருத்தைச்சொல்லி இருக்கின்றார். இவர்களுக்கெல்லாம் ஒரே பாடம். அலட்சியப்படுத்துங்கள். உதுகளுக்கு விளங்க வைக்கிற நேரத்தில ஹிலாரி அம்மையாருக்கு ஒரு கடிதம் எழுதிப்போடுங்கள்.

நன்றி.

சுவாதி, சுவாமி
2009-02-11 03:59:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஈழத் தமிழனை அழிக்க சிங்களவன் தேவையில்லை. ஜெனிட்டா போன்றவர்களே போதும். காட்டிக் கொடுப்பதையும், கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவதையும் தவிர இவர் குறிப்பிட்டிருக்கும் மகான்கள் இதுவரை சாதித்தது எதுவும் இல்லை. ஒவ்வொரு உயிரும் துடிக்க துடிக்க மாண்டு கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட தமது மேதாவித் தனத்தையும், பொறுக்க முடியாத சுயநல அழலையும், காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்துவதில் தான் இலக்காக இருக்கிறார்கள். இவர்களுடன் ஒப்பிடும் போது ராஜபக்சே மேலானவன். தன் சொந்த இனத்துக்காகத் தான் அவன் எங்களுக்கு எதிரியானான்.

நீங்கள் தேசபக்தர்கள் என்றும் கல்விமான்கள் என்றும் சகபோராளிகள் என்றும் குறிப்பிடுபவர்களைப் பற்றி எங்களுக்கும் தெரியும். என்னவோ நீங்கள் மட்டும் தான் ஈழத்தில் இருந்தவர் போலும் நாங்கள் என்னவோ வேற்றுகிரகத்து மனிதர் போலவும் எழுதுகிறீர்கள். நிர்மலா நித்தியானந்தம் அவர்களிடம் கல்வி கற்ற மாணவிகளில் நானும் ஒருத்தி. அவரது சகோதரி ராஜினி திரணகம அவர்களை பற்றி எங்களுக்கும் தெரியும். இதுவரை அவரது குடும்பத்தினர் யாருமே ராஜினியின் கொலையில் விடுதலைப் புலிகளை குற்றம் சுமத்தியதில்லை. தவிர ராஜினி அவர்கள் இந்திய இராணுவத்தின் அட்டூழியத்தையும், இந்திய இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் வீடு வீடாய் போய் பெண்களை கற்பழித்ததையும், தமது இராணுவ சேர்க்கைக்கு இளைஞர்களை கட்டாயப்படுத்தியதையும் ஆதாரங்களோடு நிரூபிக்க முனைந்த போது தான் கொலை செய்யப்பட்டார் என்று எல்லோருக்குமே பட்டவர்த்தனமாக தெரிந்த ஒன்று . நீங்கள் சொல்லும் மகான்கள் தாங்கள் செய்யும் கொலைகளையும், கொள்ளைகளையும் புலிகள் மீது தூக்கிப் போடுவது காலங்காலமாய் நடப்பது என்பது ஈழத்து மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதனால் வேறு கதை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

உங்களால் போற்றப்படும் அந்த மகான்கள் எங்கள் வீடுகளில் புகுந்து பெண்களை வேட்டையாடிய போதும், ஊருக்குள் காலித்தனம் செய்ததும் கூட எங்களிடம் வரலாறாயும் ஆதாரங்களாயும் இருக்கின்றன. நாங்கள் இவர்களை அடக்கவும் அழிக்கவும் யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிய காலங்களை இன்னமும் மறக்கவில்லை சகோதரி. பெரும்பான்மையான பொதுமக்களால் வெறுக்கப்பட்டவர்கள் (உங்கள் மகான்கள்) அழிந்தார்கள். அதே பெரும்பான்மை பொதுமக்களால் ஆதரித்து வளர்க்கப்பட்டவர்கள் தான் இன்று வரை தமிழ்மக்களோடு அத்தனை இடரிலும் நின்று களமாடுகிறார்கள்.அவர்கள் அன்றைக்கும் சரி இந்தக் கணமும் சரி பஞ்சு மெத்தையிலோ, பணம் பகட்டிலோ புரண்டு கொண்டிருக்கவில்லை. காடுகள் தான் அவர்களுக்கு உறைவிடமாயிருக்கிறது. நானும் நீங்களும் அழகாக வக்கணையாக கணனியில் வார்த்தையாடிக் கொண்டிருப்பதைப் போல் அவர்களால் இருந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எங்களை போல் வாழ்கையை தேர்ந்தெடுக்காமல் எங்களுக்காக வாழ தேர்ந்தார்கள். அந்த வித்தியாசம் தான் உங்கள் வார்த்தைகளை இங்கு நாங்கள் ஏற்றுக் கொள்ளாதற்கு காரணம்.

