மரண தண்டனை கூட்டமைப்பு என்பது, மரண தண்டனையை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையில் இணைந்த இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பாகும். இக்கூட்டமைப்பு நம் நாட்டில் உள்ள “சட்ட வசதிகள்”, “காவல் அத்துமீறல்கள்”, “மனித உரிமை மீறல்கள்”, “மானுடத்திற்கு எதிரானது”, “நிரந்தர தீர்வு அல்ல” போன்ற காரணங்களால் மரண தண்டனையை இந்தியா போன்ற நாடுகள் ஒழிக்கவேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

மரண தண்டனையை 138-க்கும் மேற்பட்ட நாடுகள் முற்றிலுமாக நீக்கிவிட்ட நிலையில், இந்தியா, சீனா, அரபு நாடுகள் உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் அத்தண்டனையை இன்னும் வைத்துள்ளன. இந்திய போன்ற காந்திய வழி நாடுகளில் இத்தண்டனை ஒரு பெருமுரண்.

  • மரண தண்டனை குற்றங்களை குறைக்கவில்லை, மாறாக பழியுணர்சியை மட்டுமே வளர்க்கிறது.
  • மரண தண்டனையால் நிரபராதிகள் கொல்லப்பட்ட நிகழ்வு, அண்மைக்காலம் வரை தொடர்கிறது.
  • குற்றவாளிக்கு தூக்கு, என்பது பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் நீதி என்றால், நாம் “கொலையை” ஒரு தீர்வாக முன்வைக்கிறோம் என்பதாகும். இதனால் வரும் பின்விளைவுகள் சாதாரண பொது மக்களையே பாதிக்கும்.
  • சிறைச்சாலைகள் குற்றவாளிகளை திருத்த முயலவேண்டுமே தவிர அவர்களை முடித்து விடுவது மனித நீதிக்கு மாறானது.
  • ஒரு சாமானியன் செய்யும் கொலையை, மீண்டும் ஒரு அரசே செய்வது முதிர்ச்சியற்ற செயலாகும்.

மரண தண்டனையை பொதுவாக எதிர்க்கும் அதே நேரத்தில், பேராசிரியர் தேவேந்திர பால் சிங் புல்லர் பற்றியும் காண்போம்.

poster-tamil_640

சண்டிகர் குரு நானக் பொறியியல் கல்லூரியில் ஒரு மின்னியல் பொறியியல் பட்டதாரியாக பட்டம் பெற்று பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக வேலை செய்து வந்தவர்.

பஞ்சாப் இன மக்களின் மீட்சிக்காக பாடுபட்டு வந்த குடும்பத்தை சேர்ந்தவர். சைனி என்ற காவல் துறை அதிகாரியால் புல்லரின் தந்தை, மாமா, உற்ற நண்பன் முதலானோர் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டு, பிறகு தொலைந்து போய் உள்ளனர். இக்காவல் அதிகாரியால் இடுப்பு முறிந்தவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என பஞ்சாபில் ஏராளமானோர். இது தொடர்பாக இக்காவல் அதிகாரியின் மீது CBI வழக்கு நிலுவையில் உள்ளது.

1993-ஆம் ஆண்டு தில்லியில் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று இவர் மீது குற்றப்பத்திரிக்கை.

1995-ஆம் ஆண்டு தனக்கும் தன் குடும்பத்திற்கும் உயிர் சேதம் ஏற்படலாம் என்று ஜெர்மனி சென்று அங்கு தஞ்சம் கோரினார். ஆனால் கோரிக்கை மறுக்கப்பட்டு இந்தியா அனுப்பப்பட்டார்.

இவரை கைது செய்த காவல் துறையினர் இவரை திஹார் ஜெயிலில் அடைத்து வலுக்கட்டாய வாக்குமூலம் பெற்றனர்.

கொடிய TADA வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு வாக்குமூலம் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து மரண தண்டனை வழங்கப்பட்டது.

காவல் துறை கொண்டு வந்த 133சாட்சியங்களில் ஒன்று கூட இவருக்கு எதிராக இல்லை.

மேல்முறை ஈட்டிர்க்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தில் இவர்களின் வழக்கை மூன்று நீதிபதில் கொண்ட அமர்வு விசாரணை செய்தது. இவ்வமர்வின் தலைமை நீதிபதி “புல்லர் குற்றமற்றவர்” என்று தீர்ப்பு எழுதினார். ஆனால் மற்ற இருவர் இவரை குற்றவாளி என்று எழுதி மரண தண்டனையை உறுதி செய்தனர்.

இப்படியாக வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, இவர் விண்ணப்பித்திருந்த கருணை மனுவை குடியரசு தலைவர் பிரதிபா பாட்டில் நிராகரித்தார்.

திஹார் ஜெயிலில் 18 ஆண்டுகள் வாடிய ஒரு குற்றமற்ற அரசியல் பலிகடா, கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். பிறகு மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் டில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இப்பொழுது மன நலம் பேணி வருகிறார்.

இப்படி ஒரு பேராசிரியரை மன நலம் பேதலிக்க வைத்த நமது சட்டதிட்டங்கள், இப்பொழுது அவரை தூக்கில் போடுவது என்று முடிவு செய்திருப்பது அனைத்து மனித உரிமை ஆர்வலர்களையும் அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையிலும், இந்தியா போன்ற நாட்டில் வலியவர்களின் கைகளில் சட்டம் என்பது கைப்பொம்மையாகிவிட்டது, இதில் பேராசிரியர் புல்லர் போன்ற எளியவர்கள் காப்பற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

செல்வராஜ்

ஒருங்கிணைப்பாளர்.

மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு.

Pin It