தமிழக மக்களே!

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியில் அமைந்துள்ள நத்தம் மற்றும் அண்ணா நகர், கொண்டம்பட்டி தலித் கிராமங்கள் மீது ஆதிக்க சாதி வெறி சக்திகள் திட்டமிட்ட காட்டுமிராட்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். 

சாதிவெறியாட்டத்திற்கான பின்னணி என்ன?

காதல் திருமணம்தான் காரணம் என்கின்றனர்.  ஆனால் உண்மையில் இத்தாக்குதலுக்கான காரணம் என்ன?  நத்தம் தலித் மக்கள் நக்சல்பாரி கட்சி (மக்கள் யுத்த கட்சி) தலைமையில் சுமார் பதினைந்து ஆண்டு களுக்கு முன்பே 12 வன்னிய கிராமங்களுக்கு செய்து வந்த சாதி இழி தொழிலை நிறுத்தியவர்கள்.   மது ஒழிப்பு போராட்டத்தை நடத்தி “மது ஒழித்த கிராமம்” என்று அறிவித்தவர்கள்.   கோணையம்பட்டி மணி என்பவன் தலித் மக்களை இழிவுப்படுத்தி,   சாதி வெறியுடன் களம் இறங்கியபோது வன்னிய உழைக்கும் மக்களுடன் சேர்ந்து மணியை அடித்து உதைத்து பாடம் புகட்டியவர்கள்.  நாயக்கன்கொட்டாயை சுற்றியுள்ள வன்னிய உழைக்கும் மக்களுடன் சேர்ந்து கந்து வட்டிக்கெதிராகவும்,  நில வுரிமைக்காகவும் பல்வேறு மக்கள் போராட்டங்களை நடத்தியவர்கள். இப்போராட்டங்கள் 1995-லிருந்து 2002 வரை நடைபெற்றது.

dharmapuri_attack_453

2002ஆம் ஆண்டிற்கு பிறகு நக்சல்பாரி கட்சியின் செயல்பாடு நின்று போனது.  நத்தம் தலித்மக்கள் ஆதிக்க சாதிகளிடமிருந்து முழுமையாக தங்களை விடுவித்துக் கொண்டதோடு பெங்களூர், கோயம்பத்தூர் பகுதியில் கடுமையாக உழைத்து படிப்படியாக பொருளாதார ரீதியில்  வளர்ந்தனர்.  இதுவும் ஆதிக்க சாதிவெறியர்களின் கண்ணை உறுத்தியது.  மேலும் நத்தம் தலித் மக்களால் (நக்சல்பாரி கட்சியாலும்) பாதிக்கப்பட்ட ஆதிக்க சாதி வெறியர்கள், கந்து வட்டிக்காரர்கள், உழைக்கும் மக்கள் விரோதிகள் நத்தம் கிராமத்தை தாக்க காலத்தை எதிர் நோக்கி காத்திருக்க...........

பாட்டாளி மக்கள் கட்சியின் காடுவெட்டி குரு மாமல்லபுரம் வன்னியர் சங்க கூட்டத்தில் “வன்னியர் பெண்ணைக் கலப்பு திருமணம் செய்தால் அவனை வெட்டுங்கள்” என்று சாதிவெறியுடன் கொக்கரித்தான். தர்மபுரி நத்தம் தலித் கிராமத்திற்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் பொது கூட்டத்திலும் இதையே கூறினான். 

கடந்த தேர்தலில் படுதோல்வியடைந்த பாட்டாளி மக்கள் கட்சி தனது அரசியல் இலாபத்திற்காக வன்னியர் களிடம் சாதிவெறியை ஊட்டியது.  சமூக வளர்ச்சியின் அங்கமாக இன்று காதல் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,  சாதிய அகமண முறை உடைந்து வருகிறது.  இதனால் இந்தியா முழுவதும் கௌரவ கொலை முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.

