கொத்து புல்லு புடுங்கி
தூசி அடிச்சு
எச்சி தொட்டு
மூஞ்சி தொடைச்சு
அப்புறந்தான்
ஜோடியா நின்னு பாக்க
போட்டி நடக்கும்
வனப்பேச்சி கூட

*
கடவுளைக்
கூண்டுக்குள் அடைத்தோர்
குனிந்தேயிருக்க
மலைகளில் சாமி கண்டவன்
நிமிர்ந்து நிற்கிறான்

*
இன்னும் எத்தனை காலம்தான்
இப்படியே மூடி மறைப்பாய்
மோனலிசா
ஒரு நாள்
வெடித்துச் சிரிப்பாய் பார்
அல்லது
ஒரு சின்ன சிணுங்கலையாவது
சிமிட்டாமலா போவாய்

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.