வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் வகுப்புத்துவேஷம் உண்டாகிவிடும் என்று பயப்படுவதாய்ச் சொல்லிக்கொண்டு அதற்கெதிர்ப் பிரசாரம் செய்ய பிராமணர்களுடன் சுற்றுப்பிரயாணம் செய்யும் ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியார் அவர்கள் ஆங்காங்கு கண்ட காட்சியைப் பற்றி சொல்லும்போதும், எழுதும்போதும், தான் போனவிடங்களில் வகுப்புத்துவேஷங்கள் விளங்கிக் கொண்டிருப்பதாய்ச் சொல்லுகிறார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வெகுகாலமாய் இல்லாமலிருந்தும் நாட்டில் ஏன் வகுப்புத்துவேஷங்கள் ஏற்பட்டிருக்கவேண்டும்? இம்மாதிரி வகுப்புத்துவேஷங்கள் நாட்டில் இருப்பதற்குக் காரணம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டதினாலா ஏற்படாததினாலா? என்பதை நமது ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தயவுசெய்து பிராமணர்கள் இல்லாத சமயத்தில் தனியே உட்கார்ந்து தனது நெஞ்சில் கையை வைத்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 18.04.1926)

Pin It