படித்துறையில்
பகல் நிலவென
அந்த கருஞ்சிவப்பு
புடவை தான்
பொருந்தி வரவில்லை
ஒரு பௌர்ணமி
சைடு போஸ்க்கு
என்ன நிறம் பொருந்தும்
யோசிப்போம்
*
முழங்கால்களைக் கட்டிக்கொண்டு
கூனிட்ட முதுகில்
நீர்த்திவலைகள் கொப்பளிக்க
மூச்சு வாங்க
அமர்ந்திருக்கிறதோ
குளம்
*
நகரம்தான்
குருவிக்கூடு போல
நாலடுக்கு வீடுகள்தான்
வாகனம் ஒதுங்கிப் போக
கையளவு வாசல்தான்
மழைத்துளிகள் மண்வாசனை
தராமலா போகிறது
*
இப்போதெல்லாம்
வாசல்வரைகூட
வழியனுப்ப வருவதில்லை
பேருந்தேறிய பிறகும்
கை காட்டும் கண்களின்றி
நாமாகவே ஊருக்கு
பஸ் ஏறுவது போல
சுமை வேறுண்டோ
*
போகும் போது
வாங்கியவர் தான்
வரும்போதும்
கை ஏந்துகிறார்
அவருக்கு இத்தனை மறதி
இருந்தால் இருக்கட்டும்
எனக்குத்தான்
இத்தனை ஞாபகம் கூடாது
- கவிஜி