இத்தைகைய சூழலில்தான் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞன் வன்னியர் பெண்ணை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்ய அதையே காரணமாக்கி ஆதிக்க சாதிவெறி சக்திகளும், கந்துவட்டி காரர்களும், வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடர்ந்து பல நாள் திட்டம் போட்டு வன்னியர்  உழைக்கும் மக்களுக்கு சாதி வெறி ஊட்டியது.   அதற்கு உளவுத் துறையும், காவல் துறையும், ஆதிக்கசாதி கூட்டு (ஜெயலலிதா) அரசும் முழு ஒத்துழைப்பைத் தர திட்ட மிட்டு நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி தலித் கிராமங்கள் மீது சாதிவெறியாட்டத்தை அரங்கேற்றினர்.

ஆதிக்க சாதிவெறியர்கள் நத்தம் தலித் கிராமத்தை சாதிவெறியாட்டத்தின் அடையாளமாக மாற்ற நினைக்க, நத்தம் தலித் மக்களின் உறுதியும், தமிழகம் முழுவதும் உள்ள தலித் இயக்கங்களின் எழுச் சியும், புரட்சிகர சக்திகளின் எதிர்ப்பும், சனநாயக சக்திகளின், சாதி மறுப்பாளர்களின் தலித் மக்களுக்கான உறுதி மிக்க ஆதரவும், தாக்குதல் நடத்திய நாளிலிருந்து இன்று வரை நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் தலித் கிராமங்களை நோக்கி நாள்தோறும் நீளும் பல்லாயிரக் கணக்கான ஆதரவு கரங்களும் நத்தம் கிராமத்தைத் தலித் எழுச்சியின் அடையாளமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

15 ஆண்டுகளுக்கு முன் இழிதொழிலை நிறுத்திய, மதுவை ஒழித்த, ஆதிக்க சாதி வெறியர்களுக்கு வீரத்துடன் பதிலடி கொடுத்த, கந்து வட்டிக்கெதிராக போராடிய, உழைப்பால் உயர்ந்த, அனைத்து உழைக்கும் மக்களுக்காவும் உறுதியோடு போராடிய நத்தம் தலித் கிராமத்தை “தலித் எழுச்சியின் அடையாளமாக” மாற்ற வேண்டும்.  தமிழக அளவில் ஆதிக்க சாதிவெறியர்களின் கொட்டத்தை அடக்கும் எழுச்சியின் அடையாளமாக்க வேண்டும்.  மூவர் தூக்கு எதிர்ப்பு என்ற முழக்கம் எப்படி தமிழகம் தழுவிய மக்கள் போராட்டமாக உரு வெடுத்ததோ, சமச்சீர்கல்வி, முல்லை பெரியார்  போன்ற முழக்கங்களும் தமிழகம் தழுவிய மக்கள் போராட்டமாக உருவெடுத்ததோ, அதேபோல் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதிவெறியாட்டத்திற்கெதிரான எதிர்ப்பு என்ற முழக்கமும் பெரும் தலித் மக்கள் எழுச்சி யாக, சாதி ஒழிப்பிற்கான எழுச்சியாக தமிழகம் தழுவிய அளவில் உருவெடுக்க வேண்டும். 

இந்த தலித் மக்கள் எழுச்சி ..........

*             சாதிவெறிபிடித்த காடுவெட்டி குருக்களை காணாமல் செய்யும் எழுச்சியாக,

*             சாதிமறுப்பு திருமணத்தை எதிர்க்கும், சாதிவெறியை தூண்டும் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி, கொங்குவேளாளர் பேரவை, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போன்ற ஆதிக்க சாதிவெறி அமைப்புகளை உருத்தெரியாமல் செய்யும் எழுச்சியாக,

*             தருமபுரியில் - தலித் கிராமங்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஆதிக்க சாதிவெறி சக்திகளின் சொத்துக் களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு முழு அளவிலான இழப்பீட்டைப் பெற்றுத் தரும் எழுச்சியாக,

*             (ஜெயலலிதா) அரசின் - ஆதிக்க சாதி கூட்டையும், சாதிவெறியர்களுக்கு துணை நின்ற உளவுத்துறை, காவல்துறையை முறியடிக்கும் எழுச்சியாக,

*             காலம் காலம்மாக அரசியல், பொருளாதார அரங்கில் பின் தங்கி கிடந்த தலித் மக்களை முழு அளவில் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக, பொருளாதார முன்னேற்றங்களை பெற்றவர்களாக மாற்றும் எழுச்சியாக,