நேற்றைய தினம் (09.02.2009) விஸ்வமடு வடக்கு சுதந்திரபுரத்தில் வன்னியிலிருந்து வந்த மக்களோடு அனுப்பப்பட்ட பெண்தற்கொலையாளி வெடித்ததில் பொதுமக்களும் (பெண்கள், குழந்தைகள்) பலியாகினர். இது எதைக் குறிக்கின்றது..? மக்களைப் பற்றிய எந்தக் கரிசனையும் இல்லாதவர்கள் என்பதை வெளிப்படுத்தவில்லையா? என்று கேட்டவர் இன்று அது கூட சிங்கள இராணுவமே மக்களை சுட்டுக் கொன்றுவிட்டு கதையை திசை திருப்பிய படலத்தையும் படித்துவிட்டு எழுதியிருக்கலாம். அவசரப்பட்டு விட்டார்.

ஒவ்வொரு போராளியும் தன் உயிரை பணயம் வைத்து , தன்னுடைய வாழ்கை , கனவு பற்றிய சிந்தனையில்லாமல் களமாடிக் கொண்டிருப்பதை விமர்சித்திருக்கும் விதத்தில் தான் எத்தகைய காழ்ப்புணர்ச்சி? சகோதரி வெற்றிச்செல்வி சொல்வது போல் உங்களோடு வார்த்தையாடுவதை விட புலம் பெயர்ந்த எமது கைகளிலும் சில கடமைகள் இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாகச் செய்வது மிகவும் பயனுள்ளது.

எல்லாவற்றையும் பதிந்தபடி காலதேவனின் வரலாறு இன்னமும் முடியாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஈழத்தில் இன்னமும் வரலாறு எழுத எதிர்காலம் விடிந்து கொண்டு தான் இருக்கும், அதற்குள் அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி தமிழருக்கு தமிழரே எதிரியாக வேண்டும் என்ற முனைப்பில் ஏன் சிலர் இருக்கிறார்கள் என்பது தான் இதுவரைக்கும் புரியாத ஒன்று.

Jayanthan
2009-02-12 01:48:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பதில்கள் அருமை. ஆனால் கேள்விகள் சொதப்பல்.

சுவாதி, சுவாமி
2009-02-12 04:02:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'நாம் எடுத்துக்கொண்ட முயற்சியினால் உலகத்தின் கவனம் ஈழத்தமிழர் அவலத்தின் மீது திரும்பியிருக்கிறது' என்ற தொனிப்பட கலைஞர் பேசியிருக்கிறாரே..."

கலைஞர் அவர் வசனம் எழுதும் திரைப்படங்களாயும், கற்பனை நவல்களாயும் எமது போராட்டத்தை கவனிப்பதை ஏன் எல்லோரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. அவர் ஒரு புத்தகம் எழுத கோவாவுக்கு போய் ஓய்வு எடுத்து எழுதுவார். ஆனால் எங்கள் போராட்டம் அப்படிப்பட்ட சொகுசு அறை சோம்பல் முறிப்பல்ல. உயிர்கள் பணயம் வைத்து அர்பணிக்கப்படும் ஒரு வரலாற்று போராட்டத்தை இத்தனை இழிவாகவும், சுயநலமாகவும் கையாள இவரால் மட்டுமே முடியும். இத்தனை வருட போராட்டமும், எங்கள் மக்களின் நம்பிக்கையும், உறுதியும், அவர்கள் உலகமெங்கும் நடத்தி வரும் கவன ஈர்ப்பு போராட்டங்களும், தமிழகத்தின் தமிழின உணர்வாளர்களின் கொந்தளிப்பும், அவர்களில் பலர் தமது இன்னுயிர்களை எமது மக்களின் துயர் தீரவேண்டுமென்ற நோக்கில் தற்கொடையாக அ(ழி)ளித்தமையும் தான் இன்று இந்தளவுக்கு உலகத்தின் பார்வை திரும்பியிருக்கிறது.

ஒருவேளை ஈழத்தில் ஒவ்வொரு தமிழனும் வன்கொடுமையில் மடிந்து வீழ்வதை இவர் வேடிக்கை பார்த்தவிதத்தினால் உலகம் எமது பக்கம் பரிதாபமாகப் பார்த்தது என்று சொல்லியிருப்பார்...அதை தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்களோ என்னமோ? :):)

CAPitalZ
2009-02-12 06:54:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

I accept what வெற்றிச்செல்வி said.
Sri Lanka government is not even allowing Sinhalese journalists to talk to those Tamil civilian camp where the suicide bomb exploded. Army fired on people after the bomb exploded as it was said on TamilNet. And that's why they are not allowing even Sinhalese journalists.

