பிதற்றலின் மொழி
பிரபஞ்ச விதி
இதய லயம்
பேரின்ப கிறுக்கு
பிறிதொரு வண்ணம்
பிரியாத வரம்
பூகம்பத்தில் துளிர்க்கும்
புன்னை வனத்திலும் மிதக்கும்
ஆறு கொண்ட மீனெல்லாம்
அறுவடை நாளெல்லாம்
அத்துமீறும் கோயில் நடை
அளாவும் அலை நுரை
களிறும் காடும்
காடோடையும் நீர் வாடையும்
பூ மரத்து ஆட்டம்
புல்லாங்குழல் காற்று
சுவர் இல்லா சித்திரம்
தூது வரும் கருவண்டு
துக்க வீட்டு தேநீர்
எதிர் வீட்டு ஜன்னல்
அலாவுதீனும் அற்புத விளக்கும்
பச்சை மலைப் பூவும்
உச்சி மலைத் தேனும்
கனவும் கவிதையும்
கடலும் கடல் கொள்ளையும்
ஆடையும் நிர்வாணமும்
ஆசையும் துறவும்
வீதி நாயின் கொட்டாவி
வெண்பனியின் விட்டேத்தி
கைவிடப்பட்ட கப்பல்
கடைசிப் பெட்டி ரயிலும்
கடைத்தெரு கத்திரிக்காய்
கனகாம்பர உதிரல்
முகமூடிக் கண்கள்
முந்தாநாள் மழையும்
சந்தமில்லா ஒப்பாரி
சந்தை வந்த முக்கனி
காதலென்பது யாவும்
காதலென்பது நாமும்
- கவிஜி