*             ஊர் தெருவில் நடக்கக்கூடாது, கோயிலில் நுழையக் கூடாது, சாதி சுடுகாடு, ஊர்த்தெரு - சேரித் தெரு என பிரித்திருப்பது, கடைகளில் சாதிப்பெயரில் விளம்பர பலகை வைப்பது, இரட்டைக் குவளை போன்ற எண்ணற்ற ஆதிக்க சாதி பண்பாட்டு விழுமியங் களை தலைகீழாக புரட்டிப்போடும் பண்பாட்டு எழுச்சியாக,

*             சாதியத்தைக் கட்டிக் காக்கும் கருத்தியலாக உள்ள நவீன பிராமணியத்தை (இந்து-இந்தியா-இந்தி)  வீழ்த்தும் கருத்தியலை நூறாயிரமாக மலரச்செய்யும் எழுச்சியாக மாற்ற.....

சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.

தமிழக அரசே!

•             நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் தலித் கிராமங்கள் மீதான தாக்குதலுக்கு காரணமான சாதி வெறியர்களின் சொத்துக்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்து பாதிக்கப் பட்டவர்களுக்கு முழு இழப்பீடு வழங்கு!

•             இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கெதிராக சாதி மறுப்பு திருமணத்தை எதிர்க்கும், சாதி வெறியைத் தூண்டும் பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை, மூவேந்தர் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளை - அமைப்புகளை - ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்!

தமிழக மக்களே!

•             அரசின் (ஜெயலலிதாவின்) - ஆதிக்க சாதி கூட்டிற்கெதிராகவும், தருமபுரி சாதி வெறியாட்டத் திற்கு துணை நின்ற உளவுத்துறை, காவல் துறை நடவடிக்கைகளுக்கெதிராகவும் அணி திரள்வோம்!

•             தலித் மக்களே! அனைத்து உழைக்கும் மக்களே ! சாதி மறுப்பாளர்களே  ! சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம்!

இவண்

சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் பழனி (9176264717)

கூட்டியக்கத்தில் உள்ள அமைப்புகள்  மற்றும் சாதி மறுப்பினர், சனநாயக சக்திகள்

1.            மக்கள் சனநாயக குடியரசு கட்சி

2.            மே 17 இயக்கம்

3.            புரட்சியாளர் அம்பேத்கர் பாசறை

4.            புரட்சியாளர் எழுச்சி இயக்கம்

5.            தமிழக மக்கள் புரட்சி கழகம்

6.            டாக்டர் அம்பேத்கர் பேரவை

7.            திராவிடர் விடுதலை கழகம்

8.            அம்பேத்கர் மக்கள் விடுதலை

9.            பறையர் பேரவை

10.          அம்பேத்கர் மக்கள் படை

11.          தலித் மக்கள் சனநாயக முன்னணி    

12.          CPI (ML)

13.          அம்பேத்கர் பாசறை

14.          இந்திய மக்கள் முன்னணி

15.          CPI (ML) கனுசன்யால்

16.          நலிவுற்றோர் நல்வாழ்வு அறக்கட்டளை

17.          அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்

18.          ரெட்டைமலை சீனிவாசன் பேரவை

19.          தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

20.          மக்கள் வாழ்வுரிமை போராட்ட இயக்கம்

21.          தோழர் கோவை ஈஸ்வரன்

22.          நிர்மலா கொற்றவை

23.          வசுமித்ரா

24.          ஆ. குமார திருபரன்

25.          தமிழன்வேலு

26.          அ. முத்துகிருஷ்ணன்

27.          சு. குமார்

28.          வ. கீதா

29.          அ. மார்க்ஸ்

30.          பேராசிரியர் சிவக்குமார்

31.          அருர் ரவி

32.          மு. பாலசுப்பிரமணியன் குமார்

33.          மகித்தமிழ்

34.          ஜெயபிரகாஷ் (படைப்பாளிகள் இயக்கம்)

dharmapuri_agitation_593

Pin It