Same thing why Sri Lanka government not allowing journalists to go talk to those Tamil people under LTTE control? People are not forced but voluntarily moved with LTTE.

vikram
2009-02-16 07:47:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Tamil unarvu pporvama Irruku

raja
2009-02-17 06:07:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

very nice

karunanithi
2009-02-21 01:38:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

VERY GOOD ARGUMENTS COVERING ALL SUBJECTS.THANK U

UTHAYA
2009-02-21 09:45:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Dear sister, a very clear vision in your interview... donot worry... soon our brothers get freedom to you all... tamil eelam malarum,... yuththam illaatha.. puththam puthiya ...tamil nadu...varumm...

இளைய அப்துல்லாஹ்
2009-03-03 06:34:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அரசியல் இராணுவ விடயங்களுக்கு அப்பால் பொதுமக்கள் தொடர்பாக யாருமே சிந்திக்கிறார்களில்லை. அதுதான் மனதை அரிக்கிற விடயம். மக்களை கொல்வதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களையும் அரசியலையும் தேடுகிறார்கள். ஆயுதம் உள்ளவன் ஆயுதமே இல்லாத அப்பாவி மக்களை சுட்டுத்தள்ளிக்கொண்டிருக்கின்றான். இது புலிகள் என்றாலும் ஏனைய ஆயுதம் தூக்கிய தமிழ் இயக்ககாரர்கள் என்றாலும் விதி விலக்கல்ல அரச இராணுவம் பொதுமக்களை சுட்டுத்தள்ளுகிறது. ஆயுதம் தரிக்காத அப்பாவி முஸ்லிம்மக்கள் ஒரு லட்சம் பேர் வடக்கில் தமது சொந்த பூமியில் இருந்து புலிகள் விரட்டியத்து ஊரற்றவர்கள் ஆக்கிய போதும், சும்மா இருந்த மூதூர் முஸ்லிம்மக்களை மாவிலாறு சண்டையை மூதூர் வரை விஸ்த்தரித்து புலிகள் அவர்களை வீட்டை விட்டு விரட்டிய போதும் அல்லல்பட்டார்கள். இன்னும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இதுதான் நிஜம் துப்பாக்கியுள்ளவர்கள் துப்பாக்கி இல்லாதவர்களை தொடர்ந்து ஆண்டுகொண்டிருக்கின்றனர். எனது தம்பி மெளலவி அவன் பிறந்த வீட்டுக்கு ஒட்டுசுட்டானில் இருக்கிறது அங்கு போகப்போனபோது முகமாலை புலிகளின் சோதனைச்சாவடியில் வைத்து தமிழ் ஈழம் கிடைச்சசாப்பிறகு வாங்கோ அப்பதான் உங்களை விடுவோம் என்று சொன்னார்கள். இதுதான் நிலமை
தமிழ் நதி சொன்னது போல
சொந்த மண்ணில் வேரோடு எனது புளியங்குளத்தில் அந்த மா மரத்தின் கீழ் ஒரு குட்டி மேசையை போட்டிருந்து எழுதிக்கொண்டிருக்க மட்டுமே ஆசை முந்தி புலிகள் விடவில்லை இப்பொழுது ஆமிக்காரர் விடுகிறார்களில்லை.

murali
2009-03-06 05:58:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Dear sister, a very clear vision in your interview... donot worry... soon our brothers get freedom to you all... tamil eelam malarum,... yuththam illaatha.. puththam puthiya ...tamil nadu...varumm...

G Rajendran
2009-03-12 11:16:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Highly enlightened interview. In Tamil Nadu too, poets are there.
But they have become bonded poets and that is why they all kept quiet.
"Arasial Pizhaithorkku ARAM Kootraahum" endra Ilangovin Vaakku Palikkum
naal vegu tholaivil illlai. Puratchikkavi Bharathi, Indru Uyirodu
irunthirunthaal " Sinhala theevinukkor paalam amaippom, Sethuvai
maeduruthi EEZHAM samaippom" endruthaan paadi iruppaan.

saravanan
2009-03-17 01:20:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

indha nergaanal padithu vittu nanbargalidam sollungal

asoktagore
2009-03-19 01:19:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

verry verry good website.excealant articles!

makizhan
2009-03-19 02:49:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Good one.Comments for this articles is great one and every one should clear our vision on Puligal.... keetru keep it up

theepan
2009-03-29 03:11:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ungal karuththu ellam arumai.jenitha ponra perum thesa thurogikalin karuthu ellam appadithane irukum.
ungalidam irunthu ennum pala padipukal vara kathirukirome.

