karichan kuruviவெட்ட வெளியில் முளைக்கிறது
ஒரு கருப்புத் தாமரை
காட்டுக் கொடிகள்
விடும் கரும்பட்டமோ என
நான் வியந்து கொண்டிருக்க
எதிர்பாராத கணத்தில்
சிறகு விரிக்கிறது
ஒரு கரிச்சான் குருவி

பனித்திரைக்குப் பின்னால்
சிலிர்க்கும் ரோமக் கால்களென
வெடவெடத்து வானேகுகின்றன
திரட்சியுற்ற காட்டு மரங்கள்

வான்காவின் பச்சை தேவதைகள்
ஏரிக் கண்ணாடியில்
முகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

இன்று ருதுவான
கொழுந்தைப் பறித்து
என் சட்டைப் பையில்
வைத்துக் கொள்கிறேன்

உன் நினைவுகள் வந்தது
பறித்த உடனா அல்லது
அதற்கும் முன்பா என்று
தெரியவேயில்லை

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.