வழி நெடுக எதிராகவும் வருவது
எத்தனை சிரமம்
பசியோடு நகரும் சாலைக்கு
வயிறுப்பிய வீராப்பு

தினம் தினம் வீசியெறியும்
சத்தத்துக்கு நடுவே
கானலும் காலமும்

தவித்த கால்கள்
படக்கென மேலெழுவது
வளைவில்
தனித்த காக்கையின் ஓவியமா

நந்தவனம் எதுவென
தேடுகிறதோ தூரம்

வந்ததும் போனதும் போக
வருதலும் செல்தலும்
இன்னும் வரும் போகும்

வேடிக்கையற்ற பின்னிரவில்
காலமற்ற மௌனத்துக்கு
திரும்புதல் தான் பெருந்துயர்
மைல்கற்களுக்கு.....!

- கவிஜி

Pin It