anton
2009-04-14 04:51:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Dear Jenita, not sure where are you from. But, you have tried to mislead as many as you can. Your comment is simply out running Sinhala propaganda. Coming to your point, Who killed Rajini Thiranagama? LTTE?? You must be kidding!!It is EPRLF who killed her. So you are lying. Second, about other Jaffna University students, who killed them? And why the killed them? You dont want to talk about it, isnt it?
Who are the democaratic leaders you are talking about? Amirthalingam?? Do yuo know what did he do during Indian occupation in eelam?? He asked (from India through radio) tamils to support IPKF in order to wipe out LTTE. Kadirgamar, Neelan thiruchelvam...? Yes, they advised Sandrika to run the war against Tamils and went around the world to ban Tigers and our eelam. Is this what you want? Then come out from your mask and show your face to everyone and say " I am against Tamils and Tamil eelam and I want LTTE to be destroyed with Tamil's hoe, EELAM".

I got a simple name for you, you can use this anywhere you want. It is...COWARD !!!Do you like it !!Keep it!!!

Bye.

kaalan
2009-04-14 05:36:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

aarumai tamil nathi

Thiyagarajan Lakshmanan
2009-04-14 08:32:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஜெனிற்ரா மற்றும் சீனிவாசன் போன்ற கோடரிக் காம்புகளால்தான்(துரோகிகள்) தமிழர்கள் இன்னும் அவதிப்படுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் பதில் எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

kutty
2009-04-14 10:54:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Evvalavu naattu patru ulla neengal nattil erunthu porada veendama?

purappadunkal naattuku porada.

sathya
2009-05-01 09:27:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

shows the reality....

ஜூட்
2009-05-12 12:13:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இளைய அப்துல்லா அவர்களுக்கு
முஸ்லீம்களை புலிகள் விரட்டிய கதை பேசுகின்றீர்களே? இப்போது அங்கே(வடக்கில் யாழ்ப்பாணத்தில்) அரசாங்கத்தின் ஆட்சிதானே 1996ல் யாழ்ப்பாணத்தை அரசு கைப்பற்றியதன் பின்னர் ஏன் முஸ்லீம்களை மீள்குடியேற்றம் செய்யவில்லை? இதனை சிந்தித்துப்பாருங்கள் சும்மா புலிகளையும் தமிழர்களையும் குறைகூறுவதை விட்டுவிட்டு உங்கள் அமைச்சர்கள்(பெரும்பாலான முஸ்லீம் எம்பிக்கள் அமைச்சர்கள் தானே) தங்கள் சொத்தை உயர்த்தியுள்ளார்களே தவிர வேறு என்ன செய்தார்கள்?

இந்தக்கேள்விகளுக்கு விடையளியுங்கள்.

ஜூட்

T.Subhas chandra Bose
2009-05-13 08:34:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

clear ideas.Now the Indian Government spreads so many unreal facts about LTTE.This interview is the
need of an Hour.

Rajalakshmi.M
2009-05-14 10:42:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

nan pondicherry universityil m.phill aaivu maanavar pulampeyarndha elelathu pen kavinargal patri ennaku thagaval thandhu udhavavumaru kettu kolkiren
By
M.Rajalakshmi

nishanthan
2009-05-15 03:04:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Ms Jenita, Your article is fine and you have elaborated exactly the true picture of Ltte fascists. Thank you. After the elimination of these fascists, we Tamils could live peacefully and amicably with other communities. Herd of sheeps of these fascists cannot digest the true facts done by Ltte barbarians to humanity. Please do not bother about the comments drawn by Ltte supporters.

saravanakumarp
2009-05-16 12:06:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

very nice.

Abu Azeem
2009-05-19 02:01:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

dear very nice your answer and what are u doing working?

சாவின் விளிம்பில் நிற்கும் மக்களைக் காப்பாற்ற இந்தக் கட்டத்திலாவது அனைத்துலகமும் ஐநாவும் முன்வர வேண்டும்

Thambi
2009-06-01 10:12:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pulikal nelathai than izhanthu irrukirarkal
Palathai illai

Nandri

diaspora
2009-06-21 04:10:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தமிழ்நதியால் கூறப்பட்ட விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டிருக்கும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். தமிழ் துரோகிகள் புலிகளின் மக்கள் விரோத செயல்களை மூடி மறைக்கும் புலிகளின் பிரசார பீரங்கி அவர்.

R.Mahendran
2009-07-30 02:44:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

wonderfull.Thamizhnathy's answer.
thank you.mullaiamuthan

velpery
2009-08-03 12:07:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Miss tamilnathy now what u feel about the remedy of people in vavunia camp.and how tamilnadu people will help to those people.and why u all the people does not talk about the people who are in the camp of tamilnadu and their living condition